கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Chief Minister Stalin donated one month's salary to the Chief Minister's Public Relief Fund



முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்


Chief Minister Stalin donated one month's salary to the Chief Minister's Public Relief Fund


ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.


ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.


ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


2 admissions per year henceforth in higher education – UGC

 

 உயர்கல்வியில் இனி 2 முறை மாணவர் சேர்க்கை.


உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை.


ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.


புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய நடைமுறைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு.


உயர் கல்வியில் இனி 2 முறை மாணவர் சேர்க்கை - UGC வெளியிட்ட அறிக்கை

இனி உயர் கல்வியில் இரு முறை மாணவர் சேர்க்கை, எப்போது வேண்டுமானாலும் துறை மாறலாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையில் இனி பின்பற்றப்படும் நடைமுறைக்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்த முறையை பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய விதிமுறைப்படி இனி ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மேற்கொள்ளப்படும். அதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பன்னிரெண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தாலும் மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


பட்டப்படிப்பில் பயில்கின்ற போது எந்த ஆண்டில் வேண்டுமானாலும் சேரலாம் என்றும் அதேபோல் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான “multiple entry and exit” முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும் முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அதேபோல் இளநிலை, முதுகலை படிப்புகளை ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், படித்த ஆண்டுகளுக்கு ஏற்ப சான்றிதழ் படிப்பாகவோ, பட்டயமாகவோ, பட்டமாகவோ கருத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும். யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல், பொதுமக்களின் கருத்துக்களுக்காக தனது இணையதளத்தில் வரைவு விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.




Class 4 & 5 teachers can now take Assessment on TNSED app. Last date is 13.12.2024

4 & 5 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் தற்போது  TNSED செயலியில் ASSESSMENT மேற்கொள்ளலாம். கடைசி நாள் 13.12.2024


Class 4 & 5 teachers can now take Assessment on TNSED app. Last date is 13.12.2024





Half - Yearly Examinations - Class 6 - 8 - QP and Answer Key Download Schedule

 

 

Middle Schools - Half - Yearly Examinations - Class 6 - 8 - Question Paper and Answer Key Download Schedule


அரையாண்டுத் தேர்வு - வகுப்பு 6 - 8 - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை


As per the schedule, Class 6 - 8 Tamil exam QP will be available for download from tomorrow (06.12.2024) morning 9.00 am.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRUST Exam December 2024 - Hall Ticket & Nominal Roll Download - DGE Joint Director Proceedings


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) டிசம்பர் 2024 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக - அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநரின் கடிதம்


TRUST Exam December 2024 - Hall Ticket & Nominal Roll Download - DGE Joint Director Proceedings Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Postponement of half-yearly examinations in three districts - DSE Proceedings


மூன்று மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Postponement of half-yearly examinations in three districts - Proceedings of the Director of School Education



பள்ளிக் கல்வி - ஃபெஞ்சால் புயல் (Fengal cyclone) - கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் -மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு



>>> இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருவண்ணாமலை,  விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு.


2025 ஜனவரி 2 முதல் ஜனவரி 10க்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவு.


ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.


இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த முடிவு. 


எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச. 24 - ஜன. 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிவிப்பு.



At the Block education office, the teachers are on a sit-in


வட்டாரக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


At the Block education office, the teachers are on a sit-in


 கோவை: மதுகரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலர் நேசமணியை கண்டித்து மதுக்கரை வட்டார ஆசிரியர்கள் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டம்


மதுக்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி பலன்தொகையை, கடந்த ஓராண்டாக பெற்றுத் தராத வட்டார கல்வி அலுவலரை, கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் துவங்கிய இந்த போராட்டம் இரவு ஆகியும் ஆசிரியர்கள் கலைந்து செல்லாமல் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...