கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவப் பயிற்சி ரத்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...

 

எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவப் பயிற்சி ரத்து - தொடர்மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில், பள்ளி வேலை நாட்கள் குறைந்து உள்ளதால், மாணவர்கள் நலன்கருதி மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி தவிர்ப்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - Ennum Ezhuthum - Cancellation of training for 3rd term - Avoidance of direct training for third term for welfare of students due to reduced school working days in various districts due to incessant rains - Proceedings of Director of State Council of Educational Research and Training...



>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்...


நடப்பு 2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் புதிய மாற்றங்கள்...

 

நடப்பு 2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return E-filing) படிவத்தில் புதிய மாற்றங்கள்...


வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 1 மற்றும் 4ல் முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தனிநபர்கள், நிறுவனங்கள் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் (ரிட்டர்ன்) செய்வதற்கு பல்வேறு படிவங்கள் உள்ளன. இவற்றில், நடப்பு நிதியாண்டுக்கான அதாவது, கணக்கீட்டு ஆண்டு 2024-25க்கான ஐடிஆர் 1 மற்றும் 4 ஆகிய படிவங்களில் முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.


 தனிநபர்களுக்கான ஐடிஆர் படிவம் – 1ஐ (சகஜ்), ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், சம்பள வருவாய், ஒரு வீட்டு வாடகை வருவாய் மற்றும் வட்டி போன்ற இதர வருவாய் ஈட்டுபவர்கள், ரூ.5,000 வரை விவசாய வருவாய் ஈடுபடுவர்கள் தாக்கல் செய்யலாம்.


 இதுபோல், ஐடிஆர் படிவம் -1ஐ (சுகம்) தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர், ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் எல்எல்பி நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் தாக்கல் செய்யலாம்.


ஐடிஆர் – படிவம் 4 தாக்கல் செய்பவர்கள், பழைய அல்லது புதிய வரி விதிப்பில் விருப்பமானதை தேர்வு செய்தால் போதும். 


ஐடிஆர் 4 தாக்கல் செய்வோர், புதிய வருமான வரி விதிப்பை தேர்வு செய்ய படிவம் 10 – ஐஇஏ வை தாக்கல் செய்ய வேண்டும். படிவம் 1 மற்றும் 4ல், அக்னி வீர் திட்டத்துக்கு நிதி வழங்கியதற்கு 80 சிசிஎச் -ன் கீழ் வருமான வரிச்சலுகையைப் பெற, புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 01-11-2022க்கு பிறகு மேற்கண்ட திட்டத்துக்கு நிதி வழங்கியவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். ஐடிஆர் படிவம் 4ல் ஆண்டு வர்த்தக வரம்பை அதிகரிக்க பணமாக பெறப்பட்டது குறித்து சேர்ப்பதற்கு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என, வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் வழக்கமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்தான் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை டிசம்பரிலேயே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


2024 ஆம் ஆண்டு - கணித மாத நாட்காட்டி...

 


2024 Ganitha Calendar 


>>> 2024 ஆம் ஆண்டு - கணித மாத நாட்காட்டி (Mathematics Calendar)...


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது...

பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது


ஊழல் புகார் தொடர்பாக ஜெகநாதனை கைது செய்த கருப்பூர் போலீசார்


துணைவேந்தராக பணியாற்றும் போதே வர்த்தக நிறுவனம் தொடங்கியதாக புகார்


போலி ஆவணங்கள் தயாரித்து, பல்கலை. கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் புகார்.


சேலம் பெரியார் பல்கலை., துணை வேந்தர் கைது...


போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார்  பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், மாநகர போலீசாரால் கைது.



பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.245, நாள்: 22-12-2023 - பள்ளி மேலாண்மைக் குழுக்களால் எழுப்பப்படும் தேவைகளைக் கண்காணித்து, ஆய்வு செய்து, முறையாக நிவர்த்தி செய்து தீர்க்க அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (SLMC) அமைக்கப்பட்டது - அரசாணை வெளியீடு...


பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.245, நாள்: 22-12-2023 - அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (SLMC) - பள்ளி மேலாண்மைக் குழுக்களால் (SMC) எழுப்பப்படும் தேவைகளைக் கண்காணித்து, ஆய்வு செய்து, முறையாக நிவர்த்தி செய்து தீர்க்க அமைக்கப்பட்டது - அரசாணை வெளியீடு (School Education Department G.O.Ms.No.245, Dated: 22-12-2023 - State Level Monitoring committee (SLMC) under the Chairmanship of Chief Secretary to Government - To monitor and review and systematically address and resolve the requirements raised by the School Management Committees - constituted - orders - lssued)...



>>> Click Here to Download G.O.Ms.No.245, Dated: 22-12-2023...



அரசு பள்ளிகளின்  பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பள்ளித் தேவைகளை கண்காணிக்கவும் மதிப்பாய்வு செய்து முறையாக நிவர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு அரசுத்  துறை செயலாளர்களைக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு...


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைப்பு.


பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன.


4 விதமாக (உட்கட்டமைப்பு, கற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை) தேவைகள் பிரிக்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்பட உள்ளன.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) ஏற்படுத்துதல் - நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...




அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) ஏற்படுத்துதல் - நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



Instruction to the User

Hi-tech Lab - MIDDLE SCHOOL...

 

  அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் கவனத்திற்கு...

அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி EMIS - ல் Hi-Tech Lab Site Preparation பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது. 


1. ஹைடெக் ஆய்வகத்திற்கான வகுப்பறையை கண்டறியும் போது, தேர்வுக்கு கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


2. HM / ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக அணுகும் வகையில் ஹைடெக் லேப் வகுப்பறையை கண்டறிவதில் கவனமாக திட்டமிட வேண்டும்.


3. மேசைகள்/நாற்காலிகள்   போன்ற தளவாட பொருட்கள் இல்லாமலும் , குப்பைகள்  அகற்றப்பட்டு  தெளிவாக இருக்க வேண்டும்.


4. அறையில் நீர் கசிவு மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் சரியான சுவர்கள் இருக்க வேண்டும்.

                          


அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்துதல் - தொடக்கப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்துதல் - தொடக்கப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



Smart Classroom - PRIMARY SCHOOL...

   அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் கவனத்திற்கு...

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி EMISல்  Smart Class Room Site Preparation  பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.


1. Smart Classroom - க்கான வகுப்பறையை அடையாளம் காணும் போது, தேர்வுக்கு கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


2. HM/ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக அணுகும் வகையில் Smart Classroom  வகுப்பறையை கண்டறிவதில் கவனமாக திட்டமிட வேண்டும்.


3. அறையானது குப்பைகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.


4. அறையில் நீர் கசிவு மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் சரியான சுவர்கள் இருக்க வேண்டும்.

                            - முதன்மை கல்வி அலுவலர்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...