கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...



 உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன விதிமுறைகள் (Appointment Procedures)...


Rules for Approval of Appointment of Teachers in Government Aided Schools - Guidelines - Government Secretary, School Education Department Letter No: 4132/ Elementary Education 2(1)/ 2024, Dated: 10-05-2024...


 அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...


 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - 29 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் - காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு காவலர்கள் மொத்தமாகப் பணியிடை நீக்கம்...















 கள்ளகுறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு...


கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான வழக்கை உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை...


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.


காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்.


மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.


பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை.


கள்ளச்சாராய விவகாரம் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு ஆணை


கள்ளச்சாராய விவகாரத்தை தீர விசாரிக்கவும், மேல் நடவடிக்கைக்காகவும் சிபிசிஐடி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை...


 கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன்குமார், வயது 26, த/பெ. கணேசன் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் சேகர், வயது 59, த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூறாய்விற்குப் பின்பு தெரியவரும்.மேற்கண்ட 26 நபர்களில், வடிவு, த/பெ சுரேஷ், மற்றும் கந்தன் த/பெ சின்னு ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குநர் திரு.கோவிந்தராவ், இ.ஆ.ப., மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி, வயது 49, த/பெ. கனகு என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், இ.ஆ.ப. உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, இ.கா.ப தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி, இ.கா.ப. கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர். மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக CBCID வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்.


விஷ சாராயம் சம்பவம் எதிரொலி கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர் விவரங்கள்:


கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா. தற்காலிக பணிநீக்கம்.


மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன்.


கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். திருமதி கவிதா.


திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி பாண்டி செல்வி.


திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன் உதவி ஆய்வாளர். 


காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்.  மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம்.


நன்றி : தினகரன்

இல்லம் தேடிக் கல்வி - 2024-2025ஆம் ஆண்டு முதல் பருவம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி - சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...

 

 இல்லம் தேடிக் கல்வி - 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ தன்னார்வலர் பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி வழங்குதல் சார்பு - சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...


Illam Thedi Kalvi – Training of ITK Volunteers for Term 1 2024-2025 – Proceedings of the Special Project Officer...


இல்லம் தேடிக் கல்வி - 2024-2025ஆம் ஆண்டு முதல் பருவம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி - சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

 அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட தணிக்கை பதிவாளர் தீவிரமாகக் கண்காணித்து அங்கீகாரம் இல்லா மனையைப் பதிவு செய்தால் உடனடி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு. அதன்பேரில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது கடும் நடவடிக்கை...



வயநாடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி செய்த ராஜினாமாவை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்...



வயநாடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி செய்த ராஜினாமாவை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்...


 லோக்சபா செயலகம் அந்தத் தொகுதியை காலியாக உள்ள தொகுதியாக அறிவித்தது...



>>> லோக்சபா செயலகம் Notification - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


9-12 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இணையதளம் மூலம் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...


9-12 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இணையதளம் மூலம் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


IFHRMSல் பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு...



IFHRMSல் பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு...


IFHRMSல் வரிப்பிடித்தம் செய்ய முன்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள வரிவிதிப்பு முறையில் (Old Regime / New Regime) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொள்ளும் வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது.


வரிவிதிப்பு முறையை மாற்ற விரும்புவோர்


 https://www.karuvoolam.tn.gov.in 


என்ற முகவரியில் Login செய்யவும். பின்னர்


Employee Self Service


🔽🔽🔽


 Income Tax Declaration


🔽🔽🔽


 Self Service


🔽🔽🔽


IT Declaration (self)


என்ற வரிசையில் Click செய்தால், நீங்கள் தற்போதுள்ள வரிவிதிப்பு முறையில் இருந்து மாற்று முறைக்கு மாற,


Swap ........ to ........ Regime


என்ற Button இருக்கும். அதனை Click செய்து மாற்று வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற இயலும்.


*குறிப்பு :*


இம்மாத ஊதியத்திற்கான Centralized Payroll Run செய்யப்பட்டுவிட்டதால், நீங்கள் செய்யும் *மாற்றம் இம்மாத ஊதியத்திலேயே வெளிப்பட Mark For Recalculation செய்திட அலுவலகத்தில் உடன் தெரிவிக்கவும்.* இல்லையேல் அடுத்த மாதத்திலிருந்து தான் ஊதியத்தில் மாறும்.....


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...