தீபாவளியை முன்னிட்டு 13.11.2023 அன்று விடுமுறை - 18.11.2023 அன்று வேலை நாள் - செய்தி வெளியீடு எண்: 2217, நாள்: 06-11-2023 (Holiday on 13.11.2023 on the occasion of Diwali - Working Day on 18.11.2023 - Press Release No: 2217, Dated: 06-11-2023)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை (நிலை) எண்: 197, நாள்: 06-11-2023 வெளியீடு (Transfer of 10 District Chief Education Officers - 7 District Education Officers promoted as Chief Education Officers G.O. (Ms) No: 197, Dated: 06-11-2023)...
10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை (நிலை) எண்: 197, நாள்: 06-11-2023 வெளியீடு (Transfer of 10 District Chief Education Officers - 7 District Education Officers promoted as Chief Education Officers G.O. (Ms) No: 197, Dated: 06-11-2023)...
தேன்சிட்டு - 16-31 அக்டோபர் 2023 இதழ் (ThenChittu - 16-31 October 2023 Magazine)...
தேன்சிட்டு - 16-31 அக்டோபர் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 October 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...
>>> தேன்சிட்டு - 16-31 அக்டோபர் 2023 இதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
>>> தேன்சிட்டு - 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (The Madras High Court has ordered the Secretary of School Education to appear in person in the case of those who passed the Teacher Eligibility Test seeking exemption from the competitive examination)...
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (The Madras High Court has ordered the Secretary of School Education to appear in person in the case of those who passed the Teacher Eligibility Test seeking exemption from the competitive examination)...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்..
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது .
இதில் , 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .
மத்திய பிரதேசத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் (In Madhya Pradesh, a teacher who refused to come to election duty in frustration of not getting married was suspended)...
மத்திய பிரதேசத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் (In Madhya Pradesh, a teacher who refused to come to election duty in frustration of not getting married was suspended)...
மத்திய பிரதேசத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் அமர்பட்டான் பகுதியிலுள்ள மஹுதூர் மேல்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருபவர் அகிலேஷ் குமார் மிஸ்ரா (35).
இம்மாதத்தில் மத்தியபிரதேச மாநிலசட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற ஆசிரியர்களைப் போலவேஇவருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும் என்றும், கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டும்மென்றும் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டேன் என்றும், பயிற்சி முகாமில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறி அகிலேஷ், மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, தேர்தல் பணியில் ஈடுபடமாட்டேன் என்று மறுப்பு தெரிவித்ததால் உங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸை மாவட்ட நிர்வாகம் அனுப்பியது.
விரிவான கடிதம்: அதற்கு அகிலேஷ் எழுதிய பதிலில் கூறியுள்ளதாவது: முதலில் எனக்கு திருமணம் ஆகட்டும்.அதன்பின்னர், நான் தேர்தல் பணிக்கு வருகிறேன். என் முழு வாழ்க்கையும் மனைவி இல்லாமல் கழிகிறது. என் இரவுகள் அனைத்தும் வீணாகின்றன. திருமணம் செய்யும் பெண் எனக்கு வரதட்சணையாக ரூ.3.5 லட்சம் எனக்குத்தரவேண்டும். அது ரொக்கமாகவோ அல்லது எனது வங்கிக் கணக் குக்கோ அனுப்பலாம். ரேவா மாவட்டத்தில் உள்ள சிங்ரவுலி அல்லது சம்தாரியா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்க எனக்கு கடன் உதவி அரசு செய்து தரவேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.
அவரது கடிதத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டார். திருமணம் செய்ய வரதட்சணை கேட்பேன் என்று கடிதத்தில் கூறியிருந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அகிலேஷை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செல்போனை பயன்படுத்துவதில்லை என்பதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது நண்பர் ஒருவர்தெரிவித்தார். மேலும் திருமணம் ஆகாததால் அவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் கூறும்போது, “அவர் கடந்த சிலமாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார். இல்லையென்றால், இது போன்றவினோதமான கடிதத்தை யார் எழுதுவார்கள்? அதுவும் விளக்க நோட்டீஸ் கேட்டதற்கு இப்படி யாராவது பதில் எழுதுவார்களா? ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்’’ என்றார்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் :291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
விளக்கம்:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
பழமொழி :
Look before you leap
ஆழம் தெரியாமல் காலை விடாதே
இரண்டொழுக்க பண்புகள் :
1) நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்
பொது அறிவு :
1. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
ஹாக்கி
2. உலகிலேயே வெப்பமான இடம் எது ?
அசீசீயா (லிபியா).
English words & meanings :
quadrilateral - a four sided polygon நாற்கரம்.
quaff- swallowed hurriedly விநோதமாக
ஆரோக்ய வாழ்வு :
அகத்தி பூ: இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.
நவம்பர் 06
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்
நீதிக்கதை
குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த முனுசாமியின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான். என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். "துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!" என்று கேட்டான். துறவி சிறிது யோசித்துவிட்டு, "இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்," என்று கூறினார். முனுசாமி பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். "துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?" என்று கேட்டான். உடனே துறவி, "முனுசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா," என்று கூறினார். முனுசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட முனுசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான். "துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?" என்று கேட்டான். துறவி சிரித்துவிட்டு, "முனுசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடம் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார். முனுசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் முனுசாமி.
இன்றைய செய்திகள்
06.11.2023
*நுரையீரலில் இருந்த ஊசியை புது வழியில் அகற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை.
*டெல்லியில் தொடரும் காற்று மாசு: உலக சுகாதார அமைப்பின் வரம்பை விட 100 மடங்கு அதிகரிப்பு. காற்று மாசு காரணமாக வரும் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை.
*கோவை நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்.
* பிறந்தநாள் அன்று சச்சின் சாதனையை சமன் செய்த விராத் கோலி.
*விரைவில் எனது 50வது சாதனையையும் முறியடிப்பீர்கள் விராட் கோலியை பாராட்டிய சச்சின்.
* உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
* AIIMS doctors achieved a new way of removing needles from the lungs.
*Air pollution continues in Delhi: 100 times more than the World Health Organization limit. Holiday for primary schools till 10th due to air pollution.
*Meteorological Center informs that there may be heavy rain in Coimbatore and Nilgiris.
* Virat Kohli equalked Sachin's record on his birthday.
*You will break my 50th record also soon, Sachin praises Virat Kohli.
* Cricket World Cup: Team India vs South Africa 243 India won by a huge margin of runs.
நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு அரசு மரியாதைv(Govt honors government school teacher who donated body organs near Tiruchengode - Namakkal district)...
நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு அரசு மரியாதைv(Govt honors government school teacher who donated body organs near Tiruchengode - Namakkal district)...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மஞ்சுளா அவர்கள் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். உடனடியாக பெருந்துறை சேனிடோரியம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு இதயத்தை கே ஜி மருத்துவமனைக்கும், கண் விழிகள் அரசன் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு இவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக பள்ளிபாளையம் ஆத்மாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., திருச்செங்கோடு கோட்டாட்சியர் (RDO), தலைமையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது..
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
School students staged road blockade in support of suspended teacher
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...