கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது பரவத் தொடங்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்...

 தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது பரவத் தொடங்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்...


பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தல்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP (New India Literacy Programme) - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...



>>> புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



NILP கற்போருக்கான தேர்வு


👉 *தேர்வு நடைபெறும் நாள்:* 19/03/23.


👉 *நேரம்:* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (இந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்)


👉 *தேர்வு நடைபெறும் இடம்:* 

அந்த அந்த பள்ளியில் அல்லது பொதுஇடம் அல்லது கற்போரின் இல்லம்.


👉 *வினாத்தாள்*  ( தலைமையாசிரியர் வினாத்தாளை வட்டார வள மையத்தில் சனிக்கிழமை மாலை(18/03/23) 2 மணியளவில் பெற்று கொண்டு பாதுகாப்பாக பள்ளியில் வேண்டும்).


👉 *மையத்தின் வகுப்பறை(hall suprindentant) கண்காணிப்பாளர்:* தன்னார்வலர் ஆவர்.


👉 *ஒட்டுமொத்த பொறுப்பாளர்:* தலைமையாசிரியர் ஆவர் 


👉 ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை  தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும்.


👉தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளை ஞாயிறு அன்றே  வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.


நன்றி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS WEBSITEல் மாணவர்களின் Personal details update செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது (EMIS WEBSITE provides facility to update personal details of students)...

 

EMIS WEBSITEல் மாணவர்களின் Personal details update செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது (EMIS WEBSITE provides facility to update personal details of students)...


💥EMIS WEBSITE  TODAY UPDATE  17-03-2023

🌈மாணவர்களின் Personal details update செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது...

அதாவது மாணவர்களின்

▪️Photo 

▪️Name spelling correction Tamil & English

▪️Aadhaar No

▪️Phone No

▪️DOB

▪️Communication details

▪️Family details

என அனைத்தையும் தற்போது School Login-ல்  திருத்தம் செய்து கொள்ளலாம்....






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்றைய (17-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (17-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 17, 2023



குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.


பரணி : பயணங்கள் கைகூடும்.


கிருத்திகை : குழப்பம் நீங்கும். 

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 17, 2023



வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.


ரோகிணி : நெருக்கடிகள் குறையும். 


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 17, 2023



எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 




மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.


திருவாதிரை : அமைதியின்மையான நாள்.


புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும். 

---------------------------------------



கடகம்

மார்ச் 17, 2023



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 


பூசம் : நெருக்கம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : மேன்மை உண்டாகும். 

---------------------------------------



சிம்மம்

மார்ச் 17, 2023



உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். சக ஊழியர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். செலவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : இன்னல்கள் குறையும். 


பூரம் : புரிதல் அதிகரிக்கும்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 17, 2023



நிர்வாகம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : மேன்மை உண்டாகும். 


அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 17, 2023



சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உறவினர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : புரிதல் உண்டாகும். 


விசாகம் : வாய்ப்புகள் கைகூடும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 17, 2023



மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : ஆர்வம் உண்டாகும். 


கேட்டை : குழப்பம் குறையும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 17, 2023



உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.


உத்திராடம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 17, 2023



எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். சமூக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கற்பித்தல் பணியில் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


அவிட்டம் : புதுமையான நாள்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 17, 2023



வெளியூர் பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் வருந்தும் படியான பேச்சுக்களை தவிர்க்கவும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : மந்தமான நாள்.


பூரட்டாதி : பேச்சுக்களை தவிர்க்கவும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 17, 2023



உத்தியாக பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். இன்னல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரேவதி : லாபம் மேம்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண்: 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்

தகுதியான் வென்று விடல்.


பொருள்:

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்


பழமொழி :

Do not count your chickens before they are hatched


கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 


2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்


பொன்மொழி :


பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.


பொது அறிவு :


1. அடர்த்தி குறைவான கோள் எது? 


 சனி . 


 2. ஈராக்கின் பழைய பெயர் என்ன? 


 மெசபடோமியா


ஆரோக்ய வாழ்வு :


கொலஸ்ட்ரால் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும் காலையில் கொத்தமல்லி நீரை பருகலாம். அவர்களுக்கு இந்தப் பிரச்சசனையில் இருந்து விடுபடு வழி கிடைக்கும். மேலும், கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.


கணினி யுகம்


Ctrl+Tab : Switch between open tabs in browsers or other tabbed ... Ctrl+End : Its use is to move the cursor to the last of the document.  


மார்ச் 17


சாய்னா நேவால் 


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.


நீதிக்கதை


புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?


ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலிராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும்போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.


அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலிராமன் காவலர்களை பார்த்து என் மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்? என்று கேட்டான். அவர்களோ! உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார் என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.


தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான். இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலி மகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவ்வொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருப்பதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர். 


காவலர்கள் மன்னரை பார்த்து, அரசே! தெனாலிராமனின் மகன் பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும், என்று கூறினர். மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, திருடிய பூக்கள் எங்கே? என்று கேட்டார். காவலர்கள் மன்னரை பார்த்து, பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது என்று காவலர்கள் கூறினர்.


அரசர் தெனாலி மகனை பார்த்து, உன் கைகளை காட்டு என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை. மன்னர் தெனாலி மகனை பார்த்து, நீ பறித்த பூக்கள் எங்கே? என்று கேட்டார். அவனோ! மன்னரைப் பார்த்து, நான் பூக்கள் எதுவும் பறிக்கவில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்! என்று கூறினான். மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.


இன்றைய செய்திகள்


17.03. 2023


🌸பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



🌸சென்னை ராணி மேரி கல்லூரியில் "பப்ளிக் போலீஸ்" என்ற தன்னார்வ அமைப்பின் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.



🌸பொதுத் தேர்வில் 49000 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்விற்கு ஆப்சென்ட் : அதிர்ச்சியான பள்ளிக்கல்வித்துறை!



🌸புதிய கோவிட் வைரஸ்.‌ இஸ்ரேல் அடையாளம் தெரியாத இரண்டு புது வைரஸ்களை கண்டு பிடித்துள்ளது.



🌸சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்.. ஒரே மேடையில் ஸ்டாலின், தோனி, உதயநிதி.. நாளை திறப்பு!



🌸தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் ஒரு பந்து கூட போடாத நிலையில் மழை காரணமாக போட்டி ரத்தானதால் விரக்தியில் உள்ளனர்


Today's Headlines



 🌸Minister Anbil Mahesh has said that there is no plan to conduct a special examination for students who have not written the 12th standard general examination.



🌸A seminar on "Public Police", a voluntary organization, was held at Queen Mary College, Chennai.  School Education Minister Anbil Mahesh and retired Justice Balakrishnan inaugurated the seminar.



🌸49000 students are absent for the English subject in the general exam : School education department was shocked.



🌸 New covid variant: Israel discovers two unidentified viruses.



🌸Kalaignar Karunanidhi Stand in Chepakkam.. Stalin, Dhoni and Udhayanidhi join together and opens tomorrow.



🌸South Africa and West Indies were frustrated because of the ODI was abandoned without a ball being bowled by the rain.

 

எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துணிப் பதாகை (Cloth Banner - Ennum Ezhuthum - Let's Celebrate Learning)...

 

>>> எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துணிப் பதாகை (Cloth Banner - Ennum Ezhuthum - Let's Celebrate Learning)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துண்டுப் பிரசுரம் (Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Notice Pamphlet)...

 

>>> எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - துண்டுப் பிரசுரம் (Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Pamphlet)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...