கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்) - Yadhum Oore Yavarum Kelir (Kaniyan Poonkunranar)...

 யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்) - Yadhum Oore Yavarum Kelir (Kaniyan Poonkunranar)...

பாடல்: 192

திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

விளக்கம்:

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

-எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;

-தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

-துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்

-செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

-வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

-மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம் தண் துளி தலைஇ ஆனாது,

-வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

-கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்

-அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

-முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

-அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

பெரியோரை வியத்தலும் இலமே!

-பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்பு - சேர்க்கை அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 1890, நாள் : 15-09-2023 (Integrated Diploma in Pharmacy and Diploma in Nursing Therapy - Admission Notification - Press Release No: 1890, Date : 15-09-2023)...

>>> செய்தி வெளியீடு எண்: 1890, நாள் : 15-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 'தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்' பணியிடம் தொடர்பான செய்தி வெளியீடு (Tamil Nadu Open University Press release regarding 'Exami nation Controlling Officer' post)...

 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (TNOU) 'தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்' பணியிடம் தொடர்பான செய்தி வெளியீடு (Tamil Nadu Open University Press release regarding 'Exami nation Controlling Officer' post)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

காலாண்டுப் பொதுத் தேர்வு 2023 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை - வழிகாட்டு நெறிமுறைகள் (Quarterly Public Examination 2023 Question Papers Download Procedure – Guidelines)...

 காலாண்டுப் பொதுத் தேர்வு 2023 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை - வழிகாட்டு நெறிமுறைகள் (Quarterly Public Examination 2023 Question Papers Download Procedure – Guidelines)...

>>> வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை (PDF) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

6 - 8 வகுப்புகளுக்கான முதல் பருவ தமிழ் தேர்வு வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது...

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி...

https://exam.tnschools.gov.in/#/

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)...

வருவாய் நிர்வாகம்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை ஆணையரகம்.

அனுப்புநர்‌ 

கூடுதல்‌ தலைமைச்‌ செயலர்‌ / 

வருவாய்‌ நிருவாக ஆணையர்‌, 

எழிலகம்‌, சேப்பாக்கம்‌,

சென்னை-5.

பெறுநர்‌

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌

(இணைப்புடன்‌),

ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023

அய்யா / அம்மையீர்‌,

பொருள்‌ :- பொதுப்பணிகள்‌ - வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக.

பார்வை :- 1. அரசாணை(நிலை) எண்‌.85, உயர்கல்வித்துறை, நாள்‌: 16.04.2010.

2. அரசு கடிதம்‌ (நிலை) எண்‌ 315, உயர்கல்வித்‌ (ஜே.2)துறை, நாள்‌ 13.11.2017.

3. அரசாணை(நிலை) எண்‌.122, மனிதவள மேலாண்மை (கே2)துறை, நாள்‌: 02.11.2021.

4. அரசுக்‌ கடிதம் எண்‌.4745/வ.நி.2(1)/2022, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, நாள்‌: 17.05.2022 மற்றும்‌ 14.02.2023

5. இவ்வலுவலக கடித எண்‌ வ.நி.5(3)/01/329/2021, நாள்‌ 21.09.2022 மற்றும்‌ 13.03.2023.

6. அரசாணை(நிலை) எண்‌.296, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை வருவாய்‌ நிருவாக அலகு, வ.நி. 3(2) பிரிவு நாள்‌: 19.06.2023.

*****

பார்வையில்‌ காணும்‌ கடிதங்களின்‌ மீது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்‌.

2. பார்வை 3-ல்‌ காணும்‌ அரசாணையில்‌, வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. மேலும்‌, மேற்குறிப்பிட்ட அரசாணையின்‌ அடிப்படையில்‌, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில்‌ பதிவு செய்து கொள்வதற்கும்‌, முன்னுரிமை முறை பின்பற்றப்படும்‌ பணியாளர்‌ தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும்‌ பொருட்டும்‌, வேலைவாய்ப்பில்‌ முன்னுரிமை சான்றிதழ்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ்‌ வழங்கிடும்‌ வகையில்‌முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்வருமாறு பார்வை 4-ல்‌ காணும்‌ அரசாணையில்‌ அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ 

அரசாணை(நிலை) எண்‌.296, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை வருவாய்‌ நிருவாக அலகு, வ.நி. 3(2) பிரிவு நாள்‌: 19.06.2023.

>>> வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கலைஞர் 100 - வினாடி வினா போட்டி - ரூ.35 லட்சம் பரிசுத் தொகை (Kalaignar 100 - Quiz Contest - Rs.35 Lakh Prize Money)...

 கலைஞர் 100 - வினாடி வினா போட்டி - ரூ.35 லட்சம் பரிசுத் தொகை (Kalaignar 100 - Quiz Contest - Rs.35 Lakh Prize Money)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உங்களில் யார் திராவிட நட்சத்திரம் - மாபெரும் வினாடி வினா போட்டி (Who among you is a Dravidian Nakshatra - The Great Quiz)...

 உங்களில் யார் திராவிட நட்சத்திரம் - மாபெரும் வினாடி வினா போட்டி (Who among you is a Dravidian Nakshatra - The Great Quiz)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...