கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரு மாவட்டத்தில் 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் சிறந்த தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான பெயர் பட்டியல் 2022-2023 (Name List of Best Elementary / Middle Schools 2022-2023 in 38 Districts with 3 Schools per District) - 2022-2023 கல்வி ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 032148/ சி3/ 2022, நாள்: 06-11-2023 (Award of Shields for Outstanding Schools for Academic Year 2022-2023 - Proceedings of Director of Elementary Education Rc.No: 032148/ C3/ 2022, Dated: 06-11-2023)...



ஒரு மாவட்டத்தில் 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் சிறந்த தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான பெயர் பட்டியல் 2022-2023 (Name List of Best Elementary / Middle Schools 2022-2023 in 38 Districts with 3 Schools per District) - 2022-2023 கல்வி ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 032148/ சி3/ 2022, நாள்: 06-11-2023 (Award of Shields for Outstanding Schools for Academic Year 2022-2023 - Proceedings of Director of Elementary Education Rc.No: 032148/ C3/ 2022, Dated: 06-11-2023)...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 032148/ சி3/ 2022, நாள்: 06-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2023 - School Morning Prayer Activities...

 


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை


குறள் :292


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.


விளக்கம்:


குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.



பழமொழி :

As the fool thinks so the bell clinks


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்



இரண்டொழுக்க பண்புகள் :


1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.


2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.


- கன்ஃப்யூஷியன்


பொது அறிவு :


1. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை? 


சவுதி அரேபியா, பூட்டான்.


2.  ஒரு நாளின் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? 


மார்ச்சு 21.


English words & meanings :


 roe (ரோ)- fish egg, a female deer, மீன் முட்டை, பெண் மான். 

roller (ரோலர்) - any cylindrical thing உருளை


ஆரோக்ய வாழ்வு : 


அகத்தி பூ:

சிவப்பு அகத்தி பூக்களை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு இரவில் ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்டுவந்தால் மலச்சிக்கலே வராது.கண்பார்வை சிறக்கும்


நவம்பர் 07


மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்


மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.




அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்


அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.


நீதிக்கதை


 ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான். 'குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் நிஜம்தானா?' 'நிஐம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்!' என்றார் குரு. 'ஏன் குருவே? போர் தவறா ஆயுதங்களே வேண்டாமா?' 'சரி தவறு என்பதல்ல என் வாதம் ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!" குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர். 'நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,' என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்ததும். குரு வழக்கம் போல தியானத்தில் ஆழந்துவிட. இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது   இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர். குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு. கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர். எதுவும் நடக்காதது போல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு! குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லை என்பதையும் அறிவுக்கு மிஞ்சிய ஆயுதம் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்"


இன்றைய செய்திகள்


07.11.2023


*தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு.


*பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர். 


*நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் டெல்லி மக்களை அச்சுறுத்திய அதிர்வு.


*தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.


*விராட் கோலியின் பேட்டிங் சாதனை நம்ப முடியாத அளவில் உள்ளது- ரிக்கி பாண்டிங் புகழாரம்.


Today's Headlines


*Tamil Nadu government announced  public holiday on the day after Diwali.


 *  if any body refused to buy a ten rupee coin they will be prisoned,said by Ramanathapuram District Collector.


 * Earthquake again in Nepal, the tremor threatened the people of Delhi.


 *Chance of heavy rain with thundershowers in Tamil Nadu, Puducherry and Karaikal today and tomorrow.


 *Kholi's batting record is unbelievable- Ricky Ponting praise.

 

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் - செய்தி வெளியீடு எண்: 2220, நாள்: 06-11-2023 (All India Civil Service Exam Coaching Center - Press Release No: 2220, Dated: 06-11-2023)...


அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் - செய்தி வெளியீடு எண்: 2220, நாள்: 06-11-2023 (All India Civil Service Exam Coaching Center - Press Release No: 2220, Dated: 06-11-2023)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளி குழந்தைகள் தேசிய கல்வி உதவித்தொகை பெற 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் Rc.No.4135/ B8/ IE/ SS/ 2023, நாள்: 27-10-2023 (Students studying from Class 9 to Class 12 can apply for National Education Scholarship for Children with Disabilities - State Project Director's Letter Rc.No.4135/ B8/ IE/ SS/ 2023, Dated: 27-10-2023)...


 மாற்றுத்திறனாளி குழந்தைகள் தேசிய கல்வி உதவித்தொகை பெற 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் Rc.No.4135/ B8/ IE/ SS/ 2023, நாள்: 27-10-2023 (Students studying from Class 9 to Class 12 can apply for National Education Scholarship for Children with Differently abilities - State Project Director's Letter Rc.No.4135/ B8/ IE/ SS/ 2023, Dated: 27-10-2023)...


 அனைவருக்கும் வணக்கம். ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு National scholarship apply செய்ய வேண்டும். இதற்கான வருமான சான்று இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நன்றி.



>>> மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் Rc.No.4135/ B8/ IE/ SS/ 2023, நாள்: 27-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



விண்ணப்பிக்கும் வழிமுறை:


Step 1:Type the link https://scholarships.gov.in then this screen will opened.


Step 2 : Below that screen we see the Applicant corner,and click New Registration


Step 3: This Guideline page opened and we will click ok for terms and conditions.


Step 4: Then we will click continue button


Step 5:In this screen we click students have Aadhar,then it will ask the parent's mobile number and the OTP sent to parents mobile.


Step 6:Then it will ask Aadhar for student,once we entered Aadhar,OTP will come to parents mobile.then we proceed OTP with captcha.


Step7:Then we create password with the student's Date of birth.we entered User ID and Password in this page


Step 8:Then this page will open with student's User ID.


Step9:This page we select state and District.then we click Institution list,and it show the Institution coloumn.


Step 10:Finally we click the students school.


Step11:The General information of student page will open,and we entered all details.we must fill mandatory coloumns.


Step12:The last page asks the details of disability.UDID card number is mandatory.


Step13:Finally it asks contact and house address details,once we entered we click the scheme name.


Step14:upload Students bonafide and Disability certificate.then print Application and check the status of Application.


Pre Matric: 9th and 10th.(Documents to be scan Bonafide and Disability certificate)


Post Metric: 11th and 12th.(Documents to be scan 

1.Bonafide

2.Disability certificate

3.Income certificate

4.Fee receipt from school

5.UDID card


மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை 18.11.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல் (Those who wish to participate in the preparatory training for the competitive examination for admission to the Indian Civil Service for the graduates belonging to the fishing community should submit their applications by 18.11.2023 - Krishnagiri District Collector Mrs. K. M. Sarayu I.A.S., informed)...


மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை 18.11.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல் (Those who wish to participate in the preparatory training for the competitive examination for admission to the Indian Civil Service for the graduates belonging to the fishing community should submit their applications by 18.11.2023 - Krishnagiri District Collector Mrs. K. M. Sarayu I.A.S., informed)...



>>>  செய்தி வெளியீடு எண்: 19, நாள்: 05-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


₹10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" - விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (Refusal to receive ₹10 coin will result in imprisonment of up to 3 years and fine" - Vishnuchandran, Ramanathapuram District Collector)...

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" - விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (Refusal to receive ₹10 coin will result in imprisonment of up to 3 years and fine" - Vishnuchandran, Ramanathapuram District Collector)...



10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


"இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." -ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்


அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் (Complaint for defamation of officials - Suspension of government school teacher)...

 அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் (Complaint for defamation of officials - Suspension of government school teacher)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...