கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summer Vacation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Summer Vacation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மலை சுற்றுலாத் தளங்களில் Kodai Kondattam சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Special Training Camps for Summer Celebrations at Hill Tourist Destinations — 895 Students Selected — Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை 6


ந.க. எண்: 022197/எம்2/இ2/2026, நாள் : 27.04.2026



பொருள் : 

பள்ளிக் கல்வி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றுதல் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலைசுற்றுலாத் தளங்களில் நடத்துதல் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெறுதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு.


பார்வை 

1) 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண் 13


2) அரசாணை (நிலை) எண் 262 பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள் 09.12.2024


3) அரசாணை (நிலை) எண் 83 பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள் 16.07.2025


4) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் ந.க. எண்: 022197/எம்2/இ2/2026, நாள் 21.04.2026


5) சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியிடமிருந்து பெறப்பட்ட பட்டியல்.



2022-2023ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண்.13.இன்படி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடைவிடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக்கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள், மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் (ஏலகிரி) ஆகிய இரு மாவட்டங்களில் இரண்டு பிரிவுகளாக 5 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் ம்ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி இலக்கியம் மற்றும் அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தெரிவு செய்திடவும், சிறந்து விளங்கிய 895 மாணவர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவற்றில் நீலகிரி மாவட்ட முகாமிற்கு 190 மாணவிகளும், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெறும் முகாமிற்கு 205 மாணவர்களும் ஆக மொத்தம் 895 மாணவ, மாணவியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேற்படி நடைபெறும் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் இணைப்பில் உள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சார்ந்த மாணவ / மாணவியர்களின் பெற்றோர் பாதுகாவலர்களிடமிருந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தினை இரு நகல்களில் பெற்று கோப்பில் வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பில் உள்ளவாறு மாணவ, மாணவர் எண்ணிக்கை கோடைக்கொண்டாட்டம் நடத்திடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்குத் தேவையான உடைகள், போர்வைகள் மாணவர்களின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தவறாமல் கொண்டு வர வேண்டுமென மாணவ / மாணவியர்களுக்கு அறிவுறுத்துமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எனவே, மேற்படி நடைபெறும் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக உடன் செல்லும் ஆசிரியர்கள் எவ்வித புகாருக்கும் இடமின்றி கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு தகுந்த அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாணவிகளை அழைத்துச் செல்லும்பொழுது கட்டாயம் 20 மாணவிகளுக்கு 1 பெண் ஆசிரியை அனுமதிக்கலாம். மாணவியருக்கான முகாம் நீலகிரி மாவட்டத்திலும், மாணவர்களுக்கான முகாம் திருப்பத்தூர் மாவட்டத்திலும் (ஏலகிரி) நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இத்துடன் பயிலரங்கச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி காலஅட்டவணை இணைத் அனுப்பப்படுகிறது.


இணைப்பு


1) பெற்றோரிடம் பெற வேண்டிய ஒப்புதல் கடிதம்


2) ஒதுக்கீடு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல்.


3) ஒதுக்கீடு செய்யப்படும் மாணவிகளின் பட்டியல்.


4) பயிலரங்கச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி காலஅட்டவணை


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்,

அனைத்து மாவட்டங்கள்.


Summer vacation & start of next academic year - Joint Proceedings of DSE, DEE & DPS

 

 கோடை விடுமுறை & அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம் - பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைச் செயல்முறைகள்


Summer vacation & start of next academic year - Joint Proceedings of DSE, DEE & DPS


கோடை விடுமுறை & அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம் - பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


2025-26-Summer Vacation & 2026-27- School Reopen- Intimation


பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் தனியார் பள்ளி கல்வி இயக்குனர் மூவரும் இணைந்து வெளியிடப்பட்ட செயல்முறைகளின் படி மாணவர்களுக்கு 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்கப்படுகிறது .ஆசிரியர்கள் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு 01.06.2026 ஆகும். அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இருப்பதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி பள்ளி திறப்பு ஆகும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025-26ஆம் கல்வி ஆண்டின் கடைசி வேலைநாள்


மாணவர்களுக்கு- 16.04.26

ஆசிரியர்களுக்கு- 25.04.26


2026-2027 கல்வியாண்டின் தொடக்கநாள்


1-3 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்- 04.06.26


4-12 வகுப்பு மாணவர்களுக்கு 01.06.26


1-3 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு

 01.06.26-03.06.26 -> 3 நாள்கள் புதிய பாடத்திட்டம் சார்ந்த பயிற்சி நடைபெறும்



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை-06.


ந.க.எண்.048688/1/1/2026, நாள்.09.04.2026


பொருள்: 2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் - தொடர்பாக.


அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.


ஏப்ரல் 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி/யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் 01.06.2026 திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.


வரும் கல்வியாண்டு முதல் 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இவ்வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 01.06.2026 முதல் 03.06.2026 வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. எனவே. 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 04.06.2026 (வியாழன் கிழமை) அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


மேற்கண்ட  நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இயக்குநர்

தனியார் பள்ளிகள் இயக்ககம்


இயக்குநர்

தொடக்கக் கல்வி இயக்ககம்


இயக்குநர்

பள்ளிக் கல்வி இயக்ககம்



பெறுநர்

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)


3. அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (உரிய வழியாக)


நகல்


1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். பள்ளிக் கல்வித் துறை, சென்னை-09

அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து தெரிவிக்கப்படுகிறது.


2. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-06

தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது


3. ஆணையர், சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை.

காமராஜர் சாலை, சென்னை-05

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


4. ஆணையர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


5. ஆணையர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


6. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். சென்னை-06 (தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


7. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 06 அவர்களுக்கு (தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


8. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை -06

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


9. இயக்குநர். அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-06

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை - அமைச்சர்

 

 ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை  - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்


விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு 

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு.

 பொது தேர்வுகள் முடிந்தவுடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும் 

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் 

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்




புதுச்சேரி : அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & விடுமுறை நாட்கள் அறிவிப்பு


புதுச்சேரி : அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & கோடை விடுமுறை நாட்கள் அறிவிப்பு


புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் 1 - 9 ஆம் வகுப்பு வரையும் 11 ஆம் வகுப்பிற்கும் மார்ச் 12 தொடங்கி 17ஆம் தேதி ஆண்டு தேர்வு.


மார்ச் 18 - 31 வரை விடுமுறை; ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவக்கம்.


மே 1 - 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை; மீண்டும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் தொடங்கும் - புதுச்சேரி பள்ளி கல்வித்துறை.


Summer vacation - DSE Proceedings, Dated: 23-04-2025


 பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 23-04-2025


Summer vacation declared after completion of school final exams - Proceedings of the Director of School Education, Date: 23-04-2025


கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு


DSE - School Summer Leave from 25.04.2025 to 01.06.2025


Schools Reopen on 02-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்


பள்ளிக் கல்வி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் தொடர்பாக



அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது. 25,04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.


2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே. 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளிக் கல்வித் துறை


வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த DEE தகவல்



வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தொடக்கக் கல்வி இயக்கக தகவல்


Directorate of Elementary Education information regarding summer vacation for students by class


தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


மூன்றாம் பருவம்  / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி வகுப்புவாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர் தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை ஆகும்.


ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை  ஏப்ரல் 30ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிந்து செய்திட வேண்டும்.


Message received from DEE. CONVEY TO STUDENTS


அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை (நிலை) எண்: 25, நாள் : 06-05-2023 வெளியீடு (15 days summer vacation for Anganwadi workers - Social Welfare and Women's Rights Department G.O. (Ms) No: 25, Dated : 06-05-2023 Issued)...


>>> அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை (நிலை) எண்: 25, நாள் : 06-05-2023 வெளியீடு (15 days summer vacation for Anganwadi workers - Social Welfare and Women's Rights Department G.O. (Ms) No: 25, Dated : 06-05-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்