கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - DSE Proceedings & Form



பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025,  நாள்: 18-02-2025 &  படிவம் 



"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - Request for Selection and Referral of Eligible Schools - Regarding - Proceedings of Director of School Education Rc.No. : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech

 

43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சரின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்


Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech For Harming Education Welfare Of 43 Lakh Tamil Nadu Students


43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான்  அவர்களின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு (AIFETO... ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS ) கடும் கண்டனம்... வெளியிட்ட கருத்தினை திரும்ப பெற வலியுறுத்துகிறோம்


*AIFETO... 19.02.2025..*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையையும் தாண்டி எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் ஒரு பொதுக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.*


 *தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையினையும் மும்மொழி திட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு 1252 கோடியினையும் நாங்கள் விடுவிப்போம்!.. மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதில் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள்!.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் ஏன் இவ்வளவு எதிர்ப்புணர்வை காட்டுகிறீர்கள்!.. என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.*


 *தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற ஒப்பீடு இல்லாமல் அனைவரும் ஒரே நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!.. என்று கண்டனக் கூட்டத்தினை கோரிக்கை முழக்கத்தினை எழுப்பி களத்தில் போராடும் நிலையினை உருவாக்கி இருக்கிறார்.*



 *அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் சார்பில் டெல்லியில் உள்ள அமைச்சர் அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தினை நடத்தி உள்ளார்கள்.*



 *சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு எத்தனையோ ஒன்றிய கல்வி அமைச்சர்கள் காங்கிரஸ், ஜனதா கட்சி,  பாரதிய ஜனதா, ஆகிய கட்சிகளில் இருந்தவர்கள் பொறுப்பு வகித்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல்  அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக மாநில மக்களின் மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய கல்வி அமைச்சர் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தர்மேந்திர பிரதானாகத்தான் இருப்பார்.*



 *ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாங்கள் இரு மொழி கொள்கையினை ஏற்றுக் கொண்டவர்கள்.  பேரறிஞர் அண்ணா அவர்கள்  கொண்டு வந்த இரு மொழிக் கொள்கை... தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட இரு மொழிக் கொள்கை... பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சர்களாக  இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் உள்ளது.*


 *தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது ஆகிய  மொழிகளை பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர் அவருடைய தாய் மொழியை அவர் அவர்கள் பேசுகிறார்கள். படிக்கிறார்கள். இன்னொரு மொழியினை தேர்வு செய்து  பொது மொழியாக தேசிய அளவில் உலக அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கில மொழியை படிக்கிறார்கள்.*


 *உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி படிப்பு வரையில் தாய் மொழி வழிக் கல்வி போதிக்கப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்வியில் படித்தவர்கள் உலக அளவில் பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோ அமைப்பின் தலைவர்கள் அதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் தான். தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படித்தவர்கள் தான்.*


 *நாடாளுமன்றத்தில் நாவன்மையுடன் விவாதங்களில் கலந்து கொண்டவர்கள் பலர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். 140 கோடி மக்களினுடைய பிரதிநிதியாக மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம்  அவருக்கு வரவேற்பினையும் பொது மரியாதையையும் அளித்து வருகிறார்கள். ஆனால் அவர் அங்கு  இந்தி மொழியில் தான் பேசுகிறார். பெருமைக்குரிய மேனாள் பாரதப் பிரதமர்   வாஜ்பாய் அவர்கள் பல்வேறு விவாதங்களில் இந்தியில் தான் பேசி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசி வருகிறார்கள்... இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் தாய் மொழியான தமிழில் பேசி வருகிறார்கள்.*



 *எந்த மொழியை படிக்க வேண்டும் என்று முதலில் மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். இது கொள்கை வழி சார்ந்த முடிவாகும்.  தன் குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற உரிமை பெற்றோர்களுக்கு தான் இருக்கிறது.*


 *அதை விடுத்து  அவர்கள் பிள்ளைகள்  அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்... ஹிந்தி படிக்கிறார்கள்... சமஸ்கிருதம் படிக்கிறார்கள்  என்பதெல்லாம் அரசியல் ஆகும்.*


 *தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். 52 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.  56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கொள்கையை படிக்கிறார்கள்.. ஆனால் அரசு பள்ளியில்  படிக்கும் பிள்ளைகள் மட்டும்  மும்மொழிக் கொள்கை படிக்க எது தடையாக உள்ளது?.. என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.*



 *தமிழ்நாட்டில் உள்ள மொத்த 56 ஆயிரம் பள்ளிகளில் சுயநிதி தனியார் பள்ளிகள் 16490 தான் இதில் 1235 சிபிஎஸ்சி சுயநிதி தனியார் பள்ளிகளில் மட்டும்தான் இந்தி பாடம் கற்பிக்கப்படுகிறது. வெறும் 3.16% சதவீதம்  படிக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள்தான் இந்தி படிக்கிறார்கள்..  தமிழ்நாடு சமச்சீர் கல்விமுறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிக்கைகள் வேறு!.. எதார்த்தம் என்பது வேறு!...*



*தமிழ்நாட்டில்  படிக்கும் மாணவர்கள் ஏன் இந்தி படிக்கிறார்கள்? என்று யாரும் கேட்கவில்லை. சமஸ்கிருதம் ஏன் படிக்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.*



 *ஆனால் மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை திணிக்க முற்படுவதைதான் தமிழ்நாடு  மொழிப்போர் தியாகிகளின் அடிச்சுவட்டில்   நின்று கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.*



 *தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள 66 பக்கத்திலும் நவீன குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் புகுத்துவது தான்... விஸ்வகர்மா திட்டம் மாணவர்களை குலத் தொழிலுக்கு  அழைத்து செல்வதுதான் எதார்த்தமான உண்மையாகும்.*



 *தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்கிறார்கள். 43 லட்சம் மாணவர்களின் கல்வி நிதியினை தேசிய கல்விக் கொள்கை, மும்மொழித்திட்டம் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தினை ஏற்றுக் கொண்டால்தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சர்வாதிகார பேச்சுக்கு...*


 *தமிழன் என்றோர் இனமுண்டு!.. தனியே அவருக்கோர் குணம் உண்டு..*



*செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?...*


 *என்ற மொழிப்போர் விடுதலை குரல் வழியே தமிழ்நாட்டில் பதிலடி கொடுப்போம்!.*



 *தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி நலனுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்களேயானால் கண்டன குரல்களை விட... வாக்குச்சாவடியில் உங்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் மனக் குமுறல்கள்  தேர்தலில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும்... என்பதை  ஆசிரியர் இயக்கங்களின் மூத்த  தலைவர் என்ற முறையிலும்  22 மாநிலங்களின் பிரதிநிதிகள் இருக்கக்கூடிய அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு  (AIFETO)  ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS  தேசிய செயலாளர் என்ற  முறையில் அனைத்து மாநிலங்களில் நேரடி தொடர்புள்ளவன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.*


 *மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர்  தர்மேந்திரா பிரதான் அவர்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு வெளியிட்ட கருத்தினை திரும்பப் பெறுங்கள்...*



 *ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை காப்பாற்றுவதற்காக... இரு மொழி கொள்கையினை காப்பாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. என்பதில் உறுதி எடுத்துக்கொண்டு களத்தில் நின்று போர்க் குரலை  எழுப்பிக் கொண்டே இருப்போம்!...*



 *விரைவில் டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் அலுவலகத்திற்கு முன்பு  மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 *மொழிப்போர் தியாகிகள் ஒரு சங்கரலிங்கனார் ஒரு பொன்னம்பலனார், ஒரு உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் உணர்வுகள் தமிழ்நாட்டில் இன்னமும் பீறிட்டு எழுந்து கொண்டுதான் இருக்கிறது..*


*புகழ்பெற்ற கோத்தாரி கல்வி குழு ஒட்டுமொத்த  GDP இல் 6% நிதியினை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். ஆனால் ஒன்றிய அரசு 4% சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நிதியினை ஒதுக்கி வருகிறார்கள்.. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை 6% சதவீதமாக உயர்த்த வேண்டுகிறோம்.*


*நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ₹ 2152 கோடி நிதியினை உடன் மத்திய அரசு விடுவித்திட வேண்டுமென்று ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்.*



 *அடுத்த பதிவில் பீகார் மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் குஜராத் ஆகிய மாநிலங்களின் மொழி உணர்வினையும் கல்வித் தரத்தினையும் விரிவான பதிவாக வெளியிட உள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.*



*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


Online application Facility launched for NOC to travel abroad



ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தடையின்மைச் சான்றிதழை (NOC), இணையவழியில் விண்ணப்பித்து பெறும் வசதியை உயர் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்


The Minister of Higher Education launched the facility of online application for No Obligation Certificate (NOC) for teachers and staff to travel abroad



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று வழங்குவது தொடா்பாக கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு கல்வித் துறையிடம் தடையின்மைச் சான்று பெற்று சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பாக ஏற்கெனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு, ஏற்பளிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா்களையே சாா்ந்தது என்பதால் அதன் அடிப்படையில் 2007-இல் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


அதில் தவறுகள், சுணக்கம் ஏற்படுவதைத் தவிா்த்து ‘காவல்துறை கண்காணிப்பாளா், பாதுகாப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, மருதம் காம்ப்ளக்ஸ், எண்.17, போட் கிளப் சாலை, சென்னை- 600028’ என்ற முகவரியில் செயல்படும் காவல் துறை சிறப்பு பிரிவுக்கு அனுப்பி எவ்வித குறிப்புரையும் நிலுவையில் இல்லை எனச் சான்று பெறப்பட்ட பின்னா் கடவுச்சீட்டு பெற, புதுப்பிக்க தடையின்மைச் சான்று வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் அனைவரும் வெளிநாடு செல்ல துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரால் மட்டுமே விடுப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தடையின்மைச் சான்றிதழை (NOC), இணையவழியில் விண்ணப்பித்து பெறும் வசதியை உயர் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.


20-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:973

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர்.

பொருள்:
உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவா் சிறியர்; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர்.


பழமொழி :
தன்னை அறிந்தவன் தானே தலைவன். 

He who knows himself may know his maker.


இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

- கவிஞர் கண்ணதாசன்


பொது அறிவு :

1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?

விடை : ஹீலியம்.      

2. இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது?

விடை : கங்கை டால்பின்


English words & meanings :

College.  -    கல்லூரி

Court.      -     நீதிமன்றம்


வேளாண்மையும் வாழ்வும் :

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்


பிப்ரவரி 20

உலக நீதி நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.



நீதிக்கதை

தென்றலும்‌ சூறாவளியும்

ஆற்றங்கரையிலே நின்ற அந்த மாமரம்‌ சலசலவென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன்‌ கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள்‌ அழகாகத்‌ தொங்கிக்‌ கொண்டிருந்தன. ஓர்‌ அணிற்‌ பிள்ளையும்‌ ஒரு கிளிப்பிள்ளையும்‌ அந்த மாமரத்தை நெருங்கின.

“அம்மா, மாமரத்‌ தாயே ! பசித்து வந்திருக்‌கிறோம்‌” என்றது கிளிப்பிள்ளை. “உங்களுக்காகத்தானே பழம்‌ வைத்திருக்‌கிறேன்‌. நன்றாகச்‌ சாப்பிடுங்கள்‌”? என்று கூறியது மாமரம்‌.

“மாவம்மா,இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல்‌ தெரிகிறதே! என்ன காரணம்‌?” என்று விசாரித்தது அணிற்பிள்ளை.

“பிள்ளைகளே ! தென்றல்‌மாமா வந்திருக்‌கிறார்‌. அவர்‌ வந்திருப்பதே ஓர்‌ இன்பம்தானே!” என்று கூறியது மாமரம்‌.

அணிற்பிள்ளையும்‌ கிளிப்பிள்ளையும்‌ வயிறு நிறைய பழம்‌ சாப்பிட்டுவிட்‌.டுச்‌ சென்றுவிட்டன. தென்றல்‌ மாமாவுடன்‌ நேரம்‌ போவது தெரியாமல்‌ பேசிக்‌ கொண்டிருந்தது மாமரம்‌.

இரண்டு நாட்கழித்து,

“மாவம்மா! நேற்றெல்லாம்‌ *ஓ*வென்று அலறிக்‌ கொண்டிருந்தாயே ஏன்‌?” என்று கேட்டுக் கொண்டே மாமரத்திடம் வந்தது அணிற்பிள்ளை.

மாமரத்தைப் பார்த்து “இதென்ன அநியாயம்‌! மாமரத்‌ தாயே! உன்‌கிளைகளெல்லாம்‌ ஏன்‌ முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம்‌ கீழே வீழுந்து அழுகிக்‌ கிடக்கின்றனவே, ஏன்‌?' என்று பதறிப்‌ போய்க்‌ கேட்டது கிளிப்பிள்ளை.

பிள்ளைகளே, நேற்று சூறாவளி  என்கிற முரடன்‌ வந்தான்‌. அவன்‌ செய்த அட்டூழியம்தான்‌ இது!” என்று கூறிக்‌ கண்ணீர்‌ விட்டது மாமரம்‌. மாமரத்தின்‌ துன்பத்தைக்‌ காணப்‌ பொறுக்காமல்‌  கிளிப்பிள்ளையும்‌

அணிற்பிள்ளையும்‌ கண்ணீர்‌ விட்டன. 

அவற்றிற்குப்‌ பழம்‌ கொடுக்க முடியாமல்‌ போய்‌விட்டதே என்று மாமரம்‌ வருந்தியது. பின்னர்

அவையிரண்டும்‌  தத்தம்‌ இருப்பிடம்‌ நோக்கிச்‌ சென்றன.

கருத்துரை:-- நல்லவர்கள்‌  வரவால்‌ இன்பம்‌ உண்டாகும்‌. தீயோர்கள்‌ வரவால்‌ துன்பமே உண்டாகும்‌.


இன்றைய செய்திகள்

20.02.2025

* தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

* “விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.

* தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்  என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

* துபாய் ஓபன் டென்னிஸ் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா  ரைபகினா.

* பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.


Today's Headlines

*  Tamil Nadu Chief Minister M.K. Stalin has written to Union Minister for Women and Child Development Smriti Irani, requesting her to release the central government's share of funds for various schemes within a specified timeframe.

*  Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tidal Parks in Trichy and Madurai, which will provide employment opportunities for 12,000 people.

*  "India is making rapid progress in various fields, including space technology," said Union Minister of State for Technology Jitendra Singh.

*  The United Nations has stated that India will experience rapid growth using clean energy and industrialization.

* Dubai Open Tennis: Kazakhstani player Elena Rybakina advances to the next round.

*  MRF team joins British Rally Championship for the 2025 season and obtains the rights to supply all the necessary tires for the tournament.


Covai women ICT_போதிமரம்


ADMISSION OF STUDENTS IN GOVERNMENT PRIMARY / MIDDLE SCHOOLS FOR THE ACADEMIC YEAR 2025-2026 STARTING FROM 01.03.2025 - DEE PROCEEDINGS

 

அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்குதல் - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


5+ குழந்தைகளை 01-03-2025 முதல் பள்ளிகளில் சேர்க்கை செய்திட வேண்டும்! EMIS இல் உடனுக்குடன் பதிவு செய்திட வேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குநர்


ADMISSION OF STUDENTS IN GOVERNMENT PRIMARY / MIDDLE SCHOOLS FOR THE ACADEMIC YEAR 2025-2026 STARTING FROM 01-03-2025 - ACTIONS TO BE TAKEN - PROCEEDINGS OF THE DIRECTOR OF ELEMENTARY EDUCATION



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Transition to Art Teacher through transfer to non-teaching staff – DSE Proceedings

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி - சார்நிலைப் பணி - ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணி மாறுதல் வழங்குதல் - 01.01.2025 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் விவரங்கள் கோருவது - சார்ந்து - பள்ளிக்கல்வி (இணை) இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண் : 5412/ சி5/ இ2/ 2024,  நாள் 05.2.2025


Transition to Art Teacher through transfer to non-teaching staff – DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



19-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள்எண் :972

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஓவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்:
அனைத்து மக்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும், செய்கின்ற செயல் வேற்றுமையால் பெருமை சிறுமை என்று இயல்புகள் வேறுபடும்.


பழமொழி :
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. 

To cheat one that has come for protection is bad.


இரண்டொழுக்க பண்புகள் :  

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன். 

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.

--திரு. வோயாஸ்-


பொது அறிவு :

1. உலகின் இரண்டாவது உயரமான சிகரம் எது?

விடை :காட்வின் ஆஸ்டின்

2. தமிழ்நாட்டின் முக்கிய இழை பயிர் எது?

விடை : பருத்தி

English words & meanings :

Church.  -   தேவாலயம்

Castle.      -     கோட்டை


வேளாண்மையும் வாழ்வும் :

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..


நீதிக்கதை

வெப்பமும்‌ குளிர்ச்சியும்‌

காலையில்‌ கதிரவன்‌ தோன்றினான்‌. தன்‌ ஒளியைப்‌ பரப்பி உலகம்‌ முழுவதும் உள்ள இருளை விலகச் செய்தான்‌. கடல்‌ நீர்ப்பரப்பின்‌ மீதும்‌ அவன்‌ கதிர்கள்‌ விரிந்தன. கடலை அழகுபடுத்த வேண்டும்‌ என்று கதிரவன்‌ தன்‌ ஒளியை மேன்மேலும்‌ அதன்‌ மீது பாய்ச்சினான்‌. வெப்பத்தைத்‌ தாங்க முடியாமல்‌ கடல்‌ முகம்‌ சுருங்கியது.

அதன்‌ அலைகள்‌ தளர்ச்சியடைந்து  சிறுத்தன. தான்‌ அன்போடு  கதிர்‌ பாய்ச்சிக்‌ கடலை அழகுபடுத்த

முயலும்போது, அது ஏன்‌ முகத்தைச்‌ சுருக்கிக்‌ கொள்கிறது? என்று கதிரவனுக்குப்‌ புரியவில்லை.

“கடலே, என்ன கோபம்‌?'” என்று கேட்டான்‌.கடல்‌ பதில்‌ பேசவில்லை. பதில்‌ சொல்லக்‌ கூட விருப்பமில்லாத அளவு தன்‌ மீது கடல்‌ கோபமாய்‌ இருக்கக்‌ காரணம்‌ என்ன? என்று சிந்தித்தான்‌ கதிரவன்‌. அப்போது  அந்தப்‌ பக்கமாக  காற்றரசன்‌ வந்தான்‌.

கதிரவன்‌ சிந்தனையைக்‌ கண்டு காரணம்‌ கேட்டான்‌.  கடலின்‌  போக்கைப்பற்றிக்‌ கதிரவன்‌ கூறினான்‌. அதைக்‌ கேட்டபின்‌   காற்றரசன்‌ சொன்ன செய்தி கதிரவனை மேலும்‌ துன்பப்படச்‌ செய்தது.

“நீ வரும்போதுதான்‌ கடல்‌ தன்‌ அலைகளைச்‌ சுருக்கிக்‌  கொள்கிறது. இரவில்‌ நிலவரசன்‌ வரும்‌போது எவ்வளவு  மகிழ்ச்சி . கொள்ளுகிறது தெரியுமா ? பொங்கிப்‌ பொங்கி அலைகளை உயரச்‌ செலுத்தி ஆனந்தம்‌ கொள்ளுகிறது.உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான்‌ அது விரும்புகிறது?” என்று காற்றரசன்‌ கூறினான்‌.

மறுநாள்‌ நிலவரசன்‌ பகலிலேயே வெளியில்‌ வந்தான்‌.  கடல்‌ அலைகளைப்‌ பெரிதாக்கிக்‌ கொண்டது. கதிரவன்‌ நிலவரசனை  நேருக்கு நேரே பார்த்தான்‌. "நிலாத்தம்பி, இந்த கடல் உன்னைக்‌ கண்டு பொங்குவதும்‌ என்னைக்‌ கண்டு. பொங்காததும்‌ ஏன்‌ ?” என்று கதிரவன்‌ கேட்டான்‌.

“அண்ணா, என்‌ கதிர்கள்‌ குளிர்ச்சியாயிருப்பதால்‌   கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

அதனால்‌ ஆனந்தமாகப்‌ பொங்குகிறது. உன்‌ கதிர்கள்‌    வெப்பமாக இருப்பதால்‌ சூடு தாங்காமல்‌ சுருங்குகிறது?” என்றான்‌ நிலவரசன்‌. காரணமறிந்த கதிரவன்‌ மேற்கொண்டு எதுவும்‌ பேசவில்லை.

கருத்துரை:-- இனிய சொற்களே மகிழ்ச்சியைத்‌ தரும்‌. கடுஞ்‌சொற்கள்‌ மகிழ்ச்சியைத்‌ தராது.


இன்றைய செய்திகள்

19.02.2025

* வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

​* போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச் செயலர் முரு​கானந்தம் அறிவித்​துள்ளார்.

* புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

* கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி.

* 3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே.


Today's Headlines

* Tamil Nadu Chief Minister M.K. Stalin awarded the "Living Crafts Tradition Award" to 9 skilled craftsmen and the "Poompuhar State Award" to 9 skilled craftsmen.

* The certificates of teachers who were punished in the POCSO cases will be cancelled. Henceforth, police verification certificates will be made mandatory for new teacher appointments, announced Chief Secretary Muruganandam.

* Vivek Joshi, a 1989-batch Indian Administrative Service officer from Haryana, has been appointed as the new Election Commissioner, announced by Ministry of Law.Russia has expressed its readiness to hold talks with Ukrainian President Zelensky if necessary.

* Qatar Open Tennis Tournament: Spanish player Alcaraz qualifies for the 2nd round.

* 3rd One-Day Match: Zimbabwe wins the series by defeating Ireland.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவ...