கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (28-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 28, 2022



மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வெற்றிகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : மாற்றம் ஏற்படும். 


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 28, 2022



உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : மந்தமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 28, 2022



நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.


திருவாதிரை : பயணங்கள் சாதகமாகும்.


புனர்பூசம் : மந்தமான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூலை 28, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூசம் : புத்துணர்ச்சி ஏற்படும். 


ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜூலை 28, 2022



வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் தொழில் சார்ந்த உதவியும், லாபமும் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும். 


உத்திரம் : லாபம் மேம்படும். 

---------------------------------------





கன்னி

ஜூலை 28, 2022



சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




உத்திரம் : சுபிட்சம் உண்டாகும். 


அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜூலை 28, 2022



எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




சித்திரை : சுறுசுறுப்பான நாள். 


சுவாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.


விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 28, 2022



உயர்கல்வி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


அனுஷம் : கவனம் வேண்டும். 


கேட்டை : திருப்திகரமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜூலை 28, 2022



மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : விமர்சனங்கள் நீங்கும். 


பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

ஜூலை 28, 2022



பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திராடம் : இழுபறியான நாள்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 28, 2022



உத்தியோக பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அவிட்டம் : உயர்வான நாள்.


சதயம் : முடிவு கிடைக்கும். 


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 28, 2022



சவாலான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : நன்மை உண்டாகும்.


ரேவதி : புரிதல் மேம்படும்.

---------------------------------------




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022 - School Morning Prayer Activities...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள் : 998

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.


பொருள்:

நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்


பழமொழி :

A diamond is valuable, though it lies on a dunghill.

குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குறையுமா?


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 


2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :


நம்பிக்கை தான் வாழ்க்கை

ஆனால் ஒருவரின்

ஏமாற்றத்திற்கு முக்கிய

காரணமும் இந்த

நம்பிக்கை தான்..!


பொது அறிவு :


1.அதிக ஞாபக சக்தி உள்ள விலங்கு எது? 


யானை. 


2. கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன? 


அண்டார்டிகா.


English words & meanings :


grat·i·fy - to please or satisfy one's desire, verb. திருப்திப்படுத்த, வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


கொத்தமல்லி வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது

கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.


NMMS Q 34:


ஒளி உமிழ் டையோடு என்பது _________பொருட்களால் செய்யப்பட்டது. 


விடை: குறை கடத்தி


ஜூலை 28


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]


உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.




உலகக் கல்லீரல் அழற்சி நாள்


உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது


நீதிக்கதை


தூக்கணாங்குருவி


ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,


குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 


வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.


பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.


இன்றைய செய்திகள்


28.07.22


★செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் மருத்துவ சேவை வழங்க 30 ஆம்புலன்ஸ் மற்றும் 1000 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


★தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


★காய்ச்சல், இதய பாதிப்புக்கான 26 மருந்துகள் தரமற்றவை என  மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்  ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


★5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது - அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


★பிலிப்பைன்ஸில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.


★2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


★செஸ் ஒலிம்பியாட் போட்டி: 6 அணிகளை களம் இறக்கும் இந்தியா.


★காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Today's Headlines


🌸 At the place of chess Olympiad for medical assistance, 30 ambulances and 1000 medical assistants are in preparedness - health minister

to implement the breakfast scheme in schools government released GO today

🌸 26 types of medicines are in very poor standard which is prescribed for the fever and heart disease - declaration by the medicine control board

🌸 The bidding for the 5G wave has been started by this the government may gain 4.3 lakhs crore rupees.

🌸Due to the earthquake which occurred in the Philippines yesterday morning 4 people died due to a building crash

🌸Russia says after 2024 they will come out of the International Space Centre and will set up a separate Space Centre for them

🌸 In Chess, Olympiad India rules down 6 teams

🌸 At Common Wealth Games' inauguration player P. V. Sindhu was selected as the one who holds the flag during the procession.





பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள், அவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் குழந்தைகளைக் கையாளும் ஒழுங்குமுறை நுட்பங்கள், பரிந்துரைகள் சார்ந்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம் (Letter from the Principal Secretary of School Education regarding the Activities of Children in school and public places, their misdeeds and disciplinary techniques for dealing with children, recommendations) ந.க.எண்: 12895/ பொது1(2)/ 2022-1, நாள்: 05-07-2022...



>>> பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள், அவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் குழந்தைகளைக் கையாளும் ஒழுங்குமுறை நுட்பங்கள், பரிந்துரைகள் சார்ந்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம் (Letter from the Principal Secretary of School Education regarding the Activities of Children in school and public places, their misdeeds and disciplinary techniques for dealing with children, recommendations) ந.க.எண்: 12895/ பொது1(2)/ 2022-1, நாள்: 05-07-2022...





பள்ளி சொத்துகள் சேதம், சம்பந்தப்பட்ட பெற்றோரே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை.


மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.


தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்றலாம் - மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்.


மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த சுற்றறிக்கையை அமல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு.


அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...



 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை - அரசாணை வெளியீடு...


>>> அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...




முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படும்


அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி


திங்கள் - உப்புமா + காய்கறி சாம்பார்


செவ்வாய் - கிச்சடி


புதன் - பொங்கல் +காய்கறி சாம்பார்


வியாழன் - உப்புமா + காய்கறி சாம்பார்


வெள்ளி - கிச்சடி + கேசரி

இன்றைய சிறுகதை - மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும் (Today's short story - Garland and Respect should come automatically)...



இன்றைய சிறுகதை - மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும் (Today's short story - Garland and Respect should come automatically)...


பூ தானாக மலரவேண்டும்... மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்...


ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.


திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.


எங்கும் காரிருள், சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.


அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத்தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்ததும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.


மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக்கொஞ்சம் கோபம் வந்தது .


"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உட்கார்ந்திருக்கிறாயே?" என்றார்.



பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்கே. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.


ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையை உடன் வைத்திருப்பார்.


அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?


இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.


அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும், ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்?சொல்வது" என்றான்.


ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம் சொல்வாயா?" என்றார்..


காசைத் தொடாமல் அவன் சொன்னான்,

"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"


அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக்கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா?"


மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. 


சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "


ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார்..


அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,

"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.

ராஜா வாயடைத்துப் போனார்..!


*எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை.*


 நிரந்தரமான மரியாதை என்பது "உன் பணத்தைக்கொண்டு" வாங்கும் பொருளில்லை. உண்மையான அன்பை முதலில் நீ பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.







Today's (27-07-2022) Wordle Answer...

                    

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (27-07-2022) Wordle Answer: MOTTO









பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள் : 995

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.


பொருள்:

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.


பழமொழி :

A cursed cow has short horns.

இறைவன் ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறார்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம்.


 2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :


கல்வி என்பது ஒரு மூட்டை

நூல்களை வாசிப்பது அல்ல..

அடக்கம்.. ஒழுங்கு.. அறம்.. நீதி..

இவற்றின் முன்மாதிரி ஆகும்.


பொது அறிவு :


1.அறிவைக் குறிக்க வழங்கும் பட்சி எது ? 


ஆந்தை. 


2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்? 


எட்டாயிரம் லிட்டர்.


English words & meanings :


fe·lic·i·ta·tion - an expression of joy for the achievement of other persons. Noun. மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :


புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க கொத்தமல்லி உதவுகிறது


NMMS Q 33:


பற்களை வலிமையாக வைத்திருக்கப் பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு எது? 


விடை: ஃபுளூரின்


ஜூலை 27


அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.[




சாலிம் அலி அவர்களின் நினைவுநாள்

சாலிம் அலி (சலீம் அலி) (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞரும் ஆவார். சாலிம் அலியின் முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் புரவலராக விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.


சாலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.


நீதிக்கதை


சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை


ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். 


பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது. 


ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது. 


ஏன் சிரிக்கிறாய்? 


அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்!அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை. 


காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை. 


பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார். 


பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை. 


நீதி :

சோம்பேறியாக இருத்தல் கூடாது.


இன்றைய செய்திகள்


27.07.22


◆தமிழகத்தில் 3 இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிப்பு.


◆செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


◆தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


◆அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், குடியிருப்புகள் தீக்கிரையாகின.


◆இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம்... ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரிக்கை.


◆உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.


◆24 ஆண்டு கால கனவு பலிக்குமா! காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் களம்காணும் இந்திய ஹாக்கி அணி.


◆ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி.


Today's Headlines


 ◆Notification of 3 places in Tamil Nadu as Wetlands of International Importance.


 ◆A five-layer security arrangement has been made in Chennai with 22,000 police officers and inspectors ahead of Prime Minister Modi's visit to attend the opening ceremony of the Chess Olympiad.


 ◆No more Eucalyptus trees should be planted in Tamil Nadu: Madras High Court orders.


 ◆Wildfires are spreading uncontrollably in the state of Texas, USA.  As the forest fire spread to the residential areas, the residences were engulfed in flames.


 ◆Peak heat in the UK... Rivers, ponds at risk of drying up: Ministry of Environment warns.


◆Sweden's Armand sets a new record to win gold in the pole vault at the World Athletics Championships.


◆ Will the 24-year dream come true?  The Indian hockey team is aiming to win gold in the Commonwealth Games.


◆ ISL Football: Jamshedpur retains Jitendra Singh.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...