கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (16-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 16, 2022




உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


பரணி : மாற்றமான நாள்.


கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 16, 2022




செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். கல்வி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மதிப்பு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 16, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். குழப்பங்களிலிருந்து தெளிவு கிடைக்கப் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பணி நிமிர்த்தமாக எதிர்பார்த்து வந்த சில இடமாற்றங்கள் சாதகமாக அமையும். எழுத்துத் துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும். 


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

மார்ச் 16, 2022




குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவமும், நன்மையும் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : கலகலப்பான நாள்.


பூசம் : அனுபவம் மேம்படும். 


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 16, 2022




உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விவசாயம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க இயலும். மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : தடைகள் குறையும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 16, 2022




தனவரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபார பணிகளில் எண்ணிய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் எதிர்பாராத ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.


அஸ்தம் : சுறுசுறுப்பான நாள். 


சித்திரை : திருப்தி  உண்டாகும். 

---------------------------------------





துலாம்

மார்ச் 16, 2022




தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


சுவாதி : மாற்றம் உண்டாகும்.  


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 16, 2022




உத்தியோக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அனுஷம் : உதவி கிடைக்கும்.  


கேட்டை : இழுபறிகள் குறையும். 

---------------------------------------





தனுசு

மார்ச் 16, 2022




மனதை உறுத்தி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : தெளிவு பிறக்கும்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------





மகரம்

மார்ச் 16, 2022




இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்களில் சோர்வு ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : சோர்வு ஏற்படும். 


திருவோணம் : காலதாமதமான நாள். 


அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





கும்பம்

மார்ச் 16, 2022




கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்கின்ற தொழிலில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும். 


சதயம் : முன்னேற்றமான நாள். 


பூரட்டாதி : லாபம் மேம்படும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 16, 2022




தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதுவகையான தேடல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 


உத்திரட்டாதி : தேடல் அதிகரிக்கும்.  


ரேவதி : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------


Capacity Building பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இணைய கட்டணம் விடுவிப்பு - மாநில திட்ட இயக்குனரின் கடிதம் (Internet charges sanctioned for Elementary Teachers attending Capacity Building Training - Letter from the State Project Director) Rc.No. 1650/ B8/ EE / SS / 2021, Dated: 11-03-2022...



>>> Capacity Building பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இணைய கட்டணம் விடுவிப்பு - மாநில திட்ட இயக்குனரின் கடிதம் (Internet charges sanctioned for Elementary Teachers attending Capacity Building Training - Letter from the State Project Director) Rc.No. 1650/ B8/ EE / SS / 2021, Dated: 11-03-2022...



மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல் - கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள் ( District Educational Officers, Block Educational Officers, BRC Supervisors, CRC Teacher Educators and District Coordinators - School Visit - Instructions - Proceedings of the Karur Chief Educational Officer)‌ ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ஒ.ப.க / 2022, நாள்‌:15.03.2022...


>>> மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல் - கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ ஒ.ப.க/ 2022, நாள்‌: 15.03.2022...


 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கரூர்‌ மாவட்டம்‌

கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ஒ.ப.க / 2022, நாள்‌:15.03.2022


பொருள்‌:  ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - கரூர்‌ மாவட்டம்‌ - 2021-22 -மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல்‌ - சார்பு.


பார்வை: 

1. முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ ஆலோசனை, நாள்‌. 01.03.2022

2.ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம்‌ ந.க.எண்‌. 3379/ B7/ BRC / CRC / SS /2021 நாள்‌ : 25.01.2022.

3. அரசாணை நிலை எண்‌. 202. பள்ளிக்‌ கல்வித்‌ (அகஇ2) துறை, நாள்‌: 11.11.2019.

4. ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம்‌  ந.க.எண்‌. 2448/B7/ BRC / CRC / SS / 2019 நாள்‌ : 07.08.2019...


பார்வை (1) மற்றும்‌ (2)இன்‌ படி, கரூர்‌ மாவட்டத்தில்‌ மாவட்ட மற்றும்‌ ஒன்றிய அளவிலான அலுவலர்கள்‌ பார்வையிடுவது சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள்‌ வழங்கப்படுகிறது.


மாவட்ட மற்றும்‌ ஒன்றிய அளவிலான அலுவலர்கள்‌


மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ தினமும்‌ காலை 9.30 மணிக்கு முன்பாக 2 பள்ளிகளை பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ தினமும்‌ காலை 9:30 மணிக்கு முன்பாக 2 பள்ளிகளை பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ தினமும்‌ 4பள்ளிகள்‌ பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளை குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ பார்வையிடும்போது தொடர்ச்சியாக ஒரே பள்ளிகளை பார்வையிடுதல்‌ கூடாது. அனைத்து பள்ளிகளையும்‌ வாரம்‌ ஒரு முறையாவது கட்டாயம்‌ பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


தொடர்‌ பள்ளிப்‌ பார்வையின்‌ போது ஒரே வகுப்பினை தொடர்ந்து பார்வையிடுதலை தவிர்க்க வேண்டும்‌.


பள்ளிகளை பார்வையிடும்‌ ஆய்வு அலுவலர்கள்‌ அனைவரும்‌ பாடப்‌ பிரிவு முழுவதையும்‌ கவனிக்க வேண்டும்‌.


பள்ளிப்‌ பார்வைப்‌ பதிவேட்டில்‌ பார்வையிட்ட வகுப்பில்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ சார்ந்து தவறாது குறிப்புரை எழுதுதல்‌ வேண்டும்‌.


>>> மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல் - கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ ஒ.ப.க/ 2022, நாள்‌: 15.03.2022...

பள்ளிக்கல்வித்துறை - 15-03-2022ஆம் தேதி கலந்தாய்வுக்குப் பின் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அனைத்துப் பாடங்கள் (DSE - B.T.Assistant Resultant Vacancies After 15.03.2022 Counselling - All Subjects)...

 


பள்ளிக்கல்வித்துறை - 15-03-2022ஆம் தேதி கலந்தாய்வுக்குப் பின் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அனைத்துப் பாடங்கள் (DSE - B.T.Assistant Resultant Vacancies After 15.03.2022 Counselling - All Subjects)...


>>> தமிழ்...


>>> English...


>>> கணக்கு...


>>> அறிவியல்...


>>> சமூக அறிவியல்...


இன்றைய (15-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 15, 2022




பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : அனுகூலமான நாள். 


பரணி : கவலைகள் நீங்கும்.


கிருத்திகை : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 15, 2022




கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலையை அறிந்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



கிருத்திகை : தெளிவு ஏற்படும்.


ரோகிணி : முடிவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 15, 2022




செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் காணப்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களின் மூலம் வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதியான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். 


திருவாதிரை : அனுகூலம் உண்டாகும். 


புனர்பூசம் : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------





கடகம்

மார்ச் 15, 2022




வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். குழப்பம் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள். 


பூசம் : சிந்தித்து செயல்படவும். 


ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 15, 2022




தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபகமறதி அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


 

மகம் : புத்துணர்ச்சியான நாள். 


பூரம் : புரிதல் ஏற்படும்.


உத்திரம் : சோர்வு குறையும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 15, 2022




ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளின் மூலம் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவுபெறும். சேவை நிமிர்த்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அஸ்தம் : அனுபவம் கிடைக்கும். 


சித்திரை : சுதந்திர தன்மை அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

மார்ச் 15, 2022




பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


 

சித்திரை : மாற்றம் ஏற்படும். 


சுவாதி : முன்னேற்றமான நாள். 


விசாகம் : உதவி கிடைக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 15, 2022




நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான புரிதல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய வியாபார பணிகளில் சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

விசாகம் : புரிதல் உண்டாகும்.


அனுஷம் : தடைகள் குறையும். 


கேட்டை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





தனுசு

மார்ச் 15, 2022




எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : சாதகமான நாள். 


பூராடம் : மேன்மை உண்டாகும். 


உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

மார்ச் 15, 2022




நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் மேன்மை உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதமும், அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும். 


திருவோணம் : மேன்மை பிறக்கும். 


அவிட்டம் : சேமிப்பு குறையும். 

---------------------------------------





கும்பம்

மார்ச் 15, 2022




கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கற்பிக்கும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : மாற்றம் பிறக்கும். 


பூரட்டாதி : நம்பிக்கை ஏற்படும். 

---------------------------------------





மீனம்

மார்ச் 15, 2022




குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டார நட்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : பொறுப்புகள் மேம்படும். 


ரேவதி : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கருத்துரு எதுவும் பரிசீலனையில் இல்லை - இந்திய நிதித்துறை அமைச்சகம் (To Implement Old Pension Scheme, there is no Proposal under consideration of Government of India - Ministry of Finance) Answer to Lok Sabha Unstarred Question No.2009 on 14-03-2022...



>>> பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கருத்துரு எதுவும் பரிசீலனையில் இல்லை - இந்திய நிதித்துறை அமைச்சகம் (To Implement Old Pension Scheme, there is no Proposal under consideration of Government of India - Ministry of Finance) Answer to Lok Sabha Unstarred Question No.2009 on 14-03-2022...



2003 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ரத்து செய்து, ஏப்ரல் 1, 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அறிமுகப்படுத்தியது. 


காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் எடுத்த முடிவுகளின் படி, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதற்கான நோக்கத்தை திங்களன்று மத்திய அரசு மறுத்துள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடரில், இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில்,  சத்தீஸ்கரின் பஸ்தாரின் காங்கிரஸ் எம்.பி., என்.பி.எஸ்-ஐ ரத்து செய்து, மத்திய அரசின் அனைத்து அதிகாரிகளையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (ஓ.பி.எஸ்.) கீழ் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் எண்ணம் உள்ளதா என்று அரசாங்கத்திடம் கேட்டார். கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் கூறுகையில், இந்திய அரசின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றார். 


அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அது ஆட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் ரத்து செய்துவிட்டு, தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தியது.  மத்திய அரசின் ஓய்வூதியப் பொறுப்புகளிலிருந்து விடுபடுவதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளிகள் அதாவது அரசு ஊழியர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய இது அனுமதிக்கிறது. அவர்களின் பணிக்காலம் முழுவதும் ஓய்வூதியக் கணக்கில் தவறாமல் பங்களிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். 


இதற்கு மாறாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு மற்றும் பணியாளர்கள் ஓய்வூதிய நிதிக்கு சமமான பங்களிப்பை வழங்கினர். விதிகளின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு அரசு ஊழியரின் ஓய்வூதியத் தொகையாகக் கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம் அடங்கும். தற்போது, ​​ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள், அடுத்த நிதியாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்துள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராகுல் காந்தியிடம், கேரளா, ஆந்திரா மற்றும் பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநில அரசுகள் கூட ஓபிஎஸ் குழுவை அமைத்துள்ளதாகக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்திருந்தார்.


நன்றி: Hindustan Times


The NDA government under Atal Bihari Vajpayee in 2003 had scrapped the Old Pension Scheme (OPS) and introduced the National Pension Scheme (NPS) from April 1, 2004.


The Centre on Monday denied intentions of scrapping the existing National Pension Scheme (NPS) for the government employees and reverting to the old pension scheme, along the lines of decisions taken by Congress-ruled Rajasthan and Chhattisgarh.On the first day of the second leg of the budget session, Congress MP from Chhattisgarh's Bastar asked the government whether it had any intentions of scrapping the NPS and revert all the officials of central government under the Old Pension Scheme (OPS).Replying to the question, union minister of state for finance Dr Bhagwat Karad said there was no proposal under consideration under the government of India.It was the NDA government under Atal Bihari Vajpayee that had scrapped the old pension scheme in 2003 and had introduced the existing national pension scheme on April 1, 2004, just a month before it was voted out of power.


The National Pension Scheme was initiated for the central government to get rid of pension liabilities. It allows the beneficiaries i.e government employees to decide where they want to invest their money. This can be done by contributing regularly in a pension account throughout their career. After retirement, they can withdraw a part of the pension amount.


Contrary to this, the old pension scheme had government and employees contribute an equal portion towards the pension fund. As per rules, the old pension scheme involved 50 per cent of the last drawn salary as the pension amount to a government employee.


At present, Rajasthan and Chhattisgarh have announced the decision to revive the old pension scheme from the next financial year. According to reports, Rajasthan chief minister Ashok Gehlot told Rahul Gandhi that the state governments of Kerala, Andhra Pradesh and even BJP-ruled Assam had formed committees on the OPS.


Samajwadi Party president Akhilesh Yadav had promised to bring back old pension scheme had his alliance won the Uttar Pradesh polls.

பட்டதாரி ஆசிரியர்கள் - பாட வாரியான காலிப்பணியிடங்கள், கூடுதல் தேவைப்பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள், நிகர காலிப்பணியிடங்கள் விவரம் ( B.T.Assistants (Graduate Teachers) - Subject wise Vacancies, Need Posts, Surplus Teachers, Net Vacancies Details)...

 


பட்டதாரி ஆசிரியர்கள் - பாட வாரியான காலிப்பணியிடங்கள், கூடுதல் தேவைப்பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள், நிகர காலிப்பணியிடங்கள் விவரம் ( B.T.Assistants (Graduate Teachers) - Subject wise Vacancies, Need Posts, Surplus Teachers, Net Vacancies Details)...


தமிழ்

காலிப்பணியிடம்- 1417

கூடுதல் தேவைப்பணியிடம்-1696

மொத்தம்-3113

உபரி ஆசிரியர்கள்- 316

நிகர காலிப்பணியிடங்கள்- 2797


ஆங்கிலம்

காலிப்பணியிடம்- 878

கூடுதல் தேவைப்பணியிடம்- 1950

மொத்தம்- 2828

உபரி ஆசிரியர்கள்- 500

நிகர காலிப்பணியிடங்கள்- 2328


கணிதம்

காலிப்பணியிடம்- 860

கூடுதல் தேவைப்பணியிடம்- 1208

மொத்தம்- 2068

உபரி ஆசிரியர்கள்- 1005

நிகர காலிப்பணியிடங்கள்- 1063


அறிவியல்

காலிப்பணியிடம்- 1681

கூடுதல் தேவைப்பணியிடம்-1812

மொத்தம்- 3493

உபரி ஆசிரியர்கள்- 827

நிகர காலிப்பணியிடங்கள்- 2666


சமூக அறிவியல்

காலிப்பணியிடம்- 1175

கூடுதல் தேவைப்பணியிடம்- 1458

மொத்தம்- 2633

உபரி ஆசிரியர்கள்- 392

நிகர காலிப்பணியிடங்கள்- 2241



>>> பள்ளிக் கல்வித் துறை - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.03.2022 நிலவரப்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள், காலிப்பணியிட விவரம், தேவைப் பட்டியல் விவரம் வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...