கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தனி இலச்சினை (Logo) வெளியீடு (Release of separate Logo for Chennai Municipal Corporation Schools)...



>>> பள்ளிக்கல்வித்துறையின் செய்தி வெளியீடுகள்...


 சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை (லோகோ) மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை மேயர் பிரியா, "மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார். சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம் என கூறினார்."


தலைமை பொறுப்பு, முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் வளர்க்க பள்ளிகளில் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எண்ணங்களை வண்ணம் ஆக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.


அமைச்சர் மா. சுப்ரமணியன், ’’பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சல் காரணமாக எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்."


 

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால் முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம்" என்றார். அமைச்சர் கே.என் நேரு  ஆசிரியர்களுக்கு போட்டி வைப்பது போல தமிழ்நாடு அமைச்சர்களுக்குள் பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை அமைச்சரின் பணியை கண்டு வியப்படைந்தது உண்டு. சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும்,  மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலை செய்தால் தான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும் என பழமொழி கூறி கிண்டல் செய்தார். 


119 தொடக்கப்பள்ளி, 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை என மொத்தம் 281 பள்ளிகளில் ஒரு லட்சத்து நான்காயிரத்து 743 மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி பள்ளி ஏழை எளிய நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு தயார் செய்யுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் தயார் செய்து தருகிறோம். 


மாநகராட்சிக்கு கலை அறிவியல், பொறியியல் மருத்துவ கல்லூரி வேண்டும் என அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தென் சென்னையில் மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். மாநகராட்சியில் 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு மாநகராட்சி கல்லூரியில் 32% இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் மாநகராட்சி மேலும் உத்வேகத்துடன் செயல்படும். 


மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி செய்து தரும். சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முன்னோடி மாநிலமான மஹாராஷ்டிரா மாநகராட்சிக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை பருவமழைக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.






செப்டம்பர் மாத ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை (Things to keep in mind while preparing September Payroll)...



செப்டம்பர் மாத ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை (Things to keep in mind while preparing September Payroll)...


1. DA அனைவருக்கும் சரியாக வந்துள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும். சரியாக இல்லை எனில் existing entry கொடுத்தும் சரியாக வரவில்லை எனில் DA delete செய்துவிட்டு மீண்டும் புதிதாக பதிவேற்றம் செய்யவும்.


2.NSD மாற்றம் செய்தால் MFR கொடுக்கத் தேவையில்லை.


3.Invalid position id என்ற error தற்பொழுது வருகின்றது எனில் check post continuation order date அதன் பிறகு date extent செய்யவும்.


4.Incometax மாற்றம் செய்வதற்கு webadi மூலமாக incometax amount மட்டும் கொடுத்து பதிவேற்றம் செய்துவிட்டு MFR கொடுக்கவும்.


5.Gpf advance சரியாக பிடித்த மேற்கொள்ளப்படவில்லை எனில் delete செய்துவிட்டு மீண்டும் report இல் சென்று create front end, employee based run, organization based run செய்துவிட்டு MFR கொடுக்கவும்.


6.தொழில் வரி ரசீது அனைத்தையும் online பட்டியலுடன் scan செய்து இணைக்க இயலாது. தொழில் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்ற certificate இணைத்தால் போதுமானது. பட்டியலுடன் hard copy தொழில் வரி ரசீது இணைக்கப்பட வேண்டும்.


7. 24 ஆம் தேதிக்கு மேல் தீபாவளிக்கான விழா முன் பண பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம். 


8. ஆனால் ஒன்றாம் தேதிக்கு மேல் தான் வங்கியில் வரவு வைக்கப்படும் மாத ஊதியத்திற்கு முன்னுரிமை தரப்படும்.





அரசு பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும் 182 ஆசிரியர்களுக்குப் பதிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (State Project Director's Proceedings Regarding the recruitment and release of funds to Appoint Temporary Teachers for the 182 Teachers on deputation from Government Schools by the School Management Committees) ந.க.எண்: 3545/ C7/ ஒபக/ 2022, நாள்: 20-09-2022...

 


>>> அரசு பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும் 182 ஆசிரியர்களுக்குப் பதிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து  மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (State Project Director's Proceedings Regarding the recruitment and release of funds to Appoint Temporary Teachers for the 182 Teachers on deputation from Government Schools by the School Management Committees) ந.க.எண்: 3545/ C7/ ஒபக/ 2022, நாள்: 20-09-2022...


மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்...


தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் ரூ.7,500, ரூ.10,000, ரூ.12,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளாலாம் - பள்ளிக்கல்வித்துறை...



4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு - வட்டாரக் கல்வி அலுவலர்கள் தினந்தோறும் அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாள்களை காலை 9 மணிக்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிட வேண்டும் - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கடிதம் (1st Term Summative Assessment Test for 4th and 5th Standard Students - Block Education Officers should deliver the day's question papers to Headmasters daily by 9 am - Letter from Tiruchirappalli District Chief Education Officer)...



>>> 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு - வட்டாரக் கல்வி அலுவலர்கள் தினந்தோறும் அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாள்களை காலை 9 மணிக்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிட வேண்டும் - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கடிதம் (1st Term Summative Assessment Test for 4th and 5th Standard Students - Block Education Officers should deliver the day's question papers to Headmasters daily by 9 am - Letter from Tiruchirappalli District Chief Education Officer)...




இன்றைய (22-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

செப்டம்பர் 22, 2022



உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு  


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பரணி : சாதகமான நாள்.


கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 22, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மனை அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். 


ரோகிணி : தன்னம்பிக்கையான நாள்.


மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 22, 2022



நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்கள் ஏற்பட்டு நீங்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எண்ணிய சில காரியங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.


திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.


புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 22, 2022



உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் தீர்வு காண்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி பேசும் நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும். 


பூசம் : நெருக்கடிகள் குறையும். 


ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 22, 2022



வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூரம் : சேமிப்பு குறையும்.


உத்திரம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 22, 2022



குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : மாற்றம் உண்டாகும். 


அஸ்தம் : நெருக்கடிகள் குறையும். 


சித்திரை : சுதந்திரத்தன்மை அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 22, 2022



ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் ஒத்துழைப்பான சூழல் அமையும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். 


சுவாதி : லாபம் மேம்படும்.


விசாகம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 22, 2022



வியாபார பணிகளில் உள்ள சில நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : நுட்பங்களை அறிவீர்கள்.


அனுஷம் : முடிவு கிடைக்கும். 


கேட்டை : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 22, 2022



எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அன்பு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மூலம் : காலதாமதமான நாள். 


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 22, 2022



நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றத்தை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும். 


திருவோணம் : உதவி கிடைக்கும்.


அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 22, 2022



பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : தீர்வு காண்பீர்கள்.


சதயம் : அனுகூலமான நாள்.


பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 22, 2022



புதிய நபர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் மனதில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழல் அமையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : உதவி கிடைக்கும். 


உத்திரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.


ரேவதி : லாபம் ஏற்படும்.

---------------------------------------




Today's (22-09-2022) Wordle Answer...

                                                                            

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (22-09-2022) Wordle Answer: SAINT










 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:இன்பத்துப்பால்


இயல்: களவியல்


அதிகாரம்: குறிப்பறிதல்


குறள் : 1097

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.


பொருள்:

பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்


பழமொழி :

Good actions carry their warrant with them.


நல்லதை செய்பவர்கள் நல்லதையே பெறுவார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.


 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.


பொன்மொழி :


நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் வாழ்வை தீர்மானிக்கும்.


பொது அறிவு :


1.சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?


 கலோரி.


 2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?


 உயரத்தை.


English words & meanings :


scrump·tious - Greatly pleasing to the taste. Adjective. "My mother made a scrumptious chocolate ice-cream". அதி ருசியான உணவு. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு :


வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிராமி மூலிகையின் தோற்றமே மூளை வடிவத்தில் காணப்படுவது இதன் சிறப்பு. அதனால் நம் மூளையின் செயல்பாட்டிலும் பெரிய பங்காற்றுகிறது.


NMMS Q 65:


Circle: Circumference :: Square : ? a) Angle b) Area c) Diagonal d) Perimeter 


 Answer : Perimeter


செப்டம்பர் 22


மைக்கேல் பரடே  அவர்களின் பிறந்தநாள்


மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.


மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.


நீதிக்கதை



நிம்மதி


என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான் ஒரு அரசன், ஞானியிடம். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.? என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான்.


அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்கோ சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ சென்று தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன் என்றார். 


சரி என்றான் மன்னன். ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா....??? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்...??? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்....??? விழித்தான் அரசன்.


ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது என்னுடையது இல்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் என்னுடையதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் என்னுடையதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.


இன்றைய செய்திகள்


22.09.22


* 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* சட்டப்பேரவை கூட்டத் தொடரை அக்டோபரில் நடத்த திட்டம் - அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தேதி அறிவிக்கப்படும்.


* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.


* எங்களிடம் இன்னும் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன - புதினின் பகிரங்க மிரட்டல். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்துகிறார் ரஷ்ய அதிபர் படின்


* முதன் முறையாக மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தை நடத்தும் இந்தியா.


* மாநில பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்.


* 2023ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் - ஐசிசி அறிவிப்பு.


Today's Headlines


* The Government of Tamil Nadu has ordered the establishment of India's first Sea Sponge Sanctuary in Tamil Nadu with an area of ​​448 square kilometers.


 * The High Court has ordered a ban on conducting typing tests in Tamil Nadu.


*  The date will be announced after the plan-to-work review meeting to hold the session of the Legislative Assembly in October.


* ISRO will launch 36 satellites of UK's OneWeb on October 22 with GSLV Mark-3 rocket.


* We have more weapons - Putin's public intimidation.


* India to host MotoGP bike race for the first time


* State beach volleyball tournament starts today at Nagapattinam.


 * 2023 World Test Championship Final Venue - ICC Announces.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...