கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Information about cities & platforms buses depart from Kilambakkam Bus Terminal



கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்லக்கூடிய நகரங்கள் & நடைமேடைகள்...


 நமது திறன் பேசியின் ஏதாவது ஒரு நினைவகத்தில் சேமித்து வைப்போம்... எப்போதாவது உதவக் கூடும்.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து

நீங்கள் செல்லக்கூடிய பேருந்து,

எந்த நடைமேடையில் நிற்கும் 👇👇


நடைமேடை : 01

நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரி 

 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்

செங்கோட்டை

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்


நடைமேடை : 02

 பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்

 சிவகாசி , திருவனந்தபுரம்

உடன்குடி, கருங்கல்

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.


நடைமேடை : 03

மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டி

தேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம்

ஏர்வாடி , வீரசோழன் , கீரமங்கலம்

சாயல்குடி , பொன்னமராவதி

கமுதி

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்


நடைமேடை : 04

திருச்சி , கும்பகோணம் , கரூர்

தஞ்சாவூர் , பொள்ளாச்சி

மன்னார்குடி , தீண்டுக்கல்

பேராவூரணி , தேனி

பட்டுக்கோட்டை

கம்பம் / குமுளி

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.


 நடைமேடை : 05

பெரம்பலூர் , மன்னார்குடி

அரியலூர் , நன்னிலம்

துறையூர் , வேளாங்கண்ண

கும்பகோணம் , மயிலாடுதுறை

தஞ்சாவூர் , திருவாரூர்

நாகப்பட்டினம்.

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்


நடைமேடை : 06

சேலம் , திருவாரூர்

எர்ணாகுளம் , திருப்பூர்

குருவாயூர் , பொள்ளாச்சி

ஊட்டி TTA , மேட்டுப்பாளையம்

கோயம்புத்தூர்

ஈரோடு , நாமக்கல்

கரூர்

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.


நடைமேடை : 07

வந்தவாசி , திருவண்ணாமலை

போளூர்  , செஞ்சி

மேல்மலையனூர்

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.


நடைமேடை : 08

திண்டிவனம் , விழுப்புரம்

திருக்கோவிலூர் , சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி

ஜெயங்கொண்டம் , அரியலூர்

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் 


நடைமேடை : 09

புதுச்சேரி , கடலூர்

சிதம்பரம் , நெய்வேலி  , 

காட்டுமன்னார்கோவில் , விருத்தாச்சலம்

திட்டக்குடி

செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.


நடைமேடை : 10 & 11 & 12 & 13 & 14

ஆம்னி பேருந்துகள் 

நிற்கும் இடம். 


உங்கள் நண்பருக்கு அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண்: 655

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள்: பின்னாளில் நினைத்து வருத்தப்படத் தக்க செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையுடைய செயல்களைச் செய்யக் கூடாது.


பழமொழி :
தீய பண்பைத் திருத்தி நல்ல பண்பை பொலிவுறச் செய்யும் கல்வி.

Education polishes good nature and corrects bad ones.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :

" கோழையும் முட்டாளுமே ' இது என் விதி ' என்பர், ஆற்றல் மிக்கவரோ 'என் விதியை நானே வகுப்பேன் ' என்பர்". --- விவேகானந்தர்.


பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

2.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

விடை: சத்யஜித்ரே


English words & meanings :

Mug-குவளை,

Tub-தொட்டி


வேளாண்மையும் வாழ்வும் :

18-வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.


அக்டோபர் 24

உலக இளம்பிள்ளை வாத நாள்
இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது.

 

ஐக்கிய நாடுகள் நாள்

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

புத்திசாலி முயல்

ஒரு காட்டின் நடுவுல தீவு மாதிரி ஒரு இடம் இருந்தது. இந்த தீவுக்கு போவதற்கு ஒரு குளத்தை கடந்து தான் போகணும்.

அந்த தீவில் சுவையான பழங்களும், காய்கறிகளும் இருந்தது. அந்த காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் அங்க இருக்கிற பழங்களை சாப்பிட ஆசை. ஆனால்! யாருக்குமே அந்த இடத்திற்கு போக தைரியம்  இல்ல. ஏன் என்றால் அந்த குளத்தில் நிறைய முதலைகள் இருந்தது. ஒரு நாள் அதே காட்டில் வாழ்ந்து வந்த  முயல் தண்ணி குடிக்க குளத்திற்கு போனது. அப்போது அந்த தீவை பார்த்து யோசித்தது.

“எனக்கு அந்த தீவுக்குப் போய் அங்கு இருக்கும் எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட ஆசை ஆனால் இந்த முதலைகளிடம் இருந்து தப்பிச்சு எப்படி அங்க போகிறது” என்று ரொம்ப யோசித்தது முயல்.

முயலுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அடுத்த நாள் காலையில் முயல் குளத்திற்கு வந்து எல்லா முதலைகளையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டது.  முதலைகள் கோபத்துடன் முயல் அருகில் வந்தன.

“உங்ககிட்ட ஒன்று சொல்லனும். என்ன எதுவும் செய்ய மாட்டீங்கனு எனக்கு சத்தியம் பண்ணுங்க”

என்று முயல் சொன்னது.அதற்கு

“கவலைப்படாமல் சொல்லு நாங்கள் உன்னை எதுவுமே பண்ண மாட்டோம்” என்று ஒரு முதலை சொன்னது.

“இந்த காட்டு ராஜா இங்கே இருக்கும் எல்லா விலங்குகளுக்கும் ஒரு பெரிய விருது வைக்கணும்னு நினைக்கிறார். அதுக்கு காட்டில் இருக்கிற விலங்குகளோட ஒரு பட்டியல் ரெடி பண்ணுகிறார். நீங்க சம்மதித்தால் நீங்க எத்தனை பேர் இருக்கிறீர்கள் என எண்ண சொன்னார் ” என முயல் சொன்னது.

எல்லா முதலைகளும்

அவர்களுக்குள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டது. அதற்கு பிறகு  ஒரு முதலை “சரி நீ எங்களை எப்படி எண்ணுவாய்”

என்று  கேட்டது. “எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையில நில்லுங்கள்.நான் உங்க முதுகுமேல ஏறி குதித்து, ரொம்ப ஈசியாக எண்ணி விடுவேன்” என்று சொன்னது முயல்.

முயல் சொன்னபடியே எல்லா முதலைகளும் செய்தது. அந்த வரிசை குளத்தோட கரையிலிருந்து தீவோட கரை வரைக்கும் இருந்துச்சு. முயல் உடனே முதலைகளின் முதுகின்மேல் குதித்து, குதித்து வெற்றிகரமாக தீவுக்குப் போய் சேர்ந்தது.

அந்த நாள் முழுக்க முயல் எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு நன்றாக ஒய்வு எடுத்து சாயங்காலம் தீவோட கரைக்கு வந்தது. காலைல போன முயல் ஏன் இன்னும் திரும்பி வரலனு தீவின் கரையிலயே காத்திருந்த முதலைகள் முயலைப் பார்த்ததும் “இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு

இருந்தாய்” என்று கேட்டன.

“அதிக எண்ணிக்கையில் இருக்கும் உங்களை எண்ணுவதில் கொஞ்சம் பிழை ஏற்பட்டு விட்டது. நீங்கள் எவ்வளவு பேர் என எண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்னும் ஒரு முறை காலையில இருந்தது போல அந்த வரிசையில் நில்லுங்க இந்த முறை நான் கண்டிப்பா சரியாக எண்ணிடுவேன்” என்று முயல் சொன்னது.

எல்லா முதலைகளும் முயல் சொன்னதை நம்பி மறுபடியும் வரிசையில் நின்றது. உடனே முயல் முதலைகளின் முதுகில் குதித்து  குளக்கரைக்கு  புத்திசாலித்தனமாக முதலைகளிடமிருந்து தப்பிச் சென்றது.

நீதி :நாமும் புத்திசாலித்தனத்துடன்  யோசித்து செயல்பட்டால் நாம் நினைத்ததை அடையலாம்.


இன்றைய செய்திகள்

24.10.2024

* செய்யாறு சிப்காட் வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மகேந்திரா நிறுவனத்தின் பேட்டரி செல் ஆய்வு மையத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்.

• ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

• முன்னணி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆராய்ச்சி நிறுவனமான OpenAI, அதன் முதல் தலைமை பொருளாதார நிபுணராக ஆரோன் சாட்டர்ஜியை நியமித்துள்ளது.

• சட்டக் கல்லூரிகளில் முதல்முறையாக ஐடி உள்ளிட்ட பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நியமிக்க முடிவு.

• ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று ஐசிஎப் பொது மேலாளர் சுப்பா ராவ் கூறியுள்ளார்.

• உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எட்டாவது ஆசிய சேம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனவேல் என்பவர் வெண்கலம் வென்று சாதனைப்படுத்தி உள்ளார்.


Today's Headlines

* Industrial Minister D. R. P. Raja inaugurated the newly established Battery Cell Research Center of Mahindra Company at Cheyyar Chipgat Campus.

• The Tamil Nadu government has called for a tender for the construction of the Olympic Water Sports Academy for 42 crores in Prapanna Valasai in Ramanad district

• Leading artificial intelligence research firm OpenAI has appointed Aaron Chatterjee as its first Chief Economist.

• Decision to appoint assistant professors for subjects including IT for the first time in law colleges.

• ICF General Manager Subba Rao said that the trial run of the sleeper Vande Bharat train will take place next month.

• Mohanavel from Villupuram district won bronze in the 8th Asian Championship Bangkok Silat held in Uzbekistan.



Prepared by

Covai women ICT_போதிமரம்


Special Camp Days for Addition, Deletion, Correction of Name in Electoral Roll



 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நாட்கள்


வாக்காளர் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09,10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-


09.11.2024 சனிக்கிழமை


10.11.2024 ஞாயிற்றுக்கிழமை


23.11.2024 சனிக்கிழமை


24.11.2024 ஞாயிற்றுக்கிழமை


ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.



தேர்தல்கள் - 01.01.2025ஐ தகுதித் தேதியாகக் கொண்டு புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கத் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் - தலைமைத் தேர்தல் அலுவலர் கடிதம்..



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 Elections - Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2025 as the qualifying date - Revisions Activitics - Special Campaign Dates - Commission's Approval -Communicatcd - Regarding.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : அறத்துப்பால்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் எண்: 198

அரும்பயன் ஆயும் ஆறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள் : சொல்லுக்கு ஆற்றலுண்டு, பயனுண்டு  என்று அறிந்த பெருமக்கள் நல்ல,உயர்ந்த பயன் தராத சொற்களைக் கூமாட்டார்கள். தம் மதிப்பைக் குன்றச் செய்யும் சொற்களை ஒரு போதும் கூறார் என்பது கருத்து."


பழமொழி :
கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.     

The roots of education is bitter, but the fruits are sweet.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :

"சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும். இப்படிக்கு "" முயற்சி""."


பொது அறிவு :

1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம்.

2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

கேரளா


English words & meanings :

Toothpaste - பற்பசை,

Towel - துண்டு


வேளாண்மையும் வாழ்வும் :

கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது.


அக்டோபர் 23

பீலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 23 அக்டோபர் 1940 – 29 திசம்பர் 2022) பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர்.காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.


நீதிக்கதை

நன்றி மறவேல்

ஆத்தியூரில் சுப்பையா என்பவர் வாழ்ந்து வந்தார். சுப்பையா கோடீஸ்வரர். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தான தர்மம் செய்வதில் தலை சிறந்தவர்.

சுப்பையாவின் தானதர்மத்தை கேள்வியுற்று ஏராளமான மக்கள் அவரிடமிருந்து உதவி பெற்றுச் சென்றார்கள். சுப்பையாவும் தன்னைத்தேடி வருகின்றவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் தான தர்மங்களை செய்து வரலானார்.

நாட்கள் செல்ல செல்ல சுப்பையாவின் சொத்துக்கள் எல்லாம் தர்மங்கள் செய்தே குறைய ஆரம்பித்தன. சுப்பையாவோ அதனைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மங்கள் செய்வதிலேயே கவனமாக இருந்தார்.

சில நாட்களில் சுப்பையாவின் வீடு, நிலம் எல்லாவற்றையும் கூட மற்றவர்களுக்கே தானம் செய்துவிட்டார்.

இவரிடமிருந்து உதவி பெற்றவர்களே சுப்பையாவின் பரிதாப நிலமையைக் கண்டும் கூட எந்தவித உதவியும் செய்ய முன் வராமல் சென்று விட்டார்கள்.  தங்குவதற்கு இடம் இல்லாமல் ஓர் சத்திரத்தின் அருகே வந்தார்.

அவர் கண்கள் இருண்டு, காதுகள் அடைத்து பசி மயக்கத்தில் மிகவும் தள்ளாடினார். அந்த நேரத்தில் சத்திரத்தில் ஒரு சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சுப்பையாவின் நிலமையைக் கண்ட அவர்கள் ஏதும் தெரியாதது போல், சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தார்கள். சுப்பையா மெல்ல மெல்ல சத்திரத்தின் திண்ணையோரம் நெருங்கினார். அந்த நேரம் சமையல்காரர் வேகமாக ஓடிவந்து சுப்பையாவை அடித்து விரட்டினார்.

அந்த நேரம் சத்திரத்துக் காவலாளியானவர் சுப்பையாவைப் பார்த்துவிட்டார்.

அவர் உடனே பதறியபடி வேகமாக ஓடிவந்து சுப்பையாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்னர் சமையல்காரரைப் பார்த்து “ஐயா! நன்றி கெட்டவர்களே! இந்த சத்திரம் இவர் பணத்தால் தான் கட்டப்பட்டது.

நீங்கள் கூட இவரிடம் எத்தனையோ முறை உதவி பெற்றுச் சென்றிருக்கின்றீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்தே இவர் இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டார்.

ஆனால் நீங்களோ இவர் செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் நன்றியை மறந்து இவரை அடித்து விரட்டுகின்றீர்கள் என்று கூறியபடி கோபத்துடன் சுப்பையாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாக உபசரித்தார் சத்திரத்துக் காவலாளி.

சுப்பையாவின் பசியெல்லாம் அடங்கிய பின்னர் சத்திரத்து காவலாளி “ஐயா! நானும் தங்களிடம் உதவி பெற்றள்ளேன். நீங்கள் கோயிலுக்கு வருகின்ற நேரமெல்லாம் உங்களை கவனித்திருக்கின்றேன்.

இன்றுதான் உங்களோடு பேசுகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.உங்களோடு  பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அதனைக்கேட்ட சுப்பையா சிரித்தபடியே அந்தக் காவலாளியை நோக்கி,

“அப்பா என் பசியைப் போக்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

நீதி:ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் வாழ வேண்டும். நன்றி உணர்ச்சியோடு வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.


இன்றைய செய்திகள்

23.10.2024

* குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அறிவித்துள்ளது.

* போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

* நாடு முழுவதும் சாலை விபத்துகளில் தினமும் 474 பேர் உயிரிழப்பு:   4.63 லட்சம் பேர் காயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து சான்று அளித்துள்ளது உலக சுகாதார மையம்.

* 2026 காமன்வெல்த் போட்டி: கிரிக்கெட், ஆக்கி , பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கம்.

* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்; 6000 ரன்களை கடந்த முதல் வங்காளதேச வீரராக வரலாற்று சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்.


Today's Headlines

* The Tamil Nadu Public Service Commission has announced that the candidates should upload the missing certificates in the Group-1 examination online by November 2.

* The Madurai branch of the High Court has ordered the inclusion of the registrars of 4 universities as counter-petitioners in the case of fake Tamil education certificate case.

* 474 people die daily in road accidents across the country: 4.63 lakh people are injured, according to the central government.

* The World Health Center has certified Egypt as a malaria-free country.

* 2026 Commonwealth Games: Cricket, Hockey and Badminton are removed.

* International Test Cricket;  Mushfiqur Rahim made history by becoming the first Bangladeshi player to cross 6000 runs.



Prepared by

Covai women ICT_போதிமரம்


TNSED Parents App Update new version 0.0.37 - Updated on 22-10-2024

 



TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.37

 

Updated on 22 October 2024


👉👉 SMC First Resolution Meeting For the year 2024 - 2025


👉👉 Bug Fixes & Performance Improvements


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent





For parents of students from Tamil Nadu for information and school management


Parent App is an app created by the Tamil Nadu State Education Department with a goal of engaging parents and the larger community towards the development of schools. 


Parents can access information about their children’s attendance, scholastic and co-scholastic performance. Feedback can be provided on the management of the school and welfare schemes and scholarships offered. 


Parents can view all data about the school - student enrollment, teacher details and infrastructure. 


Members of the School Management Committee can collect data of the school and surrounding habitation to plan for the development of the school. All parents of the school can access the resolutions passed by this committee.  


Parents can offer feedback across various categories like infrastructure, safety, learning and welfare schemes.  


Parents can access resources on child development, education schemes and career options to support their children.


SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024

 

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் School Management Committee கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 18-10-2024...



SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

SMC உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD & LETTER PAD மாதிரி ( PDF & Word File)



 SMC உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD &  LETTER PAD மாதிரி ( PDF & Word File)


🏠🦹🏻 _*பள்ளி மேலாண்மைக் குழு (SMC - 2024-26) உறுப்பினர்களுக்கு தேவையான*_


1. ID CARD ( PDF Model & Empty File, Word File)


2. LETTER PAD ( PDF File & Word File)


*அனைத்தும் PDF, WORD FILE ஆக ஒரே Linkல் கொடுக்கப்பட்டுள்ளது.*


🔗 https://drive.google.com/drive/folders/1lO5HF2B8kuuqx2RNoq_IxeJFdVPq_Jxj?usp=drive_link


நன்றி!




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...