கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS 2025 : ஆய்வு அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து DSE & DEE இணைச் செயல்முறைகள்



SLAS 2025 : ஆய்வு அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து DSE & DEE இணைச் செயல்முறைகள்


SLAS : Duties of  Inspecting Officials : Instructions


SLAS 2025: DSE & DEE Joint Proceedings on the Work to be Done by the Inspecting Officers/ Headmasters/Teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணிநிரவல் ஆசிரியர்கள் விவரம் கோரி DEE Proceedings



பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி /அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 01-08-2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - உபரி இடைநிலை ஆசிரியர்களை பிற ஒன்றியம் /பிற கல்வி மாவட்டம் / பிற மாவட்டத்திற்கு பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது - பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் , நாள் : 21-07-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி



SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி


வணக்கம்!

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள்.


SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 25.07.25 வெள்ளிக்கிழமை,மாலை 3.00-4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.


குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்துப்பார்த்து உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு.


கூட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும்  திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான  கூட்டப்பொருட்களில்  விழிப்புணர்வு  வழங்கப்படவுள்ளது.


இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும்,கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும், மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.


SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!

📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்: https://bit.ly/SMCSupportvideos


📌ஊக்கமூட்டும் காணொளி: https://youtu.be/qsB-DSC57j4


📌புதிய செயலி லிங்க் : https://bit.ly/TNSEDParentsApp🙏


Best SMC Schools Video

 


சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு பள்ளிகள் குறித்த காணொளி


Best SMC Schools Video



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




SMC Meeting: Chief Minister and Minister of School Education Speech



 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் : முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் காணொளி செய்தி


School Management Committee Meeting: Speech Video of the Chief Minister and the Minister of School Education



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards https://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழறிஞா்கள் மேலே உள்ள இணையதளத்தில் 

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 'தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008' என்ற முகவரிக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.


தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை - TNPSC விளக்கம்


Group 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை - TNPSC விளக்கம்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The secret of life: Be happy and helpful to others until the last moment

வாழ்வின் ரகசியம் : கடைசி நொடி வரையில் மகிழ்ச்சியாகவும், இயன்றவரை பிறருக்கு உதவிகரமாகவும் இருங்கள் The secret of life: Be happy and helpful t...