கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கீரை வகைகளும் அவற்றின் முக்கிய பயன்களும் (Types of greens and their main uses)...



கீரை வகைகளும் அவற்றின் முக்கிய பயன்களும்  (Types of greens and their main uses)...


 🌿❤️40 வகை கீரைகளும் அவற்றின் முக்கிய பயன்களும்❤️🌿:


🌿💚அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.


🌿💚காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


🌿💚சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


🌿💚பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.


🌿💚கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


🌿💚மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.


🌿💚குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.


🌿💚அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.


🌿💚புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.


🌿💚பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.


🌿💚பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.


🌿💚பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.


🌿💚சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.


🌿💚வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.


🌿💚முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.


🌿💚வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.


🌿💚முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.


🌿💚புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.


🌿💚புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.


🌿💚நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.


🌿🥜தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.


🌿💚முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.


💚🌿முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.


🌿💚பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.


🌿💚புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.


🌿💚மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.


🌿💚மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.


🌿💚முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.


🌿💚சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.


🌿💚வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


🌿💚தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.


🌿💚தவசிக்கீரை - இருமலை போக்கும்.


🌿💚சாணக்கீரை - காயம் ஆற்றும்.


🌿💚வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.


🌿💚விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.


🌿💚கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.


🌿💚துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.


🌿💚துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


🌿💚காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.


🌿💚மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் அன்றாடப் பணிகள் (Daily work of teachers in School E Department)...

 


பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் அன்றாடப் பணிகள் (Daily work of teachers in School E Department)... 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வானவில் மன்றம்

இதர மன்றங்கள்

இல்லம் தேடிக் கல்வி

புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம்

எண்ணும் எழுத்தும்

Bridge Course

திரைப்படம்

EMIS பதிவுகள்

TNSED App Online Attendance

HEALTH SCREENING

library shelf creation shuffle

Baseline survey

online summative exam

FA b online

Report card online 

கலைத்திருவிழா

NMMS

Shaala siddhi

SNA account activities

இலவசங்கள் நலத்திட்ட பொருட்கள் எடுத்து வருதல், வழங்குதல், அவற்றை TNSED Schools App ல் பதிவேற்றம் செய்தல்

PSTM approval 

Bonafied Certificate Upload & 7.5% approval

Question arrangement for exam

பதிவேடுகள் பராமரிப்பு

RBSK Hospital camp- programme

சிறப்பு தின உறுதிமொழிகள்

SMC தீர்மானம் நிறைவேற்றம்

தேசியவிழாக்கள், தூய்மை வாரம், குழந்தைகள் தினம் போன்ற விழாக்கள்  கொண்டாடுதல்,

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்

கட்டடம் பெயிண்ட் அடித்தல்,

மழைநீர் தேங்காமல் பராமரித்தல்

குடிநீர் தொட்டி பராமரித்தல்

சுத்தம் செய்தல்

Google forms updation

Team visit

BRTE Visit

BEO Visit 

DEO Visit

CEO Visit 

RP training,

Training /MR/

மாலை வகுப்பு

கணக்கெடுப்பு  பணி, படிக்காத மாணவர்களை google Sheet ல் பதிவேற்றம் / இரண்டு வரி & நான்கு வரி நோட்  திருத்துதல் Graph / Map

Geometry  திருத்துதல்/

பாட குறிப்பேடுகளை திருத்துதல் / Dictation / 

வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய வைத்தல்

Notes of lesson  எழுதுதல் 

TLM Preparation 

தேன்சிட்டு இதழ் வினாடி வினா போன்ற போட்டிகளுக்கு பள்ளி/ வட்டார/ மாவட்ட அளவில் மாணவர்களை தயார்படுத்துதல்

இவற்றுடன்

கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்வுகள்,

உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் புள்ளி விவரங்கள் அனுப்புதல்

Google Meet இல் கலந்து கொள்ளுதல்


*இத்தனையும் தாங்கி கற்றல் கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்கள் உண்மையில் கடவுள்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



25-03-2023 அன்று தமிழ்நாட்டில் 3 நகரங்களில் வெயில் சதமடித்தது (In Tamil Nadu, 3 cities were hit by heat)...



 25-03-2023 அன்று தமிழ்நாட்டில் 3 நகரங்களில் வெயில் சதமடித்தது (In Tamil Nadu, 3 cities were hit by heat)...


தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது. 


கரூர் பரமத்தியில் 101.3, ஈரோட்டில் 101.12, மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.


In Tamil Nadu, 3 cities were hit by heat. 

In Tamil Nadu, Madurai Airport, Karur Paramathi and Erode were hit by the sun. 

Karur Paramathi recorded 101.3, Erode 101.12 and Madurai airport 100.4 degrees Fahrenheit.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...


>>> வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின்  இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி பிரேமா என்பவரது மூத்தோர் -  இளையோர் ஊதிய முரண்பாட்டை களைந்திடக்  கோரிய விண்ணப்பத்தை மதிப்புமிகு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் மறுத்த நிலையில்,  மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமல், அரசு சார்பில் செய்யப்பட்ட   மேல்முறையீட்டினை  மாண்பமை சென்னை உயர்  நீதிமன்றம் ரத்து செய்தது.


அதன் பிறகும் ஊதிய முரண்பாடு களையப்படாத நிலையில், மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 


 இதையடுத்து,  24.03.2023 அன்று மதிப்புமிகு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்கள், மேற்படி திருமதி பிரேமா அவர்களது மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டைக்  களைந்து உத்தரவிட்டுள்ளார்.


உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் (India wins 2 gold medals at World Women's Boxing Championships)...

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் (India wins 2 gold medals at World Women's Boxing Championships)...



 உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம் - 81 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி அசத்தினார் ஸ்வீட்டி போரா (India's 2nd gold at World Women's Boxing Championship - Sweety Bora stunned China's Wang Lina in 81kg category)...


13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 81 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.


இதில், இந்தியாவின் ஸ்வீட்டி போரா சீனாவின் வாங் லீனாவை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை லீனானை 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.




81 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்வீட்டி போராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


முன்னதாக ஏற்கனவே நடந்த 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவின் லுட்சாய்கானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் நிது கங்காஸ். 


அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 22 வயதாகும் நிது கங்காஸ் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இரண்டாவது செட்டில் ஓரளவு தாக்குப் பிடித்த மங்கோலிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.


மகளிருக்கான குத்துச் சண்டை உலக சாம்பியன் தொடர் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நிது கங்காஸ் மற்றும் மங்கோலியாவின் லுட்சாய் கான் ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி வந்தார். நுணுக்கமான நகர்வுகளால் லுட்சாய்கானை திணறடித்த நிது கங்காஸ், அதிரடியான பஞ்ச்சுகளால் பாயின்ட்டுகளை எடுத்தார். முதல் சுற்றில் அவர் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோதே அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டிருந்தது.


நிது கங்காசுடன் சேர்த்து இந்திய வீராங்கனைகள் மொத்தம் 11 முறை மகளிர் குத்துச் சண்டை பிவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். 2002, 2005, 2008, 2010, 2018 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மேரி கோமும், 2006-இல் சரிதா தேவி, 2006 மற்றொரு உலக சாம்பியன் தொடரில் ஜென்னி ஆர்.எல்., லேகா கே.சி, 2022 இல் நிகாத் ஸரீன் ஆகியோர் குத்துச் சண்டையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.



தனது ஆசிரியையிடம் கேட்டு அடி வாங்கி சந்தோஷப்படும் பழைய மாணவர்களின் நெகிழ்ச்சி (The resilience of old students enjoying the beating of the teacher)...



>>> தனது ஆசிரியையிடம் கேட்டு அடி வாங்கி சந்தோஷப்படும் பழைய மாணவர்களின் நெகிழ்ச்சி (The resilience of old students enjoying the beating of the teacher)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய வருமான வரிமுறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு (Increase in ceiling of Income Tax New Regime - Notification in Finance Bill Amendment)...

 புதிய வருமான வரிமுறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு (Increase in ceiling of Income Tax New Regime - Notification in Finance Bill Amendment)...


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவுடன் 64 திருத்தங்களையும் தாக்கல் செய்தார். அவற்றில் ஒரு திருத்தம் , வருமானவரி திட்டத்தின் புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு சலுகை அளிக்கிறது. 



புதிய வரிவிதிப்பு முறையில் , ரூ .7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆனால் , கூடுதலாக ரூ .100 வருமானம் இருந்தால் , அதாவது ரூ .7 லட்சத்து 100 வருமானம் வந்தால் , ரூ .25 ஆயிரத்து 10 வருமான வரி செலுத்த வேண்டும். 


எனவே , கூடுதலாக ரூ .100 வருமானத்துக்கு ரூ .25 ஆயிரத்து 10 வரி செலுத்த வேண்டி உள்ளது. இந்த திருத்தத்தில் , ரூ .7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும்வகையில் , ரூ .7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office

ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை  - பாம்பனில்  மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்  ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை   கா...