கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"Beno Zephine" Children Film Screening - December 2024 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis




டிசம்பர் மாத சிறார் திரைப்படம் BENO ZEPHINE (பெனோ) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


December Movie Screening Circular 2024-25 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



"Beno Zephine" Children Film Screening - December 2024 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis



பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பெனோ (Beno)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2024 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் -  வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 02-12-2024 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Beno Zephine" Children Film Screening - December 2024 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis)...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 02-12-2024 & கதைச்சுருக்கம்...


Pay Authorization Order for 6 months for 750 teaching posts in upgraded schools in the academic year 2017-2018 - Government Secretary's letter, dated : 28-11-2024

 

2017-2018-ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 750 ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்‌ - அரசுச்‌ செயலாளர்‌ கடிதம், நாள் : 28-11-2024


Issue of Pay Authorization for 6 months for 750 teaching posts in upgraded schools in the academic year 2017-2018 - Government Secretary's letter, dated : 28-11-2024


பள்ளிக் கல்வித் துறை, 

தலைமைச் செயலகம்,

சென்னை - 600006


கடித எண் (efile ) : 10976 / ப.க.5 (1)/ 2024-1, நாள் : 28-11-2024


 01-11-2024 முதல் 30-04-2025 வரை ஆறு மாதங்களுக்கு சம்பளம்‌ வழங்கும்‌ அதிகாரம்‌.


அனுப்புநர்‌

திருமதி. சோ.மதுமதி, இ.ஆ.ப.,

அரசுச்‌ செயலாளர்‌.


பெறுநர்‌

அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள்‌ /சார்‌ கருவூல அலுவலர்கள்‌.

சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌, சென்னை-01 / 08 / 35.

சம்பந்தப்பட்ட சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌.


ஐயா,

பொருள்‌: பள்ளிக்கல்வி - 2017-2018-ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட 150 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 31.07.2024 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்டது - அதனை தொடர்ந்து 01.08.2024 முதல்‌ 31.10.2024 வரை பள்ளிக்‌ கல்வி இயக்குநரால்‌ விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது - தற்போது 01.11.2024 முதல்‌ 30.04.2025 வரை மேலும்‌ ஆறு மாதங்களுக்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌.174, பள்ளிக்கல்வித்‌ [அ௧இ 1] துறை, நாள்‌. 18.07.2017.

2. அரசாணை (1டி) எண்‌. 39, பள்ளிக்கல்வித்‌1பக5(1)]துறை, நாள்‌. 23.02.2022.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறை ந.க. எண்‌. 31574 /எல்‌/இ3/2021, நாள்‌. 01.08.2024.

4. பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.31574/எல்‌ 7/இ3/2021, நாள்‌.14.11.2024.


பார்வை 1-இல்‌ காணும்‌ அரசாணைகளில்‌ 2017 - 2018-ஆம்‌ கல்வியாண்டில்‌ 150 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப்‌ பள்ளிகளை உயர்நிலைப்‌ பள்ளிகளாக தரம்‌  உயர்த்தப்பட்டு அவ்வாறு தரம்‌ உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு தலா ஒரு உயர்நிலைப்‌ பள்ளிக்கு 5 பட்டதாரி பணியிடங்கள்‌ வீதம்‌ 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவித்தும்‌ 150 உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களை உயர்நிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வழங்கப்பட்டது. பார்வை 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌, பார்வை 1-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ தோற்றுவிக்கப்பட்ட 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 31.07.2024 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.08.2024 முதல்‌ 31.10.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில்‌, 01.11.2024 முதல்‌ 30.04.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக்‌ கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பார்வை 4-இல்‌ காணும்‌ கடிதத்தில்‌ பள்ளிக்கல்வி இயக்குநர்‌ கடிதத்தில்‌ அரசை கேட்டுக்கொண்டுள்ளார்‌.





கனமழை விடுமுறை அறிவிப்பு - 03-12-2024

 

 

கனமழை காரணமாக 03-12-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 03-12-2024 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 03-12-2024


தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


▪️  நீலகிரி (பள்ளிகள் மட்டும்)


▪️  ராணிப்பேட்டை (பள்ளிகள் மட்டும்)


▪️  சேலம் (பள்ளிகள் மட்டும்)


▪️  விழுப்புரம் (பள்ளி + கல்லூரி)


▪️  கடலூர் (பள்ளி + கல்லூரி)


▪️  புதுச்சேரி (பள்ளி + கல்லூரி)


▪️  திருவண்ணாமலை (பள்ளிகள் மட்டும்)


▪️  கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும்)


▪️  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சி  பள்ளிகளுக்கு மட்டும்


Places in Tamil Nadu that recorded the highest rainfall in the last 24 hours

 தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைப் பொழிவு பதிவான இடங்கள்


 Places in Tamil Nadu that recorded the highest rainfall in the last 24 hours



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2024

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:845

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்.

பொருள்:
அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்."


பழமொழி :
When one door shuts another open.

ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் : 

*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :

கற்றவர்களிடம் கற்பதை விட,  கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள் -- காரல் மார்க்ஸ்


பொது அறிவு :

1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?

விடை : பிப்ரவரி 28.      

2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?   

விடை : பஞ்சாப்


English words & meanings :


Lonely. -  தனிமை,

Loving. -   அன்பான


வேளாண்மையும் வாழ்வும் :

வேம்பு  கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும்.


டிசம்பர் 02

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.



நீதிக்கதை

சாவி

ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து  விடுகிறாயே எப்படி?

அதற்கு சாவி,"நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.ஆனால், நான் பூட்டின் இதயத்தை

தொடுகிறேன். என்னுடைய அன்பினால் பூட்டு விரைவில் திறந்து விடுகிறது"என்று பதில் கூறியது. 

நீதி: அன்பே உலகை ஆளும்.


இன்றைய செய்திகள்

25.11.2024

* புதுச்சேரியில் வரலாறு காணாத கடும் மழை பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

* வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

* இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன.

* FBI இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்.

* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி; இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி.

* சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Indian Army is engaged in rescuing victims of  unprecedented heavy rains in Puducherry.

* Water is being released from the Veeranam Lake catchment area due to continuous rains.

* UAE, Vietnam and Indonesia have expressed interest in buying the Brahmos supersonic missile jointly developed by India and Russia.

* Trump recommends Indian-origin Kash Patel as FBI director.

* Junior Asia Cup hockey; Indian team got 'hat trick' victory.

* International badminton: P.V. Sindhu advances to final.



Prepared by

Covai women ICT_போதிமரம்


Tiruvannamalai Annamalaiyar Temple - Drone Video


 Tiruvannamalai Annamalaiyar Temple | Drone Video | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் | டிரோன் வீடியோ




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 02-12-2024

 

கனமழை காரணமாக 02-12-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 02-12-2024 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 02-12-2024


💥   செங்கல்பட்டு மாவட்டத்தில் சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 


செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 


பள்ளிகளில் மழைநீர் இருந்தால் சூழ்நிலையை பொறுத்து பள்ளி தலைமை ஆசிரியரே விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யலாம் என தெரிவிப்பு


*#BREAKING || செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை*


செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை


திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை


மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு






💥   நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.


💥   நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


💥  சேலம் ( பள்ளிகள் மட்டும்)


💥  கிருஷ்ணகிரி ( பள்ளி,  கல்லூரிகள்)


💥  கள்ளக்குறிச்சி ( பள்ளி,  கல்லூரிகள்)


💥  தர்மபுரி ( பள்ளிகள் மட்டும்)


💥  திருப்பத்தூர் (  பள்ளிகள் மட்டும்)


💥  கடலூர் ( பள்ளி,  கல்லூரிகள்)


💥   வேலூர் ( பள்ளிகள் மட்டும்)


💥   ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும்)


💥   திருவண்ணாமலை ( பள்ளி,  கல்லூரிகள்)


💥  விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரிகள்)


💥  புதுச்சேரி ( பள்ளி,  கல்லூரிகள்)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள...