கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-03-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.


குறள் 84:


அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


விளக்கம்:


மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.




பழமொழி : 


தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்


Delay is dangerous



பொன்மொழி:


 நீ செய்யும் காரியம் தவறாகும் போது,

நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,

உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,

உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,

அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.

ஆனால் ஒருபோது மனம் தளராதே...


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்

புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்

புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்

மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்

ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Juice - சாறு 

Jump - தாண்டு 

Justice- நீதி 

Kerosene - மண்ணெண்ணெய் 

Key - சாவி 

Kind - வகை 


ஆரோக்கியம்


உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்:

உங்கள் உப்பு உட்கொள்ளலை குறைவாக வைத்திருப்பது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. மற்றும் வயது வந்தோரின் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

உணவுகளை சமைக்கும் போது மற்றும் தயாரிக்கும் போது உப்பு மற்றும் அதிக சோடியம் கொண்ட பொருட்களை (சோயா சாஸ் மற்றும் மீன் சாஸ்) கட்டுப்படுத்துவது உப்பு உட்கொள்ளலை குறைக்க உதவுகிறது.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 13


2003 – இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.


2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


தேசிய யானை நாள் (தாய்லாந்து)



நீதிக்கதை


இரகசியம்


பல்லாண்டுகளுக்கு முன் ஒரு குக்கிராமத்தில் ரகு, ராஜு என்ற இரண்டு பையன்கள் இருந்தார்கள். ஒரே வயதினரான இருவரும் ஒரேபள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். 

ரகு நாணயமானவன், கஷ்டப்பட்டு உழைப்பவன். பெற்றோரும் ஆசிரியர்களும் பெருமைப்படும்படி நடந்து கொள்வான். 


ராஜு வேறு மாதிரி. அவன் சாமர்த்தியமுள்ளவன், ஆனால் நாணயமில்லாதவன். பரீட்சைகளில் ஏமாற்றுவான்; மற்ற பையன்களைப் பார்த்து எழுதுவான். தன்னைத் தவிர மற்றவர் மேல் அவனுக்கு அன்பு கிடையாது. ஆனால் வெறும் வாய்ச் சொற்களாலும் புன்சிரிப்பாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில் கெட்டிக்காரன். 



ரகு தனக்கு உதவி செய்ய மறுத்ததால், அவனைக் கண்டால் ராஜுவிற்குப் பிடிக்காது. திருடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் ரகுவிடம் அவன் அடிக்கடி உதவி கேட்பான். ஆனால் ரகு எப்போதும், “நல்ல காரியங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேள், சந்தோஷமாய்ச் செய்கிறேன்; ஆனால் கெட்ட காரியங்களுக்கு என் பக்கத்திலேயே வராதே!” என்று சொல்லிவிடுவான். 


படிப்பு முடிந்த பிறகு ராஜு பெரிய நகரம் ஒன்றில் வசிக்கச் சென்றுவிட்டான். ரகுவோ, கிராமத்திலேயே தங்கி, தன் தந்தை விட்டுச்சென்ற சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு சிக்கனமாக வாழ்ந்து கொண்டிருந்தான். 


நல்லவன் என கிராம மக்கள் எல்லாரும் அவனை நேசித்தார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. ரகுவும் ராஜுவும் சந்தித்துக் கொள்வதற்குக்கூட சந்தர்ப்பமே நேரவில்லை.


ஆனால் ஒரு நாள், ராஜுவின் சாமர்த்தியத்தில் ராஜா மயங்கி, அவனைப் பிரதம மந்திரியாக நியமித்துக் கொண்டதாக ரகுவின் காதில் செய்தி விழுந்தது. ராஜு யோக்கியன் இல்லை என்பது அவனுக்குத் தெரியுமாதலால் அவன் இந்தச் செய்தியால் சந்தோஷப் படவில்லை. 



ஆனால் துக்கப்படவும் இல்லை; ஏனென்றால் தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள் பற்றி அவன் கவலைப் படுவதே கிடையாது. 


ஒருநாள் ஏதோ கிராமத் திருவிழாவிற்காகப் பண்டங்கள் வாங்குவதற்காக ரகு நகரத்துக்குப் போக நேர்ந்தது. நடுப்பகல் வேளையில் போய்ச் சேர்ந்ததால், அவனுக்கு களைப்பாகவும் தாகமாகவும் இருந்தது. 


பக்கத்திலே மாளிகை போன்ற ஒரு வீடு இருப்பதைப் பார்த்து, அதற்குள் நுழைந்து, பணியாளிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்கலாம் என்று போனான். அதற்குள் வீட்டுக் காரனே வந்து விட்டான். “ஆ நீயா ரகு, இங்கு எங்கே வந்தாய்?” என்று ஆச்சரியத்துடன் வீட்டுக் காரன் கூவினான். அந்த வீட்டுக் காரன் வேறயாருமில்ல ராஜு தான்.


ராஜுவை ரகுவிற்கு அடையாளமே தெரியவில்லை. அவன் தடபுடலாய் ஆடை அணிந்திருந்தான். அருமையான பட்டாடைகள் பளபளக்க, தங்கச் சங்கிலிகளும் வைர மோதிரங்களும் பகலோன் ஒளியில் தகதகக்க, மாணிக்கக்கல் மையத்தில் பதித்திட்ட சரிகைத் தலைப்பாகை சிரத்தை அலங்கரிக்க, பரங்கிப் பழமென மெல்ல நடைபோட்டு வந்தான். அவனே பரங்கிப்பழம் போல உப்பியிருந்தான். 


ராஜுவிற்கு ரகு வணக்கம் கூறினான். ராஜு பதில் வணக்கம் கூறவில்லை. ஆனால் மிகக் குத்தலாய்


“உன்னைப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது ரகு. அய்யே ! உன் வேட்டி சட்டைதான் எவ்வளவு கேவலம் ! இவ்வளவு தொலைவும் நடந்துதான் வந்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஏறி வருவதற்கு ஒரு குதிரைவண்டி வேண்டாம், ஒரு கட்டை மாட்டுவண்டி கூடவா இல்லை! என்னைப் பார், அசல் ராஜா போல் இருக்கிறேன் இல்லையா; என் உடுப்பைப்பார். என் வீட்டைப்பார், தேவலோகத்தார்கூட என்னைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு பதவியும் என் திறமையால் வந்தது. உனக்கு மூளையே குறைவு, ஒரு கட்டை வண்டிக்குக்கூட வக்கில்லை!” என்றான்.


“நான் ஏழையாயிருக்கலாம், ஆனால் போதும் என்ற மனம் எனக்கு இருக்கிறது” என்று ரகு மறுமொழி கூறினான்.


தொடர்ந்து “நான் அறிவில் மந்தமானவன் இல்லை என்பதும் உனக்குத் தெரியும். விரும்பியிருந்தால், உன்னைப்போல் பணமும் அதிகாரமும் நானும் அடைத்திருப்பேன். ஆனால் உன் வழிகளை உபயோகிப்பதை நான் விஷமாய் வெறுப்பேன்.” என்றான் ரகு.



உடனே “மூடுடா வாயை அவ்வளவு சாமர்த்தியசாலி, என் வீட்டிற்குப் பிச்சை எடுக்க ஏன் வந்தாய்.” 


“நான் ஒன்றும் உன் வீட்டுக்குப் பிச்சை கேட்க வரவில்லை. தாகமாக இருந்தது, ஒரு குவளை தண்ணீர் கேட்க வந்தேன். உன்னுடைய வீடு என்றுகூடத் தெரியாது.”


“பொட்டுத் தண்ணீர் கிடையாது, போடா வெளியே ! ” என்று ஆத்திரத்தால் குரல் நடுங்கக் கத்தினான் ராஜு.” 


“சரிதானப்பா, நான் போகிறேன்.” என்று ரகு சாந்தமாகக் கூறிவிட்டுப் போகத் திரும்பினான். ஆனால் ராஜுவிற்கு அத்தோடு விடுவதில் திருப்தியில்லை. ராகுவை அப்படியே தூக்கி வெளியே தள்ளும்படி தன் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.


அப்போது ரகுவுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. “நான் உனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. வீணாய் என்னை அவமானப்படுத்தாதே, கெட்டுப்போவாய்!” என்றான். 


“ஐயோ பாவம், எனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லையா? பரீட்சைகளில் எனக்கு உதவி செய்ய மறுப்பாயே, அது என்னவாம்? இப்போது ஆசை தீர அவமானப்படுத்துவேன்? நீ என்ன செய்துவிட முடியும்? சிறையில் போட்டு விடுவாயோ? நான் அரசரின் பிரதம மந்திரியாக்கும்! மற்ற எல்லா மந்திரிகளுக்கும் வேலை கொடுப்பது நான்தான். சேனாதிபதி என் சினேகிதன். தனாதிகாரி என் மாமனார். தலைமை நீதிபதி என் மைத்துனர். தெரிந்ததா?” என்று ராஜு கத்தினான். 


“நீங்கள் எல்லாருமே அழிந்து போவீர்கள்” என்று மறுமொழி கூறிய ரகுவைத் தெருவில் தள்ளினார்கள் பணியாட்கள். 


சில மாதம் கழிந்து ஒரு நாள், தாடியும் மீசையுமாய் ஒரு புதியவர், அரசன் தனியே தோட்டத்தில் இருக்கையில் அவரிடம் சென்றார். அழகான பல பொருட்களை அரசனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:


“அரசே, ஒவ்வொரு நாளும் நான் தங்களுக்கு இரகசியமாக ஐம்பது தங்கக் காசுகள் தருவேன். பதிலுக்கு தாங்கள் அரசவையில் இருக்கையில், தங்கள் காதில் சில நிமிடம் நான் இரகசியமாய் ஏதாவது ஓதுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.” 


“ஆகட்டும் இதில் என்ன கஷ்டம் எனக்கு” என்று பதில் மொழிந்தான் மன்னவனும், மறுநாள் மந்திரிகள் புடைசூழ ராஜா அரசவையில் இருந்த போது, அந்தப் புதியவரைப் பார்த்து, கிட்ட வாரும் என கண்சாடை காட்டினான். 


அருகில் சென்றவர் அரசன் காதோடு ரகசியமாய் சொன்னார் : “இன்று அற்புதமான நாள். சூரியன் பளிச்சென்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறான்.” 


புதியவர் கிசுகிசுத்துக்கொண்டே, ராஜுவையும் அடிக்கடி நோக்கினார். பிறகு தங்கக் காசுகளை அரசன் பையில் ரகசியமாகப் போட்டுவிட்டுத் திரும்பினார்.


பிரதம மந்திரிய௧ன ராஜு அவர் பின்னாலேயே சென்று பயபக்தியுடன் கேட்டான்: 


“மன்னனிடம் சொன்னதென்ன, மாண்புமிக்க ஐயா? அடியேனை அடிக்கடி நோக்கியதும் ஏன் கொஞ்சம் சொல்லுங்களேன்.” 


இதைத்தான் எதிர்பார்த்தார் அந்த புதிய மனிதரும். ஏனென்றால், அந்த ஆசாமி, மாறுவேடம் போட்டிருந்த ரகுதான்! 


“எனக்கும் ராஜாவுக்கும் எவ்வளவோ ரகசியம் இருக்கும். உமக்குச் சொல்ல முடியுமா!” என்றான் அவன். 


ராஜுவின் பயம் பன்மடங்கானது. மண்டியே போட்டு விட்டான். ரகுவின் கையில் நூறு தங்கக் காசுகளைத் திணித்தான். “மாலையில் மற்றுமொரு நூறு தருவேன். மாமத்தை மட்டும் சொல்லிடுவீர்” என்று கெஞ்சினான். 


ரொம்பத் தயங்குவதுபோல் ரகு போக்குக் காட்டினான். ஆனால் நிறைய மன்றாடலுக்குப் பிறகு சொன்னான்: 


“விஷயம் மிகவும் தீவிரம். நீர் லஞ்சம் வாங்குகிறீர் எனப் பல பேர் அரசரிடம் புகார் செய்திருக்கிறார்கள். அரசரும் இதை விசாரி என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.” 


“இன்று அரசரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள் ஐயா!” எனத் தவிப்புடன் கேட்டான் ராஜு.


“இன்னும் விஷயத்தைக் கவனித்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறேன்” என்றான் ரகு. 


“ஏழை மீது கருணை காட்டிடுவீர் ஐயா! ஆயிரம் தங்கக் காசுகள் தருகிறேன்!” என்று ராஜு வாக்களித்தான். 


“பார்க்கலாம்,” என்றான் ரகு. மறுநாளும் ரகு மன்னனின் காதுக்குள் கிசுகிசுத்தான் “இன்று விடியலில் காற்று வடக்கேயிருந்து வலுவாய் அடித்து, இப்போது வடகிழக்காக நகர்ந்திருக்கிறது.” இரகசியம் சொல்லிக் கொண்டே ராஜுவைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். 


அபத்தச் சொற்களைக் கேட்டு அரசன் தன்னுள் சிரித்துக் கொண்டான். அவனுக்கென்ன, இந்த அற்ப தயவுக்காக அன்றாடம் ஐம்பது தங்கக் காசுகள் கிடைக்கிறதே என்று ஆனந்தம். 


தூண்டிற் புழுவினைப்போல் துடிக்கும் நெஞ்சத்துடன் ராஜு, ரகுவைத் தொடர்ந்தான். முதலமைச்சர் முறைகேடாக ஒன்றும் செய்யவில்லை என்று அரசனை இப்போதைக்குத் திருப்தி செய்திருப்பதாகக் கூறினான் ரகு. 


நடுக்கம் தீர்ந்த ராஜுவும் நன்றி கூறி ஆயிரம் தங்கக்காசுகளைச் சமர்ப்பித்தான். அடுத்த நாள் ரகு, வெளியே பனியும் தூற்றலுமாய் இருப்பதாக வேந்தன் காதில் ஓதியவண்ணம், சேனாதிபதியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். 


சேனாதிபதியின் கதையும் பிரதம மந்திரியின் கதை போலவே ஆனது; ரகுவிற்கு இன்னொரு ஆயிரம் தங்கக் காசுகள் கிடைத்தன. 


அடுத்த சில நாட்களில், எல்லா அமைச்சர்கள், தனாதிகாரி, கடைசியில் தலைமை நீதிபதி ஆகிய அனைவரையும் அவன் கிலியால் ஆடவைத்தான். ஒவ்வொரு நாளும் அரசனுக்குக் கொடுத்த ஐம்பது தங்கக் காசுகளுக்குப் பதிலாக மொத்தம் பத்தாயிரம் கறந்து விட்டான்.


பிறகு ஒருநாள், பிரபுக்களும், அதிகாரிகளும் சாதாரணக் குடிமக்களும் அரசவையில் கூடியிருந்தபோது, ரகு நின்று கொண்டு சொன்னான். 


“என் அரசே, இத்தனை நாளும் உங்கள் காதுகளில் அர்த்தமற்ற சொற்கள் எத்தனையோ சொல்லி வந்தேன். இன்று இந்தப் பை அர்த்தமுள்ள ஒன்றைச் சொல்லும்!” என்று கூறி அவன் மன்னன் முன்னே பட்டுப்பை ஒன்றைப் போட்டான்.


பத்தாயிரம் தங்கக் காசுகளின் கிண்கிணிச் சத்தம், இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல இருந்தது மன்னவனுக்கு ஆசாமி கொஞ்சம் கிறுக்கு போலும் என நினைத்தாலும், “தயவுசெய்து சற்று விளக்குவீர் “ எனக் கேட்டான் மன்னன். 


நடந்ததையெல்லாம் ரகு சொன்னான். “தங்கக் காசுக் குவியலைப் பாரும். உம்மைச் சூழ்ந்துள்ள பொய்க்கு, மெய்யான சான்று இதுவே. முதல் அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் மனத் தூய்மை உள்ளவராயிருந்தால், தளபதி தம் பணியை உளமாரச் செய்திருந்தால், தனாதிகாரியும் தலைமை நீதிபதியும் லஞ்சம் வாங்காதவராயிருந்தால், நான் அவர்களிடம் கூறிய பொய்களுக்கு கிலி பிடித்து நடுங்கியிருக்க மாட்டார்கள்” என்றான். 


தன் அதிகாரிகள் கும்பலில் ஒரு ஆள்கூட பதவிக்குத் தகுதியில்லை என்று அரசன் உடனே புரிந்து கொண்டான். எல்லாரும் லஞ்ச ஊழல் பிடித்தவர்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதால் சதா கிலியில் ஆழ்ந்திருந்தார்கள். ராஜுவும் அவன் தோழர்களும் கள்ளம் கபடத்தால் கட்டியிருந்த அதிகாரக்கோட்டை மண்கோட்டை போல் சரிந்தது. 


ரகு முதலமைச்சர் ஆக்கப்பட்டான். மதி தெளிந்த மன்னனின் கீழ், கடமைப்பற்றுடன் கண்ணியமாய்ப் பணி புரிந்திட நல்லவர் குழு ஒன்றை ரகுவும் விரைவிலேயே சேர்த்துக் கொண்டான்.



இன்றைய முக்கிய செய்திகள் 


13-03-2024 


ரூரயில்வே நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ரூ.85,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்...


உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்...


உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியது எஸ்.பி.இ வங்கி...


மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


சீனாவில் 2 நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழப்பு...


ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு...



Today's Headlines:

13-03-2024


Prime Minister Modi laid the foundation stone for Rs 85,000 crore projects across the country under the Railway Modernization...


 Tamil Nadu Chief Minister M. K. Stalin's order to allocate Rs. 288.51 crore for the construction of biogas plant... 


The Tamil Nadu government will not allow the Citizenship Amendment Act to be passed in Tamil Nadu: Chief Minister M.K.Stalin...


According to the Supreme Court's order, SBI Bank has provided details of election bonds to the Chief Election Commission... 


Chief Minister M.K.Stalin announced a financial assistance of Rs 2 lakh each to the parents of the students who died in a road accident near Madhurandakam... 


12 killed in accident at 2 coal mines in China...


Mild earthquake in Jharkhand's Simtheka: 3.6 on the Richter scale...


01-01-2024 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4% அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு - 4% D.A., Hike...

 


>>> 01-01-2024 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4%  அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு (As per 4% increase in D.A., how much will each Person's Dearness Allowance increase per month based on basic pay? - Calculation)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பசுமைப் பள்ளித் திட்டம் - Green School Scheme - 2023-2024 ஆம் ஆண்டு - பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 46 பள்ளிகளுக்கு ரூ.9.20 கோடி அனுமதி - அரசாணை & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு...

 


சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 46 பள்ளிகளுக்கு ரூ.9.20 கோடி நிதியை மாற்ற அனுமதி - அரசாணை & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு Environment, Climate Change and Forest (EC-1) Department G.O.(Ms).No.39, Dated: 08.03.2024...


Environment, Climate Change - Green School Scheme - Announcement for the year 2023-2024 - Permission to transfer the fund of Rs.9.20 Crores to 46 Schools at Rs.20 lakhs per School - Orders -Issued.



>>> அரசாணை G.O.(Ms).No.39, Dated: 08.03.2024 & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Environment, Climate Change and Forest (EC-1) Department

G.O.(Ms).No.39, Dated: 08.03.2024

Read:

1. G.O. (Ms) No.12, Environment, Climate Change and Forest (EC.1) Department, Dated: 18.01.2024

2. From the Director, Department of Environment and Climate Change, Letter No.477/2023/DoE&CC/TNCCM/2023, Dated: 02.02.2024...


ORDER:

In the Government order first read above, the Government had accorded administrative approval, for a sum of Rs.10 crore [Rs. 20 lakh per School for 50 Government Schools] for implementing the "Green School Scheme" from the Tamil Nadu Pollution Control Board's fund and the Director, Department of Environment and Climate Change was requested to forward the list of 50 Schools to Government for implementing the above scheme.


2. In the letter second read above, the Director, Department of Environment and Climate Change has furnished a list of 46 schools to implement the Green School Scheme for the year 2023-2024.


3. The Government after careful consideration accept the request and permit the Director, Department of Environment and Climate Change for transferring the fund of Rs.9.20 Crores for 46 Schools at Rs.20 lakhs per School, as listed in the Annexure to this order, to the Commissioner of School Education to implement the "Green School Scheme". The above expenditure will be met from Tamil Nadu Pollution Control Board's Fund and should be incurred as detailed in the Government Order first read above along with the Green Protocol mentioned therein.


(BY ORDER OF THE GOVERNOR)

SUPRIYA SAHU

ADDITONAL CHIEF SECRETARY TO GOVERNMENT

To

The Director,

Department of Environment and Climate Change,

Chennai-15.


பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர்‌ தேர்வு - முன்னாள்‌ மாணவர்களை இணைத்தல்‌- வழிகாட்டுதல்கள்‌ வழங்குதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநில திட்ட இயக்குநர்‌ கடிதம் ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024...

 

பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர்‌ தேர்வு - முன்னாள்‌ மாணவர்களை இணைத்தல்‌- வழிகாட்டுதல்கள்‌ வழங்குதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநில திட்ட இயக்குநர்‌ கடிதம் ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024...


Restructuring of School Management Committee - Selection of Members - Incorporation of Alumni - Issuance of Guidelines - Integrated School Education, State Project Director's Letter Rc. No. 1680/A11/SS/SMC/2023-24, dt. 11.03.2024...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநில திட்ட இயக்குநர்‌ கடிதம் ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024 & G.O. (Ms) No.39, Dated 09.02.2024...



பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...


மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, சென்னை-600006

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி.

அனுப்புநர்‌ 


மாநில திட்ட இயக்குநர்‌,

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,

பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌,

சென்னை


பெறுநர்‌

முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌,

 அனைத்து மாவட்டங்கள்‌.


ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024.


பொருள் : ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி - பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர்‌ தேர்வு - முன்னாள்‌ மாணவர்களை
இணைத்தல்‌- வழிகாட்டுதல்கள்‌ வழங்குதல்‌ - சார்பு.

பார்வை: School Education (SSA1) Department, G.O. (Ms) No.39, Dated 09.02.2024

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌,2009இன்படி பள்ளி முன்னேற்றத்தில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின்‌ அடிப்படை உரிமைகளான கல்வி, பாதுகாப்பு. வளர்ச்சி போன்றவற்றிற்கும்‌, பள்ளியின்‌ ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்‌ துணைநிற்க ஏதுவாக பார்வையின்படி பள்ளி மேலாண்மைக்‌ குழுவில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற முன்னாள்‌ மாணவர்களை உறுப்பினர்களாக இணைத்து செயல்படும்‌ வகையில்‌ தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்‌ துறை மேற்காண்‌ ஆணையினை வெளியிட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நடைமுறையின்போது பள்ளி மேலாண்மைக்‌ குழுவில்‌ முன்னாள்‌ மாணவர்களை இணைத்தல்‌ குறித்த தக்க வழிகாட்டுதல்கள்‌
கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

முன்னாள்‌ மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்‌:

பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வின்‌ போது பார்வை.2ன்படி ஏற்கனவே இருக்கும்‌ 20 உறுப்பினர்களில்‌ ஒரு முன்னாள்‌ மாணவருக்கான முன்னுரிமையும்‌, புதிதாக 4 முன்னாள்‌ மாணவர்களும்‌ உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌. இதல்‌ நான்‌கில்‌ இருவர்‌ பெண்‌ உறுப்பினர்களாக இருக்க வேண்டும்‌.


1. முன்னாள்‌ மாணவர்‌ உறுப்பினர்‌ (பெற்றோர்‌. 3 நபர்கள்) :

 நான்கு முன்னாள்‌ மாணவ உறுப்பினர்களில்‌ 3 உறுப்பினர்கள்‌ அப்பள்ளியில்‌ பயிலும்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்களாக (தாய்‌ / தந்தை / காப்பாளர் இருக்க வேண்டும்‌. 

குறைந்தபட்சம்‌ 2 ஆண்டுகள்‌ தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும்‌ ஒரு அரசுப்‌ பள்ளியில்‌ பயின்ற பெற்றோர்களே “பெற்றோர்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌” ( Parent Alumni) பிரிவின்‌ கீழ்‌ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்‌.


2. முன்னாள்‌ மாணவர்‌ உறுப்பினர்‌ (பொது- / நபர்)

.சார்ந்த அரசுப்‌ பள்ளியில்‌ குறைந்தபட்சம்‌ 2 ஆண்டுகள்‌ பயின்ற முன்னாள்‌ மாணவராக இருக்க வேண்டும்‌.

பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்பு பகுதியில்‌ வசிப்பவராக இருக்க வேண்டும்‌.

குறைந்தபட்சம்‌ பள்ளி படிப்பை (8ஆம்‌ வகுப்பு) முடித்த திருநர்‌ / பெண்‌,/ ஆண்‌ ஆகியோரில்‌ ஒருவர்‌ பொது பிரிவின்‌ கீழ்‌ “முன்னாள்‌ மாணவர்‌ உறுப்பினராக” (Parent Alumni) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌. (பட்ட படிப்பினை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்‌).


3. ஏற்கனவே உள்ள 20 நபர்களில்‌ முன்னாள்‌ மாணவருக்கான முன்னுரிமை:

மேற்காண்‌ 4 முன்னாள்‌ மாணவர்கள்‌ தவிர, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி / கல்வியாளர் /  இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்‌ / தொண்டு நிறுவனத்தினர்‌ / ஓய்வு பெற்ற ஆசிரியர்‌ இவர்களில்‌ ஒருவர்‌ அரசுப்‌ பள்ளி முன்னாள்‌ மாணவராக இருப்பின்‌ "முன்னாள்‌ மாணவர்‌” (Alumni Member) முன்னுரிமை அடிப்படையில்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌.

மேற்காண்‌ வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வின்‌ போது அரசுப்‌ பள்ளியில்‌ பயின்ற முன்னாள்‌ மாணவர்கள்‌ உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌. வழிகாட்டுதல்களின்படி மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளும்‌ போது அனைத்து வகை அரசுப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌, உதவித்‌ திட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படி முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. 


மாநிலத்‌ திட்ட இயக்குநருக்காக




பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை G.O. (Ms) No.39, Dated 09.02.2024 வெளியீடு...

 

பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை G.O. (Ms) No.39, Dated 09.02.2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O. (Ms) No.39, Dated 09.02.2024...



பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு (SMC) - சமக்ரா சிக்ஷாவின் கீழ் திட்டத்தைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான மூன்று அடுக்குக் குழுவை உருவாக்குதல்- ஆணைகள் வெளியிடப்பட்டது - திருத்தம்- வெளியிடப்பட்டது.


 School Education - School Management Committee (SMC) - Formation of Three Tier Committee for Planning, Implementation and monitoring of Programme under Samagra Shiksha- Orders issued - Amendment- Issued.


School Education (SSA1) Department

G.O. (Ms) No.39, Dated 09.02.2024

Read:-

1. G.O.(Ms)No.42, School Education (SSA1) Department, Dated: 06.03.2018 

2. From the Member Secretary, Tamil Nadu Model Schools, letter Roc.No.N1/1207/Alumni/MS/2023-5, dated 23.01.2024.


ORDER:-

In the Government order 1st read above, Three Tier Committee were constituted for Planning, Implementation and monitoring of programme under Samagra Shiksha by replacing the existing Four Tier Committee of erstwhile Sarva Shiksha Abhiyan and Rastriya Madhyamik Shiksha Abhiyan.


In the Annexure-I (II) of said Government order, a School Management Committee was constituted including the following members, 


Constitution of School Management Committee (SMC)

Parent (PTA) member - Chairman

Parent of CWSN / Vulnerable - Vice-Chairman  

Head Master - Convener

Teacher representative - Member

Parents including from disadvantage group & Weaker section - Members

Elected member of Local Body

Educationist / Philanthropist / NGO /Retired Official

Self Help Group member (Parent)

Total - 20**


** 50% must be women i.e., 10 must be women


AMENDMENT

Annexure-I (II) of Government order 1st read above is amended as follows:-

Constitution of School Management Committee (SMC)

Parent Member - Chairman 

Parent of CWSN/Vulnerable - Vice Chairman

Head Master - Convener

Teacher representative - Member

Parents including from disadvantage group & Weaker Section - Members

Elected member of Local Body - Member 

ITK Volunteer / Educationist / NGO/ Retired Teacher - Member 

Self Help Group member (Parent) - Member 

Parent Alumni - Member 

Alumni Member - Member 

Total - 24

*50% must be women i.e 12 must be women


தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 539, நாள்: 12-03-2024...


 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு  4% அகவிலைப்படி உயர்வு - 01-01-2024 முதல் 46% லிருந்து 50% ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 539, நாள்: 12-03-2024...




4% Increase in Dearness Allowance to Tamil Nadu Govt Servants, Teachers, Pensioners, Family Pensioners - Increase from 46% to 50% with effect from 01-01-2024 - Chief Minister Announced - Tamil Nadu Government Press Release No: 539, Date: 12-03-2024...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...