கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

யுபிஎஸ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யுபிஎஸ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

UPSC Exam Results வெளியீடு



யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு (Civil Services Main Examination) முடிவுகளை நவம்பர் 5, 2026 அன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான UPSC Official Website (https://www.upsc.gov.in/) இல் வெளியிட்டுள்ளது.


முக்கியத் தகவல்கள்:


• தேர்வு நடைபெற்ற நாட்கள்: ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை.

• காலிப்பணியிடங்கள்: 1,016 இடங்கள்.

• தேர்ச்சி பெற்றவர்கள்: அடுத்த கட்டமான ஆளுமைத் தேர்வுக்கு (Personality Test / Interview) மொத்தம் 2,526 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

• சான்றிதழ் பதிவேற்றம்: தேர்ச்சி பெற்றவர்கள் நவம்பர் 11 முதல் நவம்பர் 25, 2026 அன்று மாலை 6:00 மணிக்குள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி



யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை


சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி


IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.






இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது


முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...



 UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BS-VI வாகனங்களுக்கான PUC குறித்த தகவல்

 BS-VI வாகனங்களுக்கான PUC மூன்று ஆண்டுகளாக நீட்டிப்பு மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி, புதிய தனியார் BS-VI வாகனங்களுக்கான PUC சான்ற...