கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No. 164, Dated: 16-07-2025 : Guidelines for rectifying senior junior pay anomalies



 ஆசிரியர்களுக்கிடையேயான மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் : அரசாணை (நிலை) எண் 164, நாள் : 16-07-2025 வெளியீடு


Guidelines for rectifying senior junior pay anomalies among teachers: Government Order G.O. (Ms) No. 164, Dated: 16-07-2025 Released



மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் சார்ந்து தற்போது வெளிவந்துள்ள அரசாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம்


 இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள் ; அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம் - நாளிதழ் செய்தி 




SGT Appointment Order Ceremony - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Appointment Order Ceremony for Secondary Grade Teachers to be held in Chennai on 24.07.2025 - Proceedings of the Director of Elementary Education


TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து DEE செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / ஊராட்சி / நகராட்சி /மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம். 24.07.2025 வியாழன் அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பணிநியமன ஆணை வழங்கும் பணி மாவட்டங்களில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டியாக பணிபுரியம் பணிக்காக - பணி ஒதுக்கீடு வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 | Director Proceedings


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2430 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


 அதுசமயம் இடைநிலை ஆசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படவுள்ளது . இவ்விழாவானது 24.07.2025 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது . அதன்பொருட்டு , பணிநியமனம் பெறுவதற்கு பணிநாடுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தோராயமாக 5,000 - க்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே , பணி நியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்களை அவரவர் மாவட்டத்திலிருந்து விழா நடைபெறும் அரங்கித்திற்கு வரவழைக்கும் வகையில் அவர்களை ஒருங்கினைத்து சென்னை வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 58 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் Nodal Block Education officer கள் அனைவரும் அவர்தம் பணிநாடுநர்களை தொடர்பு கொண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நல்ல முறையில் அழைத்து வரும் பணியினை மேற்கொள்ளுமாறு 58 Nodal Block Education officer கள் உடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்த 58 Nodal Block Education officer களும் 24,07,2025 அன்று காலை 8.00 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , இவ்விழாவில் இதர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 23.07.2025 காலை 11 அளவில் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் .. இப்பணிகள் சிறப்புடன் தொய்வின்றி நடைபெறும் வகையில் அனைவரும் வருகைதந்து , விழாவினை செவ்வனே நடத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



Nodal DEOs & BEOs விவரம்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா  அழைப்பிதழ் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Action Plans Templates : SLAS 2025



மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்


 Action Plans Templates : for the Learning Outcomes Surveyed in SLAS 2025 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNPSC - Group 4 Exam - Tentative Answer Key



 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு - தற்காலிக விடை குறிப்பு வெளியீடு 


Tamil Nadu Public Service Commission - Group 4 Examination held on 12.07.2025 - Tentative Answer Key Released



Tamil Nadu Public Service Commission

Combined Civil Services Examination-IV

(Group-IV Services)

(Notification No.7/2025)

Examination held on 12.07.2025 F.N. -

Tentative key Released on 21.07.2025


Link:

  https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=58ff38aa-81fc-453e-9bd9-517996eccbbb


அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


 அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25 ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 


அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (School Management Committee) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு மாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூலை 25 ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை பள்ளிகள் தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.


மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக, முன்னாள் மாணவர்களிடம் பொருள், தொகை பெற்றதை, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.


பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.


SLAS தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது



>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள் & வழிகாட்டுதல்கள் - SPD செயல்முறைகள்...


Application to add Unavailed Joining Time in Earn Leave Account

 


துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம் : Application to add Unavailed Joining Time in Earn Leave Account 


 தலைமை & உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & விண்ணப்பப் படிவம்


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்துள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பழைய பள்ளிக்கும் புதிய பள்ளிக்கும் 8 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால், அனுபவிக்காத பணியேற்பிடைக் காலம் 5 நாட்களை தங்களது ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்க கீழ்கண்ட விண்ணப்பத்தினை வருகின்ற ஆகஸ்ட்  மாத குறைதீர் முகாமில்  கொடுக்கலாம்



>>> தலைமை ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...



>>> உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC சார்பில் August 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்

  டிட்டோஜாக் சார்பில் ஆகஸ்ட் 22ஆம் தேதி  கோட்டை  முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்ற  கூட்டத்தில், நடைபெற்ற முடிந்த மறியல் போராட்டத்தை வெற்றிக...