கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளை கொண்டு குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் நிகழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு (President's flag presentation program with many principles including law and order, crime prevention - Vice President Venkaiah Naidu handed over the flag to Chief Minister M.K.Stalin)...

 


குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் நிகழ்ச்சி: 


தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குடியரசுத் தலைவரின் கொடி;


சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.


ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசு தலைவர் கொடி


இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே குடியரசு தலைவரின் கொடி


தென்மாநிலங்களில் தமிழகமே இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம்


சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளை கொண்டு கொடி கெளரவம்...



தமிழக காவல்துறைக்கு மிக உயரிய குடியரசு தலைவர் சிறப்பு கொடியை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார். 


சிறப்பான சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட பல அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு மாநில காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று அதனை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதேபோன்று இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் கொடியை ஒப்படைத்தார்.


அப்போது வானத்தில் வண்ண நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை என்றார். உயிரை பொருட்படுத்தாமல் காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரம் என்றும் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை என்று கூறிய முதலமைச்சர், சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தமிழ்நாட்டு காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது, மிக உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது;


தமிழ்நாடு காவல்துறை தனக்கு தானெ சல்யூட் அடித்துக் கொள்ளக்கூடிய சிறப்பு இது; தமிழ்நாடுக்கே வரலாற்று சிறப்புமிக்க பெருமை இது.


தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.


தமிழ்நாடு காவல்துறை இந்தியாவின் பல மாநிலங்களின் காவல்துறைக்கு முன்மாதிரியானது.


தமிழ்நாடு காவல்துறையில் ஒரு டிஜிபி, 2  ஏடிஜிபி, 14 ஐஜி, 20,000 காவலர்கள் பெண்களாக உள்ளனர்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.





Chess Olympiad - சதுரங்கம் - ஒரு நடன சித்தரிப்பு (Chaturangam - A Dance Depiction)...



>>> Chess Olympiad - சதுரங்கம் - ஒரு நடன சித்தரிப்பு (Chaturangam - A Dance Depiction)...




சுய மரியாதை பாதிக்காத வகையில் ஏழைகளுக்கு உதவுதல் - ஈரானிய ஒரு நிமிட குறும்படம் (Helping the poor without affecting their self-respect - an Iranian one-minute short film)...

 ஈரானிய ஒரு நிமிட குறும்படம் (தமிழ் மொழி பெயர்ப்பு)...



இந்த வீடியோ க்ளிப்பை பார்ப்பதற்கு முன், இதை படியுங்கள்.


ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.


தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே  ரொட்டியை திருடி விடுகிறார். திருடி விட்டு திரும்ப எத்தனிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள்.


இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, மன்னிப்புக் கேட்க  எத்தனிக்கிறார். அதற்கிடையே, அந்த கடைக்காரர் தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். "எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்து விட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்". அப்படி சொல்லி விட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார். குற்ற உணர்வில் மூழ்கி, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைப்பதை பார்த்து, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர்,  ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு சொல்கிறார்.

"சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்து விட்டுப் போகிறீர்களே, தயவு செய்து, எடுத்து செல்லுங்கள்." என்று அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.


"ஒருவருடைய தன்மானம் மற்றும் சுய மரியாதை பாதிக்காத வகையில், பசித்தவருக்கு உணவளிப்பதும், தேவையுள்ளோருக்கும், ஏழைக்களுக்கும் உதவுவது என்பது இறைவனின் பார்வையில் பெரிய நன்மையான காரியமாக பார்க்கப்படுகிறது. மேலும், இறைவனின் ஆசீர்வாதங்களையும், கருணையையும் இந்த உலக வாழ்க்கையிலும், வர இருக்கின்ற மறுமை வாழ்க்கையிலும் பெற்றுத்தர தகுதி வாய்ந்ததாக இருக்கிறது."


800 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களில், கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பசியுடனே படுக்கைக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.( ஐ.நா வின் உலக உணவுத் திட்ட அறிக்கை-2022).


 உலகத்தில் பசிக்கொடுமை அதிகரிக்கின்ற மொத்தமுள்ள 116 நாடுகளில், இந்தியா 101வது இடத்தை பிடிக்கிறது... (உலக பசி குறியீட்டு அறிக்கை - 2021)


"இது தான் வழிபாடு, இது தான் வாழ்க்கை நெறி - இறை நம்பிக்கை. ஏன் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் - இந்த உலகத்தில், உதவி செய்கிறான் எனில், இது தான் காரணம்." 


"இது தான் தர்மம். இது தான் பக்தி. இது தான் பூஜை." 


இது தான், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்ற சாராம்சமும், முக்கியமான அம்சமும் ஆகும்...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...






பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (01-08-2022) முதல் TNSED செயலியில் வருகைப்பதிவு - தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை (From tomorrow (01-08-2022) School students and Teachers will have to register their attendance on the TNSED App - Teachers will have to do Casual Leave, Medical Leave & Permission through the App - Department of School Education)...






 பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (01-08-2022) முதல் TNSED செயலியில் வருகைப்பதிவு...


பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை...


நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.


விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை.


>>> 15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...





நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) - வாழ்க்கை வரலாறு (Biography)...



 மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte) (1769-1821) கருதப்படுகிறார்.


பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார்.


1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார்.


1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார்.


பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?


நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ?

ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம்.


நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார்.


நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன?


கோர்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர்.


'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர்.


நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார்.


தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார்.


நெப்போலியனின் உயரம் என்ன?

நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார்.


நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது?

நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார்.


தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள்.


நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்?


தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.


நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார்.


ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார்.


நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன?

1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார்.


ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது.


1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார்.


நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார்.


நெப்போலியன் ஏன் பிரான்ஸின் பேரரசர் ஆனார்?

1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார்.


ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி?


நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன.


பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று.


அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.


நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது?

ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார்.


நெப்போலியன் ஏன் நாடுகடத்தப்பட்டார்?

1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது.


1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர்.


மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன்

ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.


பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.



நெப்போலியன் மரணம்

1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார்.


அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.


நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்

நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது.






15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding taking appropriate action on the subject matter discussed in the review meeting for all District Chief Educational Officers and District Educational Officers held on 15.07.2022 and 16.07.2022) ந.க.எண்: 0433443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-07-2022...



>>> 15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding taking appropriate action on the subject matter discussed in the review meeting for all District Chief Educational Officers and District Educational Officers held on 15.07.2022 and 16.07.2022) ந.க.எண்: 0433443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-07-2022...






ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா? - குமுதம் சிநேகிதி இதழ் கட்டுரை (Do teachers have iron hearts? - Kumutham Snehithi Magazine Article)...



>>> ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா? - குமுதம் சிநேகிதி இதழ் கட்டுரை (Do teachers have iron hearts? - Kumutham Snehithi Magazine Article)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...