கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special buses to be run from 12.12.2024 to 15.12.2024 on the occasion of Tiruvannamalai Karthikai Deepa Thirunal - Press Release



திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாள் முன்னிட்டு 12.12.2024 முதல் 15.12.2024 வரை இயக்கபடவுள்ள சிறப்பு பேருந்துகள் - செய்தி வெளியீடு 


Special buses to be run from 12.12.2024 to 15.12.2024 on the occasion of Tiruvannamalai Karthikai Deepa Thirunal - Press Release


திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டும் 14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது. மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




District Treasury Officer directs full payment of medical expenses under NHIS insurance scheme

 


 முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் சிகிச்சைக்கான தொகையை முழுமையாக வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


NHIS காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கான செலவுத் தொகையை முழுமையாக வழங்க மாவட்டக் கருவூல அலுவலர் உத்தரவு


District Treasury Officer directs full payment of medical expenses under NHIS insurance scheme



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




விவரம் 👇


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள்:


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021 (Employees) திரு. சா.தா.இராஜேஷ். விருதுநகர் கிளை மாவட்டத் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- இடைநிலை ஆசிரியர் திருமதி.ஜெயா என்பவர் மதுரை Dr.அகர்வால் கண் மருத்துவமனையில் 06.11.2024 அன்று கண்புரை அறுவைச் சிகிச்சை செய்தது -புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசாணைக்கு புறம்பாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைத் தொகை ரூ.30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) வழங்க மறுத்ததன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பாக.


பார்வை:

முதலமைச்சரின் தனிப் பிரிவு முகாம் மனு எண்..10443170 : 07.11.2024.


***


பார்வையில் காணும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுவில் மனுதாரர் திருசா.தா.இராஜேஷ். விருதுநகர் கிளை மாவட்டத் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பவர் இடைநிலை ஆசிரியர் திருமதி.ஜெயா, மதுரை Dr.அகர்வால் கண் மருத்துவமனையில் 06.11.2024 அன்று கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதில், அச்சிகிச்சைக்கான செலவினத் தொகை .30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்)-தில் காப்பீட்டு நிறுவனம் ரூ.21,000/-மட்டுமே வழங்கியதாகவும், அறுவைச் சிகிச்சை முடித்ததும் மதுரை Dr.அகர்வால் கண் மருத்துவமனை Discharge Summary, Lens Invoice போன்ற ஆவணங்களைத் தரமறுத்தால், மீதித் தொகை காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.


எனவே, பார்வையில் காணும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு நகல் தங்களின் மேலான பார்வைக்காகவும், மீதித் தொகை ரூ.9,000/-(ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்)-ஐ இடைநிலை ஆசிரியர் திருமதி.ஜெயா என்பவருக்கு கிடைக்கப்பெற்ற ஆவண செய்யுமாறும் இக்கடிதத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது என்ற விவரத்தினை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..


இணைப்பு: பார்வையில் காணும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு நகல்




Karthikai Deepam Festival - 9 days holiday for schools - CEO Proceedings

 


கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 08 முதல் 16ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


Karthikai Deepam Festival - 9 days holiday for 156 schools in Tiruvannamalai Corporation and surrounding area from 08th December to 16th - Proceedings of Chief Education Officer



>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




INCOME TAX 2024-2025 பிடித்தம் குறித்த தகவல்கள்

 

 

INCOME TAX 2024-2025 பிடித்தம் குறித்த தகவல்கள்


வருமான வரி பிடித்தம் பிரதி மாதம்  பிடித்தம் செய்யப்பட்ட தொகையை *IFHRMS மூலம் PAY SLIP DOWNLOAD* செய்து


 வருமான வரி கணக்கீட்டு படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தொகையை அறிந்து மீதமுள்ள மாதத்திற்கு எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திட வேண்டுகிறோம்


தேவைப்பட்டால்,


*டிசம்பர் மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்து அதற்கான COVERING LETTER ம் வைத்து அலுவலகத்திற்கு அனுப்பிடலாம்*


வருமான வரித் தொகை பிடித்தம் போதுமானதாக இருந்தால் மாற்றம் தேவையில்லை....


ரூ.10,00,000 லட்சத்திற்குள் ஊதியம் பெறுபவர்களுக்கு *பழைய முறையும்* 


10,00,000 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு *புதிய வருமான வரி முறையும்  பயனுள்ளதாக இருக்கும்*



*புதிய வரி முறையில்*


*ரூ.75,000* ரூ நிரந்தரக் கழிவு

(சென்ற வருடம் ரூ.50,000 ஆக இருந்தது)


முதல் 3,00,000க்கு NIL


3,00,000 - 7,00,000 --- 5%


(*சென்ற  ஆண்டில் 6 லட்சம் வரை இருந்தது தற்போது 1 லட்சம் கூடுதலாக்கப்பட்டுள்ளது*)


7,00,000 - 10,00,000 ----- 10%


10,00,000 - 12,00,000 ----15%


12,00,000 - 15,00,000 ----20%


15 லட்சத்திற்கு மேல் -30%



இனி வரும் மாதங்களில் வருமான வரி பிடித்தத்தை சரி செய்து கூடுதலாக பிடித்தம் செய்வதை தவிர்த்திடலாம்...


*டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி 3 மாதங்களில் எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை  நாம் கணக்கீடு செய்தால் மட்டுமே உறுதி செய்யலாம்*


கவனத்திற்காக,


*IFHRMS ல் தானாகவே கணக்கீடு செய்வதால் நமது வருமான வரி தொகை முடிவடைந்தவுடன்  பிடித்தத்தை நிறுத்திடவும் வாய்ப்பு உண்டு என தகவல் இருந்தாலும் நிறைய பேருக்கு ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையே அதிகமாக உள்ளது*


இருப்பினும் 


நாம் முன் எச்சரிக்கையாக இருப்பது பின்னர்  கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை *REFUND* வாங்கிட தேவை இருக்காது.



Income tax deducted in IFHRMS correct? What is the exact income tax for 2024-2025?

 


IFHRMSல் பிடித்த வருமானவரி சரியா? 2024-2025க்கான துல்லியமான வருமானவரி எவ்வளவு? IFHRMSல் கொடுத்த சேமிப்புகள் போதுமானதா? கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன? சமர்ப்பிக்க வேண்டியது எப்போது?


Income tax deducted in IFHRMS correct? What is the exact income tax for 2024-2025? Are the savings given in IFHRMS enough? What are the documents required? When to submit?



தமிழ்நாடு அரசின் ஊதியம் பெறும் ஊழியர்கள் அனைவரும் 2024-25 நிதியாண்டிற்கான வருமானவரிக் கணக்கீட்டு முறையை IFHRMSல் முன்னரே உள்ளீடு செய்துள்ளனர்.



இவர்களில், பழைய வரிக் கணக்கீட்டு (Old Regime) முறையைத் தேர்வு செய்துள்ளோர் தாங்கள் உள்ளீடு செய்துள்ள வரிக் கழிவுகள் / சேமிப்புகளுக்கான அசல் ஆவணங்களை டிசம்பர் முதல் வாரத்தில் (அதிகபட்சம் 10.12.2024 தேதிக்குள்) தங்களது அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.


அவ்வாறு  ஒப்படைக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையில்தான் வரிக் கழிவுகளை அலுவலகத்தில் சரிபார்த்து இறுதி செய்வர்.



முன்னதாக, ஊழியர்கள் தாங்களாக உள்ளீடு செய்துள்ள சேமிப்புகள் அனைத்தும் தோராய மதிப்பாகத் தான் இருக்கும் என்பதால். . .


1. தங்களது ஆண்டு வருவாய்க்கேற்ற சரியான வரிக் கணக்கீட்டு முறை (Regime) எது?


2. Old Regimeஐத் தேர்வு செய்தோர் வரிக்கழிவு பெற சேமிப்புகளாக எவ்வளவு காட்டலாம்?


3. 50% & 53% DA மாற்றத்திற்குப் பின்னர் Old / New Regimeல் துல்லியமாக எவ்வளவு வருமானவரி கட்ட வேண்டி வரும்?



4. IFHRMSல் தானியங்கி முறையில் வரி (ஓரளவு) சரியாகத்தான் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறதா?


என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள இணைப்பில் சென்று  IT Calculator 2025ஐ (Proposal Version 2) Excel fileஆக Download செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


https://docs.google.com/spreadsheets/d/1SiXqvlyWrKGH8ONH26Pza5ppYpInH5os/edit?usp=sharing&ouid=109516056301253568317&rtpof=true&sd=true


நினைவிருக்கட்டும் OLD REGIME தேர்வு செய்தவர்கள்,


வீட்டுவாடகை இரசீது / ஒப்பந்தப் பத்திரம் அல்லது



 Rs.8333/-க்கு மேல் மாத வீட்டுவாடகை எனில், உரிமையாளரின் PAN நகல் அல்லது


Housing Loan எனில், வங்கியிலிருந்து பெறப்படும் Yearly Loan Repayment Statement.


 Insurance உள்ளிட்ட 80C தொடர்பான சேமிப்புகளின் இரசீதுகள் (Dec வரை கட்டியதற்குத்தான் இரசீதுகள் வைக்க இயலும்)


 NHIS நீங்கலாக, 80D மருத்துவக் காப்பீடு / செலவினங்கள் தொடர்பான இரசீதுகள்.



குடும்ப உறுப்பினர் மாற்றுத்திறனாளி (80DD) / இரத்தம், நரம்பு தொடர்பான சிகிச்சைச் செலவினம் (80DDB) எனில் அதற்குரிய சான்றுகள், Form 10 I & மருத்துவச் செலவின இரசீதுகள்.


Education Loan எனில், வங்கியிலிருந்து பெறப்படும் Yearly Loan Repayment Statement.


வேறு ஏதேனும் சேமிப்புகளெனில், அதற்குரிய இரசீதுகள் உள்பட தாங்கள் எவற்றிற்கெல்லாம் உள்ளீடு செய்துள்ளீர்களோ / இவ்விரு மாதங்களில் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கெல்லாம் உரிய உண்மை ஆவணங்களை டிசம்பர் முதல் வாரத்தில் தங்களது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.


06-12-2024 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-12-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு.

பொருள்:அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்."


பழமொழி :
சிறுகக் கட்டிப் பெருக வாழ். 

Built a small house and live thriftily.


இரண்டொழுக்க பண்புகள் : 

*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :

உங்களின் பணிவு உங்களின் முன்னேற்றமாக மாறும் --- ரமணர்


பொது அறிவு :

1. தாவர இலைகளின் பச்சையத்திற்கு காரணம் என்ன?

விடை: குளோரோஃபில்

2. பெற்றிடத்தின் வழியே பரவாதது எது?

விடை: ஒலி


English words & meanings :

Selfishness.      -    சுயநலம்,

Shame.              -    அவமானம்


வேளாண்மையும் வாழ்வும் :

பல நாடுகள், கரிம வேளாண்மையின் வெளிப்புற நன்மைகள் என்று கொள்ளப்படும், குறைந்த அளவிலான நீரின் உபயோகம், நீர் மாசுபடுதல் குறைதல், சத்துக்கள், மண் அரித்தழிப்பு குறைதல், கரியமில வாயுவின் வெளிப்பாடு குறைதல், பல்லுயிரினங்கள் அதிகரித்தல் மற்றும் வகைப்படுத்தப்பட்ட பலன்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன.


டிசம்பர் 06

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது


நீதிக்கதை

கழுகு

ஒரு நாள் காகம் ஒன்று கழுகின் மேல் அமர்ந்து கொண்டு   தனது அலகால் அதன் கழுத்தை கொத்த தொடங்கியது.

ஆனால் மறுபுறம் கழுகோ காகத்தை திரும்ப தாக்கவில்லை. தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் அமைதியாகவே சிறிது நேரம் இருக்கும்.

பின்பு, கழுகு எளிமையாக தனது சிறகுகளை விரித்து, வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.

உயரம் கூட கூட காகம் சுவாசிக்க இயலாமல் சிரமப்பட்டு கீழே

விழுந்துவிடும்.

நீங்களும் உங்களை விமர்சனம் செய்பவர்களை கண்டு  உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை இழுத்துச் செல்லுங்கள். ஒரு நாள் அவர்களே காணாமல் போய்விடுவார்கள்.


இன்றைய செய்திகள்

06.12.2024

*பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் அறிவிப்பு.  

*தமிழ்நாட்டில் வரும் 9-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

*கல்லூரிகளை மேம்படுத்த 152 கோடி ரூபாய்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.  
            
*தங்களது சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியில் ஜிம்பாவே அணி பாகிஸ்தான் அணியை பரபரப்பான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


Today's Headlines

*Announcement of special small business loan scheme camp for small businessmen of Villupuram, Cuddalore, Kallakurichi, Thiruvannamalai, Dharmapuri and Krishnagiri districts affected by Cyclone Benjal.   

* While the half-yearly examination will start from 9th in Tamil Nadu, the school education department has said that the half-yearly examination will start in the first week of January for the districts affected by rain due to the storm.Minister Anbil Mahes said.

* 152 crore rupees to improve colleges: Government of Tamil Nadu financial allocation - Minister Kovi Chezhiyan announced.

* Zimbabwe beat Pakistan by two wickets in the final match of the three-match T20I series at home.


Covai women ICT_போதிமரம்


POCSO case against teacher - students strike

 

 

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு - மாணவர்கள் போராட்டம்



மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்


மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது வழக்குப்பதிந்ததை கண்டித்து, மாணவர்கள் போராட்டம்


பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் - காவல்துறை பேச்சுவார்த்தை


500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு


பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்து தர்ணா போராட்டம் - பரபரப்பு


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...