கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு





அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


Extension of deadline for applying for admission to government arts and science colleges


அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு. 


விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 


அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.


2025-2026 - Schools Opening - DSE & DEE Proceedings

  

 

பள்ளிக்கல்வி - 2025-2026 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக DSE & DEE Proceedings 


2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - அறிவுரைகள் வழங்குதல் - இக்கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய கல்வி செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாராச் செயல்பாடுகள் சார்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், நாள் : 26-05-2025


Opening of schools in the academic year 2025-26 - Joint proceedings of the Directors of School Education & Elementary Education regarding the educational activities to be implemented in this academic year, the procedures to be followed regarding co-curricular activities, extra-curricular activities and non-academic activities, Dated: 26-05-2025


2025-2026 - Schools Re-Opening - DSE & DEE Joint Proceedings


School Education - Opening of schools in the academic year 2025-26 - Instructions to the Inspectors - DSE & DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TANUVAS UG ADMISSION 2025-2026 - FEE STRUCTURE - For B.V.Sc & AH, B.Tech courses



 TANUVAS UG ADMISSION 2025-2026 - FEE STRUCTURE - For B.V.Sc & AH, B.Tech courses (Food Technology / Poultry Technology / Dairy Technology)


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 

மாணவர் சேர்க்கை 2025-2026 

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 

கட்டண அமைப்பு - பி.வி.எஸ்சி & ஏ.எச். - 5½ ஆண்டுகள் (4½ ஆண்டுகள் + 1 வருட இன்டர்ன்ஷிப்) எம்.எஸ்.வி.இ விதிமுறைகள் 2016 இன் படி & கட்டண அமைப்பு - பி.டெக் படிப்புகளுக்கு (உணவு தொழில்நுட்பம் / கோழிப்பண்ணை தொழில்நுட்பம் / பால் தொழில்நுட்பம்) - ஒவ்வொரு பாடத்திற்கும் தொழில்துறை பயிற்சி உட்பட 8 செமஸ்டர்கள்



TANUVAS UG ADMISSION 2025-2026

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

FEE STRUCTURE - For B.V.Sc & AH – 5½ years (4½ years + 1 year Internship) as per MSVE Regulations 2016 & FEE STRUCTURE- For B.Tech courses (Food Technology / Poultry Technology / Dairy Technology) – 8 Semesters including industrial training for each course



>>> Click Here to Download...


தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி



யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை


சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி


IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.






இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது


முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.


நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை; மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.


திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.



சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.


 மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.


பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கூறப்படுவது, "அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும்  பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.


இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்துச் சென்றவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இரவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்" என்றனர்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


1-5th Std - Time Table

 


எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை 


1-3ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)


4-5ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)



 Ennum Ezhuthum - 1-5th Standard - Time Table 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS Press Release


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS பத்திரிகை செய்திக் குறிப்பு Press Release 


 கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு நாளை 26-05-2025 முதல் விண்ணப்பிக்கலாம்



>>> பத்திரிகை செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

PRESS MESSAGE

Tamil Nadu Veterinary and Animal Sciences University invites applications for undergraduate courses (BVSc & AH / B.Tech) from the candidates of Tamil Nadu State through online (https://adm.tanuvas.ac.in) from 26.05.2025,10.00 AM to 20.06.2025, 5.00 PM.

For online applications, guidelines, number of seats reserved for NRIs (Non-Resident Indians) / Wards of NRIs / NRI Sponsored and Foreign National Quota, please visit https://adm.tanuvas.ac.in.

Chairman, Admission Committee (UG),

TANUVAS, Chennai-600 051.



https://chat.whatsapp.com/DDqsauWKkln1IUdqOq9BnA


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்


கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கடந்த 1903-ல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது.


பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.


மேற்கண்ட பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் போதும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நீட் மதிப்பெண்கள் தேவையில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடத்தில் சேர்வதற்கு, நீட் மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.


எம்பிபிஎஸ் போன்றே, இந்த படிப்பும் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சியை உள்ளடக்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ குழுமம் மூலமாக நிரப்பப்படுகிறது. எஞ்சிய இடங்கள், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் கிடைக்கும்


பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என 8 இடங்கள் கிடைக்கும்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கால்நடை மருத்துவம் அல்லது கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகள் படித்தால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...