12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி காலை 9.30மணிக்கு வெளியீடு.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் - தேர்வுத்துறை.
இன்று வெளியாவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு.
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள்.. வைரலாகும் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (35 marks in English and 36 marks in Mathematics. IAS Officer's 10th Standard Mark List - Viral in Social Media)...
வரும் நாட்களில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்கள் குறைவதால், சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
ஒரு தேர்வின் மதிப்பெண் மட்டும் நம் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்பதை உணர்த்தும் வகையில் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின் ஒருவரின், 10ஆம் வகுப்பு பள்ளி மதிப்பெண் பட்டியல் படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
குஜராத், பருச் மாவட்ட கலெக்டர் துஷார் சுமேரா தனது 10ஆம் வகுப்பு தேர்வில், ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண் எடுத்ததை பகிர்ந்துள்ளார்.
துஷார் சுமேரா கலைப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்து, 2012ல் இ.ஆ.ப. அலுவலரானார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன், அவர் சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். குறைந்த மதிப்பெண் எடுப்போருக்கு துஷார் சுமேரா வாழ்க்கை ஒரு முன்மாதிரி.
விடாமுயற்சி உடன் தொடர்ந்து கடினமாக உழைத்தால் எந்தவொரு உயரத்தையும் எளிதாக எட்டிவிடலாம். இந்த பதிவை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
மேஷம்
ஜூன் 17, 2022
குடும்ப உறுப்பினர்களிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நவீன தொழில்நுட்ப கருவிகள் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : புரிதல் ஏற்படும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 17, 2022
குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 17, 2022
எண்ணிய சில பணிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 17, 2022
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 17, 2022
மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : திருப்திகரமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜூன் 17, 2022
குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் பொறுமையுடன் செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 17, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 17, 2022
சமூக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
விசாகம் : ஒத்துழைப்பான நாள்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கேட்டை : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 17, 2022
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வாதத்திறமைகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உறவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : அனுகூலம் ஏற்படும்.
பூராடம் : எண்ணங்கள் கைகூடும்.
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 17, 2022
பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். துன்பங்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : குழப்பம் நீங்கும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 17, 2022
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : விருப்பம் நிறைவேறும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 17, 2022
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : மேன்மையான நாள்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகளை - 17.06.2022 - School Morning Prayer Activities
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:நட்பியல்
அதிகாரம்: மருந்து
குறள் : 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
பொருள்:
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்
பழமொழி :
Never cast the oar till you are out
கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.
2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.
பொன்மொழி :
அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்! - லெனின்
பொது அறிவு :
1.சர்வதேச யோகா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜுன் 21.
2. உலக சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
செப்டம்பர் 27.
English words & meanings :
Eaglet - baby Eagle. Noun. கழுகுக்குஞ்சு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
வெற்றிலை எடையைக் குறைக்கும், குரல் வளம் உண்டாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
NMMS q - 5
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 5,9,17,29,45, ?
விடை: 65
நீதிக்கதை
நாயின் தந்திரம்
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன் ஆஹா... புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றது நாக்கைச் சுழற்றியபடியே!
அதனைக் கேட்ட புலிக்குக் பயம் வந்ததும், நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார் என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே! என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...
இன்றைய செய்திகள்
17.06.22
◆அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
◆தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
◆நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
◆காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: வரும் 23-க்கு ஒத்திவைப்பு.
◆ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம்.
◆இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக 12,000ஐ கடந்து ஒரு நாள் தொற்று பதிவாகியுள்ளது.
◆பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
◆தகுதி சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கோஸ்டாரிகா அணி தகுதி.
◆ஐசிசி-யின் பிரத்யேக திட்டத்தில் இணையும் ஐபிஎல் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு.
Today's Headlines
🌸The child care centres will be punished severely if they run the home without approval from the Government - Chennai Commissioner warned.
🌸The 10th and 12th results will be published on 20th of this month - School Education Department.
🌸For the workers at the ration shop and the for the workers in construction there is a hike of 28% DA.
🌸The Cauvery Water Tribunal Committee meeting was postponed to 23rd of June.
🌸To work in all three defensive forces for 4 years the federal government proposed 'Agni Path' scheme which was approved by Central Cabinet Ministry. As per this scheme both male and female youth from 17.5 age to 21 years can join in the armed forces.
🌸For the past 24 hours the recorded Corona count is 12,213. After last February first time the count crossed 12,000.
🌸In para power lifting championship India won 2 bronze medals in the first day.
🌸In the Qualifying round for the Football World Cup Coast Rica got qualified after pushed down the New Zealand team.
🌸IPL is going to join in the ICC this may lead to draw back in international cricket matches.
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...