கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம் (PAN card error? - Now you can edit yourself online)...

 

பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம் (PAN card error? - Now you can edit yourself online)...


இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது.


 ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது.


இப்படி பல முக்கிய நிதி தேவைகளுக்கு பயன்படும் பான்கார்டில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். 


அப்படி பிழை இருந்தால், அத்தியாவசிய தேவையான வங்கி கணக்கு கூட தொடங்குவது கடினமாகும். 


இப்படி பான்கார்டில் பிழை இருந்தால் அதை எளிதாக ஆன்லைனிலே திருத்தம் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.


பான் கார்டு திருத்தம் செய்ய முதலில்

 https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html 

என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். 


பிறகு இணையதள பக்கத்தில் 'அப்ளிகேஷன் டைப்' என்ற option-ஐ தேர்ந்தெடுத்து Change of Correction in Exsiting Pan Card என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.


பிறகு அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பான் கார்டு திருத்தம் செய்வதற்குத் தேவையான விவரங்களை பதிவு செய்த பிறகு டிஸ்பிளேவில், பதிவு செய்ததற்கான ரிஜிஸ்டர் எண் தெரியும், அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 


இந்த எண் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்படும் என்பதால், உள்ளே கொடுக்கும் விவரங்களில் சரியான இ-மெயில் முகவரியை வழங்க வேண்டும்.


அடுத்ததாகத் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். 


குறிப்பாக தற்போது பான் கார்டு பெயர், ஆதாரில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது என்பதால், கட்டாயம் ஆதார் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இப்படி அனைத்து விவரங்களையும் அளித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பித்து, திருத்தம் செய்வதற்கான கட்டணத்தைச் செலுத்தினால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்குத் திருத்தம் செய்யப்பட்ட பான்கார்டு வந்துவிடும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண் : 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.


பொருள்:

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்


பழமொழி :

No sweet without sweat


வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.


 2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்


பொன்மொழி :


ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை


பொது அறிவு :


1. நியூயார்க் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? ஹட்சன் நதிக்கரையில் . 2. சுமார் 55 ஆயிரம் ஏரிகளை கொண்ட நாடு எது ? பின்லாந்து.


English words & meanings :


 orthography – the conventional spelling system of a language. noun. எழுத்திலக்கணம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு 


பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை நம் ஆரோக்கியத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுவது வரை உங்களுக்கு பல்வேறு நன்மைகளை இது வழங்குகிறது.


கணினி யுகம்


Ctrl + Alt + Del - With the help of these keys, you can Reboot/Windows task manager. Ctrl + Esc - These keys allow you to activate the start menu.


ஏப்ரல் 11






மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராத்தி: जोतीबा गोविंदराव फुले ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phule) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்


நீதிக்கதை


கதை :


ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது. 


நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன. 


இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது. 


ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது. 


என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது. 


நீதி :



மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.


இன்றைய செய்திகள்


11.04. 2023



* தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


* போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


* “2023-ம் ஆண்டில் மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள 45 இடங்களையும், சிவில் நீதிபதி பதவியில் உள்ள 245 இடங்களையும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தமிழக அரசின் நீதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழகத்தில் கரோனா பரவல் க்ளஸ்டர் பாதிப்பாக இல்லை என்றும் புதிய திரிபின் வீரியம் குறைவாகவே உள்ளது என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பும் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றில் சீன ஹேக்கர்களின் கைவரிசை இருப்பதாக அறியப்பட்டதால் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது.


* “இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். எல் நினோ வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஆசியாவுக்கு வறண்ட வானிலையைக் கொண்டு வரலாம்” என்று தனியார் வானிலை முன்னறிவிப்பு மையமான ‘ஸ்கைமெட்’  தெரிவித்துள்ளது.


* உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகை.


* 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: புதிய கேப்டன்களுடன் களம் இறங்கும் அணிகள்.


* கொல்கத்தா அணியின் உத்தரப்பிரதேச வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தாவை தோல்வியின் பிடியிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


Today's Headlines


* Governor RN Ravi has approved the Online Gambling Prohibition Bill passed again in the Tamil Nadu Legislative Assembly.


* The Tamil Nadu government has approved setting up of special courts in 4 more districts for speedy trial of POCSO cases.


* "In 2023, steps will be taken to fill up 45 posts in the post of District Judge and 245 posts in the post of Civil Judge," the Tamil Nadu Government's Judiciary Policy Brief said.


*  Tamil Nadu People's Welfare and Medical Minister M. Subramanian has said that there is no corona spread cluster in Tamil Nadu and the severity of the new strain is low.


 * The central government has banned some companies that offer bulk messaging services to consumers because they are known to have the hand of Chinese hackers.


* “Monsoon rains in India this year will be less than usual.  El Nino chances increase.  This may bring dry weather to Asia,” said private weather forecasting center 'Skymet'.


* Foreign Minister of Ukraine Emin Tabarova will visit India today.


 * 13th Cricket World Cup: Teams to field with new captains


* Kolkata's Uttar Pradesh player Ringu Singh hit 5 sixes in 5 balls in the last over to take Kolkata from the clutches of defeat to victory.

 

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் பொதுத் தேர்வில் மூன்று மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை (Request to give three marks in 10th Standard English Public Exam)...



 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் பொதுத் தேர்வில் மூன்று மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை (Request to give three marks in 10th Standard English Public Exam)...


இன்றைய பத்தாம் வகுப்பு ஆங்கில வினா தேர்வில் வினா எண் 4,,5,6  ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால், மாணவர்கள்  இடையே விடையளிப்பதில்  மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.


விடையில் Synonyms, antonyms இரண்டும் இருப்பதால் விடையளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு  விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தேர்வு துறை இயக்குனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வினாத்தாள் முறையாக பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.


அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு (Passport) பெற தடையின்மை சான்று (NOC) தேவையில்லை - மதுரை பாஸ்போர்ட் அதிகாரி தகவல் (Govt Employees do not need No Objection Certificate to get passport - Madurai Passport Officer informs)...

 


அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு (Passport) பெற தடையின்மை சான்று (NOC) தேவையில்லை - மதுரை பாஸ்போர்ட் அதிகாரி தகவல் (Govt Employees do not need No Objection Certificate to get passport - Madurai Passport Officer informs)...


அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.



இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத் துறை, தடையின்மைச் சான்றுக்குப் பதிலாக புதிய நடைமுறையை பின்பற்றக் கூறியுள்ளது.


இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் தடையின்மைச் சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை முன் அறிவிப்பாக படிவம் "ச' இல் தெரியப்படுத்த வேண்டும். அதன் நகலை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போலீஸ் அறிக்கை பெற்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.  ஊழியருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய "ச' படிவத்தை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் வெளிநாடு சென்றுவர (Foreign Trip) கடவுச்சீட்டு பெறுதல் / புதுப்பித்தல் மற்றும் விடுப்பு அனுமதி கோரும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் சான்றுகள்...


மகளிர் மேன்மை சேமிப்புப் பத்திரம் (Mahila Samman Savings Certificate) - அஞ்சலக வட்டி விகிதம் 7.5% - முதிர்வுத் தொகை விவரங்கள் - கடைசி நாள்: 31-03-2025 (Women Eminence Savings Bond - Postal Interest Rate 7.5% - Maturity Amount Details - Last Date: 31-03-2025)...



>>> மகளிர் மேன்மை சேமிப்புப் பத்திரம் (Mahila Samman Savings Certificate) - அஞ்சலக வட்டி விகிதம் 7.5% - முதிர்வுத் தொகை விவரங்கள் - கடைசி நாள்: 31-03-2025 (Women Eminence Savings Bond - Postal Interest Rate 7.5% - Maturity Amount Details - Last Date: 31-03-2025)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கல்வி சுற்றுலாவிற்கு வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கடவுச்சீட்டு (Passport) பெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க. எண்: 019523 / எம்/ இ2/ 2022, நாள்: 10-04-2023 - இணைப்பு: வெளிநாடு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பட்டியல் (Proceedings of the Commissioner of School Education regarding obtaining passports for students going Foreign for educational tours RC.No: 019523 / M/ E2/ 2022, Date: 10-04-2023 - Attachment: List of Students and Teachers going Abroad)...


>>> கல்வி சுற்றுலாவிற்கு வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கடவுச்சீட்டு (Passport) பெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க. எண்: 019523 / எம்/ இ2/ 2022, நாள்: 10-04-2023 - இணைப்பு: வெளிநாடு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பட்டியல் (Proceedings of the Commissioner of School Education regarding obtaining passports for students going Foreign for educational tours RC.No: 019523 / M/ E2/ 2022, Date: 10-04-2023 - Attachment: List of Students and Teachers going Abroad)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2023 - School Morning Prayer Activities...

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண் : 171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.


பொருள்:

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்


பழமொழி :

Dig a well before you are thirsty


தாகம் வரும் முன் கிணறு வெட்டி விடு. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.


 2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்


பொன்மொழி :


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் அடுத்தவர்களுக்கு போதிக்கிறான்.


பொது அறிவு :


1. ஐஸ் கட்டி ஆல்கஹாலில் மிதக்குமா? 


 மிதக்காது. 


 2. கண்ணாடி சோப்பு என அழைக்கப்படுவது எது?


 மாங்கனீசு.


English words & meanings :


 Open handed - giving freely. noun. தாராள கை (குணம்) பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பொதுவாக தென்னிந்திய உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எண்ணெயிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்திலும் கறிவேப்பிலை அதிகமாக பயன்படுத்ததப்படுகிறது.


கணினி யுகம்


Alt + Print Screen - Allows you to take a screenshot of the current page. Ctrl + Alt + Del - With the help of these keys, you can Reboot/Windows task manager


நீதிக்கதை


கதை :


ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது. 




ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது. 




தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது. 




முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது. 




முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது. 




முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. 




நீதி :



மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.


இன்றைய செய்திகள்


10.04.2023


* தளி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கால வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டுஉள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.


* தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஏல அறிவிப்பில் இருந்து விலக்கு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.


* பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் அவசியம் தற்போது இல்லை.தேவைப்படும்போது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* அடுத்த 5 நாட்களில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


*2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


* தொடரும் பதற்றம்: தைவானை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை.


* தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது.


* ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரியான்ஷூ சாம்பியன்.


" உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ஷிவ தபா, தீபக் உள்பட 13 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.


Today's Headlines


* A 700-year-old Veerabhadra sculpture of the Oysalar period has been found near Thali, said Krishnagiri Government Museum Archivist.Exemption from Coal Auction Notification in Tamil Nadu Delta Areas - Notification by Union Minister Prakalat Joshi.


 * Health Minister M. Subramanian has said that there is no need to make face shield mandatory in public places.


* According to the Meteorological Department, there is a chance of rain at one or two places in Tamil Nadu today and tomorrow.


 * The India Meteorological Department has said that the temperature will gradually increase by 2 to 4 degrees Celsius in most parts of the country in the next 5 days.


 * According to the 2022 census, there are about 3,167 tigers in India, PM Modi said.


 Tensions Continue: China War Rehearses Around Taiwan For 2nd Day


* Tamil Nadu Premier League Cricket: Starts on 12th June.


 * Orleans Masters International Badminton: Indian player Brianshu is the champion.


 *13 players including Shiva Thapa and Deepak have been included in the Indian team for the World Boxing Championship.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...