கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-04-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1033.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்.

பொருள்:
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள். மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.


பழமொழி :
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

Delay is dangerous.


இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :

""பெரிய நெருக்கடிகள் அரிய மனிதரை உருவாக்கும், பெரும் ஊக்கம்  தரும்  செயல்களை  அளிக்கும்.""  -- ஜான் F கென்னடி


பொது அறிவு :

1. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றை எடுத்துரைக்கின்றது? 

விடை :கௌதம புத்தர்.      

2. ஒரு மெகா பைட் (mega byte) என்பது  எவ்வளவு?

விடை : 1024 kilo bytes


English words & meanings :

Candy.          -         மிட்டாய்

Engagement.   -    நிச்சயதார்த்தம்


வேளாண்மையும் வாழ்வும் :

மழைப்பொழிவு ஏற்படும்போது, தண்ணீர் மண்ணில் ஊடுருவி நிலத்தடிக்குச் செல்கிறது. இது நிலத்தடி நீர் எனப்படுகிறது


ஏப்ரல் 21

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day)

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். [1] நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


 
நீதிக்கதை

யானையின் அடக்கம்

யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்கு யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி:தன் பலம், பலவீனம்

தெரிந்தவர்கள் அடக்கத்தில்

சிறந்தவர்களாக இருப்பார்கள்.



இன்றைய செய்திகள்

21.04.2025

* அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

* புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் தங்க குண்டுமணி  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.

* கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ருனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி.


Today's Headlines

* Government offices to install prepaid meters: Electricity Regulatory Commission order.

* Gold bead found in ongoing excavation near Kodumbalur in Viralimalai, Pudukkottai district.

* Cloudburst in Jammu and Kashmir: 5 dead in sudden rain and floods.

* Scientists at the University of Cambridge, led by Indian-origin UK scientist Dr. Nikku Madhusudhan, have discovered signs of life on the distant planet K2-18b.

* Barcelona Open Tennis Tournament: Denmark's Holger Rune advances to the final.

* IPL: Bangalore defeats Punjab.


Covai women ICT_போதிமரம்


வகுப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் EMIS TC தயார் செய்ய அங்க அடையாள விவரங்கள்

 

 

வகுப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் TC தயார் செய்ய அங்க அடையாள விவரங்கள்


EMIS ONLINE TRANSFER CERTIFICATE SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK


(உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும்)



1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்

 A mole on the left palm


2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead


3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்

 A mole on the index finger


4.இடது முட்டியில் ஒரு தழும்பு

A scar on the left knee


5.வலது கணுக்காலில் ஒரு வடு

 A scar in the right ankle


6.வலது முழங்கையில் ஒரு வடு

 A scar in the right elbow


7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்

 A mole on the left thumb


8.வலது தொடையில் ஒரு தழும்பு

 A scar on the right thigh


9.வலது கன்னத்தில் ஒரு மச்சம்

 A mole On the right cheek


10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்

A mole on the left shoulder


11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு

 A scar on the right eyebrow


12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear


குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்.🙏🙏



Parts of the body to write the identification marks in TC


A  Mole on the right side of the Nose. - மூக்கின் வலதுபுறம் ஒரு மச்சம். 

A  Scar on the left Knee.- இடது முழங்காலில் ஒரு தழும்பு.


Below - கீழே .

Above - மேலே.

Near - அருகில் .

Left side - இடது புறம் .

Right side - வலதுபுறம் .

Back of the - பின்புறம் .

Forehead - நெற்றி .

Temple - நெற்றிப்பொட்டு.

Eye brow - கண் புருவம். 

Eye lid - கண் இமை .

Eye ball - கண் மணி .

Ear- காது.

Back of the Ear - காதின் பின்புறம் .

Cheek - கன்னம்.

Lower lip - கீழ் உதடு .

Upper lip - மேல் உதடு .

Chin - முகவாய்க்கட்டை.( வாயின் கீழ் பகுதி)

Jaw - தாடை ( கன்னத்தின் கீழ் பகுதி)

Neck - கழுத்து .

Nape - பின் கழுத்து .

Shoulder - தோள்பட்டை. 

Upper arm - மேல் கை.

Elbow - முழங்கை. 

Fore arm - கீழ் கை.(முன்னங்கை)

Wrist - மணிக்கட்டு.

Palm - உள்ளங்கை.

Back of the Palm - புறங்கை.( பின்னங்கை)

Thumb - கை கட்டைவிரல்.

Index finger - சுட்டுவிரல்.

Middle finger - நடுவிரல்.

Ring finger - மோதிர விரல்.

Little finger - சுண்டுவிரல்.

Fist - கை முட்டி.

Knuckle - விரல் மூட்டு.

Calf - கெண்டைக்கால்.

Shin - முன்னங்கால்.

Ankle - கணுக்கால்.

Foot - மேல்பாதம்.

Sole - அடிப்பாதம்/ உள்ளங்கால்.

Heel - குதிக்கால்.

Big / First Toe - கால் கட்டைவிரல். (பெருவிரல்)

Second Toe - கால் இரண்டாம் விரல்.

Middle/ Third Toe - கால் நடுவிரல்.

Fourth Toe - கால் நான்காவது விரல்.

Little/ Fifth Toe - கால் சிறு விரல்.


மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 209 பணியிடங்கள்


மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 209 இடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2025


மொத்த இடங்கள்: 209. இவற்றில்10 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும், 15 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



1. Junior Secretariat Assistant (General):* 94 இடங்கள் (பொது-43, ஒபிசி-25, எஸ்சி-11, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-8). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.


2. Junior Secretariat Assistant (Finance & Accounts):* 44 இடங்கள். (பொது-24, ஒபிசி-11, எஸ்சி-4, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.


3. Junior Secretariat Assistant (Stores & Purchase):* 39 இடங்கள் (பொது-25, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 48க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.


4. Junior Stenographer:* 32 இடங்கள் (பொது-18, ஒபிசி-8, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500- 81,100.


21.04.2025 தேதியின்படி வயது கணக்கிடப்படும்

www.crridom.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பார்க்கவும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2025.


+2 முடித்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் Last Date விவரங்களும்



+2 முடித்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் விண்ணப்பிக்க கடைசி நாள் விவரங்களும்


+2 முடித்த குழந்தைகள் சிறந்த கல்லூரிகளில் சென்று படிக்க மீதமுள்ள பொன்னான வாய்ப்புகளும் Last Date விவரங்களும்


*ஜூன் 4  வரை  விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ள நுழைவுத்  தேர்வுகள்  உங்களுக்காக 👇👇👇*


1. டிசம்பர் 2024 -ல் CLAT தேர்வு எழுதி கையில் CLAT Score Card வைத்திருக்கும் குழந்தைகள் மட்டும் IIM Rohtak Haryana வில் 5 ஆண்டு சட்டப்படிப்பு IPL படிக்க விண்ணப்பிக்க இன்று 18.04.25 கடைசி தேதி.🔴🔴🔴🔴 Fees Rs. 4937.


2. April 20 FDDI - Apply Both B.Des & BBA  Last Date. Super Chance, Don't Miss.🔴🔴🔴🔴🔴 All Group Students.


3. May 2 IMU CET Apply B.Tech BSC DNS and BBA Last Date🔴 All Group Students.


4. May 5 NFSU - M.Tech. MSC. MBA Cyber Security Artificial Intelligence Forensic Science  Last Date All Group Students.


5. May 5 Last Date for ICI Tirupati - BBA Culinary Arts - All Group Students


6. May 9 NISER Last Date only for Phy Che Maths Biology Students. 250 seats only. No Hoste Fees. No College Fees. Ful Free.


7. May 31 ISI - BSDS Last Date. (Admission Based on JEE Mains Scores or CUET Scores - இன்று 18.04.25 JEE Mains Result வெளியாகலாம்.)


8. June 4 IITTM BBA (Tourism)


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் +2 முடித்த குழந்தைகள் 


தமிழ்நாடு அரசு முழு  உதவியுடன் பட்டப்படிப்பு படிக்க விருப்பமா?


வருகிற 21.04.2025 முதல் 30.04.2025 வரை உங்கள் பள்ளிக்கு செல்லுங்கள்.


உங்கள் அப்பா அம்மாவையும் அழைத்து செல்லுங்கள்.


தமிழ்நாட்டில் படிக்க 7.5 கோட்டா (No College Fees & No Hostel Fees)


தமிழ்நாட்டிற்கு வெளியில் பிற மாநிலங்களில் சென்று படிக்க


உங்களுக்கு உதவிட

இதோ


" நான் முதல்வன் திட்டம்"


👇👇👇 உடனே பார்வையிடுக.


https://naanmudhalvan.tnschools.gov.in/


மேலும் உங்களுக்கு உதவிட உங்கள் உயர்கல்வி வழிகாட்டு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பள்ளியில் தினம் தினம் காத்திருக்கிறார்கள்.


அடுத்து என்ன படிக்கலாம் என அறிய


உயர்கல்வி குறித்து அறிந்து கொள்ள


சுழற்றுக 14417


தமிழ்நாடு அரசின்

பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டு உதவி எண் : 14417


மேலும் அதிக விபரங்களுக்கு மணற்கேணியில் சொடுக்கவும் 👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis


ஏப்ரல் மாதத்தில் IFHRMS தொடர்பான முக்கிய தகவல்கள்


ஏப்ரல் மாதத்தில் IFHRMS தொடர்பான முக்கிய தகவல்கள்


1. இந்த வாரம் ஏப்ரல் மாதத்திற்கான Payroll ரன் செய்யப்படும்.


2. வருமான வரி பிடித்த மேற்கொள்வதற்கு old regime என்று தேர்வு செய்தால் மீண்டும் மாற்ற இயலாது. ஏனென்றால் Regime தேர்வு செய்வது ஒரு முறை மட்டும் தான் செய்ய இயலும்.


3. Regime ஏதும் தேர்வு செய்ய வில்லை எனில் default ஆக new Regime தேர்வாகிவிடும்.


4. PAN  சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும் ஏனென்றால் PAN  தவறாக இருந்தால் tax rule படி ஊதியத்தில் பிடித்த மேற்கொள்ளப்படும்.


5. Increment உள்ளவர்களுக்கு சரியாக increment update ஆகியுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.



TNSED Attendance Appல் 21-04-2025 திங்கள் முதல் தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை


TNSED Attendance  Appல் 21.04.2025 திங்கள் முதல் தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை 


Primary schools:


* Today's Status - Fully not working


Select - Reason Others


Mark-Staff attendance Only

 


Middle  schools:


Today's Status - Partially working &  


Select Class 6,7,8


Select - Reason Others


Mark- Staff attendance & 6,7,8th Class Students Attendance


மாணவியின் பொய்யான பாலியல் புகாரால் சிதைந்து திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை - 7 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி



மாணவியின் பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகாரால் சிதைந்து திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை - 7 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி


Teacher's life was shattered and turned upside down by student's false sexual abuse complaint - Student came back with her husband and apologized after 7 years


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் என்பவர் ஆசிரியர் ஆவார். இவர் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் மீது மாணவி ஒருவர் பொய்யான பாலியல் புகார் அளித்தார்.இந்த புகாரினால் அவரது நிறுவனம் மூடப்பட்டது. சிறைக்கு போனார். குடும்பமும் அவரை விரட்டிவிட்டது. இதனால் ஆசிரியர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கணவருடன் வந்து அந்த மாணவி மன்னிப்பு கேட்டார்


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ஜோமோன் ஆசிரியர் ஆவார். இவரது வாழ்க்கை 2017ஆம் ஆண்டு சிறப்பாக போய் கொண்டிருந்தது. இவர் குருப்பந்தரை என்ற இடத்தில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு கொச்சியைச் சேர்ந்த மாணவி, ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குருப்பந்தரை போலீசில் புகார் கொடுத்தார்.


ஆசிரியர் கைது

இதை சரியாக விசாரிக்காத போலீசார், மாணவி புகார் அளித்துவிட்டார் என்ற ஒற்றை காரணத்தையும், உறவினர்கள், நண்பர்கள் ஆவேசப்படுகிறார்கள் என்பதற்காகவும் ஜோமோனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் புகாரில் ஜோமோன் சிக்கியதால் அவரது நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவரது குடும்பம் ஒரே நாளில் ஏழ்மைக்கு போனது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.


ஜாமீனில் வந்தார்

அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோமோன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். இதனால் குடும்பத்தை பிரிந்த ஜோமோன், தனிமையில் வாடினார். இதைத்தொடர்ந்து அவர் மாற்று வேலை செய்து ஏழ்மை நிலையில் வாழ்க்கையை கழித்து வந்தார்.


திருமணம் நடந்தது

இதற்கிடையே புகார் கொடுத்த மாணவிக்கு திருமணமானது. அவர் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பாலியல் புகாரால் ஆசிரியர் ஜோமோன் ஏழ்மையின் எல்லைக்கு சென்று விட்டது குறித்து மாணவிக்கு தெரியவந்தது. தன்னால் தான் இப்படி நடந்தது என்று மிகுந்த மனவேதனை அடைந்தார்.


மன்னிப்பு கேட்டார்

இதையடுத்து அந்த மாணவி நேற்று முன்தினம் ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு கணவருடன் சென்று திருப்பலிக்கு இடையே ஆசிரியர் ஜோமோன் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த மாணவி, மற்றவர்களின் தூண்டுதலின்பேரில் பொய் புகார் கூறியதாகவும், ஆசிரியர் ஜோமோன் நிரபராதி என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


நீதிபதியிடம் வாக்குமூலம்

அத்துடன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜோமோன் மீது சிலரின் தூண்டுதலால் பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் தனது புகாரையும் வாபஸ் பெற்றார். இதைதொடர்ந்து ஜோமோனை இந்த வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. இதுகுறித்து ஆசிரியர் ஜோமோன் கூறுகையில், 'என் மீதான பாலியல் புகாரில் நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன். இதனை அறிந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொண்டனர்' என்று கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.


பொய் புகார்கள்

ஒரு மாணவி புகார் அளித்துவிட்டாலே ஒரு ஆசிரியரை பாலியல் குற்றவாளி என்று அறிவிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக பல ஆசிரியர்கள் இந்த செய்தியைப் பகிர்ந்து நியாயம் கேட்டு வருகிறார்கள். ஏனெனில் சரியாகப் படிக்காத மாணவியை படிக்க சொல்லி கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளிப்பது ஆங்காங்கே நடக்கிறது. கண்டித்த ஒரே காரணத்திற்காக ஆசிரியர்களின் நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் என எல்லாமே போய்விடுகிறது.


போக்சோ வழக்கு

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாலியல் குற்றவாளிகளாகவே ஊடகங்களும் சித்தரிப்பதும் இதற்கு காரணம். போக்சோ வழக்கிலும் பொய்யான புகார் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. காதல் கைகூடாத போது, பொய்யான புகார் அளிப்பதும் நடக்கிறது. யார் மீது வேண்டுமானாலும் போக்சோ வழக்கில் புகார் அளித்து உள்ளே தள்ள முடியும். சிறுமிகள் யார் மீது தவறான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது வரும். ஏனெனில் சட்டம் அந்த அளவிற்கு பெண்களுக்கே சாதகமாக உள்ளது. போக்சோ வழக்கும், பாலியல் வழக்கும் அப்பாவிகளை பழிவாங்கும் கருவிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டையும் அப்பாவிகள் பாதிக்காத அளவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...