கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Exam 2025 - FIELD INVESTIGATORS கவனத்திற்கு


SLAS Exam 2025 - FIELD INVESTIGATORS (ஆய்வாளர்கள் கவனத்திற்கு)


அனைத்து கள ஆய்வாளர்களும் SLAS பரீட்சை அன்று பள்ளிக்கு சென்று அந்த தேர்வினை நடத்திவிட்டு மறுபடியும் நீங்கள் தங்கள் இல்லங்களுக்கு சென்று விடலாம்.


நோடல் பாயிண்ட் சென்று OMR உள்ளிட்ட மூன்று கவர்களை நீங்கள் சென்று சமர்ப்பிக்க தேவையில்லை.


 நீங்கள் பள்ளிக்கு சென்று  தேர்வு நடந்தி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடலாம்.


 நன்றி வணக்கம்.


 


மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு 2025 - கள ஆய்வாளர்களுக்கான FIs வழிகாட்டுதல் பயிற்சி


SLAS 2025 - Training PPT for Field Investigators


தமிழ்நாட்டில் 414 ஒன்றியங்களில் உள்ள 45,924 பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு நடத்துவது குறித்து முழு வழிகாட்டுதல்


SLAS - 2025 State Level Achievement Survey Training for Field Investigators (FIs) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders



16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் திரைப்படம் பார்க்க நேரக் கட்டுப்பாடு - தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு


Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders


*🔹🔸தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்கு பின்பும் திரையரங்கிற்குள் அனுமதி இல்லை..!


*▪️ தெலங்கானா: 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு!


*அதிகாலை, நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து.



SLAS Exam 2025 - OMR Sheet Model




மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு SLAS Exam 2025 - OMR Sheet Model



>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Things to note while filling SLAS 2025 - OMR Sheet

 

 

📝 மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு  SLAS EXAM 2025


🆕 3, 5 & 8-ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS EXAM க்கான  OMR Fill  செய்தல் & விடையளித்தல்.


➡️ SLAS 2025 - OMR Sheet நிரப்பும் பொழுது கவனிக்க வேண்டியவை


▪️மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.


▪️Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.


▪️ Ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.


▪️OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.


▪️தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.


▪️ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது


*வரும் 04.02.2025, 05.02.2025 மற்றும் 06.02.2025 ஆகிய மூன்று நாட்கள் முறையே 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS)  நடைபெற உள்ளது.


*இதற்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் பயிற்சியினை அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*இதில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS வினாத்தாளில் வினாவிற்கான விடையினை  வட்டமிட்டு கொடுத்தால் அதனை வைத்து தேர்வு நடத்துபவர் OMR SHEET ல் பூர்த்தி செய்து கொள்வார்.


*5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் விடையினை வட்டமிட்டு பின்னர் மாணவர்கள் தான் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.


 *எனவே இது சார்ந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவும் SLAS வினாத்தாளில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும் மாணவர்களை பழக்கப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*மேலும் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளில் 20 மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 30 மாணவர்களும் ( அனைத்து பிரிவுகளில் இருந்தும்) SLAS  தேர்விற்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


*மேற்கண்ட எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.


*மேற்கண்ட எண்ணிக்கைக்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் எந்த மாணவர்கள் SLAS தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதனை EMIS Server  மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதனை தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளியின் EMIS தளத்தில் பதிவிறக்கி அந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதனை இதன்மூலம் அனைவருக்கும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.



>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Instructions to Headmasters regarding SLAS 2025 Examination - DIET Principal's letter

 

மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு (SLAS 2025) தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் -  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன (DIET) முதல்வரின் கடிதம் 


Instructions to Headmasters regarding SLAS 2025 Examination - DIET Principal's letter


Instructions to Head Masters regarding State Level Achievement Survey Examination (SLAS 2025) - Letter from Principal of District Institute of Education and Training (DIET)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


31-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :குடிமை

குறள் எண்: 960.

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

பொருள்:
புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும்.


பழமொழி :
சொல் வல்லானை வெல்வது அரிது.

It is difficult to overcome the eloquent.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

பணிவு என்ற பண்பு இல்லாதவன், வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே - நபிகள் நாயகம்


பொது அறிவு :

"1. ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை இடும்?

விடை : 228 முட்டைகள்.

2. அணிலின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்?

விடை :7 ஆண்டுகள்"


English words & meanings :

Jungle.     -     காடு

Land.       -      நிலம்


வேளாண்மையும் வாழ்வும் :

நிலையான நீர் மேலாண்மையானது, மக்கள், சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் அதே வேளையில், நீரின் நன்மையான பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது.


நீதிக்கதை

ஆமை

சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றை கண்டான்.அதனை மெதுவாக தொட்டவுடன் ஆமை தனது தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

சிறுவன் என்னென்னவோ செய்து பார்த்தும் ஆமை தனது தலையையும், கால்களையும் வெளியில் நீட்டவே இல்லை.

அதை பார்த்த சிறுவன் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ஆமையை நெருங்கினான். அப்பொழுது சிறுவனுடைய மாமா, "தம்பி நீ என்னதான் தொந்தரவு செய்தாலும் ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே

நீட்டவே நீட்டாது" என்று கூறினார்.

சிறுவன், "ஆமையை பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. அதனை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது என்று கூறுங்கள்" என்று  கேட்டான்.

உடனே மாமா, " தம்பி ஆமையை மெதுவாக எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதகதப்பான ஒரு இடத்தில் வை.எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் இருந்தால், ஆமை தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்ல தொடங்கும்"என்று கூறினார்.

சிறுவனும் அதே போல் செய்ய ஆமையும் ஓட்டை விட்டு வெளியே வந்து ஊர்ந்ததை பார்த்து சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆச்சரியம் அடைந்த சிறுவன் இது எப்படி என்று தனது மாமாவிடம் கேட்டான். அதற்கு அவனுடைய மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் இப்படித்தான்" என்றாராம்.

மேலும்,"உன்னை சுற்றி இருப்பவர்களை மாற்ற விரும்பினால், நீ உன்னுடைய இன்முகத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். உன் கனிவான இரக்கம் கொண்ட இதயத்தால் மட்டுமே மற்றவர்களை மாற்ற இயலும்" என்றும் கூறினார்.


இன்றைய செய்திகள்

31.01.2025

* தென் அமெரிக்காவில் உள்ள 'சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலையில்  இருந்து ஆடைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

* அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்.

* ரூ.16,300 கோடி மதிப்பிலான முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.

* ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி,.


Today's Headlines

* For the country'Surinam' which is in South America Army Uniform has been manufactured and sent from Avadi Army Uniform manufacturing unit.

* Weather forecast: Thoothukudi, Nellai and Kumari there is a chance of heavy rain

* Target to launch 100 rockets over the next 5 years: Information by ISRO chief V Narayanan

* The central government approves the scheme for main minerals worth of Rs 16,300 crore.

* Hockey India League: Tamil Nadu Dragons qualified for the semifinals.


Covai women ICT_போதிமரம்


Meeting with TETOJAC Coordinators Dr. Ramadoss on 30-01-2025







30-01-2025 அன்று TETOJAC ஒருங்கிணைப்பாளர்கள் திண்டிவனத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுடன் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்திப்பு


Meeting with TETOJAC Coordinators Dr. Ramadoss on 30-01-2025


பா.ம.க. தலைமை நிலையச் செய்தி

டிட்டோ ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர் அய்யா அவர்களுடன் சந்திப்பு


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில்   சந்தித்துப் பேசினார்கள்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம்,  ஊதிய முரண்பாடுகளைக் களைதல்,  ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல்,  உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல்,  ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை,  அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக  வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை  வலியுறுத்த வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


கடந்த காலங்களில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து  குரல் கொடுத்து வருவதற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஆசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


அவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை  என்று கூறிய மருத்துவர் அய்யா அவர்கள்,  ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்தார்.


இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோ ஜாக்)  ஈ. இராஜேந்திரன், கே.பி.ரக்‌ஷித், அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், சி.சேகர், சு.குணசேகரன், கோ.காமராஜ்,  சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான்வெஸ்லி, சமூக முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...