கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எது நமக்கு சொந்தம்? - இன்று ஒரு சிறு கதை...


எது நமக்கு சொந்தம்? எப்படி எடுத்துக் கொள்கிறோம்? - இன்றைய சிறுகதை - Today's Short Story...



  ஒரு குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். 


சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார்.  சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். 


காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன்உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.


“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.


🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்...



பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்...


1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது.


2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்,  முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கூட வகுப்பறைகளில் மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க கூடாது.


3. அரசுத்துறை சாராத மருத்துவர்கள் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க கூடாது.


4. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி எந்தவொரு கல்வி சாரா நிகழ்ச்சியோ விழாவோ பள்ளியில் நடைபெற கூடாது.


5. RBSK  மருத்துவ குழுவினர் மட்டுமே மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.


6. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல கூடாது.  


7. போட்டிகள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு  மாணவர்களை அழைத்து செல்வதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.


8. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


9. வகுப்பறையில் பாடம் நடத்த எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களைப் பயன்படுத்தக் கூடாது.  நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவால் நியமனம் செய்யப்பட்டு அரசால் ஊதியம் பெற்று வரும் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும்.  வேறு நபர்கள் பள்ளியில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தால் சார்ந்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


10. EMIS பணிகளை AIs மூலம் செய்ய வேண்டும். ஆசிரியர்களை EMIS பணிகள் செய்யப் பயன்படுத்தக் கூடாது.


11. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மதிய உணவிற்காக பள்ளியை விட்டு வெளியே செல்லக் கூடாது.


12. மாணவர்களிடம்நேர்மறையான சிந்தனைகளை விதைக்கும் வண்ணம் ஆசிரிய ர்களின் பேச்சு இருக்க வேண்டும்.  எதிர்மறையான பேச்சுகள், இரட்டை அர்த்தமுள்ள பேச்சுகள் முதலியவற்றை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.


13. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் அல்லது மாணவிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும்.


14. விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடக்க அனுமதிக்க கூடாது.


15. அரசுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.


16. துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆகியவர்களை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், அவர்கள் பேச உள்ள பொருள் குறித்து முன்னரே முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்து முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.


17. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள்  பேசுதல் கூடாது.


18. அரசியல்வாதிகள் யாரையும் பள்ளியில் அனுமதிக்க கூடாது 


19. தலைமையாசிரியர்கள் அனைத்து அறிவுரைகளையும் புரிந்து கொண்டு பள்ளியில் பிரச்சனை  இல்லாமல் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது 


மேற்காணும் முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


யாகி புயல் - இரு சக்கர வாகனங்களில் பயணித்து தடுமாறியவர்களுக்கு பாதுகாப்பாக உடன்வந்து நெகிழ வைத்த மகிழ்வுந்து ஓட்டுநர்கள் - காணொளி...



 யாகி புயல் - இரு சக்கர வாகனங்களில் பயணித்து தடுமாறியவர்களுக்கு பாதுகாப்பாக உடன்வந்து நெகிழ வைத்த மகிழ்வுந்து ஓட்டுநர்கள் - காணொளி...





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


வியட்நாம் மற்றும் சீனாவை உலுக்கிய யாகி புயல்...



வியட்நாம் மற்றும் சீனாவை உலுக்கிய யாகி புயல் - காணொளி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Typhoon Yagi hits Vietnam (7.9.2024)


இந்த ஆண்டு ஆசியாவின் மிக சக்திவாய்ந்த புயலான யாகி புயல் வடக்கு வியட்நாமில் கரையைக் கடந்த பின்னர் குறைந்தது நான்கு பேரைக் கொன்றது. ஹாய் ஃபோங் மற்றும் குவாங் நின் மாகாணங்களை சனிக்கிழமை காலை மணிக்கு 203 கிமீ/மணி (126 மைல்) வேகத்தில் புயல் தாக்கியது என்று இந்தோ-பசிபிக் வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் பறக்கும் குப்பைகள் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன, தலைநகர் ஹனோயில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுத்த மரங்கள். சனிக்கிழமையன்று வடக்கு குவாங் நின் மாகாணத்தில் மூன்று பேர் இறந்ததாகவும், ஹனோய்க்கு அருகிலுள்ள ஹை டுவாங்கில் மற்றொருவர் கொல்லப்பட்டதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இப்பகுதியில் சுமார் 78 பேர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

 வெள்ளிக்கிழமை, யாகியின் வருகையை முன்னிட்டு ஹைனான் தீவில் உள்ள சுமார் 400,000 மக்களை சீனா வெளியேற்றியது. ரயில்கள், படகுகள் மற்றும் விமானங்கள் நிறுத்தப்பட்டன, பள்ளிகள் மூடப்பட்டன. சுமார் 830,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் பரவலான மின் தடைகளை அறிவித்தன. மதிப்புமிக்க பயிர்களும் அழிந்துவிட்டன. ஹைனானில் உள்ள டவர் பிளாக்குகளில் இருந்து ஜன்னல்கள் பிடுங்கப்பட்டதை சீன சமூக ஊடகங்களில் காணொளிகள் காட்டுகின்றன. ஒரு சூப்பர் டைபூன் என்பது வகை 5 சூறாவளிக்கு சமம். யாகி இந்த ஆண்டு இதுவரை இரண்டாவது வலுவான சூறாவளி மற்றும் இந்த வார தொடக்கத்தில் வடக்கு பிலிப்பைன்ஸைத் தாக்கியதில் இருந்து வலிமை இரட்டிப்பாகியுள்ளது. யாகி கொண்டு வந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வடக்கு பிலிப்பைன்ஸில் குறைந்தது 13 பேரைக் கொன்றது, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலநிலை மாற்றத்துடன் சூறாவளி வலுவடைந்து அடிக்கடி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்பமான கடல் நீர் என்பது புயல்கள் அதிக ஆற்றலைப் பெறுகின்றன, இது அதிக காற்றின் வேகத்திற்கு வழிவகுக்கிறது. வெப்பமான வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் உள்ளது, இது அதிக தீவிர மழைக்கு வழிவகுக்கும்.


Super Typhoon Yagi, the most powerful storm in Asia this year, has killed at least four people after making landfall in northern Vietnam.


The storm hit Hai Phong and Quang Ninh provinces with winds of up to 203 km/h (126 mph) on Saturday morning, the Indo-Pacific Tropical Cyclone Warning Center said.


Strong winds and flying debris have caused damage to buildings and vehicles, with falling trees leading to power outages in the capital, Hanoi.


State media said three people died in the northern Quang Ninh province on Saturday, with another killed in Hai Duong, near Hanoi. Some 78 people are thought to be injured in the region.


REUTERS

Image caption,Nearby, debris is seen on the streets after damage caused by the storm

On Friday, China evacuated some 400,000 people in Hainan island ahead of Yagi's arrival. Trains, boats and flights were suspended, while schools were shut.


Local media there reported widespread power outages, with about 830,000 households affected. Valuable crops have also been wiped out.


Videos on Chinese social media show windows being ripped out from tower blocks on Hainan.


A super typhoon is equivalent to a Category 5 hurricane.


Yagi is the second strongest typhoon so far this year and has doubled in strength since it hit northern Philippines early this week.


Floods and landslides brought by Yagi killed at least 13 people in northern Philippines, with thousands of people forced to evacuate to safer ground.


Scientists say typhoons and hurricanes are becoming stronger and more frequent with climate change. Warmer ocean waters mean storms pick up more energy, which leads to higher wind speeds.


A warmer atmosphere also holds more moisture, which can lead to more intense rainfall.


தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ? ஆசிரியர் கூட்டணி நிர்வாகி வேதனை...

 



தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ?  வேதனையுறுகிறோம்...


*AIFETO*


*நாள்: 07.09.2024.*


*செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள். நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.* 


*மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.*


*பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள்.*


*பாரதப் பிரதமர் அவர்கள் டெல்லியில் இருந்த போதெல்லாம் அவரது இல்லத்திற்கு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்துப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமைப் படுத்தி வருகிறார்.*


*தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.இரவி அவர்கள் கிண்டி ஆளுநர் மாளிகையில் 05.09.2024 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசிய வரிகளை அவரே சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.*  


*தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசம், கற்பித்தல் திறன் மோசம், தேசிய சராசரியினை விட கீழே போய்விட்டது. தமிழக பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது வேதனையுறுகிறேன் - ஆளுநர்.*


*ஆளுநர் செல்லுகின்ற இடமெல்லாம் வெறுப்புணர்வினை திட்டமிட்டு வெளியிட்டு வருவது கேட்பதற்கு இது ஒன்றும் புதியதல்ல..!*


*ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் இப்படி எங்கள் தாய்த் தமிழ்நாட்டினை பற்றி, கல்வித்தரத்தை பற்றி மிக மோசமாக பேசியபோது கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்கள், கல்வியாளர்களில் ஒருவருக்கு கூட தமிழ் இன உணர்வு இல்லாமல் இருந்திருப்பார்களா..?*


*மேதகு ஆளுநர் அவர்களே..! பாஜக ஆளும் மாநில அரசுகளான குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட கல்வியின் தரம், மாணவர்களின் கற்றல் திறன் பற்றி பட்டியல் போட்டு விவாதிக்கலாமா.? 18 ஆண்டு காலமாக தேசியச் செயலாளராக (National Secretary, All India Federation of Elementary Teachers' Organisations' ) இருந்து வருகிறேன். வெளிப்படைத் தன்மையுடன் வெளிக்கொணர தயாராக உள்ளோம்.*


*ஆசிரியர் தினத்தன்று இப்படி பேசலாமா..? என்ற இடம் பொருள் ஏவல் கூட தெரியாத மாநிலத்தில் பயின்று வந்தார்களா..? ஆளுநர் என்று நினைக்கத் தோன்றுகிறது.*


*ஆசிரியர் =ஆசு-குற்றம்; இரியர் - நீக்குபவர், குற்றத்தை நீக்குபவர் அறிவொளி தருபவர்.*


*ஆளுநர் ஏற்கனவே வகித்த பதவி காவல் கண்காணிப்பாளர் பதவி என்று எண்ணுகிறோம்.*


*பார்ப்பவர்களை எல்லாம் குற்றவாளிகளை தேடும் கண் கொண்டு பார்ப்பவர்கள், அவருக்கு பிடித்த பாரதத்தினை நினைவுக்கு கொண்டு வந்தால் துரியோதனன் வர்க்கத்தினருக்கு நல்லவர்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். நல்லதும் கண்ணுக்கும் படாது*


*தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தை பற்றி குறை சொல்லும் ஆளுநர் அவர்களே..! தமிழ்நாட்டின் சார்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பாடத்திட்டம் பற்றி விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். நாங்களும் விவாதிக்க தயாராக உள்ளோம். வாய்ப்பினை தாருங்கள். தமிழ் மண்ணில் முளைத்த புல் பூண்டுகள் கூட உங்களை ஏற்றுக் கொள்ளாது. எதிர்ப்புணர்வு புயல் வீச வாய்ப்பளிக்காதீர்கள்.*


*ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாட்டு ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை, அறப்பணியினை தரம் தாழ்த்தி பேசியதை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.* 


*சத்திரபதி சிவாஜி சிலை நொறுங்கி கீழே விழுந்து விட்டது. 100 முறை பாரதப் பிரதமர் அவர்கள் மன்னிப்பு கேட்கிறார். அறம் நின்றுதான் அதன் கடமையைச் செய்யும்.*


*ஆசிரியர் தினத்தன்று ஆசிரிய சமுதாயத்தை சேதாரப்படுத்தியது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயக் குரலும் உங்களுக்கு எதிராக ஒலிக்கட்டும்...!ஒலிக்கட்டும்...!*


*தொடர்ந்தால் தொடர்வோம்.*


*ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*



சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை சிறை...



 சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை சிறை...


சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறியது, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.


"நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெரியாது" - அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்...

 "நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெரியாது" -  அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்...




“மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை;


இந்த மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை;


நாங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை”


- சென்னையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.சித்ரகலா மற்றும் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...