பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
"பால்: பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்.
பொருள்:
அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்."
பழமொழி :
When one door shuts another open.
ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்
*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்
பொன்மொழி :
கற்றவர்களிடம் கற்பதை விட, கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள் -- காரல் மார்க்ஸ்
பொது அறிவு :
1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
விடை : பிப்ரவரி 28.
2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?
விடை : பஞ்சாப்
English words & meanings :
Lonely. - தனிமை,
Loving. - அன்பான
வேளாண்மையும் வாழ்வும் :
வேம்பு கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும்.
டிசம்பர் 02
சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்
சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
நீதிக்கதை
சாவி
ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே எப்படி?
அதற்கு சாவி,"நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.ஆனால், நான் பூட்டின் இதயத்தை
தொடுகிறேன். என்னுடைய அன்பினால் பூட்டு விரைவில் திறந்து விடுகிறது"என்று பதில் கூறியது.
நீதி: அன்பே உலகை ஆளும்.
இன்றைய செய்திகள்
25.11.2024
* புதுச்சேரியில் வரலாறு காணாத கடும் மழை பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
* வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
* FBI இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்.
* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி; இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி.
* சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* The Indian Army is engaged in rescuing victims of unprecedented heavy rains in Puducherry.
* Water is being released from the Veeranam Lake catchment area due to continuous rains.
* UAE, Vietnam and Indonesia have expressed interest in buying the Brahmos supersonic missile jointly developed by India and Russia.
* Trump recommends Indian-origin Kash Patel as FBI director.
* Junior Asia Cup hockey; Indian team got 'hat trick' victory.
* International badminton: P.V. Sindhu advances to final.
Prepared by
Covai women ICT_போதிமரம்