கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி- உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்...

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி- உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்...


ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது.


புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் இஷிகவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது.


இஷிகாவா மாகாணத்தில் 1.2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுனாமி அலை எழுந்தது.


இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.



அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.


இந்நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு தொடர்பாக அங்குள்ள இந்தியர்களுக்காக தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, +81-80-3930-1715 (திரு. யாகுப் டாப்னோ), +81-70-1492-0049 (திரு. அஜய் சேதி), +81-80-3214-4734 (திரு. டி.என். பர்ன்வால்), +81-80-6229-5382 (திரு.எஸ்.பட்டாச்சார்யா), +81-80-3214-4722 (திரு. விவேக் ரத்தீ).


மேலும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.



2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி...



2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி - 2024 School Calendar...



குறிப்பு : 25.01.2024 (வியாழன்) தைப்பூசம் - அரசு விடுமுறை விடுபட்டுள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*_2024 ஜனவரி மாத நாட்காட்டி -*


*25.01.2024 (வியாழக்கிழமை) தைப்பூசம் - அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது._*


*01.01.2024 திங்கள்கிழமை ஆங்கில புத்தாண்டு அரசு விடுமுறை.*


*15.01.2024 - திங்கள்கிழமை பொங்கல் அரசு விடுமுறை.*


*16.01.2024 -செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை.*


*17.01.2024 - புதன்கிழமை உழவர் திருநாள்.அரசு விடுமுறை.*


*25.01.2024 - வியாழக்கிழமை தைப்பூசம் அரசு விடுமுறை*


*26.01.2024 - வெள்ளிக்கிழமை குடியரசு தினம் அரசு விடுமுறை*


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - ஜனவரி 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - January 1st Week - Tamil & English Medium Lesson Plan )...

 

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - ஜனவரி 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - January 1st Week - Tamil & English Medium Lesson Plan )...


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - ஜனவரி முதல் வாரம் - தமிழ் வழி...

 

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் -  ஜனவரி முதல் வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - January 1st Week - Tamil and English Medium)...


தீயணைப்புத் துறையில் இருந்து முதன்முறையாக இ.ஆ.ப. அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் அலுவலர்...

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அலுவலர் பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் ஒதுக்கீட்டிலிருந்து IASஆக நியமிக்கப்பட்டுள்ளார்...



மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியாக தற்பொழுது பிரியா ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பிரியா பணியில் சோ்ந்தாா். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராக நிலைக்கு அவர் உயா்ந்தாா்.


மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா்.


இந்த நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோ்வாகியுள்ளாா்.


தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தோ்வாகியிருப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வை எழுதி தனது 26 ஆவது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணியாற்ற துவங்கினார் பிரியா ரவிச்சந்திரன், இவருடைய சொந்த ஊர் சேலம். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீயணைப்புத் துறையில் பயணித்து வருகின்றார். 


தீயணைப்பு துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக இப்பொழுது அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது, மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழக வரலாற்றில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த ஒரு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 



இளமையும் கல்வியும்

பிரியா தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நல்லியப்பன் பட்டய கணக்காளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை தன்னுடைய வெற்றிக்கு உந்துதலாக இருந்ததாகவும், அரசு அதிகாரிக்குச் சேவையாற்ற வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் வாய்ப்பைப் பற்றி பேசுவது தானும் ஒரு அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டியதாகக் கூறுகிறார். தன்னுடைய வீட்டில் பாலின பாகுபாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள குளுனி மெட்ரிக்குலேசன் பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் ஆய்வு நிறைஞர் பட்டமும் பெற்றார். இவர் 1999ஆம் ஆண்டு பொதுச் சேவைகள் தேர்வை எழுதினார். தனது 26ஆவது வயதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முகமையின் (தொகுதி -1) பிரிவு அலுவலராக, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 2003ஆண்டில் பணியினைத் தொடங்கினார். இவர் தனது பணியினைத் துவங்கும் போது இரண்டு மாதக் கைக் குழந்தையின் தாயாக இருந்தார்; இருப்பினும் இத்துறையில் கடுமையான உடல் பயிற்சியினைப் பெற்றார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவைக் கல்லூரியில் தனது பிரிவு அலுவலர் பயிற்சியினைச் சிறப்பான முறையில் முடித்தார். இங்கிலாந்தின் க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள மோர்டன்-இன்-மார்ஷ் தீ சேவை கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.


அரசுப் பணி

பிரியா தனது முதல் பணி நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் பதவியேற்பதற்கு முன்னதாக கோவை மண்டலத்தில் பணியாற்றினார். கோயம்புத்தூர் -நீலகிரி மாவட்டங்களின் கோட்ட அலுவலராகவும் பணியாற்றினார். கோவையில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுச் செயலாற்றியதைக் கண்ட இப்பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டினர். இப்பகுதியின் அனைத்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். பின்னர் அவர் தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். இங்கு இவர் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தீயணைப்பு திறன்களைப் பயிற்றுவித்தார். மாநில பொதுச் சேவை ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட மகளிர் நிலைய அதிகாரிகளின் உடல் சரிபார்ப்பு உட்படப் பல அரசு குழுக்களின் உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு தேர்வானைத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கான குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பிரதிநிதிகளில் பிரியாவும் ஒருவர், தொழில்துறை இடர் மேலாண்மை படிப்பிற்காக ஜெர்மனிக்குச் சென்ற குழுவில் இருந்த ஒரே பெண்மணியும் இவரே ஆவார். 2012 சனவரியில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது, சென்னையில் பாரம்பரிய அரசு கட்டிடமான எழிலகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மத்திய சென்னையின் கோட்ட அதிகாரியான பிரியா அந்த இடத்திற்கு விரைந்தார். இந்த தீயைச் சமாளிக்க அதிக அளவில் தீயணைப்புத் துறை வீரர்களும் நவீன கருவிகளும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. கலாசு மகால் பாரம்பரிய மையத்தில் மீட்பு நடவடிக்கையின் போது பிரியா தனது சக அதிகாரியுடன் பலத்த காயமடைந்தார். இவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தீவிபத்தில் மீட்பு நடவடிக்கையில் பலியானார். பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்து அரசின் ஆதரவினை தெரிவித்தார். இவரது துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு வீரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே ஆவார்.



தமிழ்நாட்டின் வடக்கு மண்டல இணை இயக்குநராகப் பதவி உயர்வு மற்றும் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது மீட்புப் பணியில் இவரது மேற்பார்வை மற்றும் பணியினை கண்ட ஊடகங்கள் இவரது செயலினை வெகுவாக பாராட்டினர். 


விருதுகள்

தன்னலமற்ற துணிச்சலான செயலுக்கான தமிழ்நாடு முதலமைச்சரால் 2012ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம்

2013ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவர் விருது

பெமினா பெண் சக்தி விருது (2013)

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதல்வர் விருது (2014)


அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 வெளியீடு...


G.O.Ms.No.692, Dated: 09-11-2023 - 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை அரசாணை வெளியீடு...



2024ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Leave List 2024 - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 வெளியீடு...


>>> தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> அரசிதழ் எண்: 385, நாள்: 10-11-2023 - Gazette No.385, Dated: 10-11-2023 - Govt Holidays 2024...



2️⃣0️⃣2️⃣4️⃣


*ஜனவரி- 1  (திங்கள்) - ஆங்கிலப் புததாண்டு 


*ஜனவரி -15 ( திங்கள் ) பொங்கல்


*ஜனவரி-16 (செவ்வாய்) திருவள்ளுவர் தினம்


 *ஜனவரி -17 ( புதன்) உழவர் திருநாள்


*ஜனவரி-25 ( வியாழன்) தைப்பூசம்


 *ஜனவரி -26  (வெள்ளி ) குடியரசு தினம்.


-----------------------------

*மார்ச்-29 (வெள்ளி) புனித வெள்ளி

---------------------––-----

*ஏப்ரல் -1 (திங்கள்) நிதி ஆண்டு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)


*ஏப்ரல்-9 (செவ்வாய் ) தெலுங்கு வருட பிறப்பு


*ஏப்ரல் -11 (வியாழன்) ரம்ஜான்


*ஏப்ரல்-14 (ஞாயிறு) தமிழ் புத்தாண்டு & டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்


*ஏப்ரல்-21 (ஞாயிறு) மஹாவீர் ஜெயந்தி


---------------------------


*மே- 1 (புதன் ) மே தினம்

___________________


*ஜூன்-17 (திங்கள்) பக்ரீத்


------------------------------

*ஜூலை -17 (புதன் ) முஹரம்

---------------------------


*ஆகஸ்ட் -15 ( வியாழன் ) சுதந்திர தினம்

___________________


*ஆகஸ்ட் - 26 ( திங்கள் ) கிருஷ்ண ஜெயந்தி.


*செப்டம்பர் -7 (சனி ) விநாயகர் சதுர்த்தி.


*செப்டம்பர்-16 ( திங்கள்)   மீலாதுன் நபி

------------------------------


 *அக்டோபர் -2 (புதன் )காந்தி ஜெயந்தி


 *அக்டோபர்- 11 (வெள்ளி ) ஆயூத பூஜை


*அக்டோபர்- 12 ( சனி ) விஜயதசமி

____________________

*அக்டோபர்-31 (வியாழன் ) தீபாவளி.

------------------------------


*டிசம்பர்- 25  (புதன்) கிறிஸ்துமஸ்.


2024ஆம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...


மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்


திங்கட்கிழமை  - 6

செவ்வாய்கிழமை - 2

புதன்கிழமை - 5

வியாழக்கிழமை - 4

வெள்ளிக்கிழமை - 3

சனிக்கிழமை - 2

ஞாயிற்றுக்கிழமை - 2


அரசாணை எண்: 243, நாள்: 21-12-2023க்கான எதிர்கால நடவடிக்கைகள் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

 

 அரசாணை எண்: 243, நாள்: 21-12-2023க்கான எதிர்கால நடவடிக்கைகள் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (TETOJAC) மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? Teacher stabbed to death in government school near Thanjavur - what is t...