கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :229


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.


விளக்கம்:


பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.


பழமொழி :

Appearance is deceitful


உருவத்தை கண்டு ஏமாறாதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 


2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை


பொன்மொழி :


உங்கள் வயதை நண்பர்களை வைத்துக் கணக்கீடுங்கள், வருடங்களை வைத்து அல்ல. உங்கள் வாழ்க்கையை புன்னகையை வைத்துக் கணக்கீடுங்கள், கண்ணீரை வைத்து அல்ல. --ஜான் லெனான்.


பொது அறிவு :


1. சிந்து மக்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் எது?


விடை: தாமிரம்



2. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?


விடை: சமுத்திரகுப்தன்


English words & meanings :


 haphazard - accident எதிர்பாராத நிகழ்ச்சி idiosyncrasy - an odd way of thinking சிந்தனை முரண்பாடு


ஆரோக்ய வாழ்வு :


சோம்பு: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்


ஆகஸ்ட் 02



ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்


ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.


பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்



பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.


பிங்கலி வெங்கைய்யா அவர்களின் பிறந்தநாள்


பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


நீதிக்கதை


ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.


தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்து சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதைய சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாருஉடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி.


கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு ,அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு


உடனே விவசாயி தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு ,


கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .


உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,அப்ப அங்க வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு.


உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க .


அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுத பயத்துல துள்ளி குதிச்சது ,உடனே பிடிய விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுத ஆத்தோட போயிருச்சுஅடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்டா அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு.


நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது.


இன்றைய செய்திகள்


02.08. 2023


*தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1705 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாக அமைச்சர் 

மா. சுப்பிரமணியன் தகவல். 


*11 நிமிட சார்ஜில் 100கி.மீ.  ரேஞ்ச்....வேற லெவல் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த ஹோண்டா.


*மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் அம்மோனியா எரிவாயு தொட்டி வெடித்து விபத்து-       9 மாணவர்கள்  மற்றும் ஒரு ஆசிரியருக்கு உடல் நலக்குறைவு.


*வரலாறு காணாத வெப்பம்- ஈரானில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு. 


*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து வியட்நாம் அணியை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து. 


*செஸ் போட்டியில் கலக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்   கவிரூபன் " சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது லட்சியம்"  என்கிறார்.


Today's Headlines


*1705 people have donated organs in 15 years in Tamil Nadu information by Health Minister

 Ma.  Subramanian 


 * In 11 minute charge travelling space of 100 km Range...Honda introduced marvelous electric car.


 *Ammonia gas tank exploded in school in West Bengal - 9 students and one teacher was wounded.


 *Unprecedented heat- two days holiday announced in Iran.


 *Netherland beat Vietnam 7-0 in Women's World Cup Football.


 *Kaviruban, a second standard student who competes  in chess, says, "The ambition is to participate in international competitions."






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து CEOs & DEOs ஆய்வுக் கூட்டம் 02.08.2023 & 03.08.2023ல் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (All CEOs & DEOs Review Meeting to be held on 02.08.2023 & 03.08.2023 - Meeting Agenda - Proceedings of Director of School Education)...


>>> அனைத்து CEOs & DEOs ஆய்வுக் கூட்டம்  02.08.2023 & 03.08.2023ல் நடைபெறுதல் -  கூட்டப்பொருள் -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (All CEOs & DEOs Review Meeting to be held on 02.08.2023 & 03.08.2023 - Meeting Agenda - Proceedings of Director of School Education)...


2023-2024ஆம் கல்வியாண்டின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் - வட்டார, மாவட்ட & மாநில அளவிலான நிகழ்வுகள் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022, நாள். 26.07.2023 (Academic year 2023-2024 - Co-curricular activities and Extra-curricular activities - Block, district & state level events - issuance of instructions - Proceedings of the Director of School Education Rc.No. 019528/M/E1/2022, Dated. 26.07.2023)...

 

>>> 2023-2024ஆம் கல்வியாண்டின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் - வட்டார, மாவட்ட & மாநில அளவிலான நிகழ்வுகள் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022, நாள். 26.07.2023 (Academic year 2023-2024 - Co-curricular activities and Extra-curricular activities - Block, district & state level events - issuance of instructions - Proceedings of the Director of School Education Rc.No. 019528/M/E1/2022, dt. 26.07.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23-09-2023 அன்று தேர்வு நடைபெறும் - இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் (TamilNadu Chief Minister Talent Search Exam September 2023 Notification - Exam will be on 23-09-2023 for 11th standard students - Scholarship of Rs.1000 per month will be given up to undergraduate)...

 


11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - இளநிலை பட்டப் படிப்பு வரை உதவித்தொகை வழங்க ஏற்பாடு...


>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23-09-2023 அன்று தேர்வு நடைபெறும் - இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் (TamilNadu Chief Minister Talent Search Exam September 2023 Notification - Exam will be on 23-09-2023 for 11th standard students - Scholarship of Rs.1000 per month will be given up to undergraduate)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் - WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023 வழக்கில் தீர்ப்பு (According to the Supreme Court judgment that the right of a Government servant should not be taken away when an order is issued on an earlier date, the old pension scheme is applicable to the person who joined the service on 17.04.2003 - Judgment in the case of WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023)...


WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023 - Hon`ble Mr Justice G.K.ILANTHIRAIYAN ...


 The retrospective amendment / change affecting the vested or accrued rights of employees, adversely affecting their pension, was declared to be invalid as held by the Hon'ble Supreme Court of India in the case of Chairman, Railway Board and Ors Vs. C.R.Rangadhamaiah and Ors. reported in 1997 (6) SCC 623.

In view of the above, this Court is of the considered opinion that the petitioner cannot be deprived of the benefit of old pension scheme. Therefore, the impugned orders are not applicable to the petitioner. The first and second respondents are directed to continue the petitioner under the Teacher's Provident Fund (Family Pension Scheme) in TPF.No.339415. Accordingly, this writ petition stands allowed. 

Consequently, connected miscellaneous petitions are closed. There shall be no order as to costs.


01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து இருந்தாலும் பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.

B .Vallipavai வழக்கில் தீர்ப்பு - வழக்கு எண் wp No 8055 / 2015

09.11.2002 முதல் காலிப் பணியிடம் . பணியிடம் நிரப்ப முன் அனுமதி , வேலை வாய்ப்பக பரிந்துரை 01.04.2003க்கு முன்பாக தொடங்கப்பட்டது.

அரசாணை எண் 259 நிதித்துறை, நாள் 06.08.2003ன் படி முன் தேதியிட்டு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்.


>>> முன்தேதியிட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுது அரசு ஊழியரின் உரிமை பறிக்கப்பட கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 17.04.2003ல் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் - WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023 வழக்கில் தீர்ப்பு (According to the Supreme Court judgment that the right of a Government servant should not be taken away when an order is issued on an earlier date, the old pension scheme is applicable to the person who joined the service on 17.04.2003 - Judgment in the case of WP.8055/2015 - Tmt.B.Vallipavai, B.Sc.B.Ed., Vs. The State of Tamil Nadu, Dated : 11/07/2023)...

முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு (W.A(MD)NO.1124 OF 2023 and C.M.P(MD)No.8613 of 2023, Dated: 24-07-2023 - A two-judge bench of the Madurai High Court has ruled judgment that higher educational incentives should be given even if they have higher education qualifications without prior approval)...


 முன் அனுமதியின்றி உயர் கல்வி - ஊதியப் பலன் வழங்க வேண்டும் -  உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு. பணியில் இருக்கும் பொழுது உயர் கல்வி தகுதியைப் பெறுவது தடை செய்யப்படவில்லை. பணியில் இருக்கும் பொழுது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்குபடுத்தப்படுவது மட்டுமே. முன் அனுமதி இன்றி உயர் கல்வி பெறுவது விதி மீறல்  ஆகும். அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதியப் பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை. முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் (Further it is to be noted that acquiring higher qualification while in service is not prohibitedand it is only regulated. In such circumstances, aquiring higher qualification while in service without the permission is only an irregularitiy and that will not entitle the respondents to reject the benefit to the teachers) - மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு...


>>> முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு (W.A(MD)NO.1124 OF 2023 and C.M.P(MD)No.8613 of 2023, Dated: 24-07-2023 - A two-judge bench of the Madurai High Court has ruled judgement that higher educational incentives should be given even if they have higher education qualifications without prior approval)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணியமைப்பு - சமூக நல ஆணையரகம் - சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் அமைப்பாளர்களை பதிவுறு எழுத்தர் பணியில் நியமனம் செய்தல் - முதுநிலை பட்டியல் தயாரித்தல் - தொடர்பாக - சமூக நல ஆணையரின் கடிதம், நாள் : 31-07-2023 (Recruitment - Social Welfare Commissioner - Appointment of Organizers working under Nutrition Scheme as Record Clerk - Preparation of Seniority List - Regarding - Social Welfare Commissioner's Letter, Dated : 31-07-2023)...



>>> பணியமைப்பு - சமூக நல ஆணையரகம் - சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் அமைப்பாளர்களை பதிவுறு எழுத்தர் பணியில் நியமனம் செய்தல் - முதுநிலை பட்டியல் தயாரித்தல் - தொடர்பாக - சமூக நல ஆணையரின் கடிதம், நாள் : 31-07-2023 (Recruitment - Social Welfare Commissioner - Appointment of Organizers working under Nutrition Scheme as Record Clerk - Preparation of Seniority List - Regarding - Social Welfare Commissioner's Letter, Dated : 31-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்: புல்லற...