கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2024...

  

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 394:


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.


விளக்கம் :

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.



பழமொழி : 


Birds of the same feather flock together.


இனம் இனத்தைச் சேரும்.



பொன்மொழி:


Attitude is a little thing that makes a big difference. - Winston Churchill


மனநிலை என்பது மிகவும் சிறியதுதான். அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது - வின்ஸ்டன் சர்ச்சில் 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Ask - கேள்

Assemble - சேர் 

Assurance - நிச்சயம்

Astringency - துவர்ப்பு


ஆரோக்கியம்


அவகேடோ


நவீன வாழ்வியல் முறையில் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்க நிறையப் பேர் மேற்கொள்வது உடற்பயிற்சிகள். எடையைக் குறைப்பது மட்டுமே கொழுப்பைக் குறைப்பதாகாது உண்மையில் நம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளும் தேவை. அவகேடோ நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பைத் தரக்கூடியது. இது நம் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். அவகேடோவில் இருப்பது, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு (Monounsaturated fat), நல்ல கொழுப்பை மேம்படுத்தவும் ரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் (கொழுப்பு) குறைவாகச் சுரக்கவும் உதவும். இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான அபாயத்திலிருந்து காக்கும். `ஃபுட் கிரேவிங்ஸ்' எனப்படும் அதீதமாகச் சாப்பிடும் எண்ணத்தைப் போக்க உதவும்.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 9

நிகழ்வுகள்

1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.


1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.


1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.


2007 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.



1927 – சுந்தர்லால் பகுகுணா, இந்திய சூழலியலாளர் - பிறந்த நாள் இன்று...



ஜனவரி 8 - சிறப்பு நாட்கள் :


வெளிநாடுவாழ் இந்தியர் நாள் 



நீதிக்கதை


அறிவே ஆயுதம்


சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராஜா என்றும் கூறுவர்.


அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.


ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது.


இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.


சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.


சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும்.


அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.


எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன.


அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.


அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது,

ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.


அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.


சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.


அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.


என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.


அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.


அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.


பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.


இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது.


சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.


முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


09-01-2024 


சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியத்துவமாக உள்ளது” என்றார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசின் குழு ஜனவரி 11 முதல் 14 வரை ஆய்வு...


வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளான ஜனவரி 16-ம் தேதி திறந்திருக்கும்...


எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுக்கசிவு - அறிக்கை தாக்கல் செய்ய கடல்சார் வாரியம் மற்றும் தொழில் பாதுகாப்புத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...


ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா பயணம் செய்ய உள்ளார்...


பொங்கல் பண்டிகை; 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்...


உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை மாநில அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது...



Today's Headlines:


Speaking at the World Investor Conference held in Chennai, industrialist Anand Mahendra said, "Tamil Nadu is important in the development of India." 


The central government team will inspect the flood-affected southern districts from January 11 to 14... 


Vandalur Zoo will be open on 16th January holiday...


Ammonia gas leak from Ennoore Coromandel factory - Southern National Green Tribunal directs Maritime Board and Industrial Safety Department to submit report... 


On January 28, Chief Minister M.K.Stalin is going to visit Spain and Australia... 


Pongal festival; 19,484 special buses will be operated - Minister Sivashankar...


The Supreme Court dismissed the petitions seeking 10% reservation for the upper caste poor (EWS) in the states of Tamil Nadu and Karnataka saying that the state government should decide on the matter...


கனமழை காரணமாக 08-01-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை காரணமாக 08-01-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08-01-2024 due to heavy rain) விவரம்...


*அரியலூர்* (பள்ளிகள்) 

*இராணிப்பேட்டை* (பள்ளிகள்) 

*வேலூர்* (பள்ளிகள்) 

*திருவண்ணாமலை* (பள்ளிகள்) 

*திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*நாகப்பட்டினம்* கீழ் வேளூர், நாகை வட்டம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 



🌧️ *விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

😳 *காஞ்சிபுரம்

தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டிற்கான INSPIRE விருது திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 733 மாணவர்களின் பட்டியல் - List of 733 Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23 in Tamilnadu...

 


தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் INSPIRE விருது திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 733 மாணவர்களின் பட்டியல் - Science & Technology Department - List of 733 Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23 in Tamilnadu...


 No. of Sanctioned : 733


>>> Click Here to Download INSPIRE Award Selected Students 2022-23 PDF...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.01.2024...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 393:


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.


விளக்கம்:


கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.



பழமொழி : 


Bare words buy no barley


வெறுங்கை முழம் போடுமா?



பொன்மொழி:


Don't find fault, find a remedy. Henry Ford


தவறுகளைக் காணாதே, அதற்கான தீர்வுகளைக் காண் - ஹென்றி ஃபோர்ட் 



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்

நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி

வெப்ப கடத்தாப் பொருள் - மரம்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Anxiety - கவலை

Anything - ஏதாவது

 Apprehension - பயம் 


ஆரோக்கியம்


யோகர்ட்


வழக்கமாக நாம் சாப்பிடும் தயிரைவிட யோகர்ட்டில் அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் கால்சியம் மிகுதியாக இருக்கிறது. ஒரு கப் யோகர்ட்டில், நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான 25 சதவிகித கால்சியம் கிடைத்துவிடும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன; அவை செரிமானத்தைச் சீராக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 5


1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.


1942 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய இயற்பியலாளர், எழுத்தாளர்

பிறந்த நாள் இன்று...



ஜனவரி 8 - சிறப்பு நாட்கள் :


உலக தட்டச்சு நாள்



நீதிக்கதை


நடப்பது எல்லாம் நன்மைக்கே...


காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.


சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.


ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.


நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.


சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.


“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.


சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.


இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.


உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.


சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.


வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு...


ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.


அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.


தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.



நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.


அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.



சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.


இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.


பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.


இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


08-01-2024 


''தொழில்தொடங்க தமிழ்நாடு சிறந்த மாநிலம்'' - முகேஷ் அம்பானி பாராட்டு...


தமிழகத்திற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை...


புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க விதிமுறைகளில் மாற்றம் கட்டாயம் - தொழில்துறையினர்...


 தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான சாலை வரைபடம் குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்...


சென்னையில் உள்ள கண் மருத்துவமனை, கண் மருத்துவர்களுக்கு 3டி முறையில் அறுவை சிகிச்சைகளை வழங்குகிறது...


பிரதமருக்கு எதிராக  அவமரியாதையாகப் பேசியதாக இந்தியா விவகாரத்தை எழுப்பியதால், மாலத்தீவு மூன்று துணை அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்தது...



Today's Headlines 


08-01-2024


"Tamil Nadu is the best state for entrepreneurship" - Mukesh Ambani praises... 


2 days Orange Alert for Tamil Nadu - Meteorological Center warns... 


Change in norms to encourage new entrepreneurship - Industry...


Chief Minister Stalin released a statement on the road map to transform Tamil Nadu into a $1 trillion economy... 


An eye hospital in Chennai offers 3D surgeries to ophthalmologists... 


Maldives suspends three deputy ministers after India raises issue of disrespectful remarks against Prime Minister...


சென்னையில் இன்று (07-01-2024) நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட முடிவுகள்...

 

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு 

 

சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முடிவு 

 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள  போராட்டம்.

 

அதன்பின்னும் நடவடிக்கை இல்லை என்றால் காலவரையற்ற போராட்டம் - ஜாக்டோ ஜியோ...



ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO)


ஊடகச் செய்தி



ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (07.01.2024) பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அ. மாயவன், திரு.ஆ.செல்வம்,  திரு.ச.மயில் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ள வாழ்வாதார 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்டவாறு தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.


கூட்ட முடிவுகள்


1. 22.01.2024 முதல் 24.01.2024 முடிய மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம் நடத்துவது.


2. 30.01.2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது.


3.05.02.2024 முதல் 09.02.2024 முடிய அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது (பி.ஜே.பி., அ.தி.மு.க. தவிர்த்து).


4.10.02.2024 அன்று மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது.


5. 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது.


6.26.02.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது.



ஆசிரியர் - அரசு ஊழியர், அரசுப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள்


1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.


காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.


இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.


முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.


சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி


செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.


அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.


2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்


சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.


உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.


ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள்...



>>> ஜாக்டோ ஜியோ ஊடகச் செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சென்னையில் இன்று (07-01-2024) தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் டாப் 10 முதலீடுகள்...

சென்னையில் இன்று (07-01-2024) தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் டாப் 10 முதலீடுகள்...


மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.



முதல் நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியது...


சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல்நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது


100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தகவல்...


தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், தமிழ்நாடு அரசு உத்தரவு - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024, Dated: 07.01.2024...



தமிழ்நாட்டில் 16 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 32 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், தமிழ்நாடு அரசு உத்தரவு - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024,  Dated: 07.01.2024.......



>>> Click Here to Download - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024,  Dated: 07.01.2024...




*சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம்.*


*விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஃபெரோஸ் கான் அப்துல்லா நியமனம்.*


*ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தீஸ் நியமனம்.*


*ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம்.*


*மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.*


*சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக தீபக் விழுப்புரம் எஸ்.பி ஆக பணியிட மாற்றம்.*


*விழுப்புரம் எஸ்.பி ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*அரியலூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா விருதுநகர் எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*ஐஜி ஆர் தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டிஜியாக பதவி உயர்வு; மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம்.*


*ஐபிஎஸ் அதிகாரி வி ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு; சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம்.*


*டிஐஜி சாமூண்டிஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமூண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.*


*ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம்.*


*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலாளராக நியமனம்.*


*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.*


*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம்.*


*ஐஜியா பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில் வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம்.*


*சரஜோகுமார் தக்கூர் ஐபிஎஸ் வேலூர சரக டிஜிபியாக நியமனம்.*


*சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஸ்குமார் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக நியமனம்.*


*பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள தேவராணி, சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமனம்.*


*காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்று உளவுப்பிரி டிஐஜியாக நியமனம்.*


*ஜி.ராமர் ஐபிஎஸ் சென்னையில் ரயில்வே டிஜிபியாக நியமனம்.*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...