கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - Annexure 1 - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE 2 - Appointment Details படிவங்கள்


 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - Annexure I - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE II - Appointment Details படிவங்கள்


Post Graduate Teacher Promotion - Annexure I - P.G. TEACHER PANEL PARTICULARS & ANNEXURE II - Appointment Details Formats



>>> Click Here to Download - Annexure 1...



>>> Click Here to Download - Annexure 2...



எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்று ஒரு சிறுகதை

 

எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்றைய சிறுகதை


You become what you think - Today's short story


#பேசி_பேசியே...


குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.


இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.


 நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். 


பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.


குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.


உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்.


பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.



புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.


அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?


பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.


"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.


மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.


அதுல சந்தேகமே இல்லை.


ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.


'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். 


அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான்.


அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.


எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.


பேசி ! பேசியே ஆளை வீழ்த்துவது இப்படித்தான்.


(இது போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.)


பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.


பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்

மிருகபலத்தோடு இருப்போம்.


பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம். பலவீனப்பட வேண்டாம்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்


#வாழ்த்துகள்.


#வாழ்க_வளத்துடன்.


*சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள்🙏*


Booking for the hostel rooms built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur started from 29-10-2024 - TNHRCE Press Release


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் திருச்செந்தூரில் நிர்வகிக்கப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம்...



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம் - அறைகள் வாடகை குறித்த தகவல்கள் - இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு...



Booking for the hostel rooms for devotees built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur will start from 29-10-2024 - Details of Room Rent - TNHRCE Press Release...



>>> இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2024

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : பொருட்பால்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண்: 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."


பழமொழி :
Do good to those who harm you

பகைவனை நேசித்துப்பார்


இரண்டொழுக்க பண்புகள் : 

*திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு , வேடிக்கை பார்த்தவர்க்கும்,விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.......,


பொது அறிவு :

1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?

விடை: தென்பெண்ணை

2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?

விடை: சாரதா கால்வாய்


English words & meanings :

Needle-ஊசி,                                       

Pliers-இடுக்கி


வேளாண்மையும் வாழ்வும் :

பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.


அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்தநாள்

1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது.


நீதிக்கதை

அச்சம்

அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும்தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால்  அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார்.

அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு  ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள்  கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின்  குகையின் அருகே  அமைக்கப்பட்டது.

அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.

நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.


இன்றைய செய்திகள்

30.10.2024

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார்.

* தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி.

* நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் ஆட்டம் 'டிரா'.

* கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி'ஆர் 2024 விருதை வென்றார் மான்செஸ்டர் சிட்டி மிட் பீல்டர் ரோட்ரி.


Today's Headlines

* Chennai Police Commissioner Arun has issued 19 restrictions on bursting crackers on the occasion of Diwali.

* No chance of heavy rain in Tamil Nadu till November 1: Meteorological Department confirms.

* A nationwide census will be launched next year.  Based on this, the constituencies will be redefined in the coming year 2028, the central government sources said.

* Pro Kabaddi League;  Bengal Warriors - Puneri Paltan Match 'Draw'.

* Manchester City midfielder Rodry has won football's highest award, the Ballon d'Or 2024.


Prepared by

Covai women ICT_போதிமரம்


District Level Kalai Thiruvizha Competitions - Guidelines - SPD Proceedings Letter, Dated : 28-10-2024

 

1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 28-10-2024



Conduct of District Level Kalai Thiruvizha Competitions for Class 1-12 Students - Issue of Guidelines - Proceedings Letter from State Project Director, dated : 28-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை நவம்பர் 11 முதல் 20-ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.*



இதுகுறித்து *SPD -  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி,* அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: 



*“தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு*  பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. *வட்டார அளவிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.* இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் *வரும் நவம்பர் 8-ம் தேதிக்குள்* பதிவு செய்ய வேண்டும்.



வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை கொண்டு *நவம்பர் 11 முதல் 20-ம் தேதி வரை  மாவட்ட அளவிலான போட்டிகளை* நடத்த வேண்டும். இதில், முதல் 3 வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் 21-11-2024  தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.



மாவட்ட அளவிலான போட்டிகளை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு தனியாக நடத்திட வேண்டும். *மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உடன் செல்ல வேண்டும்.* பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக இருந்தால், அந்த பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் போட்டியில் அவர்கள் நடுவர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். *வட்டார அளவிலான போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படும்.* இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்திட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.


WhatsApp குழுக்களில் வரும் App install link குறித்த விழிப்புணர்வு தகவல்

 


WhatsApp குழுக்களில் வரும் App install link குறித்த விழிப்புணர்வு தகவல்


விழிப்புணர்வு தகவல் - Awareness Information 


அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


தாங்கள் இருக்கும் WhatsApp குழுக்களில் இதுபோன்று State Bank of India உள்ளிட்ட பிற வங்கிகளின் பெயர்களில் வரும் App install link ஐ தொட வேண்டாம். இது ஒரு HACKING App. இதனை தொட்டவுடன் நீங்கள் உள்ள அனைத்து Whatsapp குழுக்களுக்கும் தானாக சென்றுவிடும். அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்றவை மூலம் தங்கள் அலைபேசிகளில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புண்டு.


தங்கள் அலைபேசியில் உள்ள Google Play Storeல் உள்ள செயலிகளை (Apps) மட்டும் Download செய்து பயன்படுத்துவது பாதுகாப்பானது.


Tamil Nadu government announced a half-day holiday for schools and colleges tomorrow (October 30) on the occasion of Diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்டோபர் 30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு


தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30-10-2024) முற்பகல் மட்டும் செயல்படும் - பிற்பகல் அரை நாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


The Tamil Nadu government has announced a half-day holiday for schools and colleges tomorrow (October 30) on the occasion of Diwali.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6,967 crore worth of Rs 2,000 notes are yet to be returned to RBI

 6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை  6,967 crore worth of Rs 2,000 notes are yet to be ...