கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25-03-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25-03-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 92:


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.


விளக்கம் :


முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.




பழமொழி : 


Don’t measure the worth of person by the size.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது



பொன்மொழி:


தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்,

தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :



1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்?

விடை: பாஸ்கல்

2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?

விடை: நீலகிரி தாஹ்ர் மான்

3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?

விடை: இந்தியா

4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?

விடை: வீனஸ் (வெள்ளி)

5. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை 




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Lie - பொய் 

Life - வாழ்க்கை 

Lift - மின் தூக்கி 

Like - விருப்பம் 

Lime - எலுமிச்சை

Level - அளவு 


ஆரோக்கியம்


  உங்கள் ஸ்நாக்ஸ்களில் கூட ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


 உங்களுக்கு பிடித்த உணவு ஒரு நாளைக்கு 100 கலோரிக்கு மிகாமல் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.


 பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து உங்க வீட்டிலேயே இயற்கையான முறையில் முடிந்த வரை தயார் செய்யுங்கள்.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 25


1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.


1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000)


1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக் நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.


1957 – மேற்கு செருமனி, பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.


1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

புரட்சி நாள் (கிரேக்கம், உதுமானியப் பேரரசிடம் இருந்து, 1821)

அன்னையர் நாள் (சுலோவீனியா)

சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்

அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்




நீதிக்கதை 


பூசாரியின் பேராசை


ஒரு சிறிய நகரத்தில் மணிபத்திரன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் அன்பும் உதவும் குணமும் கொண்டவர்கள். அந்த நகரத்திலுள்ள அனைவரும் அந்தத் தம்பதியைப் பற்றி அறிவார்கள். அவர்களுடைய விருந்தோம்பும் பண்பால் அனைவரும் மகிழ்வடைந்தனர்.


 ஒரு முறை கடலில் சென்று கொண்டிருந்த மணிபத்திரனின் எல்லாக் கப்பல்களும் புயலால் சேதமடைந்தன. அவற்றில் விலை மதிப்பற்ற சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவை எல்லாம் அழிந்து போயின. வியாபாரத்திற்காக அவனுக்குக் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் உடனே பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவனை வற்புறுத்தினார்கள். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கடனை விற்று அவன் அடைக்க வேண்டியதாயிற்று. முடிவில் அவன் எல்லாவற்றையும் இழந்து பரம ஏழையானான். செல்வம் அவனை விட்டுச் சென்றதும் அவனுடைய நண்பர்களும் அவனை விட்டுச் சென்றனர். 


மணிபத்திரன் அதை நினைத்து மிகவும் மனம் வருந்தினான். ‘ என்னுடைய நண்பர்களும் என்னை விட்டுச் சென்று விட்டனரே ! அவர்கள் என்னுடைய செல்வத்தைத் தான் விரும்பி இருக்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது, ‘ என்று எண்ணி வருத்தமடைந்தான். வறுமையையும் துக்கத்தையும் தவிர என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க என்னிடம் எதுவுமில்லையே. அவர்கள் துன்பப்படுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. இப்படிப்பலவாறு எண்ணிக் கவலைப்பட்டவாறே மணி பத்திரன் உறங்கிப் போனான்.  அன்று இரவு அவனுக்கு ஒரு விசித்திரமான கனவு தோன்றியது. ஒரு துறவி அவன் கனவில் தோன்றி, ” என் தலையை நீ ஒரு குச்சியால் தொட்டால் உடனே பிறவிகளுக்குத் தேவையான அளவு தங்கக்காசுகளாக நான் மாறுவேன், ” என்று கூறினார். அதே கனவில் மணிபத்திரன் அந்தத் துறவியைக் குச்சியால் தொடுவது போலவும் துறவி உடனே தங்க நாணயக் குவியலாக மாறுவதாகவும் காட்சிகளைக் கண்டான்.  காலையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு மணிபத்திரன் கண் விழித்தான். ‘ என்னுடைய கனவு ஈடேறுமா ? நான் மறுபடியும் செல்வனாவேனா ? ‘ என்று மணிபத்திரன் தனக்குள் எண்ணிக் கொண்டான். ” பூசாரி உங்களைக்காண வந்திருக்கிறான், என்று அவன் மனைவி கூறினாள். ‘ கனவு உண்மையாகும் என்று நான் நினைத்தது முட்டாள்தனமல்லவோ ? அது ஒரு நாளும் உண்மையாகாது, என்று தனக்குள் கூறிக் கொண்டான்.


 பூசை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணி பூசாரியின் முன்பு மணிபத்திரன் அமர்ந்து கொண்டான். மறுபடியும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. மணிபத்திரன் எழுந்து கதவைத் திறந்தான். என்ன ஆச்சரியம் ! ஒரு துறவி மௌனமாகப் பொருள் பொதிந்த பார்வையோடு அங்கு நின்றிருந்தார். மணிபத்ரன் திக்பிரமை பிடித்தவனாக , ஒரு குச்சியைக் கையிலெடுத்து அந்தத் துறவியின் தலையில் தொட்டான். உடனே அவன் எதிரில் தங்க நாணயங்கள் குவியலாகத் தோன்றின. இதைக் கண்டு மணிபத்திரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். நிறைய அளவு தங்க நாணயங்களை பூசாரிக்கும் கொடுத்தான். 



பின்னர், நடந்தவற்றை யாரிடமும் கூற வேண்டாம் என்று அறிவுரை கூறி பூசாரியை அனுப்பி வைத்தான் மணிபத்திரன். அந்த பூசாரி ஒரு பேராசை பிடித்தவன் மட்டுமல்லன்; முட்டாளும் கூட. அப்படியானால், துறவிகளின் தலையில் குச்சியால் அடித்தால் அவர்கள் தங்க நாணயங்களாக மாறிவிடுவார்கள், இல்லையா ? பணக்காரனாவது எப்படி என்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. தினம் தினம் பூசை, சடங்குகள் போன்றவற்றைச் செய்து ஒன்றிரண்டு காசுளைப் பெறுவது எனக்கும் அலுத்துவிட்டது. விரைவில் நானும் செல்வனாக வேண்டும், என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். மணிபத்திரன் கொடுத்த காசுகளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து  அகன்றான்.


ஒரு மடாலயத்திற்குச் சென்று அங்குள்ள சில துறவிகளைத் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தான். அந்தத் துறவிகள் அவனுடைய வீட்டிற்குள் வந்தவுடன் பூசாரி ஒரு குச்சியை எடுத்து அவர்கள் தலையில் அடிக்க ஆரம்பித்தான். பரிதாபமான அந்தத் துறவிகள் திகைத்துப் போய் விட்டனர் அவர்களுள் ஒரு துறவி, பூசாரியின் வீட்டிலிருந்து தப்பித்து வெளியே வந்தார். சிப்பாய்களை உதவிக்கு அழைத்தார். சிப்பாய்கள் பூசாரியை கைது செய்து நீதிபதி முன் அழைத்துச் சென்றனர். ஏன் அந்தத் துறவிகளை நீ குச்சியால் அடித்தாய் ? என்று நீதிபதி பூசாரியைக் கேட்டார். ” மணிபத்திரன் ஒரு துறவியை அடித்ததும் அவர் பொற்குவியலாக மாறினாரே ? ” என்று பூசாரி விடையளித்தான்.


நீதிபதி மணிபத்திரனை அங்கு வர வழைத்தார். பூசாரி சொல்வது உண்மையா என்று கேட்டார். மணிபத்திரன் முழுக்கதையையும் நீதிபதிக்கு விவரமாகக் கூறினான். முழுக் கதையையும் கேட்ட நீதிபதி, பூசாரி பேராசையோடு, நேர்மையற்ற முறையிலும் நடந்து கொண்டதைப் புரிந்து கொண்டார். முட்டாள் பூசாரிக்குத் தகுந்த தண்டனையை வழங்கினார். 


நீதி : பேராசையும் நேர்மையற்ற குணமும் பெருந்துன்பத்தை விளைவிக்கும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


25-03-2024 


 பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவு...


மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு...


டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்...


சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் உயிரிழப்பு: தலைமை காவலர் கைது...


தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...


சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகி உள்ள டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...


வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம், புத்தகம்: சிபிஎஸ்இ அறிவிப்பு...



Today's Headlines:

25-03-2024




Powerful earthquake hits Papua New Guinea at midnight: 6.8 on the Richter scale... 


133 killed in terrorist attack in Moscow...


 Chief Minister Arvind Kejriwal has filed a petition in the state high court challenging his arrest in the Delhi Liquor Policy scam case...


 Car driver dies after being hit by police near Maduravayal, Chennai: Head constable arrested...


Fare hike at 5 toll booths in Tamil Nadu effective from April 1: National Highways Authority... 


Chief Minister M.K.Stalin congratulates D.M. Krishna who has been selected for Sangeetha Kalanidhi Award of Chennai Music Academy... 


New Syllabus, Book for Class 3 to 6 in the coming academic year: CBSE Notification...


நாடாளுமன்றத் தேர்தல் - Control Unit பயன்படுத்தும் முறை - “ABCD" Strip Seal கிடையாது. அதற்கு பதிலாக Modified QR Special Pink Seal பயன்படுத்தப்படும்...

நாடாளுமன்றத் தேர்தல் - Control Unitக்கு இம்முறை  “ABCD" Strip Seal கிடையாது. அதற்கு பதிலாக Modified QR Special Pink Seal பயன்படுத்தப்படும்....




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



தேர்தல் பணி - தபால் வாக்கு / தேர்தல் பணி சான்றிதழ் பெற படிவம் 12 & 12A - நிரப்பப்பட்ட & நிரப்பப்படாத படிவங்கள் - மாதிரி...


தேர்தல் பணி - தபால் வாக்கு / தேர்தல் பணி சான்றிதழ் பெற படிவம் 12 & 12A - நிரப்பப்பட்ட & நிரப்பப்படாத படிவங்கள் - மாதிரி...



Election Duty - Form 12 & 12A for Postal Ballot / Election Duty Certificate - Filled & Unfilled Forms - Model...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TNSET - State Eligibility Test - for "Assistant Professor 2024" - INFORMATION BULLETIN...



 TNSET - State Eligibility Test - for "Assistant Professor 2024" - INFORMATION BULLETIN: 


#Online registration & submission of Application Form (complete in all respect) through MSU Website: msuniv.ac.in 


✓Apply from 01 April 2024 to 30 April 2024 (upto 05.00 pm) ..



>>> Click Here to Download TNSET - State Eligibility Test - for "Assistant Professor 2024" - INFORMATION BULLETIN...



>>> Subjects & Syllabus of TNSET...



>>> Pattern of Examination...



>>> Model Question Papers...



புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் - NHIS - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல் புதிய இடத்திற்கு மாற்றம் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 21-03-2024...

 

புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல்  புதிய இடத்திற்கு மாற்றம் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 21-03-2024...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல்  புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT 


From

Thiru.K.VijayendraPandian,IAS.,

Commissioner of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai, Nandanam, Chennai-35


To

All Pay and Accounts Officers, All

Treasury Officers,

Pension Pay Officer,

All Sub Pay and Account Officers.

RC.No.30655/ NHIS-2/2024, Dated:21-03-2024

Sir

Sub: New Health Insurance Scheme for Employees and Pensioners -United India Insurance Co. Ltd's Divisional Office 06 is shiftting their premises - Address Change Information communicated - Regarding.

Ref: Mail Received from UIIC Dated:04.03.2024


United India Insurance Co. Ltd's Divisional Office - 06 is dealing with NHIS Schemes of employees and pensioners of Government of Tamilnadu. In the reference cited, they have informed that their Divisional Office - 06 has been shifted to the following address with effect from 25/03/2024.

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings, (Behind IDBI Bank), Greams

Road, Chennai- 600 006."

In this regard, they have informed that, the collection of reimbursement claim documents from the beneficiaries will be done at the new premises from 25/03/2024. The entire shifting has been planned to be completed on or before 28/03/2024 and would be functioning fully from 01/04/2024 at their new premises. There will be no changes in their telephone No.s.

Therefore, all the Pay and Accounts Officers/Treasury Officers/Pension Pay Office/Sub Pay and Accounts Offficers are instructed to take note of the above information and further all the future communications to UIIC should be addressed to the address mentioned above. This has to be communicated to all the DDO's and Pensioners associations for their information.

Signed by

K Vijayendra Pandian

Date: 21-03-2024 16:21:11

VIJAYENDRA PANDIAN K

Commissioner of Treasuries and Accounts


வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ பரிசோதனைக் குழுக்கள் அமைப்பு...

 

 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ பரிசோதனைக் குழுக்கள் அமைப்பு - தஞ்சாவூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அவர்களின் கடிதம், நாள் : 22-03-2024...







தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஒத்திவைப்பு - செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

  தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஒத்திவைப்பு - செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



 >>> திட்டமிட்டபடி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் பத்திரிகை செய்தி...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...