கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மொத்த வேலை நாட்கள் (210 முதல் 191 வரை) மற்றும் வருகை சதவீதம் - அட்டவணை



பள்ளி மொத்த வேலை நாட்கள் (210 முதல் 191 வரை) மற்றும் மாணவர் வருகை நாட்கள் அதற்கான வருகை சதவீதம் குறித்த அட்டவணை


STUDENTS ATTENDANCE PERCENTAGE.


Table of total working days of the school and students attendance percentage (from 210 to 191) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1031

சூழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள்:
மக்கள் பலதொழில் வளங்களில் சிறந்திருந்தாலும் உணவிற்காக உழவை நாடுவர். எனவே உழவே முதன்மையானது.


பழமொழி :
Whatever is worth doing, is worth doing well.

செய்ய வேண்டியதைச் சரியாக செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

மொழி  மனிதனுக்கு  விழி  போன்றது. --- கலைஞர்


பொது அறிவு :

1. குழந்தை உதவி எண் எது?

விடை: 1098.     

2. மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

விடை: தாமிரபரணி


English words & meanings :

Anniversary.   -     ஆண்டுவிழா

Birthday     -      பிறந்த நாள்


வேளாண்மையும் வாழ்வும் :

அறுவடை செய்து வடிகட்டிய மழைநீரை கழிப்பறை, வீட்டுத்தோட்டம், புல்வெளிப் பாசனம், சிறு விவசாயம் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.


ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.


நீதிக்கதை

கொக்குக்கு எத்தனை கால்?

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—

முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

மேலும், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.


இன்றைய செய்திகள்

16.04.2025

* மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

* இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர்.

* அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர்.

* மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: வீரர்-வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines

* Chief Minister M.K. Stalin has announced in the Tamil Nadu Legislative Assembly that a high-level committee headed by retired Justice Kurian Joseph will be formed to protect the rights of the state.



* The Tamil Nadu Health Department has issued a government order to establish the Kalaignar Centenary Integrated Research Foundation to promote medical research and new discoveries.

* Authorities are taking action to deport 15 foreigners who were staying illegally in India.



* The Chinese government has stopped the export of minerals, metals, and magnetic materials to the United States. This has created a risk of impacting military equipment production in America.

* An all-female celebrity crew has traveled to and returned from space via Jeff Bezos's space company, Blue Origin.



* New rankings for male and female players have been released following the conclusion of the Monte Carlo Tennis Tournament.

* The Indian squad for the women's hockey series against Australia has been announced.


Covai women ICT_போதிமரம்


Classes 4 & 5 - 100 days challenge Assessment - மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்



Classes 4 & 5  -  100 days challenge Assessment - மாவட்டக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு


தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மதிப்பிடும் பணிகள் 4.4.2025 நிறைவடைந்தது. 


4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணி நாளை 16.04.2025 அன்று நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இம்மதிப்பீட்டு பணிக்கான Assessment Tool அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2025 அன்று காலை 8.45 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

Assessment Tool 17.04.2025 வரை Liveலேயே இருக்கும். எனவே, மதிப்பீட்டு பணிகளை 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய இரு தினங்களிலும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


- தொடக்கக் கல்வி இயக்குநருக்காக



பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Last working day of AY 2024-2025, DEE Proceedings

 

 2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025


Last working day of the academic year 2024-2025, DEE Proceedings Dated: 15-04-2025



Proceedings of the Director of Elementary Education regarding the last working day of the academic year 2024-2025, Dated: 15-04-2025




 


3ஆம் பருவத் தேர்வு முடிந்து வகுப்பு வாரியாகக் கோடை விடுமுறை தொடங்கும் நாட்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

* 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12-04-2025 முதல் கோடை விடுமுறை 

* 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 18-04-2025 முதல் கோடை விடுமுறை 

* 6  முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25-04-2025 முதல் கோடை விடுமுறை 

அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் கடைசி வேலை நாள் : 30-04-2025

நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

 


நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு 


Schoolboy dies after being bitten by dog


தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா (13). அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

இதனிடையே கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது விஸ்வாவை நாய் கடித்துள்ளது. இதன் காரணமாக அவரது பெற்றோர்கள் ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.



இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் விஷ்வாவிற்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒரகடம் அருகே மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், விஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தெருநாய்களுக்கு உணவு வைப்பதையும், அவற்றின் அதீத பெருக்கத்துக்கு துணையாக இருப்பதையும் சில பணக்காரர்கள் பெருமையாக கருதுகின்றனர். அவர்கள் காரில் செல்வதால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் செல்லும் பொழுது, தெரு நாய்களால் துரத்தப்பட்டும், கடிபட்டும் துன்பப் படுவதைக் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டினை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். 


ஆகவே, அரசு தெருநாய்களுக்கு உணவு வைப்போரை அவற்றின் பராமரிப்பு செலவுகளை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த DEE தகவல்



வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தொடக்கக் கல்வி இயக்கக தகவல்


Directorate of Elementary Education information regarding summer vacation for students by class


தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


மூன்றாம் பருவம்  / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி வகுப்புவாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர் தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை ஆகும்.


ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை  ஏப்ரல் 30ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிந்து செய்திட வேண்டும்.


Message received from DEE. CONVEY TO STUDENTS


2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல்

 

2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் (DEO) தகவல்


District Education Officer's information regarding school working days for the 2024-2025 academic year


பள்ளி வேலைநாட்கள் :


1 - 3 வகுப்புகள் : 198 நாட்கள்

4 & 5 வகுப்புகள் : 201 நாட்கள் 

6 - 8 வகுப்புகள் : 205 நாட்கள் 

ஆசிரியர்களுக்கு : 209 நாட்கள் 


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த 30.10.2024 அன்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அரைநாள் வேலைநாளை முழுநாளாகக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


- மா.க.அ(தொ.க) திருவண்ணாமலை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...