கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டக் கருவூலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்டக் கருவூலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

District Treasury Officer directs full payment of medical expenses under NHIS insurance scheme

 


 முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் சிகிச்சைக்கான தொகையை முழுமையாக வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


NHIS காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கான செலவுத் தொகையை முழுமையாக வழங்க மாவட்டக் கருவூல அலுவலர் உத்தரவு


District Treasury Officer directs full payment of medical expenses under NHIS insurance scheme



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




விவரம் 👇


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள்:


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021 (Employees) திரு. சா.தா.இராஜேஷ். விருதுநகர் கிளை மாவட்டத் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- இடைநிலை ஆசிரியர் திருமதி.ஜெயா என்பவர் மதுரை Dr.அகர்வால் கண் மருத்துவமனையில் 06.11.2024 அன்று கண்புரை அறுவைச் சிகிச்சை செய்தது -புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசாணைக்கு புறம்பாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைத் தொகை ரூ.30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) வழங்க மறுத்ததன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பாக.


பார்வை:

முதலமைச்சரின் தனிப் பிரிவு முகாம் மனு எண்..10443170 : 07.11.2024.


***


பார்வையில் காணும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுவில் மனுதாரர் திருசா.தா.இராஜேஷ். விருதுநகர் கிளை மாவட்டத் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பவர் இடைநிலை ஆசிரியர் திருமதி.ஜெயா, மதுரை Dr.அகர்வால் கண் மருத்துவமனையில் 06.11.2024 அன்று கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதில், அச்சிகிச்சைக்கான செலவினத் தொகை .30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்)-தில் காப்பீட்டு நிறுவனம் ரூ.21,000/-மட்டுமே வழங்கியதாகவும், அறுவைச் சிகிச்சை முடித்ததும் மதுரை Dr.அகர்வால் கண் மருத்துவமனை Discharge Summary, Lens Invoice போன்ற ஆவணங்களைத் தரமறுத்தால், மீதித் தொகை காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.


எனவே, பார்வையில் காணும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு நகல் தங்களின் மேலான பார்வைக்காகவும், மீதித் தொகை ரூ.9,000/-(ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்)-ஐ இடைநிலை ஆசிரியர் திருமதி.ஜெயா என்பவருக்கு கிடைக்கப்பெற்ற ஆவண செய்யுமாறும் இக்கடிதத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது என்ற விவரத்தினை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..


இணைப்பு: பார்வையில் காணும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு நகல்




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...