கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (11-08-2022) Wordle Answer...

                                   

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (11-08-2022) Wordle Answer: GLEAN








போதை விழிப்புணர்வு இணையதள உறுதிமொழி எடுத்தல் மற்றும் உறுதிமொழி எடுத்த பின்னர் Certificate Download செய்யும் வழிமுறைகள் (Instructions for taking oath on drug awareness website and downloading certificate after taking Oath)...



 போதை விழிப்புணர்வு இணையதள உறுதிமொழி  எடுத்தல் மற்றும் உறுதிமொழி எடுத்த பின்னர் Certificate Download செய்யும் வழிமுறைகள் (Instructions for taking oath on drug awareness website and downloading certificate after taking Oath)...


>>> Online Certificate Download செய்யும் வழிமுறைகள் - PDF...


 

>>> Click Here - Pledge  - PDF File...



>>> 11-08-2022 காலை 10.30மணிக்கு பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும், குறும்பட காணொளியை ஒளிபரப்பவும் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற SC / ST மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது - செய்தி வெளியீடு எண்: 1368, நாள்: 08-08-2022 (TAHDCO and HCL join forces to offer degree with placement to SC / ST students who have passed 12th standard - News Release No: 1368, Date: 08-08-2022)...



>>> தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற SC / ST மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது - செய்தி வெளியீடு எண்: 1368, நாள்: 08-08-2022 (TAHDCO and HCL join forces to offer degree with placement to SC / ST students who have passed 12th standard - News Release No: 1368, Date: 08-08-2022)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Joint Director of School Education Proceedings to show patriotism by unfurling the national flag in all homes)...

 


>>> அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர்  செயல்முறைகள் (Joint Director of School Education Proceedings to show patriotism by unfurling the national flag in all homes)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



பதவி இறக்கம் செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களில் 3 பேருக்கு மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (3 demoted District Educational Officers have been transferred back to District Educational Officers and allotment of posts by the Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 34554/ அ1/ இ1/ 2022, நாள்: 08-08-2022...

 


>>> பதவி இறக்கம் செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களில் 3 பேருக்கு மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (3 demoted District Educational Officers have been transferred back to District Educational Officers and allotment of posts by the  Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 34554/ அ1/ இ1/ 2022, நாள்: 08-08-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இன்றைய (11-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஆகஸ்ட் 11, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் ரீதியான பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : எண்ணங்கள் கைகூடும். 


கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 11, 2022



எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். 


ரோகிணி : அனுபவம் ஏற்படும். 


மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 11, 2022



மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். ஆசை வார்த்தைகளை நம்பி வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.


திருவாதிரை : வாக்குறுதிகளை தவிர்க்கவும். 


புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 11, 2022



வியாபார பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். வாழ்க்கை துணைவரை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.


பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 11, 2022



உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உதவி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




மகம் : பயணங்கள் கைகூடும். 


பூரம் : தடைகள் விலகும். 


உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 11, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில முக்கிய முடிவை எடுப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  




உத்திரம் : சிந்தனைகள் தோன்றும். 


அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 11, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் அமையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 11, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். தெளிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 




விசாகம் : புரிதல் உண்டாகும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : இன்னல்கள் குறையும். 

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 11, 2022



குடும்பத்தில் எதிர்பாராத தனவரவு மேம்படும். குழந்தைகளின் வழியில் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நுட்பமான சிந்தனைகளை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில செயல்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




மூலம் : வரவு மேம்படும்.


பூராடம் : மாற்றமான நாள்.


உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 11, 2022



வியாபார பணிகளில் அனுபவமிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும். 


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 11, 2022



உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளிடம் கனிவாக பழகவும். விலகி சென்றவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அவிட்டம் : பொறுப்புகள் குறையும்.


சதயம் : புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி : மாற்றம் பிறக்கும். 

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 11, 2022



வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளோடு இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.


உத்திரட்டாதி : மதிப்பு மேம்படும். 


ரேவதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடி செயல் வகை


குறள் : 1023


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.


பொருள்:

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்


பழமொழி :

It is the mind that makes the body rich.


உள்ளமே உடலை செழிப்பாக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 


2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.


பொன்மொழி :


உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.


பொது அறிவு :


1.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார் ? 


 பாத்திமா பீவி. 


 2. மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன? 


 புத்லிபாய்.


English words & meanings :


Pediatrician - a person who treats children, noun. குழந்தை மருத்துவர். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


கறிவேப்பிலையை தினமும் டீ போட்டு வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது. ஒரு மாதம் காலம் வரை இப்படி குடித்து வருவது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.


அப்படி இல்லையென்றால் காலையில் வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வரலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உங்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.


NMMS Q 39:


பெட்ரோலுடன் எந்த ஆல்கஹாலைக் கலந்து பயன்படுத்தலாம் என மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது?


 விடை: எத்தனால்


நீதிக்கதை


வைரவியாபாரி


ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று, இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் என்றான். உடனே பிச்சைக்காரன், இரண்டு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள் என்றான்.


அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் இரண்டு ரூபாய் அதிகம்! நான் உனக்கு ஒரு ரூபாய் தருகிறேன் என்றான். அதற்கு பிச்சைக்காரன், பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான். வைர வியாபாரி, எப்படியாவது அவன் தன்னிடம் அதை ஒரு ரூபாய்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 2000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.


இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் இரண்டாயிரத்தை கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோஷமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் என்றான். அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் இரண்டு ரூபாய்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றவாறே நடக்கலானான்.


இன்றைய செய்திகள்


11.08.22


* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


* நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு.


*நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.


* புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப் பி ஐ அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அத்துமீறல்கள் நடந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.


* எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் முடிவு செய்துள்ளது.


* காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் : தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை.


* ஐ.எஸ்.எல் கால்பந்து: ரஹீம் அலியை தக்கவைத்தது சென்னை அணி


* ஐசிசி டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறார்.


Today's Headlines


* Tamil Nadu Chief Minister M. K. Stalin has announced that the winning Indian teams will be given a prize of Rs 1 crore each.


*  The Chennai Meteorological Department has informed that the Nilgiris and Coimbatore are likely to receive very heavy rains.


 * Planning to set up pilot training center at Chettinad near Karaikudi.


 * Supreme Court Justice Uday Umesh Lalit has been appointed as the next Chief Justice of the country.


 * Former US President Donald Trump has accused the FBI of violations during a search of his Florida home.


 * The Council of the European Union has decided to reduce dependence on Russia for gas imports.


 * Commonwealth Fencing Championship: Tamil Nadu player Bhavani Devi wins gold.


* ISL Football: Chennai retain Rahim Ali


 * Indian player Suryakumar Yatham continues to remain at the 2nd position in the list of best batsmen in the ICC T20 rankings.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked

 40,000 ரூபாய்க்கு OLA ஸ்கூட்டர் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked ரூ.40,000த்துக்க...