கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு 12-12-2024

  


கனமழை காரணமாக 12-12-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 12-12-2024 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 12-12-2024


பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் சற்று முன்பு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிப்பு 


முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)


💥 சேலம்


💥 திருப்பத்தூர்


💥 தூத்துக்குடி


💥 வேலூர்


💥 கரூர்


💥 திருவள்ளூர்


💥 ராணிப்பேட்டை


💥 திருவண்ணாமலை (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 செங்கல்பட்டு


💥 அரியலூர்


💥 சென்னை


💥 விழுப்புரம்


💥 காஞ்சிபுரம்


💥 கடலூர்


💥 மயிலாடுதுறை


💥 தஞ்சாவூர்


💥 புதுக்கோட்டை


💥 திருவாரூர்


💥 இராமநாதபுரம்


💥 திண்டுக்கல்


💥 திருநெல்வேலி மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


💥கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.12.24) விடுமுறை.


*தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுடன் கல்லூரிகளுக்கும் இன்று (டிச.12) விடுமுறை  - மாவட்ட ஆட்சியர் அறிவுப்பு




கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 12/12/2024 பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு


*🔴 சென்னை, விழுப்புரம் விடுமுறை.*

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்   அறிவிப்பு.


*கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் விடுமுறை.*

தொடர் மழை காரணமாக கடலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.


*தஞ்சை, மயிலாடுதுறை விடுமுறை.*

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.


*காஞ்சிபுரம், திருவாரூர், இராமநாதபுரம் விடுமுறை.*

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


▪️  மயிலாடுதுறையில் இன்று விடுமுறை.


கனமழை எச்சரிக்கையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மகாபாரதி


💥நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.


நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று (12.12.2024) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை.


*பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.*


கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.12.24) விடுமுறை.



12-12-2024 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-12-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் :சூது

குறள் எண்:933

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்:ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.


பழமொழி :
Never cast a clout till May be out.

கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.


இரண்டொழுக்க பண்புகள் : 

*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.


பொன்மொழி :

என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் -- ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி

விடை: சோனார்.

2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை

விடை : நீர் ஆற்றல்


English words & meanings :

Worry      -     கவலை

Jealous       -     பொறாமை


வேளாண்மையும் வாழ்வும் :

கரிம முறைமைகளுக்கு அதிக அளவில் ஆட்கள், தேவைப்படுவார்கள். இதனால் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; ஆனால், நகர்ப்புற நுகர்வோருக்கு விலைகள் அதிகரிக்கும்.


நீதிக்கதை

சிறுவனின் செயல்

அரசர் ஒருவருக்கு திடீரென்று தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை.



யானையின் எடையை அளந்து பார்க்கக்கூடிய பெரிய தராசுகளும் இல்லை. எனவே அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யானையின் எடையை எவ்வாறு அறிவது என்று குழம்பினார்.

அப்போது ஒரு அமைச்சரின் மகனான ஒரு சிறுவன், " நான் இதன் எடையை சரியாக கணித்துச் சொல்கிறேன்"என்று கூறினான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். ஆனால் அரசர்,  அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம் என்று விரும்பி சம்மதித்தார்.

அந்தச் சிறுவன் அந்த யானையை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். பிறகு அங்கே இருந்த பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான். யானை ஏறியதும் தண்ணீரில்  ஆழ்ந்தது படகு. உடனே அவன்  உயர்ந்த தண்ணீர் மட்டத்தை குறித்துக் கொண்டான்.

பிறகு யானையை படகிலிருந்து இறக்கிவிட்டு, பெரிய பெரிய கற்களை கொண்டு படகை நிரப்பச் செய்தான்.  முன்பு குறித்த குறியீடு அளவிற்கு தண்ணீரில் படகு  மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டது பின்பு அரசர் இடம் அந்த கற்களை காட்டி, "இந்த கற்களின் எடைதான் யானையின் எடை" என்று கூறினான் சிறுவன்.

அனைவரும் வியந்தனர்.அவனது புத்திசாலித்தனத்தை போற்றி புகழ்ந்தனர். எல்லோரும் யானையின் எடையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தனர். அதனால் அதனுடைய எடையை கணிக்க  முடியாது என்று நினைத்தனர். ஆனால் அந்த சிறுவன்  யானையின் எடையை பல எடைகளின் கூட்டுத்தொகையாக பார்த்ததால் அவனால் செய்ய முடிந்தது.


இன்றைய செய்திகள்

12.12.2024

* திண்டிவனத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிய டாபர் நிறுவனம். இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிப்பு.

* நாளை (டிச.12) வைக்கம் போராட்டம் துவங்கிய தந்தை பெரியார் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் பங்கேற்கிறார்.

* புதியதாக தினமும் 2 லட்சம் வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய அளவுக்கு பெங்களூருவில் மாபெரும் பறக்கும் பாலம் ஒன்று கட்டப்படவிருக்கிறது . இது பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

*உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஸ் உடனான ஆட்டத்தை 13வது சுற்றில் டிங் டிரா செய்தார்.                           

  

Today's Headlines

* Dabur has started construction of a new factory in Tindivanam. This will provide employment to 750 people.

* Announcement of a diversion route for heavy vehicles until the morning of the 15th in Tiruvannamalai on the occasion of the Karthigai Deepa festival.

* Tomorrow (Dec. 12), Vaikom will hold a protest to mark Father Periyar's centenary. The Chief Minister will participate!

* A new giant flying bridge will be built in Bengaluru to accommodate 2 lakh vehicles daily. This is expected to help reduce traffic congestion in Bengaluru.

* 7 planes are circling in the sky at Chennai airport, unable to land. Heavy rains accompanied by gale-force winds have affected flight services at Chennai airport.

* World chess championship: Ding holds Gukesh to draw in Game 13, retains advantage.


Covai women ICT_போதிமரம்

 

Annual family income ceiling for Post-Matric and Pre-Matric Scholarship Scheme for SC / ST and OBC students should be fixed from 2.50 lakh rupees to 8 lakh rupees - Letter from Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin to Hon'ble Prime Minister of India Mr. Narendra Modi



ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான Post-Matric மற்றும் Pre-Matric கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்


Letter from Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M. K. Stalin to Hon'ble Prime Minister of India Mr. Narendra Modi to Insist that the Annual family income ceiling for the amount of assistance provided under the Post-Matric and Pre-Matric Scholarship Scheme for Adi Dravidian, Tribal and OBC students  should be fixed from 2.50 lakh rupees to 8 lakh rupees



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Text of the D.O. Letter dated 10-12-2024 of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru M.K. Stalin, addressed to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi requesting to increase the annual family income ceiling for Post-Matric and Pre-Matric scholarships for SC, ST, and OBC students from Rs.2.5 lakhs to Rs.8 lakhs

I wish to draw your attention to the urgent need to enhance the annual family

income limit set for the grant of Post-Matric and Pre-Matric Scholarships for SC, ST and OBC students by the Government of lndia.

At present, the income ceiling for eligibility for the scholarship for SC / ST I

OBC students is fixed at Rs.2.5 lakhs. It is pertinent to mention that the Government of India have revised the income ceiling for the Economically Weaker Section (EWS) to Rs.8 Lakhs and has also raised the income ceiling for schemes such as National Overseas Scholarship and Top-Class Education Scheme to Rs.8 Lakhs for SC / ST students. The refixing of income ceiling has benefitted many students from disadvantaged backgrounds.

According to the All India Survey on Higher Education (AISHE) Report, the

Gross Enrolment Ratio (GER) of Scheduled Caste / Scheduled Tribe students and certain Backward Communities remains significantly lower than other students. There is a stark difference in the GER of Scheduled Caste and Scheduled Tribe students, as compared to the general population. Therefore, it is imperative to facilitate their enrolment in larger numbers in higher education institutions. Providing Post and Pre-Matric Scholarships will go a long way in increasing their enrolment in higher education. In our view, increasing the annual income ceiling for Post-Matric and Pre-Matric from Rs.2.5 lakhs to Rs.8 lakhs on par with that of the economically weaker sections is not only essential but also fully justified and warranted.

Therefore, I request your favourable intervention in this matter to consider and

increase the annual family income ceiling for Post and Pre-Matric scholarships for SC /ST/OBC students from Rs.2.5 lakhs to Rs.8 lakhs at the earliest.


Introduction of human washing machine that can wash and dry people in 15 minutes

மனிதர்களை 15 நிமிடங்களில் குளிப்பாட்டி காய வைக்கும் வாஷிங் மெஷினை அறிமுகம் செய்த ஜப்பான் நிறுவனம்


Introduction of a washing machine that can wash and dry people in 15 minutes


மனிதர்களை சுத்தப்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


முதல் முறையாக மனிதர்களை குளிப்பாட்டும் வாஷிங் மெஷினை ஜப்பான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சயின்ஸ் கம்பெனி என்ற நிறுவனம் இந்த மனித வாஷிங்மெஷினை அறிமுகம் செய்துள்ளது.


human washing machine




மனிதர்களை 15 நிமிடங்களில் இந்த மெஷின் குளிப்பாட்டி காய வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், மேம்பட்ட தண்ணீர் பீய்ச்சும் ஜெட் மற்றும் நுண்ணிய காற்று குமிழ்கள் ஆகியவற்றைக் கொண்ட ஸ்பா போன்ற அனுபவத்தை இந்த இயந்திரம் தரும்.


இதை பயன்படுத்துபவர்களுக்கு அமைதியான அனுபவம் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரில் பாதியளவு நிரம்பிய ஒரு வெளிப்படையான ஜெட் விமானம் போன்ற அமைப்புக்குள் நுழையும் போது, அதில் இருந்து வரும் அதிவேகமான நீரில் நுண்ணிய குமிழ்கள் வந்து, அவை உங்கள் உடல் மீது பரவி, அசுத்துங்களை அகற்றும்.



ஜப்பானில் அறிமுகம் 

ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால், துவைக்கப்படுபவர் உடல் அறிகுறிகளைக் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில், தண்ணீர் பீய்ச்சும் பம்ப்பின் அழுத்தம், தண்ணீரின் வெப்பம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நவீனமயமாக்கப்பட்ட இயந்திரம், ஒசாகா எக்ஸ்போ -2025ல் அறிமுகமாகிறது.



கண்காட்சியில் 1,000 பேர் பங்கேற்று அதை நேரடியாக அனுபவிக்கவுள்ளனர். அதற்கான சோதனையை தீவிரமாக செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது வாடிக்கையாளர் மத்தியில் புதிய புரட்சியை ஏற்படும் என உறுதியாக நம்புகிறோம்.


இந்த இயந்திரத்தை வாங்குவதற்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  


11-12-2024 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-12-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் : சூது

குறள் எண்:932

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு .

பொருள்:ஒரு பொருள் பெற்று நூறுமடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?


பழமொழி :
You may know by a hand full of the whole sack

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்


இரண்டொழுக்க பண்புகள் : 

*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.


பொன்மொழி :

ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் -- ஐன்ஸ்டீன்


பொது அறிவு :

1. வேதியியலின் தந்தை யார்?

விடை: லவாய்ஸியர்

2. மனித உடலில் பிறப்பு முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?

விடை: கருவிழி


English words & meanings :

Thirsty    -    தாகம்

Tired     -     களைப்பு


வேளாண்மையும் வாழ்வும் :

சமீபத்திய வருடங்களில் கரிம விவசாயம் மிகப் பெரும் அளவில் வளர்ந்து விட்டது. பாராம்பரிய விவசாயத்தைப் போலவே மிகப் பெரும் அளவில் ஒரு தொழில் முறையை கரிம வேளாண்மை உள்ளடக்கியுள்ளது


டிசம்பர் 11

சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.



பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்


பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.


பன்னாட்டு மலை நாள்

பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.



நீதிக்கதை


வீண் பெருமை

அடர்ந்த காடு ஒன்றில் குதிரை

புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்வதை கண்டது. இருவரும் பேசி பழகின. நண்பர்களாக மாறின.

எலி எப்போதும் தற்பெருமை பேசிக்கொண்டே இருக்கும். "நான் தான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை உருவாக்குவேன். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாம்பையே நான் விரட்டி விடுவேன்", என்று குதிரையிடம்  வீண் பெருமையை கூறியது.

ஒரு நாள் இருவரும் காட்டினுள் சிறிது தூரம் செல்லலாம் என்று முடிவு செய்தன. வழியில் கால்வாய் ஒன்று குறுக்கிட்டது. அதனை பார்த்த எலி "நண்பா! நமது வழியில் ஆறு ஒன்று குறுக்கே செல்கிறது. நாம் எவ்வாறு அதை கடந்து செல்ல முடியும்" என்று குதிரையிடம் கேட்டது.

குதிரையோ,"நண்பா இதை பார்த்தால் உனக்கு ஆறு போல் தெரிகிறதா? இது  சிறிய கால்வாய் தான். வா, நாம் எளிதாக கடந்து செல்லலாம்" என்று கூறியது.

எலி, " என்னது இது சிறிய கால்வாயா? நான் இதில் இறங்கினால் மூழ்கி விடுவேன்" என்று கூறியது.

ஆனால், குதிரையோ, "நீ தான் மிகவும் வலிமையானவன் ஆயிற்றே. இந்த சிறிய கால்வாயை கூட உன்னால் தாண்ட முடியாதா தாண்டி செல்லலாம் வா" என்று கூறியது.

அப்போதுதான் எலிக்கு தன்னுடைய பலம் என்ன என்று

புரிந்தது. உடனே குதிரையிடம், "என்னை மன்னித்துவிடு, நண்பா நான் வீண்பெருமை பேசி இவ்வளவு நாள் உன்னை ஏமாற்றி விட்டேன்.என்னை தயவுசெய்து  உன் முதுகில் ஏற்றி ஆற்றை கடக்க எனக்கு உதவி செய்"என்று கேட்டது.

குதிரையும் எலியை மன்னித்து கால்வாயை கடக்க உதவி செய்தது.


இன்றைய செய்திகள்

11.12.2024

* ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலனுக்கு ரூ.372 கோடி: சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்.

* மணிப்பூர் வன்முறையில் எரிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தை டோக்கியோ கவர்னர்  அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி 2-வது வெற்றி.

* புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் புனேரி பால்டனை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி அணி.


Today's Headlines

* Tamil Nadu Chief Minister M. K. Stalin announced in the Legislative Assembly that the birthday of 'Tamil Thatha' VU. Ve. Saminatha Iyer will now be celebrated as Tamil Literature Revival Day.

* Rs 372 crore for  Transport corporation employee pension benefit: First supplementary budget tabled in Assembly

* Supreme Court orders to file details of property burnt in Manipur violence

* It has been reported that the Governor of Tokyo has announced a new work schedule policy for government employees, with four work days a week and three days off, starting in April next year.

* Women's Junior Asia Cup Hockey: The Indian Team  won 2nd time also

* Pro Kabaddi League; Dabang Delhi beat Puneri Paltan in a thrilling match.


Covai women ICT_போதிமரம்


Arrest of part-time teachers who protested insist on permanent job



 பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது


Arrest of part-time teachers who protested insist on permanent job


சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


2,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து வரும் போலீசார்


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் கைது


தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.


அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பின்னர் ரூ.7500 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு பேல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேலும் ஊதியம் உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.


இந்நிலையில், நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் ஏமாற்றம் கிடைத்தது.


இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். மேலும் முதலில் எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Apply till 18.12.2024 for Tamil Nadu Chief Minister's Talent Search Exam (TNCMTSE)

 தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 18.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்


Apply till 18.12.2024 for Tamil Nadu Chief Minister's Talent Search Exam (TNCMTSE)


அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.2024 பிற்பகல் முதல் 18.12.2024 வரை பதிவேற்றலாம்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...