கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் நீர்நிலைப் பகுதிகளில் 2000ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்துசெய்ய வேண்டும் - தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்களை 6 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்...



தமிழ்நாட்டில் நீர்நிலைப் பகுதிகளில் 2000ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்துசெய்ய வேண்டும் - தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்களை 6 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்...


WP(MD) Nos.31214 & 31221 of 2023 and WMP(MD)Nos.26742, 26743, 26745 & 26752 of 2023, 07.03.2024...


In Tamil Nadu, Pattas issued after January 1, 2000 in water bodies should be canceled - High Court Madurai Branch order to upload details of water bodies across Tamil Nadu on website within 6 months...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Ennum Ezhuthum - CRC Online Training - 4 & 5th Std - Assessment - Tentative Answers...

 

 Ennum Ezhuthum - CRC Online Training - 4 & 5th Std - Assessment - Tentative Answers...


1-ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான குறுவள மைய Online பயிற்சியை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்....


அதன் அடிப்படையில் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்பு online பயிற்சியை கீழ்க்கண்ட தேதியில் பெற்றுக் கொள்ளலாம்...


Class -1 to 3  - 05.03.2024 முதல் 13.03.2024 வரை  


Class - 4 to 5 - 06.03.2024 முதல் 14.03.2024 வரை...



>>> Click Here to Download - Ennum Ezhuthum - CRC Online Training - 4 & 5th Std - Assessment - Tentative Answers... 

வருமான வரி Declaration 2.0 IFHRMS Kalanjiyam Appல் எவ்வாறு மேற்கொள்வது - ஐயங்களும் தீர்வுகளும்...

 


நண்பர்களே,

 வருமான வரி Declaration 2.0 IFHRMS களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஐயங்களும் தீர்வுகளும்...


*ஐயம் ஒன்று* 


Individual employee id இல் சென்று new regime or old regime தேர்வு செய்வதா அல்லது kalanjiyam mobile app இல் சென்று தேர்வு செய்வதா அல்லது initiator or verifier or approver இவர்களில் ஒருவர் கொடுக்கலாமா


*தீர்வு*


1. Mobile app மூலமாக கொடுக்கலாம்.

2. ⁠individul id log in செய்து employee self service உள்ளே சென்று கொடுக்கலாம்.

3. ⁠initiator or verifier or approver இவர்களில் ஒருவர் பணியாளர்களுக்காக தேர்வு செய்யலாம்.


*ஐயம் இரண்டு*


New and old regime தேர்வு செய்து விட்டால் பின்னர் மாற்றம் செய்து கொள்ளலாமா


*தீர்வு* 


DDO மூலமாக மாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்படும்.


*ஐயம் 3*


Old regime தேர்வு செய்துவிட்டால் என்னவெல்லாம் attach செய்யப்பட வேண்டும். Mobile app இல் அட்டாச்மென்ட் செய்வது போன்று இல்லையே.


*தீர்வு* 


App மூலமாக attach செய்ய இயலாது individual id அல்லது initiator.verifier.approver id சென்று attach செய்யலாம் உடனே அட்டாச் செய்ய வேண்டும் என்று இல்லை பின்னர் கூட அட்டாச் செய்து கொள்ளலாம் .சென்ற வருடத்தையே டாக்குமெண்ட்களை அட்டாச் செய்யப்பட வேண்டும்.


*ஐயம் 4*


வீட்டு வருமான வரி பிடித்த மேற்கொள்வதில் ஜாயிண்ட் அக்கவுண்டாக உள்ளது அப்பொழுது என்ன செய்வது


*தீர்வு*


Landlord என்பதில் யார் பெயர் உள்ளதோ அவர்கள் மட்டுமே பிடித்த மேற்கொள்ள முடியும்


*ஐயம் 5*


Junior assistant. OA. Assistant போன்றவர்களுக்கு வருமான வரி வராது அவர்கள் என்ன செய்வது


*தீர்வு* 


அவர்களும் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் .வருமான வரி பிடித்த மேற்கொள்ளுமா எனில் new regime தேர்வு செய்யப்படும் பொழுது 7,77778 ரூபாய் வரையிலும் வருமான வரி கிடையாது ஓல்ட் ரெஜிம் தேர்வு செய்தார்கள் எனில் 5 லட்சம் வரையிலும் வருமான வரி பிடித்தல் கிடையாது எனவே அவர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளாது.


*ஐயம் ஆறு*


New regime attach ஏதும் செய்யப்பட வேண்டுமா என்றால் தேவையில்லை.


*ஐயம் ஏழு*


CPS contribution 50000 பிடித்தம் மேற்கொள்ள முடியுமா


*தீர்வு* 


80 சிசிடி 1B any other pension scheme என்பதில் கழித்துக் கொள்ளலாம்.


*ஐயம் எட்டு*


Declaration form எப்போது கிடைக்கும்? எப்போது டவுன்லோடு செய்வது.


*தீர்வு* 


தற்பொழுது declaration form டவுன்லோட் செய்ய இயலாது பின்னர் ஆப்ஷன் கொடுப்பார்கள்


*நண்பர்களே அட்டாச் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா எப்பொழுது செய்ய வேண்டும் டைம் இல்லை இதைப் பற்றி எல்லாம் எதுவும் கவலைப்படாமல் நியூவா அல்லது old  என்பதை மட்டும் தேர்வு செய்து தற்பொழுது submit கொடுக்கவும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.... 🏹vj🏹



>>> IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்யும் முறை...


IFHRMS களஞ்சியம் Web மற்றும் Mobile App இரண்டும் Server Maintenance காரணமாக இயங்காது - பணிகளைத் திட்டமிட்டு கொள்ள வேண்டுகோள்...



IFHRMS களஞ்சியம் Web மற்றும் Mobile App  இரண்டும் Server Maintenance காரணமாக இயங்காது - பணிகளைத் திட்டமிட்டு கொள்ள வேண்டுகோள்...


Dear All,


Server Maintenance activity is planned between 09.03.2024 8 PM to 11.03.2024 6 AM. Kalanjiyam web and Mobile applications will not be available for end users during this time window.


Request to plan your Kalanjiyam activities accordingly.


Thanks & Regards.



 அனைவருக்கும் வணக்கம்!!! 

IFHRMS களஞ்சியம் Web மற்றும் மொபைல் App  இரண்டும் இன்று சனிக்கிழமை 09-03-2024 இரவு 8 மணி முதல்  திங்கள்கிழமை 11-03-2024 காலை 6 மணி வரை செயல்படாது என்பதால் வரும் ஆண்டுக்கு உரிய வருமானவரி பிடித்தம் செய்வது பழைய முறை அல்லது புதிய முறை என்பதை இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்குள் மொபைல் App மூலம் உள்ளீடு செய்து விடுங்கள்...

10-03-2024 கடைசி நாள் என்றாலும் App செயல்படாது என்பதால் இன்றுக்குள் அவசியம் முடிக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி...


பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்பு - 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


 பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


*மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு, உடனடியாக அரசாணைகள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதை ஏற்று, 11 நாட்கள் நீடித்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 11 நாட்களாக மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.*


*நேற்று (07.03.2024) சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட இரவு பகலான காத்திருப்புப் போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.*


*இதன் காரணமாக நேற்று (07.03.2024) மாலை வருவாய்த்துறை செயலாளர் அவர்கள்,  மாநில நிர்வாகிகளோடு அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.*


*இன்று (08.03.2024) காலை 11.00 மணிக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், வருவாய்த்துறை அலுவலர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டதாகவும், இதற்கான அரசாணைகளை விரைந்து வழங்குவதாகவும் அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.*


*இதில் குறிப்பாக இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.* 


*அதைப்போன்றே அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.*


*வருவாய்த்துறை அலுவலருக்கான 114 ஈப்புகள் வழங்கும் அரசாணை இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட உள்ளது.*


*முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பணி முதுநிலையில் உள்ள பிரச்சனை குறித்து ஒரு மாத காலத்தில் ஆணைகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.*


*அனைத்து நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம்   வழங்குவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதாகவும், இது குறித்து மாணபுமிகு முதலமைச்சரிடம் பேசி மிக விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்குவதற்கான அரசாணைகளை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு வருகின்ற ஏப்ரல் மாதத்திலேயே  வழங்கப்படுவதாக வருவாய்த்துறை செயலாளர் அவர்களும், முதன்மை தேர்தல் அலுவலர் அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.*


*உங்களைத்தேடி, உங்கள் ஊரில் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஒரு முகாமிற்கு ரூபாய் 50,000 என்ற அளவில் நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*நமது அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதால், போராட்ட களத்திலேயே நடைபெற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் அடிப்படையிலும், நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்டத்தின் தன்மை குறித்தும், வெற்றிகள் குறித்தும், வென்ற கோரிக்கைகள் குறித்தும், அனைத்து ஊழியர்களையும் மாநில நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து விளக்க கூட்டங்களை ஒரு வார காலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா ஆண்டில் வீரம் செறிந்த 11 நாள் வேலை நிறுத்தத்தில் 12,000 அலுவலர்கள் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை பறைசாற்றி உள்ளோம்.* 


*இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநில மையத்தின் சார்பில் புரட்சி வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*இப்பேச்சுவார்த்தையில் ஊதியப்பிடித்தமோ, எவ்வித பழிவாங்கல் நடவடிக்கையோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.*


*மாண்புமிகு அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை முடிவுகள் இன்று மாலை அரசால் வழங்கப்பட உள்ளது.*


*இறுதி வெற்றி நமதே!*


*மாநில மையம்,*

*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).*


பள்ளிக்கல்வித்துறையின் உதவி இயக்குநர் அவர்கள் அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடிய Audio பதிவு...

 

பள்ளிக்கல்வித்துறையின் உதவி இயக்குநர் அவர்கள் பள்ளிகளை அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடிய Audio Message 👇🏻👇🏻👇🏻👇🏻



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...



 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...


19 நாட்களாக போராடி வந்த  ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்...


மாணவர் சேர்க்கை நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதை ஒட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பு...


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் உறுதிமொழி ஏற்று போராட்டம் வாபஸ்...



*_இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்_*


*19 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைப்பு.*



*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டெல்லி சென்றிருக்கிறார். அங்கிருந்து போராட்ட களத்திலிருக்கும் மாநில தலைமை ஜே.ராபர்ட் அவர்களுடன்  (இடைநிலை ஆசிரியர்களுடன்) தொலைபேசியில் பேசிய பின்பு மதிப்புமிகு பள்ளிகல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  போராட்டத்திற்கான சுமுகமான தீர்வு மிக விரைவில் எட்டப்படும் என்பதால் தற்காலிகமாக 19 நாளாக நடைபெற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்ட நாட்கள் அனைத்தும் தகுதியான விடுப்பாக முறைப்படுத்தப்படும்.*



*மற்ற அனைத்து விபரங்களும் விரைவில் நடைபெறவுள்ள  மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.*


_நன்றி..!!_


_ஜே.ராபர்ட்_


*_SSTA மாநில தலைமை_*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...