கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய அளவிலான அடைவுத்தேர்வு (NAS) நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்...


 தேசிய அளவிலான அடைவுத்தேர்வு NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்...


National Achivement survey (NAS) 2024.

Date: 19.11.2024 Tuesday
Standards : 3, 6, 9.
Be prepare.





CTET - DECEMBER, 2024 - CENTRAL TEACHER ELIGIBILITY TEST INFORMATION BULLETIN...



  மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர், 2024 அறிவிப்பு - தகவல் கையேடு வெளியீடு...


 CTET - DECEMBER, 2024 - CENTRAL TEACHER ELIGIBILITY TEST INFORMATION BULLETIN...


CENTRAL TEACHER ELIGIBILITY TEST

Duration of Online Application: 17.09.2024 to 16.10.2024

Last date for submission of online Application: 16.10.2024 (Before 11:59PM) 

Last date for submission of fee: 16.10.2024 (Before11:59PM)

Date of Examination: 01st December, 2024



>>> Click Here to Download CTET Information Bulletin...


டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி Atishi Marlena Singh தேர்வு...




*டெல்லி: புதிய முதலமைச்சராக, கல்வித்துறை அமைச்சர் அதிஷி மெர்லினா தேர்வு*


*ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும், டெல்லியின் புதிய முதலமைச்சராகவும் அதிஷியின் பெயரை முன்மொழிந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்


அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்...


அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவதே எங்கள் இலக்கு என்று, டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி சபதம் எடுத்துள்ளார்.


டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  இதையடுத்து, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று  ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிஷி ஒருமனதாக டெல்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

எனவே அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை ஆளுநர் சக்சேனாவிடம் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் எனவும் இன்று மாலை அல்லது நாளை காலை அதிஷி முதல்வராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த புதிய சூழ்நிலையில், முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி, செய்தியாளர்களை சந்தித்தபோது  கூறியதாவது:

 

"என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த எனது குரு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர் என்மீது நம்பிக்கை வைத்து, மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளார். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். வேறு எந்த கட்சியிலும் இருந்தால், தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனால் கெஜ்ரிவால் என்னை நம்பி முதல்வர் பொறுப்பை வழங்கியுள்ளார். 

 


கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவிருப்பது எனக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது. எனது ஒரே குறிக்கோள், வரவிருக்கும் தேர்தலின் போது முதல்வராக தொடர்வது மட்டுமின்றி, அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவதே. இந்த பொறுப்பை ஏற்றுள்ள வரை, எனது ஒரே இலக்கு, கெஜ்ரிவால் வழிகாட்டுதலின்படி டெல்லி மக்களை பாதுகாத்து ஆட்சி நடத்துவதே" என அவர் உறுதியளித்தார்.


"பணிக்கொடை" (Gratuity) குறித்த தகவல்கள்...


 "பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

 

Gratuity - Amount


"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள். குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.


இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.


    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது. சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.


நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.


 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.


ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குரிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.


   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375 நாட்கள் சம்பளமும் 30 ஆண்டுகள் பணி செய்திருந்தால் 30×15=450 நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.


   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு. அதிகப்பட்சம் 2000000 (இருபது லட்சம்) மட்டுமே வழங்கப்படும்.


  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.


உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.


    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.


    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் (அதிகபட்சம் 33 ஆண்டுகள் மட்டுமே கணகக்கீடுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ) சர்வீஸ் முடித்த பனிஷ்மெண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம். (இப்போதைய DA 50%.)


  பேசிக்....................................40000

 DA 50%(40000×50÷100)..............20000

மொத்தம்(40000+20000)........60000

26ஆல் வகுக்க= 42800/26 = 2308ரூபாய்.


   இந்த 2308தான் ஒருநாள் சம்பளம்.


15நாள் சம்பளம்= 2308×15= 34620ரூபாய்


33 ஆண்டுக்கு = 34620×33= 11,42,460ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.


சுருக்கமாகச்சொன்னால்


(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்த ஆண்டுகள். இதுவே கிராஜூவிட்டி ஆகும்


1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை)...

 

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை)...


எண்ணும் எழுத்தும் முதல் பருவம் (1-5) வகுப்புகளுக்குரிய தொகுத்தறி தேர்வு கால அட்டவணை...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...

 

 

 


அனைவருக்கும் வணக்கம்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...


1. Delete option enabled.

தவறாக Category. மாற்றி registration செய்திருந்தால் delete option பயன்படுத்தி மாற்றம் செய்யலாம்.


2.   Final submit option enabled

 24 members க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள பள்ளிகளுக்கும் final submit கொடுக்கும் option உள்ளது.


3. Vice-president Category ல் மாற்றுத்திறனாளி parent உடன் 4th 'Other' option வழங்கப்பட்டுள்ளது.


4. Local body number இரு பள்ளியில் தேர்வாகி இருந்தால் ஒரே Mobile number, Adhaar number பயன்படுத்தும் option கொடுக்கப்பட்டுள்ளது. 


5. ஒரு முறை Final submit கொடுத்து விட்டால் இனி Edit செய்ய முடியாது.


6. Alumini membersல் 3 உறுப்பினர்களுக்கு Sub- category ல் parent aluminiஐ Select செய்ய வேண்டும். parent அல்லாத Aluminiக்கு sub- categoryல் general alumini option தேர்வு செய்ய வேண்டும்.



💐அனைவருக்கும் வணக்கம்💐


 *SMC Member Updation சார்ந்த தகவல் -* 


🎯SMC EMIS UPDATION

இல் 24 உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்த பள்ளிகளுக்கு FINAL SUBMISSION வழங்கும் OPTION தற்பொழுது ENABLE செய்யப்பட்டுள்ளது.



🎯Final submission கொடுத்த பிறகு எந்தவித திருத்தங்களையும் கண்டிப்பாக மேற்கொள்ள முடியாது .



🎯ஆகவே final submission கொடுக்கும் முன் விவரங்களை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு கொடுக்க வேண்டும் .


🎯துணைத் தலைவர் விபரங்கள் பதிவு செய்யும்போது அதில் உள்ள மூன்று option களும் பொருந்தாத நிலையில் தற்பொழுது நான்காவதாக other option கொடுக்கப்பட்டுள்ளது .



🎯ஏதேனும் தவறான பதிவுகள் இருந்தால் அதை நீக்க delete option வழங்கப்பட்டுள்ளது .



🎯உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஒரு பள்ளிக்கு மேல் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் தற்போது மற்றொரு பள்ளியிலும் பதிவேற்றம் செய்வதற்கான option enable செய்யப்பட்டுள்ளது.


ஒரு பள்ளிக்கு ஒரு Ward member மட்டுமே இருக்கும் பட்சத்தில் 1. Ward member உடன் 2. ஊராட்சி மன்ற தலைவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.


🎯HM அல்லது teacher அல்லது இருவருமே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர் விவரங்களுக்கு அங்கு மாற்றுப் பணியில் அல்லது பொறுப்பில் உள்ள. ஆசிரியர் விவரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



🎯குறைந்தபட்சம் ஐந்து பெற்றோர் உறுப்பினர்களாவது இருந்தால் மட்டுமே final submission வழங்க முடியும் .


🎯Alumini  general அல்லது  alumini parent என்பதில்  alumini பொது உறுப்பினர்களுக்கு general என்ற option ஐயும் பெற்றோர் சார்ந்த உறுப்பினர்களும் alumini parent என்ற optionம் கொடுக்க வேண்டும்.


   Alumini parent option  ஐ select செய்யவில்லை எனில் alumini பொது உறுப்பினராக  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


🎯 ஆகவே அதை தவிர்க்க alumini parent உறுப்பினர்களுக்கு alumini parent  என்பதை select செய்ய வேண்டும்.


Alumni Parent - 3

Alumni General -1 என்ற அடிப்படையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


அனைத்து உறுப்பினர்  விவரங்களும் சரியாக உள்ளதை உறுதி செய்த பின் 19.09.2024க்குள் Final submission கொடுத்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Final submission கொடுத்தபிறகு எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது.


 நன்றி🙏


Administrator Cum Instructor Attendance details (from June to September)...


நடுநிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளர் வருகை விவரங்கள் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) EMISல் பதிவு செய்யும் முறை...


Hi-tech Lab Administrator Cum Instructor Attendance details (from June to September)...


EMIS ல் Staff ஐ தேர்வு செய்யவும். 


அதில் AI attendance detail தேர்வு செய்யவும். 


AI ID given by keltron ல் AI001 என உள்ளிடவும்.


AIs EMIS Id எனபதில் AI ன் EMIS ID உள்ளிடவும்.


Date of appointment என்பதில் 15.6.24, 19.6.24 ஆகிய தேர்வுகளில் தாங்கள் பணியில் சேர்ந்த தேதியைத் தேர்வு செய்யவும். 


June month number of leave taken என்பதில் தாங்கள் எடுத்த விடுப்பு நாட்களின் எண்ணிக்கையை( சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர) உள்ளிடவும்.


June month leave taken dates என்பதில் தாங்கள் எடுத்த விடுப்பின் தேதியைக் குறிப்பிடவும்.


இதே போல் July, August, September மாதங்களுக்கும் செய்யவும். 


இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு தலைமையாசிரியரின் சரிபார்த்தலுக்கு பின் ஒப்புதல் பெற்று Yes என்பதை தேர்வு செய்யவும். 


இறுதியில் save section ஐ click செய்யவும்.


இப்பணியை இன்று மாலைக்குள் முடிக்கவும்.



Administrator Cum Instructor Attendance details (from June to September)...


Attendance Details


AI ID given by Keltron*


AIs EMIS ID*


Date of appointment*


June month - Number of Leave taken*


June month -Leave taken dates (for example if he/she took leave on 21st June and 22nd June., Please mention only dates "21,22")*


July month - Number of Leave taken*


July month -Leave taken dates (for example if he/she took leave on 21st July and 22nd July., Please mention only dates "21,22")*


August month - Number of Leave taken*


August month -Leave taken dates (for example if he/she took leave on 21st August and 22nd August., Please mention only dates "21,22")*


மேலே நிரப்பப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்கிறேன்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...