கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடவுளின் கருணை - எடிசனின் பதில்...

 


கடவுளின் கருணை - எடிசனின் பதில்...


எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், 

அவரைப் பேட்டி கண்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர்,


 "இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்டவரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?" என்று கேட்டார்.


எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார், 


"இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன் கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், 

அந்த மீனுக்கு கடவுள் காட்டிய கருணை என்ன.? 

நான் உண்ட மீனையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்க வேண்டும்..?"


 என்று கேட்டுச் சிரித்தார். 


தொடர்ந்து அவரே சொன்னார்.


 "கடவுள் என்று தனியே ஒன்றும் இல்லை. 

எல்லாம் இயற்கைதான். இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ எதுவும் கிடையாது. 

இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. 

அது தன் போக்கில் எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறது.!" என்றார் எடிசன்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024 - School Morning Prayer Activities...

 

திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு.

பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து
விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.


பழமொழி :
ஐந்தில் ல் வளையாதது ஐம்பதில் வளையுமா?

A young twig is easier twisted than an old tree


இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன்.

*மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார். ---பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு :

1. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது?

விடை: ஹோம்ஸ்

2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?

விடை: ஏறக்குறைய 60 லட்சம்


English words & meanings :

Thorough-முழுமையான,

  perfect-சரியான



வேளாண்மையும் வாழ்வும் :

மாப்பிள்ளை சம்பா
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது


நீதிக்கதை

பொறுமை

ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன்  நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவமைத்து கொடுத்தார்.  அவருக்கு அந்த இயந்திரத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது.

அவரும்,அவரது மனைவியும் அந்த விலை நிர்ணயத்தை பற்றி விவாதித்தார்கள்.

எடிசனின் மனைவி " 20000 டாலர் கேளுங்கள்" என்றார்.எடிசன் "இந்த தொகை அதிகமாக இருந்தால் நமது இயந்திரத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது" என்று யோசித்தார்.

பணத்தை தருவதற்காக, மூத்த அதிகாரி ஒருவரை  வெஸ்டன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. அதிகாரி எடிசனிடம், "இயந்திரம் என்ன விலை"? என்று கேட்டார்.

எடிசன் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தார். பொறுமை இழந்த அதிகாரி," எடிசன் சார், இதோ உங்களது இயந்திரத்திற்கான  விலை நூறாயிரம் டாலர்கள் இதோ உங்கள் இயந்திரத்திற்கான முதல் தவணை தொகை இது" என்று காசோலையை  எடிசனிடம், கொடுத்துவிட்டு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

அவசரப்படாமல் பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு லாபம் ஏற்பட்டது. அவசரம் நமக்கு சிப்பிகளை தரலாம்.ஆனால் பொறுமையே நமக்கு முத்துக்களை தரும். பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு அதுவே நம் வாழ்க்கையில் ஏற்படும்  துன்பங்களைத் துடைக்கும்  துடுப்பாய் பயன்படும்.


இன்றைய செய்திகள்

24.07.2024

🔖கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.

🔖ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 77 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அனைத்து அருவிகளும் முழுமையாக மூழ்கின.

🔖வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

🔖மத்திய பட்ஜெட் 2024 எதிரொலி: தங்கம், வெள்ளி, செல்போன், காலணி விலை குறைகிறது.

🔖அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது.

🔖மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து.

🔖மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி.

🔖ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு.


Today's Headlines

🔖Teachers should not be engaged in other work except teaching, school administration: High Court Madurai branch ordered.

🔖  Water flow into Okanagal Cauvery River is increased to 77,000 cubic feet : All waterfalls completely submerged.

🔖131 Tamil Nadu students who were stranded in Bangladesh have been safely brought to Chennai.

🔖Union Budget 2024: Gold, Silver, Cellphone, Footwear Prices Drop.

🔖 Kamala Harris is becoming the Democratic Party candidate in the US presidential election: 391 crores of donations were accumulated just in 7 hours.

🔖Sri Lankan player Samari Athapatthu made history by becoming the first female player to score a century in the history of Women's Asia Cup.

🔖Women's Asia Cup:   A huge victory for Pakistan by defeating the UAE  team.

🔖Andy Murray Announced his Tennis Retirement after  Olympic Series.

Prepared by

Covai women ICT_போதிமரம்


2023-2024ஆம் கல்வியாண்டில் பயின்று தேர்ச்சி அடைந்த மாணவர்களை EMIS தளத்தில் மேல் வகுப்புக்கு அனுப்பும் பணியை 31.07.2024க்குள் முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 

 2023-2024ஆம் கல்வியாண்டில் பயின்று தேர்ச்சி அடைந்த மாணவர்களை EMIS தளத்தில் மேல் வகுப்புக்கு அனுப்பும் பணியை 31.07.2024க்குள் முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள்: 16-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடி வரை கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இணையவழி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணம் - மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 94, நாள்: 18-07-2024 வெளியீடு...


G.O. (Ms) No: 94, Dated: 18-07-2024


2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடி வரை கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இணையவழி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணம் - மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 94, நாள்: 18-07-2024 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 94, நாள்: 18-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பட்ஜெட் 2024-25 - துறை வாரியாக முக்கிய ஒதுக்கீடுகள்...



பட்ஜெட் 2024-25 - துறை வாரியாக முக்கிய ஒதுக்கீடுகள்...


🪖 பாதுகாப்பு - ₹4.54 லட்சம் கோடி


🏘️ ஊரக வளர்ச்சி - ₹2.65 லட்சம் கோடி


🌿 வேளாண் - ₹1.51 லட்சம் கோடி


 🚔 உள்துறை - ₹1.50 லட்சம் கோடி


🧑‍🎓கல்வி - ₹1.25 லட்சம் கோடி


💻 ஐ.டி., டெலிகாம் - ₹1.16 லட்சம் கோடி


🏥 சுகாதாரம் - ₹89,287 கோடி


💡 எரிசக்தி - ₹ 68,769 கோடி


🏘️ சமூக நலன் - ₹56,501 கோடி


🏭 வணிகம், தொழில் - ₹47,559 கோடி


Revised Estimates of Expenditure for 2023-2024 show a

decrease of ` 12,611 crore over the Budget Estimates

2023-2024. The major items of expenditure where variations have

occurred are indicated below:

1 Rural Employment 60000 86000 (+) 26000

2 Education 53917 79768 (+) 25851

3 Defence Services

(including Capital Outlay) 432720 455897 (+) 23177

4 Crop Husbandry 115379 137415 (+) 22036

5 Food Storage and

Warehousing 200682 214781 (+) 14099

6 Transport 9271 22522 (+) 13251

7 External Affairs 9931 20824 (+) 10893

8 Grants-in-aid to State/Union

Territory Governments 659736 590531 (-) 69205

9 Capital Outlay on Petroleum 35508 40 (-) 35468

10 Interest payments and

servicing of debt 1079971 1055427 (-) 24544

11 Other Expenditure 1845982 1827281 (-) 18701

Total Expenditure 4503097 4490486 (-) 12611


Due to

1 increased requirement under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.

2 mainly on higher transfers to Madhyamik Uchhatar Shiksha Kosh, a reserve fund in Public Account, and higher grants to University Grants Commission and Central Universities.

3 increase in requirement of revenue expenditure of Armed Forces.

4 increase in allocation for nutrient based subsidy on indigenous and imported fertilizers.

5 mainly on higher provision for food subsidy towards distribution of food grains under National Food Security Act and under decentralised procurement of food grains by State Governments.

6 higher transfers to Agriculture Infrastructure and Development Fund towards financing the Pradhan Mantri Gram Sadak Yojana Scheme.

7 increase for funds provided to EXIM Bank against invocation of Government of India guarantees for loans to other countries, which are considered as doubtful debts. This is met from Guarantee Redemption Fund.

8 lower requirements for grants to local bodies and for rural and urban components of Pradhan Mantri Awas Yojana.

9 decrease in allocation for Strategic Crude Oil Reserve and for capital support to oil marketing companies.

10 decrease in requirement for payment of interest on market

loans, cash management bills, compensation and other bonds

8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான திட்டம் - மக்களவையில் நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில்...



ஜூன், 2024 இல் 8வது மத்திய ஊதியக் குழுவை 8th Pay Commission அமைப்பதற்கு இரண்டு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளன. 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை -  மக்களவையில் நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில்...



 >>> நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



GOVERNMENT OF INDIA

MINISTRY OF FINANCE

DEPARTMENT OF EXPENDITURE

LOK SABHA

UNSTARRED QUESTION No. 195

TO BE ANSWERED ON MONDAY, JULY 22,2024/31 ASHADHA, 1946 (SAKA)

CONSTITUTION OF 8TH CENTRAL PAY COMMISSION

195 SHRI ANAND BHADAURIA:

Will the Minister of Finance be pleased to state:

(a)

whether the Government has received representation from various quarters regarding constitution of 8th Central Pay Commission during the month of June, 2024;

(b)

and

if so, the details thereof and the action taken thereon, representation-wise;

(c) 

the time by which the Government would constitute 8th Central Pay Commission for revision of pay/pension of Central Government employees in view of unprecedented inflation in the country?

ANSWER

MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE

(SHRI PANKAJ CHAUDHARY)

(a) to (c):

Two representations have been received for constitution of 8th Central Pay Commission in June, 2024. No such proposal is under consideration of the Government, at present.



இந்திய அரசு 

நிதி அமைச்சகம் 

செலவினத் துறை 

லோக் சபா 

நட்சத்திரமிடப்படாத கேள்வி எண். 195 

ஜூலை 22,2024/31 

ஆஷாதா, 1946 (சகா) திங்கட்கிழமை பதில் 

 8வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு 

195 ஸ்ரீ ஆனந்த் பதௌரியா: 

நிதியமைச்சர் தெரிவிப்பாரா: 

(அ) ஜூன், 2024ல், 8வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து அரசு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளதா; 

(ஆ)  அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பிரதிநிதித்துவம் வாரியாக; 

(இ) நாட்டில் முன்னெப்போதும் இல்லாத பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம்/ஓய்வூதியத்தை திருத்துவதற்காக 8வது மத்திய ஊதியக் குழுவை அரசாங்கம் அமைக்கும் காலம் எது? 


பதில் 

நிதி அமைச்சகத்தில் மாநில அமைச்சர் (ஸ்ரீ பங்கஜ் சௌத்ரி) 

(அ) ​​முதல் (இ): 

ஜூன், 2024 இல் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கு இரண்டு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கான திட்டம் எதுவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.


மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?



 மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் ஜூலை 23 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



வரவு



இதில், கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 27 சதவீதமும், வருமான வரி மூலமாக 19 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 18 சதவீதமும், வர்த்தக வரி மூலமாக 17 சதவீதமும், வரி அல்லாத ரசீதுகள் மூலமாக 9 சதவீதமும், தொழிற்சங்க கலால் வரிகள் மூலமாக 5 சதவீதமும், சுங்க வரிகள் மூலமாக 4 சதவீதமும், கடன் அல்லாத மூலதன ரசீதுகள் மூலமாக ஒரு சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.


செலவு



அதேபோல், வட்டி கட்டுவதற்காக 19 சதவீதமும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 21 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 16 சதவீதமும், நிதி குழு ஒதுக்கீடுகள் மற்றும் இதர செலவினங்களுக்காக தலா 9 சதவீதமும், பாதுகாப்புத்துறை, மத்திய நிதியுதவி திட்டங்களுக்காக தலா 8 சதவீதமும், மானியங்களுக்காக 6 சதவீதமும், ஓய்வூதியத்திற்காக 4 சதவீதமும் செலவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024

  கனமழை காரணமாக 20-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 20-11-2024 d...