கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர் சேர்க்கை - காட்சிப் பதாகைகள்...



 மாணவர் சேர்க்கை - காட்சிப் பதாகைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் - EMISல் பதிவு செய்ய தேவையான விவரங்கள் - Students Admission Campaign (AY 2024-2025)...



மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் - EMISல் பதிவு செய்ய தேவையான விவரங்கள் - Students Admission Campaign (AY 2024-2025)...



>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்வதற்கு இங்கே சொடுக்கவும்...


2024-25 ஆம் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் சேரவிருக்கும் மாணவர்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை...

 2024-25 ஆம் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் சேரவிருக்கும் மாணவர்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை - Students Admission Campaign (AY 2024-2025)...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 81:


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.


விளக்கம்:


இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.


பழமொழி : 


Feed by measure and defy the physician


வைத்தியனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு




பொன்மொழி:


The only difference between dreams and achievements is hard work.


 கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் இடையே உள்ள ஒரே வித்யாசம் கடின உழைப்பு மட்டுமே.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்

எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்

ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்

விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு

அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Important - முக்கியம் 

Information - தகவல் 

Injustice - அநீதி 

Insect - பூச்சி 

Intercede - பரிந்து பேசு


ஆரோக்கியம்


நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்:

அவை வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து, தாவர புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் முக்கிய ஆதாரங்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய்களின் ஆபத்து கணிசமாகக் குறைவு.


இன்றைய சிறப்புகள்


மார்ச் 7


1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது


பிறந்த நாள் 

-




நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


அனைத்துலக பெண்கள் நாள்


நீதிக்கதை


நேர்மை 


ஒரு பெரிய நகரத்தில் உமா என்கிற பெண் குழந்தை வாழ்ந்து வந்தாள். உமாவின் அம்மா அப்பா இருவரும் அந்த நகரத்திலேயே வேலை செய்து வந்தார்கள். உமாவின் பெற்றோர் அவளின் மீது ரொம்ப பாசம் வைத்திருந்தார்கள். அதனால் உமா என்ன ஆசைபடுகிறாளோ அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். 


அவர்கள் எப்போதெல்லாம் சந்தைக்கு போகிறார்களோ அப்போதெல்லாம் அவளுக்கு பரிசுகள் வாங்கிவிட்டு வருவார்கள். அவள் தன் பெற்றோர்களிடம் ரொம்ப செல்லமாக வாழ்ந்து வந்தாள். உமா ரொம்ப புத்திசாலி. அவள் படிப்பிலும் சிறந்து விளங்கினாள். அதுமட்டுமில்லாமல் எப்பவும் மற்றவர்களுக்கும் உதவி செய்யும் குணம் உடையவள். 


ஒரு நாள் உமா பள்ளிக்கு செல்லும் போது தன் வகுப்பிற்கு வெளியில் கூட்டமா பசங்க இருப்பதை பார்த்தாள். அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள உமா ஆசைபட்டாள். அவளும் அந்தக் கூட்டத்தின் அருகில் வந்து பார்த்த போது எல்லோரும் உமாவின் தோழியான ஜோதியின் புதுப் பேனாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். உமாவும் அந்தப் பேனாவைப் பார்க்கிறாள்.


அவளுக்கு அந்த பேனா ரொம்ப பிடித்தது. அவள் ஜோதியிடம் ஒரு முறை அந்தப் பேனாவை கேட்டு வாங்கி தன்னுடைய புத்தகத்தில் எழுதி பார்த்தாள். அந்த நேரம் ஸ்கூல் பெல் அடித்தது. உடனே எல்லா பசங்களும் காலை பிராத்தனைக்காக பள்ளி மைதானத்திற்கு சென்றார்கள். 


அந்த நேரத்தில் டீச்சர் உமாவை கொஞ்சம் சாக்பீஸ் கொண்டு வர சொன்னார்கள். அப்போது உமா வகுப்பிற்கு சென்றாள். அவளால் ஜோதிட பென்னை பாக்காம இருக்க முடியவில்லை. இன்னொரு முறை அந்த பென்னை ஜோதியோட பையிலிருந்து எடுத்து பார்த்தாள். அவள் அந்த பென்னை எப்படியாவது தனதாக்கிக்கொள்ள் நினைத்தாள். 


அப்போது அந்த வழியாக யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது, அந்த அவசரத்தில் பேனாவை அவள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு யாரென்று பார்த்தாள் அது அவளது மற்றோரு தோழியான தீபா, அவளுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் அவளால் பிராத்தனைக்குப் போக முடியாமல் வகுப்பிற்கு திரும்ப வந்தாள். 


உமா உடனே அங்கிருந்து ஓடி பிராத்தனைக்கு சென்றாள். ஆனால் அந்த பேனா அவள் பாக்கெட்டில் தான் இருந்தது. பிராத்தனை முடிந்ததும் உமா உள்பட எல்லாரும் வகுப்பிற்கு போனார்கள். ஜோதி தன்னுடைய பேனா காணவில்லை என்பதை உணர்ந்து ஆசிரியரிடம் புகார் செய்தாள்.


உடனே ஆசிரியர் வகுப்பில் இருந்த எல்லோரையும் கூப்பிட்டு பிராத்தனை நடைபெற்ற நேரத்தில் யார் வகுப்பில் இருந்தது என்று கேட்டார்கள். எல்லோரும் தீபாவை கை காட்டினார்கள். தீபா அப்பாவி அவளுக்கு அந்த பேனாவை பற்றி எதுவும் தெரியாது. 


ஆசிரியர் தீபாவை ரொம்ப திட்டினார்கள். பேனாவை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தீபா சொன்னதை அந்த ஆசிரியர் கண்டுக்கவே இல்லை. கடைசியாக அந்த ஆசிரியர் “நான் உனக்கு ஒரு நாள் டைம் தாரேன் அதுக்குள்ள உண்மையை சொல்லனும் இல்லை என்றால் உன்னை தலைமை ஆசிரியரிடம் கூட்டிகிட்டு போக வேண்டியிருக்கும்” என்றார்கள். 


ஆசிரியர் சொன்னத கேட்ட உமா ரொம்ப பயந்து போய் ஒன்றுமே பேசாமல் இருந்தாள். அன்றைய வகுப்பு முடிந்து சாயங்காலம் உமா வீடு திரும்பினாள். அன்று முழுவதும் அவள் செய்த தப்பை நெனைச்சுக்கிட்டு இருந்தாள். அவளால் தான் தீபா ஆசிரியரிடம் திட்டு வாங்கினார். அந்த குற்ற உணர்ச்சியால் அவளால் அன்றைக்கு தூங்க முடியவில்லை. 


அடுத்த நாள் காலையில் உமா பள்ளிக்கு போனாள். அவள் வகுப்பிற்கு உள்ளே போகும்போது தீபா அழுவதை பார்த்து உமா உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆசிரியர் வந்து தீபாவை உண்மையை சொல்ல சொன்னார்கள். ஆனா உமா அவள் கையை பிடித்து “நிறுத்து அந்த பேனா என்கிட்ட தான் இருக்கு நேற்று உண்மையை சொல்ல நான் பயந்தேன். என்னை மன்னிச்சிடுங்க நான் இனிமேல் இந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்” என்று சொன்னாள் உமா. 



வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் ரொம்ப ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உமாவை பார்த்தார்கள். 


உமா சொன்னத கேட்டு “உமா நீ ரொம்ப நேர்மையான பொண்ணு. எல்லோர் முன்னாடியும் வந்து தப்பை ஒத்துக் கொள்வது அவ்வளவு சின்ன விஷயம் இல்லமா, நம்ம எல்லாரும் தப்பு பண்ணலாம் ஆனா நம்ம தப்பு உணர்ந்து அதை சரி பண்றது ரொம்ப பெரிய விஷயம். தீபாகிட்ட மன்னிப்பு கேளு. என்கிட்ட சத்தியம் பண்ணு இனிமேல் இது மாதிரி எதுவும் செய்யமாட்டேனு” என்று சொன்னார் ஆசிரியர். 


அப்புறம் உமா தீபா கிட்ட மன்னிப்பு கேட்டு, ஜோதிட அந்தப் பெண்ணை திருப்பி கொடுத்துவிட்டாள். எல்லோரும் உமாவின் நேர்மையை பாராட்டி கைதட்டினார்கள்.


நீதி: நாம் தெரியாமல் தவறு செய்தாலும் உமாவை போல நம் தவறை திருத்திக் கொண்டு நேர்மையா இருக்க வேண்டும். 




இன்றைய முக்கிய செய்திகள் 


08-03-2024 


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...


தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு; அரசு உதவித்தொகையுடன் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு...


 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர்: பிரதமர் மோடி பேச்சு...


சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...


தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி...


இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி தரப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி...



Today's Headlines:

08-03-2024


Chief Minister M.K.Stalin inaugurated the 800 MW Vadachennai High Efficiency Thermal Power Plant in Attipattu village of Tiruvallur district... 


One Year Postgraduate Course in Tamil Etymology (M) Edition; Students can apply to study with government scholarships: Tamil Nadu government notification... 


140 crore Indians live in peace: PM Modi's speech...


Union Cabinet approves extension of cooking gas subsidy for next year...


Rs 2,281.10 crore allocation for road expansion works in Tamil Nadu: Union Minister Nitin Gadkari... 


Youth will be trained for one year with a stipend of Rs 1 lakh: Rahul Gandhi promises...


ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் - களஞ்சியம் (IFHRMS 2.0) - வருமான வரியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது - 10-03-2024க்குள் Self Declaration சமர்ப்பித்தல் - தொடர்பாக - ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கடிதம்...


ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் - களஞ்சியம் (IFHRMS 2.0) - வருமான வரியுடன் (Income Tax) ஒருங்கிணைக்கப்பட்டது - 10-03-2024க்குள் Self Declaration சமர்ப்பித்தல் - தொடர்பாக - ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



'தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யுங்க' - கறார் காட்டிய சட்டசபை மதிப்பீட்டு குழு...

 'தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யுங்க' - கறார் காட்டிய சட்டசபை மதிப்பீட்டு குழு...



TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure...



 TN-NHIS APP மூலமாக NEW NHIS ID CARD 2021 DOWNLOAD செய்வது எவ்வாறு? 



TN-NHIS Appல் Login செய்யும் முறை & NHIS E-Card தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறை - PDF...



TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure...



>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - Tamilnadu New Health Insurance Scheme - TN - NHIS Mobile App Download Link...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...