கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோட்டா நீட் தற்கொலைகள்; தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது - நீட்டை ரத்து செய்யுங்கள் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் அறிக்கை (Kota NEET Suicides; It is better to eliminate the causes of suicides than to prevent them - Abolish NEET - PMK President Dr. Anbumani Ramadasu's statement)...


 கோட்டா நீட் தற்கொலைகள்; தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது - நீட்டை ரத்து செய்யுங்கள் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் அறிக்கை (Kota NEET Suicides; It is better to eliminate the causes of suicides than to prevent them - Abolish NEET - PMK President Dr. Anbumani Ramadasu's statement)...


நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் புகழ்பெற்ற இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள விடுதிகளில்,  மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க அங்குள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங்குகளும், அபாய ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்படுவதை நகர நிர்வாகம் கட்டாயமாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை அளிக்கின்றன. ஆனால், எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாக, மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அகற்றாமல், தற்கொலைகளை மட்டும் தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது. 


இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிக்கு பெயர் பெற்றது ஆகும். அந்த நகரில் நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு 40 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அவர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுகின்றனர்.  நுழைவுத்தேர்வுக்கு தயாராக முடியாதவர்களும், தேர்வில் தோல்வியடைந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  கடந்த ஆண்டில் 15 பேரும், நடப்பாண்டில் இதுவரை 20 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை கோட்டா நிர்வாகம் செய்திருக்கிறது.


மின்விசிறிகளில் தான் மாணவர்கள் அதிகம் தூக்கிட்டுக் கொள்கின்றனர் என்பதால், மின்விசிறிகளில் ஸ்பிரிங்குகளும், அபாய ஒலி  எழுப்பும் கருவிகளும் பொருத்தப்படுகின்றன. 20 கிலோவுக்கு அதிக எடை கொண்டவர்கள் தூக்கிட்டுக் கொண்டால் ஸ்பிரிங் விரிந்து காப்பாற்றி விடும்; அபாய ஒலியும் எழும்பி தற்கொலை முயற்சியை காட்டிக் கொடுத்து விடும். இது நல்ல ஏற்பாடு தான். ஆனால், நிரந்தரமான, முழுமையான தீர்வு அல்ல.


மாணவ, மாணவியருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக, சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை எட்டும்படி மாணவர்களுக்கு மனதளவில் நெருக்கடியைக் கொடுப்பதும், அவற்றை சாதிக்க முடியாத மாணவ, மாணவியரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதும் எப்படி நல்லத் தீர்வாக இருக்க முடியும்? நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இந்தத் தேர்வுகளை ரத்து செய்வது தான் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து தடுக்குமே தவிர, மின்விசிறிகளில் செய்யப்படும் மாற்றம் தற்கொலைகளை தடுக்காது.


நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவனும் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இது  எல்லா குடும்பங்களுக்கும் சாத்தியம் அல்ல. ரூ.20 லட்சம் செலவழித்த பிறகும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத போது தான், தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இதிலிருந்து மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்; மாணவர்களைக் காக்க இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

#NEETKills #BanNEET






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக திருமதி. ப.ஸ்ரீவெங்கடப்பிரியா இ.ஆ.ப. நியமனம் - அரசாணை (G.O.Rt.No. 3512, Dated: 19-08-2023) வெளியீடு (IAS Officers Transfered - Mrs. P. Srivenkatapriya I.A.S. Appointed as Chairman of Teachers' Recruitment Board - Ordinance - G.O.Rt.No. 3512, Dated: 19-08-2023)...



>>> இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக திருமதி. ப.ஸ்ரீவெங்கடப்பிரியா இ.ஆ.ப. நியமனம் - அரசாணை (G.O.Rt.No. 3512, Dated: 19-08-2023) வெளியீடு (IAS Officers Transfered - Mrs. P. Srivenkatapriya I.A.S. Appointed as Chairman of Teachers' Recruitment Board - Ordinance - G.O.Rt.No. 3512, Dated: 19-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்


ஐஏஎஸ் அலுவலர்கள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


வருவாய்த்துறை செயலாளராக ராஜாராமன் ஐஏஎஸ் நியமனம்


தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம்


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம்


தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்


குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம்


வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழில் (Complete information about Mission Vatsalya scheme which provides Rs.4000 per month to children who have lost their parents - in Tamil)...



>>> பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழில் (Complete information about Mission Vatsalya scheme which provides Rs.4000 per month to children who have lost their parents - in Tamil)...



>>> பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் - விண்ணப்பம், படிப்புச் சான்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்...



>>> மிஷன் வாத்சல்யா - வழிகாட்டுதல் நெறிமுறைகள் - நாள்: 05-07-2022 GUIDELINES OF MISSION VATSALYA - DATED 05 JULY 2022.pdf...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Project Veer Gatha 3.0 - மாவட்ட வாரியாக தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of Director of School Education School Education R.C.No.45435/M/S1/2023, Dated.09.08.2023 - Project Veer Gatha 3.0 - appointment of Nodal Officer at District Level - instructions communicated)...



 Proceedings of Director of School Education, Chennai-06 

R.C.No.45435/M/S1/2023, Dated.09.08.2023 


Sub: School Education - Project Veer Gatha 3.0 - appointment of Nodal Officer at District Level - instructions communicated - Reg. 


Ref: Letter from School Education Department, Secretariat to Chennai-9- Lr.No.9524/GL I (2)/2023-2, dated.27.07.2023. 


The following district level Nodal Officers are appointed for implementing the Project Veer Gatha 3.0 concern all schools in Tamil Nadu. Project Veer Gatha was instituted under Gallantry Awards Portal (GAP) in 2021 with the aim to disseminate the details of acts of bravery of the Gallantry Awardees and the life stories of these brave hearts among the students so as to raise the spirit of patriotism and instill amongst them values of civic consciousness. Project Veer Gatha deepened this noble aim by providing a platform to the school students to do creative projects/activities based on gallantry award winners. The Ministry of Defense (MoD) in collaboration with Ministry of Education (MOE) has now decided to launch Project Veer Gatha 3.0 in the current year 2023-24. As part of this, the students can frame different projects such as poem/ paragraph / story / drawing / video on gallantry award winners. The submission by the students can be made in any of the 22 Scheduled languages and English. There will be winners at every level i.e. District Level, State & National Level. The winner at National Level will be felicitated jointly by Ministry of Education, Government of India & Ministry of Defence, Govt. of India at Delhi. All the winners at District & State will be felicitated by respective District & State. 


In this connection, it has been decided that Project Veer Gatha (3.0) will be launched on MyGov Platform (for all the schools irrespective of School Education Board) for facilitating larger participation of students from all school Boards in the country. 


The following officers are nominated as Nodal Officers at District Level for project Veera Gatha 3.0. 




மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 16, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந-2) துறை நாள்: 04-07-2023 & அரசாணை (நிலை) எண்: 64, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந2-1) துறை நாள்: 10-07-2013 வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 049832/ எம்/ இ4/ 2023, நாள்: 12-08-2023 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரின் கடிதம் ந.க.எண்: 3222/ சிப-2/ 2023, நாள்: 31-07-2023 (Doubling the education scholarship provided to differently abled students G.O. (Ms) No: 16, Department of Disabled Persons Welfare (DAWD-2), Dated: 04-07-2023 & G.O. (Ms) No: 64, Disabled Persons Welfare (DAWD 2-1) Department, Dated: 10-07-2013 Issue - Proceedings of Director of School Education Rc.No: 049832/ M/ E4/ 2023, Dated: 12-08-2023 & Letter of Director of Differently Abled Persons Welfare Rc.No: 3222/ Sep-2/ 2023, Dated: 31-07-2023)...


>>> மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 16, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந-2) துறை நாள்: 04-07-2023 &  அரசாணை (நிலை) எண்: 64, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந2-1) துறை நாள்: 10-07-2013 வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 049832/ எம்/ இ4/ 2023, நாள்: 12-08-2023 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரின் கடிதம் ந.க.எண்: 3222/ சிப-2/ 2023, நாள்: 31-07-2023 (Doubling the education scholarship provided to differently abled students G.O. (Ms) No: 16, Department of Disabled Persons Welfare (DAWD-2), Dated: 04-07-2023 & G.O. (Ms) No: 64, Disabled Persons Welfare (DAWD 2-1) Department, Dated: 10-07-2013 Issue - Proceedings of Director of School Education Rc.No: 049832/ M/ E4/ 2023, Dated: 12-08-2023 & Letter of Director of Differently Abled Persons Welfare Rc.No: 3222/ Sep-2/ 2023, Dated: 31-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச்சங்கிலியைத் தொலைத்த தமிழாசிரியர் - பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள் - குழந்தைகளின் நேர்மையை வெகுவாகப் பாராட்டிய காவல் துறையினர் (The Tamil teacher who lost her chain at Narikudi bus stand - The school girls who recovered it safely and handed it over to the police station - The police department appreciated the children's honesty)...



நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச்சங்கிலியைத் தொலைத்த தமிழாசிரியர் - பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள் - குழந்தைகளின் நேர்மையை வெகுவாகப் பாராட்டிய காவல் துறையினர் (The Tamil teacher who lost her chain at Narikudi bus stand - The school girls who recovered it safely and handed it over to the police station - The police department appreciated the children's honesty)...


நரிக்குடி பேருந்து நிலையத்தில்  இன்று காலை உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதன் காரணமாக தனது இரண்டரை பவுன் தங்கசெயினை நரிக்குடி பேருந்து நிலையத்தில் பறிகொடுத்தார். இதனையடுத்து செயின் காணாமல் போனது குறித்து பள்ளி ஆசிரியர் சசிகலா நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதற்கிடையில் இன்று காலை பேருந்து மூலம் பள்ளிக்கு வந்த நரிக்குடி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவிகளான நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை  சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் அதனை பத்திரமாக மீட்டு தலைமையாசிரியர் மூலமாக நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 


இதனையடுத்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் காவல் நிலையம் வந்த பள்ளி தமிழாசிரியர் சசிகலா காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை தெரிவித்த நிலையில் நரிக்குடி காவல்துறையினர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோரின் முன்னிலையில் செயின் கிடைக்க காரணமாக இருந்த மூன்று மாணவிகளின் கைகளினாலயே தமிழாசிரியர் ஆசிரியர் சசிகலா தனது செயினை பெற்றுக்கொண்டார்.


மேலும் மாணவிகளின் நேர்மையான செயலை கண்ட நரிக்குடி காவல்துறையினர், தமிழாசிரியர் சசிகலா மற்றும் தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர். மேலும் செயினை மீட்டு கொடுத்த நரிக்குடி போலீசாருக்கு தமிழாசிரியர் சசிகலா தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த தினமான வரும் 21ம் தேதி (21-08-2023) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரம் பதிவு செய்ய ஏற்பாடு (Arrangements will be made to register additional deed in all Sub-registrar offices on 21st of the auspicious day of Avani month)...


>>> ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த தினமான வரும் 21ம் தேதி (21-08-2023) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரம் பதிவு செய்ய ஏற்பாடு (Arrangements will be made to register additional deed in all Sub-registrar offices on 21st of the auspicious day of Avani month)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...