கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்கவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1637, நாள்: 12-08-2023 (A one-man committee headed by retired Justice Mr. Chandru to prevent violence caused by caste and religious sentiments among students - Order of Hon'ble Chief Minister - Press Release No: 1637, Date: 12-08-2023)...
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தல் - இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் - எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1636, நாள் : 12.08.2023 (Inspection of Anganwadi Centers across Tamil Nadu - Basic facilities to be in place - Actions to be taken - Chief Secretary's order to District Collectors - Press Release No : 1636, Dated : 12.08.2023)...
செய்தி வெளியீடு எண் : 1633, நாள் : 12.08.2023 - "ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின்" கீழ் பயனடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பு (Press Release No : 1633, Date : 12.08.2023 - Parents of children benefited under "Ensure Nutrition Scheme" meeting Hon'ble Chief Minister)...
தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு - செய்திக்குறிப்பு எண் : 1620 - கல்லூரிக் கல்வி இயக்குநர் (Tamil Nadu Arts and Science Colleges - Admission Notification for Post Graduate Courses - Press Release No : 1620 - From the Director of Collegiate Education)...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Magalir Urimai Thittam) - இரண்டாம் கட்ட முகாம்களுக்கான தேதிகள் மாற்றிமைத்தல் - சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 11-08-2023 (Kalaignar Women Entitlement Scheme - Revision of Dates for Second Phase Camps - Special Scheme Implementation Department Secretary's letter, Dated: 11-08-2023)...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு - சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி (School Education Minister admitted for treatment at Karimangalam private hospital for chest pain - on his way from Salem to Chennai)...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு - சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி (School Education Minister admitted for treatment at Karimangalam private hospital for chest pain - on his way from Salem to Chennai)...
காரிமங்கலம் அருண் மருத்துவமனையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அனுமதி. திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வரும் வழியில் அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் அவருக்கு அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரியில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் காரிமங்கலம் விரைந்துள்ளனர்.
சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்களின் பேச்சு...
'பெற்றோர்கள் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ்!
தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என சேலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள நிறைவு விழா நடைபெற்றது. பாரதி வித்தியாலய சங்க தலைவர் சீனி துரைசாமி தலைமையில் நடைபெற்ற பவள விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடங்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு மேல்நிலை பள்ளி பயின்ற பிறகு உயர்நிலை கல்விக்கு செல்வது 50 சதவிகிதம் என்று இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. ஆனால் தமிழ்நாடு ஏற்கனவே 51 சத்விகிதமாக உள்ளது. இதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் செய்த கட்டமைப்பு தான் என்று புகழாரம் சூட்டினார். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், குழந்தைகளும் பெற்றோரின் விருப்பப்படி பயில வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, பள்ளி கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு பெற்று, பள்ளிகள் சிறப்பாக செயல்பட அமைச்சர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு இது போன்ற தனியார் பள்ளிகள் குறிப்பாக கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரும் தமிழகத்தில் சிறப்பான கல்வியை தந்து கொண்டு உள்ளனர். இது போன்று அனைத்து தரப்பினரும் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கிட ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குறைந்த நாட்களில் 70 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர் என்பதை பெருமையோடு கூறிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்திட முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ, சிபிஎஸ்சி பள்ளிகளோ எதுவானாலும், அதில் பயிலும் மாணவர்கள் கல்விதான் முக்கியம் என்றும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கல்வி சேவையை தொடர்ந்து மாணவ மானவியர்களின் நலனில் அக்கறை செலுத்திட வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, ”எந்த துறையும் அரசும் மட்டும் செயல்படுத்திடுவது கடினம். பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் என்று தெரிவித்த அவர், அது போன்று தான் பள்ளி கல்வித்துறையிலும் தனியார் பங்களிப்பு முக்கியம் என்றும், இதன் காரணமாகவே, இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முதல்வர் இந்த துறைக்கு 39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று பேசிய அவர்,
கலைஞர் ஆட்சியிலும், தற்போதைய முதலமைச்சர் ஆட்சியிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருவதாகவும், அதற்கு இந்த விழாவே சாட்சி என்றார். கடந்த காலங்களில் இது போன்ற ஆணை பெறுவதற்கு பலரை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வந்ததை மாற்றி யாரையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு மாற்றி உள்ளார். அது மட்டுமல்ல ஆசிரியர் கவுன்சிலிங் முறையில் எந்த ஒரு சிறு தவறும் நடந்திடாத வகையில் செயல்பட்டு, ஆட்சியை விமர்சிக்கும் சமூக வலைத்தளத்தினரும் எதிரானவர்களும் பாராட்டும் வகையில் தமிழ்நாடு கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும், இதே போன்று அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டிலிட்டார். கல்வி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ...