பள்ளி மேலாண்மை குழு SMC- புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS WEBSITE ல் பதிவு செய்ய கடைசி நாட்கள் விவரம்...
🪴தொடக்கப்பள்ளிகள் : 23.8.24
🪴உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்: 30.08.2024
🪴 நடுநிலைப் பள்ளிகள்: 06.09.2024
பள்ளி மேலாண்மை குழு SMC- புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS WEBSITE ல் பதிவு செய்ய கடைசி நாட்கள் விவரம்...
🪴தொடக்கப்பள்ளிகள் : 23.8.24
🪴உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்: 30.08.2024
🪴 நடுநிலைப் பள்ளிகள்: 06.09.2024
தமிழ்நாடு அரசுப் பள்ளி SMC குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: EMIS தளத்தில் பதிய உத்தரவு...
💥சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிதாக தேர்வான உறுப்பினர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
💥தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.
💥இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
💥அதன்படி முதல்கட்டமாக 12,117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக மீதமுள்ள 11,924 தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் நேற்று மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவற்றில் அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோர்கள் எஸ்எம்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
💥இதேபோல், தலைவர், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய 24 பேர் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக மீதமுள்ள அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஆகஸ்ட் 24, 31-ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.
💥இந்நிலையில், எஸ்எம்சி குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உட்பட விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இது சார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டக்கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் பணியில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குநர் / தொடக்கக்கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் /நிதிக்காப்பாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு...
Publication of priority list for promotion from Personal Assistant to District Education Officer to Director of School Education / Elementary Education Personal Assistant Officer / Treasurer...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு...
Press Note on Issuance of Class 10th Original Marks Certificate...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு - தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல்...
PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS 2024 - 2025 SESSION (GOVERNMENT QUOTA)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
MBBS / BDS 2024 - 2025ஆம் ஆண்டு - 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளி விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல்...
PROVISIONAL RANK LIST FOR MBBS / BDS 2024 - 2025 SESSION - TAMILNADU GOVT SCHOOL CANDIDATES UNDER 7.5% RESERVATION...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி, மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் நடத்தப்படும் சென்னை மாவட்ட அளவிலான கலை, பண்பாட்டு நடைபெறவுள்ளது - செய்தி வெளியீடு எண் 1241, நாள்: 19-08-2024...
>>> செய்தி வெளியீடு எண் 1241, நாள்: 19-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...