கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட NILP கற்போருக்கான தேர்வு தேதி அறிவிப்பு

 

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட  கற்போருக்கான முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு தேதி அறிவிப்பு


NILP முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு 15.06.2025 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 15-05-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....



Promotion counseling for 87 BEOs vacancies to be held soon

 

விரைவில் 87 வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு


Promotion counseling for 87 vacant posts of Block Education Officers to be held soon


விரைவில் 87 வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என தகவல்



>>> Click Here to Download 87 BEO Vacancy Places...



விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு





 

விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு


இந்திய ரிசர்வ் வங்கி விரைவில், புதிய 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வெளியிட உள்ளது


இந்த 20 ரூபாய் நோட்டின் வடிவமைப்பு,  தற்போதுள்ள மகாத்மா காந்தி படத்துடன் கூடிய  நோட்டுடன் ஒத்ததாகவே இருக்கும் 


ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுக்களும், செல்லத்தக்கவையாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது


புதிய 20 ரூபாய் நோட்டில், மகாத்மா காந்தி புகைப்படமும், மற்ற விவரங்களும் அப்படியே இருக்கும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டுமே மாறியிருக்கும். புதிய ரூபாய் நோட்டில் முன்னாள் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களின் கையொப்பம் இருந்த இடத்தில், இனி புதிய ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடப்பட்டிருக்கும்.


ரிசர்வ் வங்கியில் ஆளுநர்கள் மாறும்பொழுது, மத்திய வங்கி செய்யும் வழக்கமான நடவடிக்கை என்பதால், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் பழைய அதாவது இதற்குமுன் இருந்த கவர்னரின் கையொப்பம் உள்ள நோட்டுகள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, முன்னாள் கவர்னர் கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகளும் செல்லும், இது வங்கியின் வழக்கமான நடவடிக்கை என்பதால் மக்கள் குழப்பமடைய வேண்டாம்.



7.5% reservation - Explanation

 

7.5% இட ஒதுக்கீடு பற்றிய விளக்கம் 


விளக்கம் 1 


7.5 இட ஒதுக்கீட்டில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்


விளக்கம் 2


 தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்(RTE) இட ஒதுக்கீட்டின்படி படித்த குழந்தைகள் 9 ,10, 11, 12 வகுப்புகள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்தவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு உண்டு.


விளக்கம் 3


அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த குழந்தைகளுக்கு 7.5 இட ஒதுக்கீடு உண்டு.


விளக்கம் 4


அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு பொருந்தாது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்த ஒரு வகுப்பில் சேர்ந்து மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்தாலும் 7.5 இட ஒதுக்கீடு இல்லை. 6 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளிலும்  அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.



தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்





 தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்


18 people infected with corona in Tamil Nadu - Health Department information


தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


சிங்கப்பூர், தாய்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சொல்லியிருப்பது என்ன.? 


மீண்டும் பரவும் கொரோனா

சீனாவில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் உயிர்சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. பல லட்சம் பேரை காவு வாங்கிய பின்னர், கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டது.


2 ஆண்டுகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த மக்கள், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்தற்குப்பின் தான் நிம்மதி அடைந்தனர். ஆனாலும், 2 ஆண்டுகளுக்கு மேல் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியதால், கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையே மாறியது. லாக் டவுன் இருந்ததால், ஏராளமானோர் வேலையையும், தொழிலையும் இழந்தனர். கொரோனா இல்லாமல் உலகம் சகஜ நிலைக்கு திரும்பினாலும், அவரவர் அடைந்த நஷ்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்கில் பரவல் அதிகரிப்பு

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


குறிப்பாக, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் தாய்லாந்திலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.


இந்தியாவில் எத்தனை பேருக்கு தொற்று.? தமிழ்நாட்டில் எத்தனை.?

இதையடுத்து நடந்த பரிசோதனையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், புதுச்சேரியில் 13 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும், மகாராஷ்டிராவில் 7 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.


எனினும், மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமாக 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில், மே மாத முதல் வாரத்தில் 14,200 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நிலையைவிட 28% அதிகமாக இருப்பதால், ஓராண்டுக்குப் பிறகு அந்நாட்டு சுகாதார அமைச்சகம், கொரோனா குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வது என்ன.?

இதனிடையே, தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை, வைரஸ் பாதிப்பு பெருமளவில் இல்லை எனவும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினசரி பரிசோதனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இது வீரியமில்லாத கொரோனா என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த காரில் இருந்து 5 பேர் மீட்பு



5 people rescued from car that fell into a sudden ditch on the road


சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார்


சென்னை தரமணி - திருவான்மியூர் சாலையில் டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென பள்ளம்


சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்த நிலையில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்பு; தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு

 

ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை (நிலை) எண்: 109, நாள் : 12-05-2025 வெளியீடு


G.O. (Ms) No: 109, Dated : 12-05-2025 


Government Order issued to provide hand copy textbooks to teachers for classroom use



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...