கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர்‌ தேர்வு - முன்னாள்‌ மாணவர்களை இணைத்தல்‌- வழிகாட்டுதல்கள்‌ வழங்குதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநில திட்ட இயக்குநர்‌ கடிதம் ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024...

 

பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர்‌ தேர்வு - முன்னாள்‌ மாணவர்களை இணைத்தல்‌- வழிகாட்டுதல்கள்‌ வழங்குதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநில திட்ட இயக்குநர்‌ கடிதம் ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024...


Restructuring of School Management Committee - Selection of Members - Incorporation of Alumni - Issuance of Guidelines - Integrated School Education, State Project Director's Letter Rc. No. 1680/A11/SS/SMC/2023-24, dt. 11.03.2024...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநில திட்ட இயக்குநர்‌ கடிதம் ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024 & G.O. (Ms) No.39, Dated 09.02.2024...



பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...


மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, சென்னை-600006

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி.

அனுப்புநர்‌ 


மாநில திட்ட இயக்குநர்‌,

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,

பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌,

சென்னை


பெறுநர்‌

முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌,

 அனைத்து மாவட்டங்கள்‌.


ந.க. எண்‌. 1680/A11/ஒபக/பமேகு/2023-24, நாள்‌. 11.03.2024.


பொருள் : ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி - பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர்‌ தேர்வு - முன்னாள்‌ மாணவர்களை
இணைத்தல்‌- வழிகாட்டுதல்கள்‌ வழங்குதல்‌ - சார்பு.

பார்வை: School Education (SSA1) Department, G.O. (Ms) No.39, Dated 09.02.2024

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌,2009இன்படி பள்ளி முன்னேற்றத்தில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின்‌ அடிப்படை உரிமைகளான கல்வி, பாதுகாப்பு. வளர்ச்சி போன்றவற்றிற்கும்‌, பள்ளியின்‌ ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்‌ துணைநிற்க ஏதுவாக பார்வையின்படி பள்ளி மேலாண்மைக்‌ குழுவில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற முன்னாள்‌ மாணவர்களை உறுப்பினர்களாக இணைத்து செயல்படும்‌ வகையில்‌ தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்‌ துறை மேற்காண்‌ ஆணையினை வெளியிட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நடைமுறையின்போது பள்ளி மேலாண்மைக்‌ குழுவில்‌ முன்னாள்‌ மாணவர்களை இணைத்தல்‌ குறித்த தக்க வழிகாட்டுதல்கள்‌
கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

முன்னாள்‌ மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்‌:

பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வின்‌ போது பார்வை.2ன்படி ஏற்கனவே இருக்கும்‌ 20 உறுப்பினர்களில்‌ ஒரு முன்னாள்‌ மாணவருக்கான முன்னுரிமையும்‌, புதிதாக 4 முன்னாள்‌ மாணவர்களும்‌ உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌. இதல்‌ நான்‌கில்‌ இருவர்‌ பெண்‌ உறுப்பினர்களாக இருக்க வேண்டும்‌.


1. முன்னாள்‌ மாணவர்‌ உறுப்பினர்‌ (பெற்றோர்‌. 3 நபர்கள்) :

 நான்கு முன்னாள்‌ மாணவ உறுப்பினர்களில்‌ 3 உறுப்பினர்கள்‌ அப்பள்ளியில்‌ பயிலும்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்களாக (தாய்‌ / தந்தை / காப்பாளர் இருக்க வேண்டும்‌. 

குறைந்தபட்சம்‌ 2 ஆண்டுகள்‌ தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும்‌ ஒரு அரசுப்‌ பள்ளியில்‌ பயின்ற பெற்றோர்களே “பெற்றோர்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌” ( Parent Alumni) பிரிவின்‌ கீழ்‌ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்‌.


2. முன்னாள்‌ மாணவர்‌ உறுப்பினர்‌ (பொது- / நபர்)

.சார்ந்த அரசுப்‌ பள்ளியில்‌ குறைந்தபட்சம்‌ 2 ஆண்டுகள்‌ பயின்ற முன்னாள்‌ மாணவராக இருக்க வேண்டும்‌.

பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்பு பகுதியில்‌ வசிப்பவராக இருக்க வேண்டும்‌.

குறைந்தபட்சம்‌ பள்ளி படிப்பை (8ஆம்‌ வகுப்பு) முடித்த திருநர்‌ / பெண்‌,/ ஆண்‌ ஆகியோரில்‌ ஒருவர்‌ பொது பிரிவின்‌ கீழ்‌ “முன்னாள்‌ மாணவர்‌ உறுப்பினராக” (Parent Alumni) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌. (பட்ட படிப்பினை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்‌).


3. ஏற்கனவே உள்ள 20 நபர்களில்‌ முன்னாள்‌ மாணவருக்கான முன்னுரிமை:

மேற்காண்‌ 4 முன்னாள்‌ மாணவர்கள்‌ தவிர, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி / கல்வியாளர் /  இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்‌ / தொண்டு நிறுவனத்தினர்‌ / ஓய்வு பெற்ற ஆசிரியர்‌ இவர்களில்‌ ஒருவர்‌ அரசுப்‌ பள்ளி முன்னாள்‌ மாணவராக இருப்பின்‌ "முன்னாள்‌ மாணவர்‌” (Alumni Member) முன்னுரிமை அடிப்படையில்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்‌.

மேற்காண்‌ வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வின்‌ போது அரசுப்‌ பள்ளியில்‌ பயின்ற முன்னாள்‌ மாணவர்கள்‌ உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌. வழிகாட்டுதல்களின்படி மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளும்‌ போது அனைத்து வகை அரசுப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌, உதவித்‌ திட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படி முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. 


மாநிலத்‌ திட்ட இயக்குநருக்காக




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns