கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

 

“போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...


ஆசிரியர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.


ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும்.


ஆசிரியர்கள் பல நேரங்களில் நியாயமான காரணங்களுக்காக போராடியுள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.



திருத்திய பள்ளி நாட்காட்டியில் மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210, ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220...


மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு...


*பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு...


பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது.


வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு. 


இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிப்பு.



>>> ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...


அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 50.14 லட்சம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை தொடா்பான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரத்து 803-ஆக உள்ளது.


இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட தகவல்: ஆகஸ்ட் மாத நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரா்களில் பெண்களே அதிகம். 27 லட்சத்து 11 ஆயிரத்து 970 பெண்களும், 23 லட்சத்து 2 ஆயிரத்து 555 ஆண்களும், 278 மூன்றாம் பாலினத்தவரும் பெயா், படிப்பு விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.


அவா்களில் 18 வயதுக்குள் பள்ளி மாணவா்களாக 9 லட்சத்து 95 ஆயிரத்து 449 பேரும், 19 முதல் 30 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களில் 21 லட்சத்து 72 ஆயிரத்து 50 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்து 631 பேரும் தங்களது பெயா், விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.


46 வயது முதல் 60 வயது வரையுள்ளவா்களில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 829 போ் பதிவு செய்துள்ளனா். 


அரசின் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 60-க்கும் கடந்தவா்களில் 8,094 பேரும் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்கிறாா்கள். ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1.50 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் - POCSO சட்டத்தில் கைது...


 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய உறவுக்கார இளைஞரான பாலசக்தி (22) என்பவர் போக்சோவில் கைது...


அத்தை வீட்டுக்கு அடிக்கடி பள்ளி மாணவி வரும் போது, அத்தை மகனான பாலசக்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் POCSO சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Application form for granting 'No Objection Certificate' to visit foreign countries...

 

 வெளிநாடுகளுக்குச் செல்ல 'ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் - NOC ' வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம்...


தடையில்லா சான்றிதழ் 


Application form for granting 'No Objection Certificate' to visit foreign countries...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Foreign Trip - 1 மாதத்திற்கு முன்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும் - DSE Joint Director Circular - இணைப்பு : Personal Proforma...


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடையின்மை சான்று பெறுதல் சார்ந்த தெளிவுரை...


 அயல்நாட்டுக்குப் பயணம் Foreign Trip மேற்கொள்வோர் குறைந்தபட்சம் 1 மாதத்திற்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை - இணைப்பு : Personal Proforma...



Those traveling abroad should apply for permission at least 1 month in advance - Circular from Joint Director of School Education - Attachment : Personal Proforma...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Application form for granting 'No Objection Certificate' to visit foreign countries

ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% GST - தற்காலிகமாக ஒத்திவைப்பு...



 ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி - தற்காலிகமாக ஒத்திவைப்பு...


டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது.


இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.


இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...