கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: பொருட்பால்


அதிகாரம்:சான்றாண்மை


குறள் 985:


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.



விளக்கம்:


ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.



பழமொழி :

Double charge will break even a cannon


அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 


2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்


பொன்மொழி :


ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்...திருமதி. திலகவதி IPS


பொது அறிவு :


1.உலகிலேயே மிக நீளமான சுவர் எது?


 சீனப்பெருஞ்சுவர் . 


 2.உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது?


 சகாரா.


English words & meanings :


Xanthic - represents yellowish color adjective. மஞ்சள் நிறம் சார்ந்த அல்லது குறிக்கும் சொல்


ஆரோக்ய வாழ்வு :


சோயா துண்டுகளில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.


NMMS Q 26:


தாவர உலகின் மிகச் சிறிய விதை எது?


 விடை : ஆர்க்கிட்


ஜூலை 18


நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார்

. அமைதிக்கான நோபல் பரிசு  இவருக்கு வழங்கப்பட்டது. 


நீதிக்கதை


தைரியம்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.


திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.


பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.


ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.


இன்றைய செய்திகள்


18.07.22


* மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்று முதல் ஒரு வருடத்துக்கு சென்னையில் நடைபெறுகிறது.


* தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு இன்று சென்னையில் கண்காட்சி, மணற்சிற்பம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* அரியலூர் விதைத் திருவிழா: மரபுவகை விதைகள், கைவினைப் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்.


* கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை பராமரித்து, பாதுகாக்கும் பணியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


* இந்த ஆண்டு முதல், தொலைத்தொடர்பு சட்ட சேவை (Tele-Law service), மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


* ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.


* ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


* பாராசின் ஒபன் செஸ்: தொடரை வென்று அசத்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.


* உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலிலும், அவினாஷ் சாப்லே 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்திலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.


* சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.


Today's Headlines


🌸To improve Motorless transport a awareness programme is held. Starting today it will be conducted for one year.


🌸With regards to Tamil Nadu Day function today exhibitions, sand art, discussions will be held - announcement by TN government.


🌸Ariyalur Seed festival : people shows great interest in buying hereditary seeds and handicrafts.


🌸To preserve and protect the palm leaf manuscripts of Temples Tamil Nadu Government's Hindu Religious and Charitable Endowment Board is seriously taking action. 


🌸From this year onwards Tele - law service will be given to the people free of charge says Central Minister for Law and Justice Mr. Kiran Rijuju informed. 


🌸 The bann is lifted through voice vote to do the amendment in law at American Parliament for India To get S-400 missiles from Russia. 


🌸 Russia closed the pipe line which brings gas fuel to Germany. Due to this Germany is facing problems in getting Natural fuel gas and other resources. 


🌸 India's Pragnantha won the series in open chess tournament. 


🌸 In Singapore open badminton P. V. Sindhu won the Championship Award. 






இன்றைய (18-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 18, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருக்கக்கூடிய நன்மை, தீமைகளை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை பற்றிய தேடல் அதிகரிக்கும். ரகசிய நடவடிக்கைகளின் மூலம் சிக்கல் உண்டாகும். மேன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : நெருக்கடியான நாள்.


பரணி : ஆதாயம் உண்டாகும்.


கிருத்திகை : சிக்கல் ஏற்படும்.

---------------------------------------


ரிஷபம்

ஜூலை 18, 2022



வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். கால்நடை வளர்ப்பு சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். மூத்த சகோதரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செல்வச்சேர்க்கையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சில குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



கிருத்திகை : மேன்மை உண்டாகும்.


ரோகிணி : ஒத்துழைப்பான நாள்.


மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.

---------------------------------------


மிதுனம்

ஜூலை 18, 2022



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான திருப்தியற்ற எண்ணங்கள் உண்டாகும். அரசு தொடர்பான உதவி சாதகமாக அமையும். உழைப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.

---------------------------------------


கடகம்

ஜூலை 18, 2022



தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : முன்னேற்றமான நாள்.


ஆயில்யம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------


சிம்மம்

ஜூலை 18, 2022



சிந்தனைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பந்தயம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் உண்டாகும். மனதில் கோபமும், புரிதலின்மையும் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : புரிதல் உண்டாகும்.


பூரம் : தாமதம் ஏற்படும்.


உத்திரம் : சோர்வான நாள்.

---------------------------------------


கன்னி

ஜூலை 18, 2022



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல சில மாற்றங்களை செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------


துலாம்

ஜூலை 18, 2022



ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொண்டு வெற்றி கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் நேரம் தவறி உணவு உண்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும்.


விசாகம் : உணவுகளில் கவனம் தேவை.

---------------------------------------


விருச்சிகம்

ஜூலை 18, 2022



பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : மாற்றங்கள் காணப்படும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------


தனுசு

ஜூலை 18, 2022



ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கால்நடை வளர்ப்பு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். கவலைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : சிந்தனைகள் மேம்படும்.


பூராடம் : முயற்சிகள் கைகூடும்.


உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------


மகரம்

ஜூலை 18, 2022



மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.


திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.


அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------


கும்பம்

ஜூலை 18, 2022



தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வாக்குவன்மையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உருவாகும். கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மை பொருளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். அறிமுகம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : தாமதங்கள் குறையும்.


சதயம் : முன்னேற்றமான நாள்.


பூரட்டாதி : கவனம் தேவை.

---------------------------------------


மீனம்

ஜூலை 18, 2022



தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது செல்வாக்கை அதிகப்படுத்தும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். தேர்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.


ரேவதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------






தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அரசுத் துணைச் செயலாளர் கடிதம் (Celebrating Tamilnadu Day on 18th day of July as named by Perarignar Anna as Tamil Nadu - To display posters in schools Letter from Deputy Secretary of State for Education)...



>>> தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அரசுத் துணைச் செயலாளர் கடிதம் (Celebrating Tamilnadu Day on 18th day of July as named by Perarignar Anna as Tamil Nadu - To display posters in schools Letter from Deputy Secretary of State for Education)...



>>> சூலை 18ஆம் நாள் - தமிழ்நாடு திருநாள் - சுவரொட்டிகள்...




பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் 31-12-2024 வரை நீட்டிப்பு (For registration of child's name in birth certificate - Deadline extended till 31-12-2024)...



 பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் 31-12-2024 வரை நீட்டிப்பு (For registration of child's name in birth certificate - Deadline extended till 31-12-2024)...


பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, தமிழக அரசு  (2020 டிச. 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:


"பிறப்புப் பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசப் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.



பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாத ஒன்றாக உள்ளது.



ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்விதக் கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.



12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை, பதினைந்து வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம்.


 


திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி,


* 1.1.2000-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டது.


* மேற்கண்ட கால அளவு முடிந்த பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது.


அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019 உடன் முடிந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.



பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைந்திட,


* 1.1.2000-க்கு முன் பெயரின்றி பிறப்புப் பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்


* வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிந்த அனைத்துப் பிறப்புப் பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.


ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம்.



இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற்றிடுவீர்".


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.



>>> பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு. செய்தி வெளியீடு எண்: 944, நாள்: 10-12-2020...



>>> பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி...



>>> பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டுகள் சிறப்பு சலுகை (பிறப்பு மற்றும் இறப்பு முதன்மைப் பதிவாளர் கடிதம்)...






பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கு இனி CEO அலுவலக அனுமதி தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவிப்பு (B.Ed. Teacher training no longer requires CEO office approval – Tamil Nadu Teacher Education University (TNTEU) announced that school education department will make direct allocation)...

 


>>> பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கு இனி CEO அலுவலக அனுமதி தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவிப்பு (B.Ed. Teacher training no longer requires CEO office approval – Tamil Nadu Teacher Education University (TNTEU) announced that school education department will make direct allocation)...



மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு (மருத்துவ விடுப்பு - Medical Leave) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995 (Un Earned Leave - Clarifications Copy of Govt.Lr.No.64435 / FRV / 94-5, dated 27.03.1995 from Thiru M.B. Pranesh, I.A.S., Secretary to Government, Personnel and Administrative Reforms (FR.V) Department, Fort St.George, Madras - 9 addressed to AH Heads of Department - Fundamental Rules - Prefixing and / or Suffixing Of holidays to Earned Leave Clarifications Issued Further clarifications)...



>>> மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு (மருத்துவ விடுப்பு - Medical Leave) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995 (Un Earned Leave - Clarifications Copy of Govt.Lr.No.64435 / FRV / 94-5, dated 27.03.1995 from Thiru M.B.  Pranesh, I.A.S., Secretary to Government, Personnel and Administrative  Reforms (FR.V) Department, Fort St.George, Madras - 9 addressed to AH  Heads of Department - Fundamental Rules - Prefixing and / or Suffixing Of  holidays to Earned Leave Clarifications Issued Further clarifications)...






ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னையில் பென்சனை மீட்டெடுக்கும் மாநில மாநாடு - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அழைப்பது என முடிவு - ஜாக்டோ ஜியோ இன்றைய (17-07-2022) தீர்மானங்கள் (State conference to restore Pension in Chennai at the end of August - Decision to invite Tamil Nadu Chief Minister - JACTTO-GEO Today's Resolutions)...



>>> ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னையில் பென்சனை மீட்டெடுக்கும் மாநில மாநாடு - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அழைப்பது என முடிவு - ஜாக்டோ ஜியோ இன்றைய (17-07-2022) தீர்மானங்கள் (State conference to restore Pension in Chennai at the end of August - Decision to invite Tamil Nadu Chief Minister - JACTTO-GEO Today's Resolutions)...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...