NHIS App and Web Portal Guidelines - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் NHIS App and Web Portal பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் கடிதம் வெளியீடு...
NHIS App and Web Portal Guidelines - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் NHIS App and Web Portal பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் கடிதம் வெளியீடு...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07-03-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
குறள் 80:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்:
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
பழமொழி :
பழக பழக பாலும் புளிக்கும்
Familiarity breeds contempt
பொன்மொழி:
Success in the end erases all the mistakes along the way.
இறுதியில் வெற்றி தன் வழியில் அனைத்துத் தவறுகளையும் அழிக்கிறது.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Hesitate - தயக்கம்
Hunger - பசி
Ignore - அலட்சியம்
Imagination - கற்பனை
Immediately - உடனடியாக
ஆரோக்கியம்
மலச்சிக்கல்
தினமும் 2 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வரலாம்.
திரிபலா சூரணம் (கடுக்காய்+ நெல்லிக்காய்+தான்றிக்காய் சம அளவு) 2 கிராம் அளவு இரவு இளம் சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலம் சிக்கலில்லாமல் கழியும்.
இன்றைய சிறப்புகள்
மார்ச் 7
1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
பிறந்த நாள்
-
நினைவு நாள்
2020 – க. அன்பழகன், தமிழ்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் (பி. 1922)
சிறப்பு நாட்கள்
ஆசிரியர் நாள் (அல்பேனியா)
நீதிக்கதை
நல்லொழுக்கம்
முன்னொரு காலத்தில் பாலு என்ற ஒரு பையன் இருந்தான். ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும்போது வழியில் நாயுடு அவர்களுடைய தோட்டத்தில் இருந்த கீரை செடிகளை பார்க்கிறான்.
பாலுக்கு பாலக்கீரை என்றால் ரொம்ப பிடிக்கும். அதில் கொஞ்சம் கீரைகளை பறித்து அதை வீட்டுக்கு கொண்டு சென்றான். வீட்டுக்கு போனதும் தன் அம்மாவிடம் போய் “அம்மா அம்மா நான் கொஞ்சம் கீரைகளைக் கொண்டு வந்திருக்கேன். இதை வைத்து சுவையான சாப்பாடு செய்து தரீங்களா!” என்று கேட்டான் பாலு.
அவன் அம்மா கேட்டாங்க “எங்கிருந்து இந்த கீரைகளை கொண்டு வந்த” அதற்கு பாலு “நான் இதை நாயுடு அவர்கள் தோட்டத்தில் இருந்து கொண்டு வந்தேன்” அப்படின்னு அப்பாவியா சொன்னாலும் உண்மையில் பாலு கீரைகளைக் திருட்டு தான் வந்தான். ஆனா! அவன் அம்மா நினைத்தாங்க பாலு இன்னும் சின்ன பையன் தெரியாம கீரைகளை பறித்து வந்திருப்பான் என்று அவனை எதுவும் சொல்லவில்லை.
tenali Raman wife
அவன் அம்மா அவனுக்கு அந்த கீரைகளை வைத்து அன்று இரவு சுவையான சாப்பாடு செய்து கொடுத்தாங்க கொஞ்ச நாளுக்கு அப்புறம், முன்னாடி வந்தது போல ஒரு மரத்திலிருந்து மாங்காயை பறித்து அதை வீட்டுக்கு கொண்டு வந்து அவன் அம்மாவை மாங்காய் பருப்பு செய்ய சொன்னான். முன்னாடி போலவே அவன் அம்மா அவனை திட்டவில்லை.
பாலு ரொம்ப குறும்பா ஆகிட்டான் என்று நினைத்து அவனுக்கு சுவையான சாப்பாடு செய்து கொடுத்தாங்க. அவன் அதை சந்தோஷமாக சாப்பிட்டான். ஒரு நாள் முன்னாடி ஏற்கனவே செய்ததைப் போல பாலு பழங்களை பறிக்கும்போது தோட்டக்காரர் அவனை கையும், களவுமாக பிடித்தார். அவனை அவன் வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் அவங்க அம்மாகிட்ட அவன் திருடை பற்றி சொன்னார்.
பாலு அம்மாவுக்கு ரொம்ப கோபம் வந்தது. “என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். வேறு யாரோ திருடனதற்காக இவன் மேல பழியை போடாதீங்க” என்று சொல்லி தோட்டக்காரனை அனுப்பிட்டாங்க.
அவன் அம்மா அவனை கண்டிக்காமல் இருந்ததனால் அவனால் அவன் தப்பை உணர முடியவில்லை. இந்த மாதிரி சம்பவங்கள் நடந்த போது தான் அம்மா அவனுடைய குணத்தை உற்சாகப்படுத்துகிறார்கள் என்று நினைத்தான் பாலு.
சில வருஷங்களுக்கு அப்புறம் பாலு பெரியவன் ஆனான். வயது ஆக ஆக நம்முடைய தேவைகளும் மாறும். அவன் சின்ன வயசுல பழங்களையும், காய்கறிகளையும் திருடினான். அனால் இப்போது அவன் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி பணம், அடுத்தவர்களின் பர்ஸ் போன்ற பொருட்களை திருட ஆரம்பிச்சான்.
அவன் அம்மா நினைத்தாங்க பாலு பெரிய பையன் ஆயிட்டான் அவன் என் பேச்சை கேட்க மாட்டான் என்று நினத்து அவனை அப்பவும் அவங்க கண்டிக்கவில்லை. ஒரு முறை அவன் திருடும் போது அவனை போலீஸ் கையும், காளவுமாக பிடிச்சுட்டாங்க.
போலீஸ் அவனை பிடிச்சுட்டு போகும்போது அவன் அம்மாவுக்கு உண்மை தெரிந்து அழ ஆரம்பிச்சாங்க. அப்போது பாலு அவன் அம்மா கிட்ட சொன்னான் “இப்ப அழுது என்ன பிரயோஜனம் அம்மா நீங்க நான் முதல் தடவை நாயுடு தோட்டத்தில் இருந்து திருடிய போது என்ன தடுத்திருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன்” என்று சொன்னான். போலிஸ் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க,
கருத்து: இந்த கதையோட நீதி என்னவென்றால் எப்போதெல்லாம் குழந்தைகள் தப்பு பண்றாங்களோ! அப்போதெல்லாம் அவர்கள் செய்தது தவறு என்று உணர வைக்க வேண்டியது, அவங்க அம்மா அப்பாவோட பொறுப்பு. இல்லனா குழந்தைகள் வளரும் போது அந்த தப்புகள் பழக்கமாக மாறி அவங்களை தப்பான வழியில் கொண்டு போகும்.
இன்றைய முக்கிய செய்திகள்
07-03-2024
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...
அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி...
திருநெல்வேலியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
Today's Headlines:
07-03-2024
The Government of Tamil Nadu has issued an ordinance regarding the establishment of a new Central Co-operative Bank in Namakkal district...
Chief Minister M.K.Stalin launched a new program called "Are you fine" to ensure that the government's schemes reach the public...
Prime Minister Narendra Modi inaugurated India's first underwater metro train service...
Financial assistance to the family of a sanitation worker seriously injured in a road accident in Tirunelveli: Chief Minister M.K.Stalin's announcement...
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி களுடன் இணைக்க திட்டம்...
தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 13, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 59 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Scheme to merge primary and middle schools with low student strength to nearby higher secondary schools...
The education department plans to merge primary and middle schools with student strength of less than 13 primary schools and middle schools with less than 59 students...
தேன்சிட்டு - 01-15 மார்ச் 2024 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (ThenChittu - 01-15 March 2024 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...
>>> தேன்சிட்டு - 01-15 மார்ச் 2024 இதழ் (Then Chittu - 01-15 March 2024 Magazine)...
>>> தேன்சிட்டு - 16-29 பிப்ரவரி 2024 இதழ் (ThenChittu - 16-29 February 2024 Magazine)...
நவீன தொழில்நுட்பத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை (Smart classroom) உருவாக்க தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை @tnschoolsedu பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதன் முதல்கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம்-புது வட்டாரம் கோவூர், மாந்தோப்பு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
Education District Level NEET Coaching Classes - Conducted from 25.03.2024 to 02.05.2024 - Proceedings of Director of School Education...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கு ரூ.35 இலட்சம் பரிசுத்தொகை - EDII's ஹேக்கத்தான் - 2023-24 - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 467, நாள்: 05-03-2024...
Rs.35 lakh prize money for innovation of higher education students - EDII's Hackathon - 2023-24 - Tamil Nadu Government Press Release No: 467, Date: 05-03-2024...
>>> செய்தி வெளியீடு எண்: 467, நாள்: 05-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...