கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் ஆண்டிற்கான புதிய இணைப்புகள் விவரம் (Ennum Ezhuthum - New Attachments Details for 2023-24)...

 எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் ஆண்டிற்கான புதிய இணைப்புகள் விவரம் (Ennum Ezhuthum - New Attachments Details for 2023-24)...


பார்வை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒளி பாடங்கள்


பாடநூலை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பு 


ஒவ்வொரு செயல்பாட்டிற்கான கற்றல் விளைவுகள்


படைப்பாற்றலுக்கான வாய்ப்பு 


பேச எழுத- இது எங்கள் நேரம்


மூன்று வகுப்புகளையும் இணைத்த பாடப்பொருள்


சிறகுகள் விரியட்டும் நிலை வாரியாக 


மூன்று வகுப்பிற்கான பாடநூல் இணைப்பு


கற்பித்தலுக்கான தோராயமான நாள்கள்..







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - தமிழ் - முதல் பருவம் - பயிற்சிக்கு தேவையான பொருட்கள் - நகல் எடுக்க வேண்டிய பாடநூல் மற்றும் பயிற்சி நூல் பக்கங்கள் (Ennum Ezhuthum - Tamil - First Term - Training Materials - Textbook and Practice book pages to be photocopied)...

 

>>> எண்ணும் எழுத்தும் - தமிழ் - முதல் பருவம் - பயிற்சிக்கு தேவையான பொருட்கள் - நகல் எடுக்க வேண்டிய பாடநூல் மற்றும் பயிற்சி நூல் பக்கங்கள் (Ennum Ezhuthum - Tamil - First Term - Training Materials - Textbook and Practice book pages to be photocopied)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு.


"ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, அவர் படித்த ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி பேசினார். 'அமெரிக்காவில் 2 பேரை மிக உயர்ந்தவர்களாக பார்க்கிறார்கள். ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் ஆசிரியர். பிரான்சை பொருத்தமட்டில், நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய அந்த உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஜப்பானில் ஒரு ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் அனுமதியை பெற்றால்தான் முடியும். கொரியாவில் ஒரு அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளையும் உடையவர்கள்தான் ஆசிரியர்கள்' என்று புகழாரம் சூட்டினார்.


ஆக ஆசிரியர்களை எந்த சமுதாயம் போற்றுகிறதோ, அந்த சமுதாயம்தான் சிறந்த சமுதாயமாக இருக்கும், அந்த நாடுதான் வளர்ந்த நாடாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அத்தகைய ஆசிரியர் பணிக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், தகுதித் தேர்வில் தேறினால்தான் மட்டுமே முடியும் என்ற நடைமுறை இருக்கிறது. 2009ஆம் ஆண்டு இலவச கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமனம் பெறவேண்டுமானால், அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.


தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் அறிவிக்கைப்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக்கான 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பும், 6 முதல் 8-ம் வகுப்புக்கான ஆசிரியர்கள் பி.எட். பட்டப்படிப்பும் பெற்று இருக்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்த தேர்வுகளை எழுதியவர்களில், முதல் தாள் தேர்வில் 14 சதவீதம் பேரும், 2-ம் தாள் தேர்வில் 6 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு பெறாத நிலையில் என்ன செய்வோம்? என்று அந்த ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆசிரியர்களை பொறுத்தமட்டில், இந்த தகுதித் தேர்வு தேவையே இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஆசிரியர் கல்வியில் சேரும்போதே, பிளஸ்-2 அல்லது பட்டப்படிப்பு தேர்வுகளில் வெற்றி பெற்று, ஆசிரியர் கல்வியிலும் சேர்ந்து, அதிலும் பட்டயப்படிப்பு தேர்வு அல்லது பட்டப்படிப்பு தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் அரசு பள்ளிக்கூட பணியில் சேர வேண்டுமென்றால், மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இவ்வளவு தேர்வுகளை எழுதி தேர்வு பெறும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும். எனவே ஆசிரியர் தகுதி தேர்வு தேவையே இல்லை என்ற கொள்கை முடிவை மத்திய-மாநில அரசுகள் எடுத்து தகுதித் தேர்வுக்கு 'டாட்டா' சொல்ல வேண்டும் என்பதே ஆசிரியர்கள் கருத்தாக இருக்கிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஏப்ரல் 21 - நிழலில்லா நாள் இன்று - நிழலில்லா நாள் (Zero Shadow Day) என்றால் என்ன? (April 21 - Zero Shadow Day Today - What is Zero Shadow Day?)...



 ஏப்ரல் 21 - நிழலில்லா நாள் இன்று - நிழலில்லா  நாள்  (Zero Shadow Day) என்றால் என்ன? (April 21 - Zero Shadow Day Today - What is Zero Shadow Day?)...


ஏப்ரல் 21,

நிழலில்லா நாள் இன்று.

நிழலில்லா  நாள்  (Zero Shadow Day) என்றால் என்ன?


தினமும் காலையிலும் மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும்.


ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது அந்த நாளையே ‘நிழலில்லா நாள்' என்கிறோம். வருடத்தின் மற்ற நாட்களில் உச்சி வெயில் நேரத்திலும் கூட சிறிதளவு நிழல் பூமி மீது விழத்தான் செய்யும்.


இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் (ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21)


சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும், என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். மேலும் பகல் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே நடக்கும் இந்தநிகழ்வு, இதைக்காண எந்த வித அறிவியல் உபகரணம் தேவையில்லை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முழுவதும் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை (22-04-2023) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவிப்பு (Tamil Nadu Government Chief Gazi Salahuddin Mohammad Ayub has announced that Ramadan will be celebrated tomorrow following the sighting of the crescent moon across Tamil Nadu)...

 தமிழ்நாடு முழுவதும் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை (22-04-2023) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவிப்பு (Tamil Nadu Government Chief Gazi Salahuddin Mohammad Ayub has announced that Ramadan will be celebrated tomorrow following the sighting of the crescent moon across Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - 2023-2024ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகை அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க. எண்: 1519/ முகாஉதி/ ஒபக/ 2023, நாள்: 21-04-2023 (Chief Minister's Breakfast Scheme - Implementation of Scheme for students studying Class 1 to 5 in all categories of Government Primary / Middle Schools from the academic year 2023-2024 onwards State Project Director's Proceedings Letter Rc. No: 1519/ CBFS/ SS/ 2023, Dated: 21-04-2023)...


>>> முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - 2023-2024ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகை அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்  ந.க. எண்: 1519/ முகாஉதி/ ஒபக/ 2023, நாள்: 21-04-2023 (Chief Minister's Breakfast Scheme - Implementation of Scheme for students studying Class 1 to 5 in all categories of Government Primary / Middle Schools from the academic year 2023-2024 onwards State Project Director's Proceedings Letter Rc. No: 1519/ CBFS/ SS/ 2023, Dated: 21-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி சட்டமன்றத்தில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அருள் அவர்களின் உரை (MLA Mr.Arul's (PMK) Speech in Legislative Assembly to implement Old Pension Scheme)...



>>> பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி சட்டமன்றத்தில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அருள் அவர்களின் உரை (MLA Mr.Arul's (PMK) Speech in Legislative Assembly to implement Old Pension Scheme)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...